கருப்பு வெள்ளை கவிதையடி...
உன் ஒன்றை விழியில் தெரியுதடி...
மறு விழி காண என் இருவிழி துடித்தது...
அதை இலை கொண்டு ஏனோ மறைத்தது....
அன்று மொழியில் பேசிச்சென்றாள்..
இன்று விழியால் பேசிக்கொன்றாள்...
இலை கொண்டு மூடினாள்
பின்னழகை....
எதைக் கண்டு தேடுவேன் பெண்ணழகை...
விழி தரும் செய்திதான் என்னவோ?
றெக்கையின்றி பறக்கிறேன்,, நான்
என்ன செய்வேன் அய்யகோ!!!
அவள் மொழி கேட்டு நானும் கவிஞன் ஆனேன்...
அவள் மொழி கேட்டு நானும் கவிஞன் ஆனேன்...
அவள் விழி பார்த்து மதிமயங்கிப் போனேன்...
ஓட்டுமொத்த காதலையும் ஒன்றை விழியில் காட்டினாள்...
இன்னும் என்னடா வேண்டும் என்று அவள் இதய அறைக்குள்
என்னை வைத்து பூட்டினாள்....
விரல் இடையே நடனமாடியது என்
பேனா...
அவள் விழி பேசிய மெளன மொழியில் தடுமாறி போனவன் நானா...
ஒரு விழி கண்டு கொண்டேன் இப்போது...
அவள் மறு விழி காண்பது எப்போது?
இன்னும் இன்னும் சொல்ல மனம் ஏங்குது...
அடுப்படியில் பூனையும் வந்து
தூங்குது...
பசி மயக்கம் கண்ணை கட்டுது...
போய்ட்டு வந்து சொல்லவா மிச்சம் விட்டது...
போய்ட்டு வந்து சொல்லவா மிச்சம் விட்டது...🤭