GTC FORUM

General Category => Cooking Tips - சமையல் குறிப்புகள் => Topic started by: AnJaLi on March 24, 2019, 03:44:36 pm

Title: Veg Recipes
Post by: AnJaLi on March 24, 2019, 03:44:36 pm
Ingredients:

2 medium finely chopped onions
2 medium chopped tomatoes
1/2 lb. diced mushrooms
6 slit green chili peppers
4 cloves
1 small stick cinnamon
1 teaspoon red chili pepper
1 teaspoon ground cumin powder
1/2 teaspoon turmeric powder
1 tablespoon garlic paste
1 cup cooking oil
1 tablespoon fenugreek leaves (crushed methi leaves)

How to make mushroom masala:

    * Warm oil, add cloves and cinnamon. When oil simmers, add onions.
    * When onions turn brown, add garlic paste, red chili powder, cumin, and turmeric powder mixed in a little water with salt to taste.
    * When the masala is thoroughly fried, and oil comes up, add tomatoes and green chili peppers.
    * Stir thoroughly, then add diced mushrooms. Cook on low heat for 5-7 minutes.
    * Garnish with dried crushed fenugreek leaves for a delicious flavor. Serve with chapattis or puri.


Title: பருப்பு ரசம்
Post by: AnJaLi on March 24, 2019, 04:00:05 pm
சுடச்சுட மணக்கும் ரசத்தை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கையிலோ, சாதத்துடன் கலந்து சாப்பிடுகையிலோ கிடைக்கும் சுகானுபவம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். நம் தென்னிந்தியாவின் பிரசித்திக்குப் பேர் பெற்ற பல காரணங்களில் ரசமும் ஒன்று அல்லவா! ஜுரம் வருவதுபோல இருந்தாலும் சரி, ஜுரம் வந்து மீண்டு எழுகையிலும் சரி, ஜலதோஷம் பிடித்தாலும், தொண்டை கமறினாலும் சுடச்சுட ரசத்தை சேர்த்து பரிமாறி, ரசம் எல்லாவற்றையும் சரியாக்கும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்து விட்டிருப்பதை தென்னிந்தியர் பலரும் மறுக்க மாட்டார்கள் தானே......

தேவையான பொருட்கள்:

புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் - 3
ரசப்பொடி - 1 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1/4 டீ ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்துமல்லித் தழை - தேவையான அளவு

செய்முறை:

* புளியை சிறிது தண்ணீ­ருடன் கொதிக்க விட்டு சற்று ஆறியதும் கையால் நன்கு கசக்கி ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ளவும்.

* புளிச்சாறுடன் சிறிது தண்ணீ­ர், ரசப்பொடி, உப்பு சேர்த்து புளி நெடி மற்றும் ரசப்பொடி நெடி அடங்க அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* பிறகு பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து மேலும் ஒரு கொதி விடவும்.

* நல்ல பழமாக உள்ள தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் புளி நீருடன் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* துவரம் பருப்பை மஞ்சள்தூள், தண்­ணீர் சேர்த்து குக்கரில் வைத்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

* பிறகு துவரம் பருப்பு மற்றும் நீரை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நடுநடுவே கரண்டியால் கலந்து விடவும்.

* ரசம் நுரைத்துப் பொங்கி வருகையில் அடுப்பை அணைத்து தாளித்து விட்டால் பருப்பு ரசம் தயார்.

* பரிமாறுகையில் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: புதுப்புளி மற்றும் நாட்டுத் தக்காளி உபயோகித்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.
Title: உளுந்து சாப்பாத்தி
Post by: AnJaLi on March 28, 2019, 08:37:16 pm
உளுந்து சாப்பாத்தி


தேவையானவை:

    * கோதுமை மாவு – ஒரு கப்
    * சோயா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
    * கடுகு – அரை டீஸ்பூன்
    * எண்ணெய் – 2 டீஸ்பூன்
    * உப்பு – தேவையான அளவு.


பூரணத்திற்கு தேவையானவை:

    * உளுந்து – கால் கப்
    * காய்ந்த மிளகாய் – 2
    * சோம்பு – கால் டீஸ்பூன்
    * தேவையான அளவு உப்பு.


செய்முறை:

    * கோதுமை மாவு மற்றும் சோயா மாவு ஆகியவற்றை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
    * ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
    * நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
    * இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
    * ஒரு குச்சியை விட்டு பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்.
    * பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
    * பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல செய்ய வேண்டும்.
    * உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
    * தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.


Title: வெண்டைக்காய் அவியல்
Post by: AnJaLi on March 28, 2019, 08:46:30 pm
வெண்டைக்காய் அவியல்


இது மிகவும் சுவையாக இருக்கும். இதையும் எளிதில் செய்து விடலாம். இதை அனைத்து வகை சாதத்துடனும் சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

வெண்டைக்காய் – 1/4கிலோ

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – 1கொத்து

கொத்தமல்லி – 1/4கப் பொடியாக நறுக்கியது

தேங்காய் துருவல் – 1கப்

பச்சைமிளகாய் – 6நம்பர்

சீரகம் – 1ஸ்பூன்

பச்சரிசி – 1ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1/4ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :-

    * வெண்டைக்காயை நன்கு சுத்தம் செய்து 4பாகமாக வெட்டி வெயிலில் சிறிது நேரம் காய விடவும். ஏனென்றால் பிசுபிசுப்பு தன்மை வெயிலில் வைத்துவுடன் குறையும்.
    * பின்பு தேங்காய் துருவல், பச்சை மிளகாய் , சீரகம் , அரிசி ஆகியவற்றை மிக்ஸியில் மைபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
    * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் வெட்டிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு பிசுபிசுப்பு தன்மை மாறி நன்கு உதறியாகும் வரை வதக்கவும்.
    * நன்கு வதக்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர், அரைத்த மசாலா, தேவையான உப்பையும் அதில் சேர்த்து 1கொதி வந்தவுடன் இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.
    * சுவையான வெண்டைக்காய் அவியல் தயார்.


Title: சுரைக்காய் கூட்டு
Post by: AnJaLi on March 28, 2019, 08:51:05 pm
சுரைக்காய் கூட்டு


இது மிகவும் உடலுக்கு நல்லது. குண்டாவர்கள் இதனை செய்து சாப்பிட்டால் உடம்பு குறையும். இதனுடன் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்து வகை சாதங்களுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதனை நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:

    * சுரைக்காய் – 1/4கிலோ
    * பாசிப்பருப்பு – 1கையளவு
    * சின்ன வெங்காயம் – 1/4 பொடியாக நறுக்கியது
    * பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
    * காய்ந்தமிளகாய் – 2
    * கறிவேப்பிலை – சிறிதளவு
    * சீரகம் – சிறிதளவு
    * மஞ்சள் தூள் – சிறிதளவு
    * கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
    * தண்ணீர் – தேவையான அளவு
    * உப்பு – தேவையான அளவு
    * நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

    * சுரைக்காயில் உள்ள விதையை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
    * சுரைக்காயையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1 விசில் வந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
    * பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தது கடுகை போட்டு வெடித்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கவும்.
    * பொன்நிறம் வந்தவுடன் காய்ந்தமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்நிறம் வரும் வரை வதக்கவும்.
    * நன்கு வதக்கியவுடன் அதனுடன் வேகவைத்த கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1கொதி வந்தவுடன் இறக்கவும்.
    * சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.


Title: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 02:50:31 pm
வெஜிடபிள்குருமா!

தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது & 2 கப், பெ. வெங்காயம் & 2, தக்காளி & 3, தேங்காய்த் துருவல் & 1 கப், பொட்டுக்கடலை & 1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் & தலா 2, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 5 பல், சோம்பு & அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் & 5.


செய்முறை: காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.


Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 02:51:55 pm
பீஸ் மசாலா
தேவையானவை:

பட்டாணி & 1 கப், பெரிய வெங்காயம் & 3, தக்காளி & 3, புளிக்காத தயிர் & கால் கப், இஞ்சி, பூண்டு விழுது & 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன், தனியா தூள் & 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், வெண்ணெய் & 50 கிராம், உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை & சிறிதளவு.


செய்முறை:

பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள்.
இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.


Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 02:53:40 pm
புதினா குருமா


தேவையானவை:


பச்சை பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் - 2.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா - 1 கட்டு, தேங்காய்த்துருவல் - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 5, சோம்பு - அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 6, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள். புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!


Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 02:55:51 pm
பெப்பர் பீஸ் மசாலா


தேவையானவை:

பட்டாணி - 2 கப், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள், தனியா தூள் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு - சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க: மிளகு - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்.



செய்முறை:

பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், அதுதான்... ‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!


Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 02:59:10 pm
தக்காளி குருமா


தேவையானவை:



பெ. வெங்காயம் - 3, தக்காளி - 6 முதல் 8 வரை, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 கப், கசகசா - 1 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.



அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 6, பட்டை, லவங்கம் - தலா 1, சோம்பு - கால் டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.


இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தளதள தக்காளி குருமா மணமணக்கும்!


Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 07:21:11 pm
கோபி மசாலா

தேவையானவை:


காலிஃப்ளவர் - சிறிய பூவாக 1, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

தாளிக்க: பட்டை - 1, சீரகம் - அரை டீஸ்பூன்.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், மிளகாய்த் தூள், கசகசா - தலா 2 டீஸ்பூன், தனியா தூள், மிளகு - தலா 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 8.


செய்முறை:


காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கலக்கல் கோபி மசாலா நிமிஷத்தில் தயார்!
Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 07:22:04 pm
மசாலா குருமா


தேவையானவை:



விரும்புகிற காய் (கலந்ததாகவோ, தனியாகவோ) நறுக்கியது - 2 கப், வெங்காயம் - 3, தக்காளி - 4, உப்பு - தேவைக்கு. தாளிக்க: சோம்பு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.
மசாலா, குருமா... இரண்டின் சுவையையும் அனுபவியுங்கள்.


Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 07:25:34 pm
மட்டர் பனீர் மசாலா!


தேவையானவை:
பட்டாணி &1 கப், பனீர் & 200 கிராம், பெ. வெங்காயம்&3, தக்காளி & 5, இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி அரைத்த விழுது & தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன், தனியா தூள் & 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், நெய் & 1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு.


செய்முறை:


பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விடுங்கள். அதில், வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள். கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!
Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 07:26:28 pm
செட்டி நாடு குருமா!

தேவையானவை:

கத்தரிக்காய் & 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) & 2, பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 4, உப்பு & தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை -& சிறிதளவு, பூண்டு & 2 பல்.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், சோம்பு & கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை & 1, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் & 1 கப், காய்ந்த மிளகாய் & 6 முதல் 8 வரை, தனியா & 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு & தலா அரை டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், சோம்பு & கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை & 1, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் & 1 கப், காய்ந்த மிளகாய் & 6 முதல் 8 வரை, தனியா & 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு & தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:
முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது. முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.


Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 07:27:48 pm
கரம் மசாலா பொடி:

இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத்தான் இப்படி!
செய்முறை: லவங்கம் & 2 டீஸ்பூன், ஏலக்காய் 1 டீஸ்பூன், பட்டை & 4, தனியா & 1 டேபிள் ஸ்பூன், சீரகம் & 1 டீஸ்பூன், சோம்பு & 1 டீஸ்பூன்... இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!
Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 07:28:55 pm
கறி மசாலா பொடி:

இதை, மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.
செய்முறை: காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் & 1 கப், தனியா & அரை கப், மிளகு & 1 டேபிள் ஸ்பூன், சீரகம் & 1 டேபிள் ஸ்பூன், சோம்பு & 2 டேபிள் ஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் & தலா 5. இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!
Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on March 29, 2019, 07:30:40 pm
பனீர் பட்டர் மசாலா!


தேவையானவை:


பனீர் & 200 கிராம், பெரிய வெங்காயம் &3, தக்காளி & 4, இஞ்சி, பூண்டு விழுது & 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் & 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் & 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், வெண்ணெய் & 50 கிராம், ப்ரெஷ் க்ரீம் & 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ப்ரெஷ் க்ரீம்!), காய்ந்த வெந்தயக் கீரை & 2 டீஸ்பூன்.
செய்முறை:பனீரை சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள். இப்போது, வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள். அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வையுங்கள். வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள். கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள். ப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள். குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பனீர் பட்டர் மசாலா!
Title: Re: குருமா! & மசாலா !
Post by: MDU on April 04, 2019, 03:55:16 am
(http://gifimage.net/wp-content/uploads/2018/06/super-gif-1.gif)
Title: Re: சுரைக்காய் கூட்டு
Post by: MDU on April 04, 2019, 03:59:38 am
(http://gifimage.net/wp-content/uploads/2018/06/super-gif-1.gif)
Title: Re: உளுந்து சாப்பாத்தி
Post by: MDU on April 04, 2019, 04:00:53 am
(http://gifimage.net/wp-content/uploads/2018/06/super-gif-1.gif)
Title: Re: உளுந்து சாப்பாத்தி
Post by: AnJaLi on April 04, 2019, 03:09:22 pm
(https://i.postimg.cc/VsbczvJK/tenor-1.gif) (https://postimages.org/)
Title: Re: சுரைக்காய் கூட்டு
Post by: AnJaLi on April 04, 2019, 03:09:29 pm
(https://i.postimg.cc/VsbczvJK/tenor-1.gif) (https://postimages.org/)
Title: Re: குருமா! & மசாலா !
Post by: AnJaLi on April 04, 2019, 03:09:51 pm
(https://i.postimg.cc/VsbczvJK/tenor-1.gif) (https://postimages.org/)
Title: மசால் கலந்த தோசை
Post by: AnJaLi on April 30, 2019, 08:20:11 pm
தோசை மாவு - இரண்டு கரண்டி
மீதியான உருளைக்கிழங்கு பூரி மசால் - 2 கரண்டி
எண்ணெய் - 2டீஸ்பூன்
 

தோசை மாவையும்,உருளைக்கிழங்கு மசாலையும் கலந்து கொள்ளவும்.
தோசைக் கல்லை சூடு செய்து சிறிது எண்ணெய் தடவி கலந்த மாவை வட்டமாக பரத்தி விடவும்,மூடி போடவும்.
தோசை வெந்து வரவும் சிறிது எண்ணெய் தெளித்து திருப்பி போட்டு வெந்து வரவும் எடுக்கவும்.
சுவையான முறு முறுப்பான கலந்த மசால் தோசை ரெடி.சாம்பார் சட்னியுடன் பரிமாற சூப்பர்.இரண்டு தோசை சாப்பிட்டால் போதும் வயிறு ஃபுல்.
Note:
இது போல் பொரியல்,கிரேவி,குருமா,கொத்துக்கறி எது மீதமானாலும் கலந்து சுடலாம்


Title: உருளை 65
Post by: AnJaLi on April 30, 2019, 08:22:36 pm
உருளைக்கிழங்கு - 2
தயிர் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
கார்ன்ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி
புட் கலர் - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - வறுக்க தேவையானது

உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமான மெல்லிய சிப்ஸ்களாக சீவி தண்ணீரில் நன்கு அலசிவிட்டு பேப்பரில் ஈரம் போக உலர்த்தி எடுக்கவும்.

அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, கார்ன்ஃப்ளார், தயிர், கலர் சேர்த்து ஒன்றாக பிசையவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சிப்ஸை போட்டு பொரிக்கவும்.

சுவையான உருளை 65 தயார். தயிர் சாதம், சாம்பார் சாதத்துக்கு ஏற்றது.


Title: மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்
Post by: AnJaLi on April 30, 2019, 08:24:13 pm
மஷ்ரூம் - 10/12
பெரிய வெங்காயம் - ஒன்று
ப‌‌ச்சை மிள‌காய் - 3
பூண்டு விழுது - ஒரு தேக்க‌ர‌ண்டி
வெங்காய‌த்தாள் - ஒன்று
சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
மிள‌குத்தூள் - அரை தேக்க‌ர‌ண்டி
வ‌டித்து ஆறவைத்த சாத‌ம் - 1 1/2 கப்
உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி

முத‌லில் மஷ்ரூமை சுத்தப்படுத்தி, மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை மிகப்பொடியாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.

ஒரு பெரிய‌ வாய‌க‌ன்ற‌ க‌டாயில், எண்ணெய் விட்டு சூடாக்க‌வும். முதலில் ப‌ச்சை மிள‌காய் போட்டு சில‌ நொடிக‌ள் வ‌த‌க்கி பின்ன‌ர் வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

இத‌னுட‌ன் பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கி, பின்ன‌ர் ம‌ஷ்ரூம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

எல்லாமுமாக‌ சிறிது வ‌த‌ங்கிய‌ நிலையில், வெங்காய‌த்தாளையும் சேர்த்து ஒரு வதக்கு வ‌த‌க்கவும்.

அத‌னுட‌ன் துளி உப்பு சேர்த்து சாத‌த்தை கொட்டி கிள‌ற‌வும்.

கூட‌வே மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, க‌டாயின் சூட்டிலேயே நன்கு சாதம் உடைந்து விடாதவாறு பார்த்து க‌லந்து விட‌வும். உப்பு ச‌ரிப்பார்த்து தேவைப்ப‌ட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.

பிற‌கு மேலும் சிறிது நறுக்கிய வெங்காய‌த்தாள் சேர்த்து கலந்து விட்டு ப‌ரிமாற‌வும். இப்போது கிட்ஸ் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் த‌யார்!


Title: Pasta with Tangy Tomato Sauce Recipe
Post by: MDU on May 15, 2019, 05:21:20 am
(https://i.ndtvimg.com/i/2017-09/pasta-con-pomodoro-e-basilico_625x350_51506418092.jpg?downsize=650:400&output-quality=70&output-format=webp)
Ingredients Of Pasta With Tangy Tomato Sauce
For Pasta:
1 Cup Wheat flour/Rye four/Barley flour
1/4 Cup Water
A pinch of Rock salt
For Sauce:
5-6 Medium Tomatoes
50 Gram Fresh ginger
10-15 leaves/1 tbsp Fresh/Dry basil leaves
1/4 tsp Cinnamon powder
1/4 tsp Black pepper, grated
To taste Rock salt
For Pasta and Sauce mix:
50 Gram Carrot
25 Gram Capsicum
50 Gram Zucchini
25 Gram Pumpkin
50 Gram Avocado
1 Tbsp Basil leaves

How to Make Pasta with Tangy Tomato Sauce
Prepare Pasta:
1.In a deep broad bowl add salt to the flour and then add water and knead a soft dough.
2.Roll it in to square or round chapatti and cut into thin strips with a sharp knife.
3.Put these pieces in boiling water carefully and boil them for 8 - 10 minutes.
4.Remove from flame and let it stay for 5 -10 minutes.
5.Carefully drain out the hot water and add cold water to the pasta. Strain the pasta again. Pasta is ready to be put into the sauce.
Prepare the Sauce:
1.Steam tomatoes and fresh ginger for 5 – 7 minutes.
2.Grind to a smooth puree and strain it.
3.Add basil, cinnamon powder, rock salt and black pepper and let it simmer on medium flame for 2 minutes.
Prepare the dish:
1.Steam the chopped carrots, capsicum, zucchini, pumpkin and avocado for a few minutes.
2.Mix the steamed vegetables with the tangy tomato sauce. Leave to stand for ten minutes.
3.Toss pasta with the tangy tomato sauce and steamed vegetable mixture.
4.Garnish with fresh basil leaves and serve immediately.
Title: உருளை மசாலா
Post by: AnJaLi on August 07, 2019, 01:04:50 pm
சிறிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் - 15
சோம்பு - அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
புளி - சிறிய கோலி குண்டு அளவு
மிளகாய் வற்றல் - 5
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

மிக்ஸியில் மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு அதனுடன் சீரகம், சோம்பு, உப்பு, புளி, தனியா சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

அதனுடன் சின்ன வெங்காயத்தை போட்டு ஒன்றிரெண்டாக அரைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் அரைத்த விழுதை போட்டு பிசறி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில் பிசறி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு பிரட்டி மேலே எண்ணெய் ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

பிறகு ஒன்று போல் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு இறக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.


Title: செட்டிநாடு புலாவ்
Post by: AnJaLi on August 07, 2019, 01:06:06 pm
சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 5
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 4
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - ஒன்று
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புதினா - ஒரு கப்
கொத்தமல்லி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - அரை முடி
தாளிக்க:
கிராம்பு
பட்டை
பிரிஞ்சி இலை
ஏலக்காய்

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் அடித்து இரண்டு கப் வருமாறு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரி்ல் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் மூடி வைக்கவும். எலக்ட்ரிக் குக்கர் ஆப் ஆனவுடன் சூடாக எடுத்து பரிமாறவும்.

இப்பொழுது சூடான சுவையான செட்டிநாடு புலாவ் ரெடி. இதனுடன் வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.


Title: Re: செட்டிநாடு புலாவ்
Post by: MDU on August 15, 2019, 02:29:30 am
(http://img.over-blog-kiwi.com/0/98/03/83/20160317/ob_9d35a0_mdg-3454-8547-1.gif)
Title: Re: செட்டிநாடு புலாவ்
Post by: AnJaLi on January 31, 2020, 02:41:54 pm
(https://i.postimg.cc/VsbczvJK/tenor-1.gif) (https://postimages.org/)
Title: Re: உருளை 65
Post by: RaDha on December 22, 2021, 12:15:39 pm
potato chips and potato 65 wow
Title: Re: Mushroom Masala
Post by: RaDha on December 27, 2021, 08:31:52 pm
yummy
Title: Re: உருளை மசாலா
Post by: RaDha on March 05, 2022, 04:38:26 pm
yummy
Title: Veg Recipes
Post by: Sanjana on September 11, 2022, 10:34:34 am
செ.தே.பொருட்கள் :-
கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு
அவித்த வெள்ளை மா – 1 சுண்டு
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
வெந்தயம் – 1 தே. கரண்டி
சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
மிளகு – 1/2 தே. கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி

தாளிப்பதற்கு :-
சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)
செத்தல் மிளகாய் – 3
கடுகு – 1/2 தே. கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
கறிவேப்பிலை – 1 நெட்டு

செய்முறை :-
* உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும்.
* சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.
* உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.
* அரைத்த மாவில் அவித்த மா,அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து
10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும்.
* புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.
* சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.
* தாளிதத்தையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக.
* (தோசைகளை சம்பலுடன் பரிமாறலாம் )

** தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.

** குறிப்பு: தோசை மொற மொறப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பசுமதி, அல்லது சம்பா, அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.
Title: Veg Recipes
Post by: Sanjana on September 12, 2022, 11:33:25 am
தேவையான பொருட்கள்

1 சுண்டு மா
1/3 சுண்டு தேங்காய்பூ (-/+)
10 சின்ன வெங்காயம் (-/+)
2 பச்சைமிளகாய் (-/+)
1/3 சுண்டு இளநீர் / நீர் (-/+)
உப்பு
செய்முறை:

வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்திரத்தில் மா, வெங்காயம், தேங்காய்பூ, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

அதில் கொஞ்சம் கொஞ்சமாக இளநீர் / நீர் சேர்த்து குழைக்கவும். மாக்கலவை மிருதுவாக மற்றும் கையில் ஒட்டாதவாறு இருக்க வேண்டும். ரொட்டி மாவை மூடி 30 நிமிடங்கள் வைக்கவும்.

ரொட்டி மாவை விரும்பிய எண்ணிக்கையில் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டிய மாவை கொஞ்சம் மாவில் அல்லது எண்ணையில் உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து மெல்லிய மற்றும் வட்டமாக உருட்டி எடுக்கவும்.

தோசைக்கல் அல்லது நொன்ஸ்ரிக் சட்டியை சூடாக்கி அதில் ரொட்டியை இரு பக்கமும் பொண்ணிறமாகச் சுட்டொடுக்கவும். சுடச்சுட சம்பலுடன் பரிமாறினால் நல்ல சுவையாக இருக்கும். தேங்காய்ப்பூ ரொட்டி தயார்!

குறிப்பு:
ஒன்றுக்கு ஒன்றுக்கு என்ற விகிதத்தில் ஆட்டாமா மற்றும் கோதுமைமா சேர்த்தும் செய்யலாம்.
Title: தேங்காய் பால் புலாவ் 😋
Post by: AslaN on October 11, 2022, 04:44:22 pm

தேங்காய் பால் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப், தேங்காய் பால் – இரண்டே கால் கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலை பருப்பு – ரெண்டு டீஸ்பூன், முந்திரி – 10, பச்சை மிளகாய் – 2, வர மிளகாய் – 3, நறுக்கிய இஞ்சி – அரை ஸ்பூன், கருவேப்பிலை – இரண்டு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, துருவிய தேங்காய் – அரை கப்.

தேங்காய் பால் புலாவ் செய்முறை விளக்கம்: முதலில் பாஸ்மதி அரிசி ஒன்றரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். 300 கிராம் அளவு இருக்கும். அதே கப்பில் இரண்டே கால் கப் அளவிற்கு வருமாறு தேங்காயை திருகி மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை களைந்து சுத்தம் செய்து பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். 10 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அரைத்து எடுத்த இந்த தேங்காய் பாலையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மூடி விட்டு ரெண்டு விசில் விட்டு எடுத்தால் உதிரி உதிரியான சூப்பரான முறையில் தேங்காய் பாலில் பாஸ்மதி அரிசி நன்கு வெந்து வந்திருக்கும்.

இப்போது தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை திருகி பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு வாய் அகன்ற வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் மற்றும் நெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலை பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் வறுபட்டதும் அதனுடன் காஞ்ச மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். துருவிய இஞ்சி, ரெண்டு கொத்து கருவேப்பிலை, தேவையான அளவிற்கு பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி விடுங்கள். அனைத்தும் நன்கு தாளிக்கப்பட்டதும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை தூவி அடுப்பை அணைத்து லேசாக பிரட்டி விடவும்.

பின்னர் நீங்கள் வடித்து வைத்துள்ள உதிரி உதிரியான சாதத்தை இதனுடன் சேர்த்து கலவை சாதம் போல நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதன் மீது பொடி பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி சுட சுட பரிமாறினால் அவ்வளவு சூப்பரான தேங்காய் பால் புலாவ் ரெசிபி தயார். இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க, எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க.




(https://i.postimg.cc/MGYS9jSg/images-69.jpg) (https://postimages.org/)

Title: Re: தேங்காய் பால் புலாவ் 😋
Post by: Sanjana on November 01, 2022, 04:27:36 am
MACHIIII....NALA BRIYANI RECEIPE PODU MACHI......
Title: Re: Veg Recipes
Post by: Sanjana on December 18, 2022, 11:48:06 am
புடலங்காய் கூட்டு:

வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்தநேரத்திலேயே செய்து விடலாம்


புடலங்காய் கூட்டு தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான ஒரு பொரியல் வகை. தமிழகத்தில் இவை பெரும்பாலான கல்யாண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். புடலங்காய் கூட்டிற்க்கு என ஒரு கூட்டம் கல்யாண விருந்துகளில் பங்கேற்பார்கள் என்றால் அது மிகை அல்ல. கூட்டுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் காலிஃபிளவர் கூட்டு, சுரக்காய் கூட்டு, கத்திரிக்காய் கூட்டு, பூசணிக்காய் கூட்டு, வெள்ளரிக்காய் கூட்டு, மற்றும் வாழைத்தண்டு கூட்டு மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது புடலங்காய் கூட்டு.

Pudalangai Kootu / Chow Chow Kootu / புடலங்காய் கூட்டு

புடலங்காய் கூட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை குறைந்த பொருட்களை வைத்தே நாம் செய்து விடலாம். இதை வெறும் புடலங்காய், கடலை பருப்பு, பாசி பருப்பு, மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் சுலபமாக செய்து விடலாம். மேலும் புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் அதிகமாக இருப்பதனால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது.

இப்பொழுது கீழே புடலங்காய் கூட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Pudalangai Kootu


வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்தநேரத்திலேயே செய்து விடலாம்
Prep Time
15 mins
Cook Time
15 mins
Total Time
30 mins
Course: Side DishCuisine: South Indian, Tamil, Tamil NaduKeyword: chow chow, chow chow kootu, pudalangai kootu Servings: 2 people

புடலங்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்
1½ கப் புடலங்காய்
¼ கப் கடலை பருப்பு
¼ கப் துருவிய தேங்காய்
1 மேஜைக்கரண்டி அரிசி மாவு
2 மேஜைக்கரண்டி பாசி பருப்பு
2 சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய்
1 மேஜைக்கரண்டி சீரகம்
½ மேஜைக்கரண்டி சீரக தூள்
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
¼ மேஜைக்கரண்டி கடுகு
1 சிட்டிகை பெருங்காய தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தேஉப்பு
சிறிதளவு கருவேப்பிலை

புடலங்காய் கூட்டு செய்முறை:

1.முதலில் வெங்காயம், புடலங்காய், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி, கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
2.45 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து போடவும்.
3.பின்பு அதில் கடலை பருப்பு முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை போட்டு ஒரு மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக விடவும். (புடலங்காயை கடைசியாகவே போடவும் அப்பொழுது தான் அது குழைந்து விடாமல் இருக்கும்.)
4. 2 விசில் வருவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தை போடவும்.
5.பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொற கொறப்பான பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
6. 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
7. பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் புடலங்காயை போட்டு அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.
8. 6 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பில் வைத்திருக்கவும்.
9. இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
10. எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
11. உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் புடலங்காய் கூட்டில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுட சுட பரிமாறவும்.
12. இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் புடலங்காய் கூட்டு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.