முகம் மறந்தேன்!
என்னை முழுவதும் மறந்தேன்!
இமைக்கும் ஒவ்வொரு வினாடியும் உந்தன் முகம்தானடி!
உன் வழிப் பாதை யாவும்
பூக்கள் தூவிக் காத்திருந்தேன்!
உன் விழிப் பார்வையில்
என்னை நான் தொலைத்தேன்!
என்னவளே!
எனக்கானவளே!
ஏக்கத்ததோடு காத்திருக்கிறேன்!
உன் அன்பில் நனையக் காத்திருக்கிறேனடி!
என் உயிரும், உள்ளமும் நீதானடி!
புன்னகைப் பூவே!
உந்தன் கரம் பிடிக்கும் நாளை எண்ணி
என் நாட்களும் நகருதடி!
நீ நிலவை தலையனையாக
வைத்து உறங்கும் வேளையில்
நான் உந்தன் நினைவுகளை
தலையனையாக வைத்து
உறங்குவேன்!,
நீ விடியலை காண
ஏங்கும் வேளையில் நான்
உந்தன் விழியினை காண
ஏங்குவேன்!!,
நாம் ஒருபோதும் நேரில்
பார்த்தது இல்லை!
இருந்தும் ஒவ்வொரு நாளும் நம்மை காண செய்த தொடுதிரை ஒருபோதும் நம்மை வெறுத்து பார்த்தது இல்லை..!
நாம் கண்களால் இதுவரை கண்டது இல்லை!
ஆனால் நாம் உணர்வுகளால் ஒருநொடி
கூட பிரிந்து இருந்தது இல்லை,
நீயும் நானும்
அன்பால் அறைநொடி
இனைந்து இருந்தது இல்லை!
இருந்தும் இருக்கின்றோம்
அயுள்வரை இணையாமல்..
பூக்களின் இதழ்களைவிட
மென்மையானவள் நீ .......!
தென்றலும் தேனும் சேர்ந்து
பெண்மையானவள் நீ......!
உந்தன் முகம் பார்த்தால்......!
என் உயிர் பூக்கும்......!
நீ புன்னகைத்தால்......!
புயல் தோற்கும்......!
என் எண்ணங்களின்
வண்ணமாகி போன
என் அம்மு .......
என் ஆசை வாசலின்
அழகான கோலம் ஆவாள்......!
என் கனவு புத்தகத்தின்
புதுக்கவிதை ஆவாள்.....!
என் உணர்வு பூக்களின்
வாசம் ஆவாள்.......!
என் இரவுகளின் நிலவாகி போன .......!
என் அம்மு ......!
என் விழி தோட்டத்தில் பூத்த
ஒற்றை ரோஜா ஆனால்......!
என் உயிர் வீதியின் ஒளிவிளக்கு ஆனால் .......!
என்னை எப்பொழுதும் பிரதிபலிக்கும்
என் காலக்கண்ணாடி ஆவாள்......!
நான் எபோழுதும் சுவாசிக்கும்
இதய பூங்காற்று ஆவாள்.......!
சுகமோ துக்கமோ.......!
என் அம்முவின் மடிமெத்தையில்
தலைசாய்த்து படுக்கும்பொழுது..........!
அவள் விரல்வைத்து என் தலை கோதும்
அந்த தருணங்களில்.........!
உலகம் மறந்திருந்தாலும்......!
உலகம் முடிந்திருந்தாலும்.......!
ஏன் ! நானே இறந்திருந்தாலும் .......!
"சம்மதமே"...........!