நண்பர்களே நண்பிகளே.... சிறு நீண்ட பணி இடைவெளிக்கு பிறகு உங்கள் அன்பு hunk.....அனைவரும் நலமாக இருக்கவும், வாழ்வில் சிறக்கவும் வேண்டுகிறேன்... இரவின் மடியில் இன்ப வெல்லமாய் நேயர்களின் விருப்பப் பாடல்களை இனிமையாகவும் நகைச்சுவை உணர்வுடனும் ஒளிபரப்பி வரும் சங்கீத மேகம் நிகழ்ச்சிக்கும்.., அதை பட்டை தீட்டி மெருகேற்றும் அன்பு script writer களுக்கும், RJ களுக்கும்., இனிய நண்பர் coffee boy, நண்பி rijia, மற்றும் அனைத்து gtc நண்பர்களுக்கும் நன்றி கூறிக்கொண்டு., எனது விருப்பப் பாடலை உங்களுடன் பகிர்கிறேன்..
பாடல் : நிலவுப் பாட்டு
திரைப்படம் : கண்ணுக்குள் நிலவு
ராகதேவன் "இளையராஜா" வின் இன்னிசையில்,, பாடகர் "ஹரிஹரனின் மென்மையான குரலில்., பழனி பாரதியின் வரிகளில் தொண்ணூறுகளில் mp3 player இல் ஆட்சி செய்த பாடல்... என்னோடு அனைவரும் கேட்டு மகிழுங்கள்... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... நல்லதே நடக்கும்.. நடப்பதெல்லாம் நன்மைக்கே... இரவு வணக்கத்துடன் உங்கள் hunk...