Advanced Search

Author Topic: Non - Veg Recipes  (Read 30562 times)

August 15, 2019, 02:28:42 am
Reply #15

MDU

Re: நண்டு கறி
« Reply #15 on: August 15, 2019, 02:28:42 am »

January 31, 2020, 02:42:27 pm
Reply #16

AnJaLi

Re: நண்டு கறி
« Reply #16 on: January 31, 2020, 02:42:27 pm »

January 31, 2020, 02:42:44 pm
Reply #17

AnJaLi

Re: ஸ்டஃப்டு நண்டு
« Reply #17 on: January 31, 2020, 02:42:44 pm »

December 22, 2021, 11:50:55 am
Reply #18

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 14

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: ஸ்டஃப்டு நண்டு
« Reply #18 on: December 22, 2021, 11:50:55 am »
saapidanum pola iruke

July 28, 2022, 03:34:00 pm
Reply #19

Sanjana

Re: நண்டு கறி
« Reply #19 on: July 28, 2022, 03:34:00 pm »
Wow...thank you

October 23, 2022, 01:32:30 am
Reply #20

RoJa

ஹனி சிக்கன்
« Reply #20 on: October 23, 2022, 01:32:30 am »
தேவையான பொருட்கள்:

* சிக்கன் விங்ஸ் - 300 கிராம்
* சோள மாவு - அரை கப்
* மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
* தேன் - 4 தேக்கரண்டி
* மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
* இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி
* பார்பிக்யூ சாஸ் - அரை கப்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை ( விங்ஸ்) ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கிளரி சிறிது ஊற வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்ற வேண்டும். அதன் பிறகு ஊற வைத்த சிக்கனை எடுத்து சோளமாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொறிக்க வேண்டும்.

ஒரு புதிய பாத்திரத்தில் சிறிது அளவு எண்ணெயை ஊற்றி அதில் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேனை ஊற்றி நன்கு கலக்க வேண்டும். 2 நிமிடம் கலக்கிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொரிக்கப் பட்ட சிக்கனை எடுத்து அடுப்பில் இருக்கும் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேன் கலவையில் கொட்டி வதக்க வேண்டும். அடுப்பை அணைத்து தட்டில் பரிமாறினால் சுவையான ‘ஹனி சிக்கன்’ ரெடி.

November 01, 2022, 04:28:12 am
Reply #21

Sanjana

Re: ஹனி சிக்கன்
« Reply #21 on: November 01, 2022, 04:28:12 am »
NICE RECIPE....I LL TRY THIS WEEKEND....

December 18, 2022, 11:52:35 am
Reply #22

Sanjana

Re: Non - Veg Recipes
« Reply #22 on: December 18, 2022, 11:52:35 am »
மட்டன் மசாலா:

மட்டன் மசாலா தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக மட்டன் பிரியர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உண்டு. பொதுவாக மட்டன் மசாலாவை மக்கள் சாதத்தில் போட்டு சுவைக்கிறார்கள். அதை தவிர மட்டன் மசாலாவை சப்பாத்தி, பூரி, நாண், ஃபுல்கா போன்றவற்றுக்கு சைடிஷ் ஆகவும் இதை மக்கள் உண்கிறார்கள்.

மட்டன் மசாலா / Mutton Masala


மட்டன் மசாலாவின் சிறப்பு என்னவென்றால் இதை செய்வதற்கு சற்று அதிக நேரம் ஆனாலும் இதை செய்வதற்கு எந்த விதமான கடினமான செய்முறையும் கிடையாது. இதை மிக எளிதாக சமைக்க தெரியாதவர்கள் கூட முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். மட்டன் வேக சிறிது நேரம் பிடிக்கும் என்பதால் தான் மட்டன் மசாலாவை செய்வதற்கு சற்று அதிக நேரம் எடுத்து கொள்கிறது.

இப்பொழுது கீழே மட்டன் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.




இதைமிக எளிதாக சமைக்க தெரியாதவர்கள் கூட முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம்
Prep Time
15 mins
Cook Time
15 mins
Total Time
30 mins
Course: Side DishCuisine: South Indian, Tamil, Tamil NaduKeyword: mutton masala

மட்டன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

750 கிராம் மட்டன்
5 to 6 பெரிய வெங்காயம்
3 தக்காளி
6 பூண்டு பல்
2 இஞ்சி துண்டு
½ கப் தயிர்
½ எலுமிச்சம் பழம்
3 to 4 ஏலக்காய்
2 பிரியாணி இலை
3 to 4 கிராம்பு
1 துண்டு பட்டை
1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லி பேஸ்ட்
½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
1 மேஜைக்கரண்டி எண்ணெய்
3 மேஜைக்கரண்டி நெய்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு தேவையான அளவு உப்பு
சிறிதளவு கொத்தமல்லி

மட்டன் மசாலா செய்முறை:

1.முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து பின்பு மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
2.இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் மட்டனை போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நம் கைகளின் மூலம் நன்கு கலந்து விடவும்.
3.பின்பு அதில் அரை கப் அளவு தயிரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 30 நிமிடத்தில் இருந்து 45 நிமிடம் வரை அதை ஊற விடவும்.
மட்டன் ஊறுவதற்குல் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
4.பின்னர் அதே மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாயை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
5.அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும்.
6.நெய் உருகியதும் அதில் ஏலக்காய், பிரியாணி இலை, பட்டை, மற்றும் கிராம்பு போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் சிறிது பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.
7.வெங்காயம் சிறிது பொன்னிறமானதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சில்லி பேஸ்ட்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
8.இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மட்டனை சேர்த்து அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை நன்கு கலந்து விடவும்.
9.12 நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மூடி போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை அதை வேக விடவும். (அவ்வப்போது மூடியை திறந்து ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு கலந்து விடவும்.)
10.20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி விட்டு பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை அதை வேக விடவும். (அவ்வப்போது ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு கலந்து விடவும்.)
11.20 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து அதை சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.
12.7 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும். (சுமார் 200 லிருந்து 250ml தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
13. 12 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் pan ல் மூடி போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை அதை வேக விடவும். (அவ்வப்போது மூடியை திறந்து ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு கலந்து விடவும்.)
14. 25 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதில் கரம் மசாலா மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
15.3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மட்டன் மசாலாவை எடுத்து அதை சப்பாத்தியுடனோ அல்லது நாண்வுடனோ வைத்து சுட சுட பரிமாறவும்.
16.இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அசத்தலாக இருக்கும் மட்டன் மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.