Advanced Search

Author Topic: Veg Recipes  (Read 41749 times)

March 24, 2019, 03:44:36 pm
Read 41749 times

AnJaLi

Veg Recipes
« on: March 24, 2019, 03:44:36 pm »
Ingredients:

2 medium finely chopped onions
2 medium chopped tomatoes
1/2 lb. diced mushrooms
6 slit green chili peppers
4 cloves
1 small stick cinnamon
1 teaspoon red chili pepper
1 teaspoon ground cumin powder
1/2 teaspoon turmeric powder
1 tablespoon garlic paste
1 cup cooking oil
1 tablespoon fenugreek leaves (crushed methi leaves)

How to make mushroom masala:

    * Warm oil, add cloves and cinnamon. When oil simmers, add onions.
    * When onions turn brown, add garlic paste, red chili powder, cumin, and turmeric powder mixed in a little water with salt to taste.
    * When the masala is thoroughly fried, and oil comes up, add tomatoes and green chili peppers.
    * Stir thoroughly, then add diced mushrooms. Cook on low heat for 5-7 minutes.
    * Garnish with dried crushed fenugreek leaves for a delicious flavor. Serve with chapattis or puri.



March 24, 2019, 04:00:05 pm
Reply #1

AnJaLi

பருப்பு ரசம்
« Reply #1 on: March 24, 2019, 04:00:05 pm »
சுடச்சுட மணக்கும் ரசத்தை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கையிலோ, சாதத்துடன் கலந்து சாப்பிடுகையிலோ கிடைக்கும் சுகானுபவம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். நம் தென்னிந்தியாவின் பிரசித்திக்குப் பேர் பெற்ற பல காரணங்களில் ரசமும் ஒன்று அல்லவா! ஜுரம் வருவதுபோல இருந்தாலும் சரி, ஜுரம் வந்து மீண்டு எழுகையிலும் சரி, ஜலதோஷம் பிடித்தாலும், தொண்டை கமறினாலும் சுடச்சுட ரசத்தை சேர்த்து பரிமாறி, ரசம் எல்லாவற்றையும் சரியாக்கும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்து விட்டிருப்பதை தென்னிந்தியர் பலரும் மறுக்க மாட்டார்கள் தானே......

தேவையான பொருட்கள்:

புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் - 3
ரசப்பொடி - 1 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1/4 டீ ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்துமல்லித் தழை - தேவையான அளவு

செய்முறை:

* புளியை சிறிது தண்ணீ­ருடன் கொதிக்க விட்டு சற்று ஆறியதும் கையால் நன்கு கசக்கி ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ளவும்.

* புளிச்சாறுடன் சிறிது தண்ணீ­ர், ரசப்பொடி, உப்பு சேர்த்து புளி நெடி மற்றும் ரசப்பொடி நெடி அடங்க அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* பிறகு பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து மேலும் ஒரு கொதி விடவும்.

* நல்ல பழமாக உள்ள தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் புளி நீருடன் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* துவரம் பருப்பை மஞ்சள்தூள், தண்­ணீர் சேர்த்து குக்கரில் வைத்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

* பிறகு துவரம் பருப்பு மற்றும் நீரை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நடுநடுவே கரண்டியால் கலந்து விடவும்.

* ரசம் நுரைத்துப் பொங்கி வருகையில் அடுப்பை அணைத்து தாளித்து விட்டால் பருப்பு ரசம் தயார்.

* பரிமாறுகையில் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: புதுப்புளி மற்றும் நாட்டுத் தக்காளி உபயோகித்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.

March 28, 2019, 08:37:16 pm
Reply #2

AnJaLi

உளுந்து சாப்பாத்தி
« Reply #2 on: March 28, 2019, 08:37:16 pm »
உளுந்து சாப்பாத்தி


தேவையானவை:

    * கோதுமை மாவு – ஒரு கப்
    * சோயா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
    * கடுகு – அரை டீஸ்பூன்
    * எண்ணெய் – 2 டீஸ்பூன்
    * உப்பு – தேவையான அளவு.


பூரணத்திற்கு தேவையானவை:

    * உளுந்து – கால் கப்
    * காய்ந்த மிளகாய் – 2
    * சோம்பு – கால் டீஸ்பூன்
    * தேவையான அளவு உப்பு.


செய்முறை:

    * கோதுமை மாவு மற்றும் சோயா மாவு ஆகியவற்றை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
    * ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
    * நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
    * இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
    * ஒரு குச்சியை விட்டு பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்.
    * பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
    * பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல செய்ய வேண்டும்.
    * உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
    * தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.



March 28, 2019, 08:46:30 pm
Reply #3

AnJaLi

வெண்டைக்காய் அவியல்
« Reply #3 on: March 28, 2019, 08:46:30 pm »
வெண்டைக்காய் அவியல்


இது மிகவும் சுவையாக இருக்கும். இதையும் எளிதில் செய்து விடலாம். இதை அனைத்து வகை சாதத்துடனும் சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

வெண்டைக்காய் – 1/4கிலோ

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – 1கொத்து

கொத்தமல்லி – 1/4கப் பொடியாக நறுக்கியது

தேங்காய் துருவல் – 1கப்

பச்சைமிளகாய் – 6நம்பர்

சீரகம் – 1ஸ்பூன்

பச்சரிசி – 1ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1/4ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :-

    * வெண்டைக்காயை நன்கு சுத்தம் செய்து 4பாகமாக வெட்டி வெயிலில் சிறிது நேரம் காய விடவும். ஏனென்றால் பிசுபிசுப்பு தன்மை வெயிலில் வைத்துவுடன் குறையும்.
    * பின்பு தேங்காய் துருவல், பச்சை மிளகாய் , சீரகம் , அரிசி ஆகியவற்றை மிக்ஸியில் மைபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
    * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் வெட்டிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு பிசுபிசுப்பு தன்மை மாறி நன்கு உதறியாகும் வரை வதக்கவும்.
    * நன்கு வதக்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர், அரைத்த மசாலா, தேவையான உப்பையும் அதில் சேர்த்து 1கொதி வந்தவுடன் இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.
    * சுவையான வெண்டைக்காய் அவியல் தயார்.



March 28, 2019, 08:51:05 pm
Reply #4

AnJaLi

சுரைக்காய் கூட்டு
« Reply #4 on: March 28, 2019, 08:51:05 pm »
சுரைக்காய் கூட்டு


இது மிகவும் உடலுக்கு நல்லது. குண்டாவர்கள் இதனை செய்து சாப்பிட்டால் உடம்பு குறையும். இதனுடன் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்து வகை சாதங்களுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதனை நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:

    * சுரைக்காய் – 1/4கிலோ
    * பாசிப்பருப்பு – 1கையளவு
    * சின்ன வெங்காயம் – 1/4 பொடியாக நறுக்கியது
    * பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
    * காய்ந்தமிளகாய் – 2
    * கறிவேப்பிலை – சிறிதளவு
    * சீரகம் – சிறிதளவு
    * மஞ்சள் தூள் – சிறிதளவு
    * கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
    * தண்ணீர் – தேவையான அளவு
    * உப்பு – தேவையான அளவு
    * நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

    * சுரைக்காயில் உள்ள விதையை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
    * சுரைக்காயையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1 விசில் வந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
    * பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தது கடுகை போட்டு வெடித்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கவும்.
    * பொன்நிறம் வந்தவுடன் காய்ந்தமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்நிறம் வரும் வரை வதக்கவும்.
    * நன்கு வதக்கியவுடன் அதனுடன் வேகவைத்த கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1கொதி வந்தவுடன் இறக்கவும்.
    * சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.



March 29, 2019, 02:50:31 pm
Reply #5

AnJaLi

குருமா! & மசாலா !
« Reply #5 on: March 29, 2019, 02:50:31 pm »
வெஜிடபிள்குருமா!

தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது & 2 கப், பெ. வெங்காயம் & 2, தக்காளி & 3, தேங்காய்த் துருவல் & 1 கப், பொட்டுக்கடலை & 1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் & தலா 2, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 5 பல், சோம்பு & அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் & 5.


செய்முறை: காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.



March 29, 2019, 02:51:55 pm
Reply #6

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #6 on: March 29, 2019, 02:51:55 pm »
பீஸ் மசாலா
தேவையானவை:

பட்டாணி & 1 கப், பெரிய வெங்காயம் & 3, தக்காளி & 3, புளிக்காத தயிர் & கால் கப், இஞ்சி, பூண்டு விழுது & 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன், தனியா தூள் & 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், வெண்ணெய் & 50 கிராம், உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை & சிறிதளவு.


செய்முறை:

பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள்.
இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.



March 29, 2019, 02:53:40 pm
Reply #7

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #7 on: March 29, 2019, 02:53:40 pm »
புதினா குருமா


தேவையானவை:


பச்சை பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் - 2.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா - 1 கட்டு, தேங்காய்த்துருவல் - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 5, சோம்பு - அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 6, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள். புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!



March 29, 2019, 02:55:51 pm
Reply #8

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #8 on: March 29, 2019, 02:55:51 pm »
பெப்பர் பீஸ் மசாலா


தேவையானவை:

பட்டாணி - 2 கப், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள், தனியா தூள் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு - சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க: மிளகு - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்.



செய்முறை:

பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், அதுதான்... ‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!



March 29, 2019, 02:59:10 pm
Reply #9

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #9 on: March 29, 2019, 02:59:10 pm »
தக்காளி குருமா


தேவையானவை:



பெ. வெங்காயம் - 3, தக்காளி - 6 முதல் 8 வரை, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 கப், கசகசா - 1 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.



அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 6, பட்டை, லவங்கம் - தலா 1, சோம்பு - கால் டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.


இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தளதள தக்காளி குருமா மணமணக்கும்!



March 29, 2019, 07:21:11 pm
Reply #10

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #10 on: March 29, 2019, 07:21:11 pm »
கோபி மசாலா

தேவையானவை:


காலிஃப்ளவர் - சிறிய பூவாக 1, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

தாளிக்க: பட்டை - 1, சீரகம் - அரை டீஸ்பூன்.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், மிளகாய்த் தூள், கசகசா - தலா 2 டீஸ்பூன், தனியா தூள், மிளகு - தலா 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 8.


செய்முறை:


காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கலக்கல் கோபி மசாலா நிமிஷத்தில் தயார்!

March 29, 2019, 07:22:04 pm
Reply #11

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #11 on: March 29, 2019, 07:22:04 pm »
மசாலா குருமா


தேவையானவை:



விரும்புகிற காய் (கலந்ததாகவோ, தனியாகவோ) நறுக்கியது - 2 கப், வெங்காயம் - 3, தக்காளி - 4, உப்பு - தேவைக்கு. தாளிக்க: சோம்பு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.
மசாலா, குருமா... இரண்டின் சுவையையும் அனுபவியுங்கள்.



March 29, 2019, 07:25:34 pm
Reply #12

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #12 on: March 29, 2019, 07:25:34 pm »
மட்டர் பனீர் மசாலா!


தேவையானவை:
பட்டாணி &1 கப், பனீர் & 200 கிராம், பெ. வெங்காயம்&3, தக்காளி & 5, இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி அரைத்த விழுது & தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன், தனியா தூள் & 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், நெய் & 1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு.


செய்முறை:


பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விடுங்கள். அதில், வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள். கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!

March 29, 2019, 07:26:28 pm
Reply #13

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #13 on: March 29, 2019, 07:26:28 pm »
செட்டி நாடு குருமா!

தேவையானவை:

கத்தரிக்காய் & 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) & 2, பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 4, உப்பு & தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை -& சிறிதளவு, பூண்டு & 2 பல்.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், சோம்பு & கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை & 1, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் & 1 கப், காய்ந்த மிளகாய் & 6 முதல் 8 வரை, தனியா & 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு & தலா அரை டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், சோம்பு & கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை & 1, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் & 1 கப், காய்ந்த மிளகாய் & 6 முதல் 8 வரை, தனியா & 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு & தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:
முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது. முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.



March 29, 2019, 07:27:48 pm
Reply #14

AnJaLi

Re: குருமா! & மசாலா !
« Reply #14 on: March 29, 2019, 07:27:48 pm »
கரம் மசாலா பொடி:

இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத்தான் இப்படி!
செய்முறை: லவங்கம் & 2 டீஸ்பூன், ஏலக்காய் 1 டீஸ்பூன், பட்டை & 4, தனியா & 1 டேபிள் ஸ்பூன், சீரகம் & 1 டீஸ்பூன், சோம்பு & 1 டீஸ்பூன்... இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!