Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-065  (Read 13719 times)

March 02, 2026, 06:14:37 pm
Read 13719 times

RiJiA

கவிதையும் கானமும்-065
« on: March 02, 2026, 06:14:37 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-065


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: April 07, 2026, 06:25:11 pm by RiJiA »

March 03, 2026, 11:08:47 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-065
« Reply #1 on: March 03, 2026, 11:08:47 am »

கற்பனைகள் இன்றி கவிதைகள் இல்லை
என் அம்மு இன்றி எனக்கு கற்பனைகளே இல்லை
அப்படிப்பட்ட கற்பனைகளில் சில கிருக்கல்களை சிதருகிறேன்....



அவளும் தமிழும்


பல்வேறு மொழிகள் பேசலாம்
வெவ்வேறு பழக்கவழக்கங்கள் இருந்தாலும்
ஒரே மொழி பேசும் பெண்மை

மௌன மொழி பேசுவாள்
தமிழைப் போன்று புலமையாவாள்

அழகு விழியில் பேசுவாள்
தமிழைப் போன்று நாணுவாள்

புன்சிரிப்போடு பேசுவாள்
தமிழைப் போன்று புன்னகைப்பாள்

வண்ணமயிலாக ஆடுவாள்
தமிழைப் போன்று வர்ணம் பூசியவள்

புள்ளிமானாக துள்ளிகுத்திப்பாள்
தமிழைப் போன்று புள்ளியிட்டு கோலமிடுபவள்

அல்லி விழியுடையாள்
தமிழைப் போன்று கூர்மையானவள்

முல்லை பார்வையினால்
தமிழைப் போன்று குணமுடையவள்

கொள்ளைப்போகும் நெஞ்சம்
தமிழைப் போன்று கவிதையானால்

வானமகள் நாணுவாள்
தமிழைப் போன்று மென்மையானவள்

நிலவைப் போன்றவள்
தமிழைப் போன்று வெண்மையானவள்

கதிரவனைப் போன்றவள்
தமிழைப் போன்று பிரகாசமானவள்

கமல விழியாள்
தமிழைப் போன்று படர்ந்திருப்பாள்

அன்பு கொண்டவள்
தமிழைப் போன்று அன்பானவள்

பண்பு கொண்டவள்
தமிழைப் போன்று பண்பானவள்..

 அந்த மழலை காதல் சின்னஞ்சிறு வயதில் அந்தி மாலை பொழுதில் என்னவளுடன் கை கோர்த்த அந்த அழகிய நினைவுகள் மட்டுமே இன்று என்னோடு...

வெற்றிக்கு விருந்தளிக்கும் நாம்
தோல்விக்கு மருந்தளிக்க மறக்கிறோம்...

பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும்
பாசத்தின் வெளிப்பாடு
அன்பிற்கு இல்லை எந்நாளும் பாகுபாடு

அமைதி அடைந்த பிறகு மனம்
ஆசுவாசம் கொள்கிறது முடிவில்...

வாழ்வை சுவாரஸ்யமாக்க
வெற்றிடமின்றி நிரப்பி வையுங்கள்
தங்களின் விலை மதிப்பில்லா அன்பினால்.....

March 03, 2026, 01:03:55 pm
Reply #2

Love Me

Re: கவிதையும் கானமும்-065
« Reply #2 on: March 03, 2026, 01:03:55 pm »
சிறுவயது மணல்வீட்டில் சேர்ந்து விளையாடிய நாளில்,
சின்ன இதயங்களில் விதையாய் காதல் விழுந்தது…
கைகோர்த்து நடந்த அந்த பள்ளிப் பாதையில்,
கனவுகள் கூட நம்மோடு நடந்தது.
குழந்தை சிரிப்பில் தொடங்கிய அந்த நட்பு,
காலம் செல்ல செல்ல காதலாய் மலர்ந்தது.
பொம்மை சண்டைகள், புன்னகை சமாதானங்கள்,
அத்தனையும் இன்று நினைவின் பொக்கிஷங்கள்.
அப்போது தெரியாத அந்த இனிய உணர்வு,
இன்று என் வாழ்வின் முழு அர்த்தம் ஆனது…
கடற்கரை மௌனத்தில் உன் கை கோர்த்த நொடியில்,
காதல் என்ற சொல் மெதுவாய் பிறந்தது…
மாலை வானம் நம்மைக் கண்டு சிவந்தது,
மனதின் ராகம் மெதுவாக இசைந்தது.
சின்ன சின்ன அடிகளால் பாதை வரைந்தோம்,
சிரிப்பின் சத்தத்தில் உலகம் மறந்தோம்.
காற்று வந்து நம் ரகசியம் கேட்டது,
அலைகள் வந்து இதயத்தைத் தழுவியது.
"உன் கை என் கையில் சேர்ந்த அந்த நேரம்,
உலகமே நின்றது அது நம் பேரின்பமானது!"
நிழல் போல நீ அருகில் நடந்தால்,
நெஞ்சம் முழுவதும் பூக்களாய் மலர்ந்தன.
பேசாமல் பேசும் உன் கண்களின் மொழியில்,
பிரியத் தரிசனப் பார்வையில் வழி கண்டேன் இன்று.
மழைத் துளி விழும் இசை கேட்டேன்,
அதிலும் கூட உன் பெயர் கேட்டேன்.…
இரவு வந்து நட்சத்திரம் தூவினாலும்,
என் விழியில் நீயே ஒளி தந்தாய்..
உன் அருகில் நின்ற ஒவ்வொரு நொடியும்,
என் ஆயுள் முழுதும் நிறையும் பொக்கிஷம்.
உன் நெஞ்சில் நான் சாய்ந்த அந்த நேரம்,
உலக சுமைகள் எல்லாம் கரைந்த நேரம்.
நேரம் எவ்வளவு தூரம் சென்றாலும்,
நேசம் மட்டும் தூரம் போகாது என்றும்.
உன் சிரிப்பு என் நாளின் விடியல்,
உன் அருகில் தான் என் வாழ்வின் விடியல்.
விதி எழுதும் வரிகள் மாறினாலும்,
நம் காதல் பாதை மாறாதே.
காலம் சென்றாலும் கை விட மாட்டேன்,
என் காதலின் இறுதிவரை 
என் உயிரின் நிலைமாறா உறுதி நீயே. 💖
« Last Edit: March 03, 2026, 01:18:02 pm by Love Me »

March 04, 2026, 03:06:10 pm
Reply #3

Shruthi

Re: கவிதையும் கானமும்-065
« Reply #3 on: March 04, 2026, 03:06:10 pm »
எல்லாருக்கும்  "அ"  என்பது  அம்மா ஆனா  எனக்கு  மட்டும்  அண்ணா....
ஏனென்றால்  மூச்சுக்கு மூண்ணுறு முறை  நான்  உச்சரித்தது அண்ணா  அண்ணா   அண்ணா  மட்டுமே.....


வீடுல  நீயும்  நானும்  எப்பவுமே  tom & jerry தான்...
ஆனால்  ஒரு  பொழுது  கூட  நா இல்லாம  நீயும் நீ  இல்லாம  நானும்  சாப்பிட்டதில்ல....


தகப்பன்  முகத்தை  நான் கண்டதில்லை
நீ  தலை  வாரி  கொண்டதை  நான் ஒருநாளும்  பார்த்ததில்லை...
நீ  தலை  வாரி  கொண்டதை  நான் ஒருநாளும்  பார்த்ததில்லை...


எனக்கு  முன்னாடியே  நீ பிறந்துட்ட..
உன்  கைய பிடிச்சே  நான்  வளர்ந்துட்டேன்...
எனக்கொன்னுனா  நீ  துடிச்சி போவ...
எனக்காக  நீ  எப்பவும்  படிஞ்சும்  போவ...


எனக்காக  எல்லாமே  பாத்து பாத்து  வாங்குவ...
என்  உறக்கத்துக்கு  பிறகுதான்  நீயே  கண்  மூடி  தூங்குவ...
என்  உறக்கத்துக்கு  பிறகுதான்  நீயே  கண்  மூடி  தூங்குவ..


நான்   எங்க போனாலும்  சரி  எங்க இருந்தாலும்  சரி  எப்பவுமே  சந்தோஷமா இருப்பேன்..ஏன்  தெரியுமா?
என்  அண்ணா  என்  கூட  இருக்கான்னு  ஒரு  நிம்மதி....


வலிக்காமல்  அடிப்பது  எப்படின்னு உனக்கும்...
வலிச்சாலும் வலிக்காத  மாதிரி நடிப்பது  எப்படின்னு எனக்கும்....
அன்னை கருவறையில்  நாம் கற்றுக் கொண்ட வித்தைகளில்  இதுவு‌ம் ஒன்று....


உன்னை  பற்றி இன்னும்  சொல்ல ஆசை இருக்கு  நெஞ்சுக்குள்ள....
எப்பவுமே  விட்டு கொடுக்காம  இப்படியே  இருப்போம்  ஒண்ணுகுள்ள....

உன்  மடியில்  சாய்ந்து  பலமுறை  நான்      அழுதிருக்கேன்...காரணம்  நீயும்  எனக்கு  இன்னொரு தாய்  தான்....

நீயும்  எனக்கு  இன்னொரு தாய்  தான்....
« Last Edit: March 04, 2026, 03:10:59 pm by Shruthi »

March 04, 2026, 09:01:44 pm
Reply #4

Shahidm

Re: கவிதையும் கானமும்-065
« Reply #4 on: March 04, 2026, 09:01:44 pm »

கற்பனையின் தங்கை, என் வாழ்வின் கவிதை:

காலை சூரியன் உதிக்கும் போது 
என் கையில் பிடித்துக் கொண்டு ஓடும் 
ஒரு சிறிய கையை நான் கற்பனை செய்கிறேன். 
அது என் தங்கையின் கை
என் வாழ்வின் இனிய கனவு. 

அவள் சிரிப்பில் சூரிய ஒளி, 
அவள் குரலில் பறவையின் இசை. 
என் மனம் சோர்ந்தால், 
அவள் சொன்ன ஒரு சொல் 
என் உயிரை மீண்டும் எழுப்பும். 

நான் விழுந்தால், 
அவள் என் கையை பிடித்து எழுப்புவாள். 
நான் வென்றால், 
அவள் என் வெற்றியை தன் வெற்றியாகக் கொண்டாடுவாள். 
அந்த உறவு தான் 
என் வாழ்வின் அழகிய கவிதை. 

நினைவுகளில் மட்டும் வாழும் 
இந்தத் தங்கை உருவம், 
என் கனவுகளில் தினமும் வந்து 
என் அருகில் நிற்கிறது. 
அவள் இல்லாத வெறுமையை 
என் கற்பனை நிரப்புகிறது. 

கடற்கரையில் நடந்தால், 
அவள் என் அருகில் ஓடுவாள். 
மழை பெய்தால், 
அவள் என் தோளில் சாய்ந்து சிரிப்பாள். 
அந்தச் சிரிப்பு தான் 
என் வாழ்வின் இனிய இசை. 

அண்ணன் தங்கை உறவு 
ஒரு புனிதமான பந்தம். 
இரத்தத்தில் இல்லாவிட்டாலும், 
உணர்வில் அது உயிராய் நிற்கிறது. 
என் வாழ்வில் இல்லாத அந்தத் தங்கை, 
என் கவிதைகளில் என்றும் வாழ்கிறாள். 

அவள் என் கனவின் தோழி, 
என் நினைவின் நிழல், 
என் வாழ்வின் இனிய பக்கம். 
அண்ணனின் அன்பை உணர்த்த 
என் உள்ளம் உருவாக்கிய 
அந்தத் தங்கை
என் கவிதையின் நிலையான உயிர்.

Dedicated to all my sisters by ShahidM

March 06, 2026, 02:24:30 am
Reply #5

MDU

Re: கவிதையும் கானமும்-065
« Reply #5 on: March 06, 2026, 02:24:30 am »
உனக்காக எப்போதும் ஒரு அண்ணன் இதயம் அமைதியாக துடித்துக்கொண்டே இருக்கும்



என் செல்ல தங்கையே…நீ பிறந்த நாள் முதல்
என் வாழ்க்கையில் வந்த ஒரு சிறிய தேவதை தான் நீ

சின்ன கை என் விரலைப் பிடித்த நாள் முதல்,
உன் உலகம் நானும் என் உலகம் நீயும் தான்

“அண்ணா” என்று நீ அழைத்த அந்த ஒலி,
என் உயிரின் இதயத்துடிப்பாக மாறியது

நீ விழுந்தால் முன்பே வலி எனக்கு தான்,
நீ சிரித்தால் அதுவே என் முதல் வெற்றி தான்

நீ சிரிக்கும் போது என் மனம் முழுக்க மகிழ்ச்சி மலர்கிறது
நீ அழும் போது என் இதயம் உடைந்து போகிறது

உன் பள்ளி முதல் நாள் கண்ணீர் துளியில் நனைந்து கொண்டு இருக்கும் போது
உனது கண்ணீரை துடைத்த நாட்கள் பல உண்டு

சின்ன சண்டைகள்… சின்ன பொறாமைகள்
ஆனால் அந்த சண்டைகளுக்குப் பின்னாலே

அளவில்லா அன்பு மட்டும் தான் இருந்தது
இன்று காலம் நம்மை வெவ்வேறு பாதையில் பயணிக்குன்றோம்

என் மனசு இன்னும் அந்த பழைய நாட்களில்தான்
வீட்டின் ஒவ்வொரு மூலையும் உன் சிரிப்பை தேடுகிறது

காலியான அறை கூட உன் பெயரைச் சொல்லுகிறது
தூரம் நம்மை பிரித்தாலும்,

உறவு நம்மை எப்போதும் இணைத்தே வைத்திருக்கும்
நீ சந்தோஷமா இருந்தா போதும் உடன்பிறப்பே …

அதுதான் அண்ணனுக்கு பெரிய ஆறுதல்
என் தோளில் தலையணைத்து அழுத அந்த நாள்கள்,

உலகம் முழுக்க யாரும் புரியாத வேளையில்
என்னை முதலில் புரிந்தவாள் என் தங்கை தான்

நாளை நீ பெரியவளாகி தொலை தூரம் சென்றாலும்
என் மனசுக்குள் நீ எப்போதும் அந்த சிறிய தங்கையே

என் வாழ்க்கையின் மிகப் பொக்கிஷமான நினைவுகள்
பிரிவு ஒரு தூரம் மட்டும் தான்

நேரம் எங்களை பிரித்தாலும்,
அண்ணன் தங்கை பாசத்தை யாராலும் பிரிக்க முடியாது

ஆனா பாசம்?
அது உயிர் இருக்கும் வரை அழியாத ஒன்று

நாம் ஒன்றாக இருந்த நாட்கள் குறைந்து போனாலும்,
அந்த நினைவுகள் என் இதயத்தில் என்றும் உயிரோடு இருக்கிறது

நீ சிரித்தால்
உலகமே அழகாக தெரியும்

ஆனால் நீ ஒரு துளி கண்ணீர் விட்டால்
என் இதயம் ஆயிரம் துண்டாக உடைந்து போகிறது

இந்த உலகம் எவ்வளவு மாறினாலும் ஒரு விஷயம் மட்டும் மாறாது
தங்கைக்கு இருக்கும் அண்ணன்  பாசம்

உனக்காக எப்போதும் ஒரு அண்ணன் இதயம்
அமைதியாக துடித்துக்கொண்டே இருக்கும்

நான் அருகில் இல்லாத நாள்களிலும் ஒரு விஷயம் மட்டும் மறக்காதே
இந்த உலகத்தில் யாரும் பார்க்காமல் யாரும் கேட்காமல் உனக்காக அமைதியாக அழும்

ஒரு அண்ணன் இதயம் எப்போதும் துடிக்கும்
அது ஜிடிசி இல் உள்ளா அண்ணன் MDU வின் இதயமாக இருக்கும்

GTC இல் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த கவிதை சமர்ப்பிக்கிறேன் இப்படிக்கு உங்கள் MDU




« Last Edit: March 06, 2026, 02:34:28 am by MDU »

March 06, 2026, 03:17:49 pm
Reply #6
Re: கவிதையும் கானமும்-065
« Reply #6 on: March 06, 2026, 03:17:49 pm »
        Tittle--> வாழ்நாளின் வாக்குறுதி

சூரியன் மெதுவாக கடலில் கரைகிறது.

அந்த ஒளியில் உலகமே ஒரு நிமிடம் அமைதியாக நின்றது போல,

தென்றல் காற்றை தென்னை மரங்கள் கடத்த,

காற்றின் கீதம் என் தங்கையின் குட்டி சிரிப்பில் தவழ்ந்தது..

அலைகளின் கரையில் எழும்
ஒலிகள் பல
கதைகள் சொன்னது,

வானில் பறந்த பறவைகளோ!  அவளின் சுதந்திரத்தை உணர்த்தின

அவள் கனவுகள் என் தோளில் தான் ஓய்ந்தன

அவளுக்கு தெரியாது,
இந்த பாதை எவ்வளவு நீளமோ…
இந்த உலகம் எவ்வளவு கடினமோ…

அவளுக்கு தெரிந்த ஒரே விஷயம்
அந்த கையை பிடித்தால்
எதுவும் நடக்காது என்பதுதான்.

இன்னும் ஒரு அடி எடுத்து வைப்போம்,

ஆர்ப்பரித்த அலைகள் வெகு தொலைவில் ஆரவாரம் செய்ய,

அவள் சிறிய கை என் விரலைப் பற்றியது

என் வாழ்க்கை முழுக்க இருக்கும் பொறுப்பை அந்த கணம், கண் சிமிட்டலோடு உணர்ந்தேன்.,

என் வாழ்க்கை முழுக்க இருக்கும் பொறுப்பை அந்த கணம், கண் சிமிட்டலோடு உணர்ந்தேன்.,
« Last Edit: March 06, 2026, 03:23:11 pm by புகழ் »

March 09, 2026, 04:52:59 am
Reply #7

Shaswath

Re: கவிதையும் கானமும்-065
« Reply #7 on: March 09, 2026, 04:52:59 am »
என் மடி மீது முனங்கினாய்,
என் விரல் பிடித்து பாடினாய்

என் குணம் பருவத்தை மறந்தது,
உன் கணம் இலகாக தெரிந்தது

வானும் மண்ணும் இடையே என் உயரம் பெரிது,
தலை குனிந்தே பார்த்தால் என் நிழலும் நீயே

மனம் குமற செய்வேன்..சொற்பொழிவும் ஆற்றுவேன்,
பொழுதும் சலிப்பில்லா செவிகளை தரும் தாரகம் நீ…

உன் ஒற்றை விரலின் பிடியில்…
மெய் சிலிர்ந்த நாவாய் ஆனேன் சகோதாரா

நம் இடையே பந்தம்…
கடல் அலை போல் நெகிழும் சிலந்தி வலை

தனித்த கண் அறிவதில்லை,
வடிவமைப்பின் இணைவு புரிவதில்லை

ஜோடி மரங்களோ…குனியும் புறாக்களோ…

கண் ஏதும் வைத்தால்,
பொறாமையினால் ஒட்டியபடி சிக்கி கொள்வீர் 😂

என்னை நம்பிய முதல் மனிதன் ☺️

Dedicated to my thombi🥰🫂
« Last Edit: March 09, 2026, 04:58:53 am by Shaswath »