புயலின் இன்னொரு கோர முகம்..!
இயற்கை அன்னையின்
இரக்கமில்லா குணம்..!
இளந்தென்றலின்
இன்னொரு முகம்..!
பசியில் உள்ள மலைப்பாம்பாய்
பார்த்ததை எல்லாம் விழுங்கும்..!
பயணம் செல்லும் இடமெல்லாம்
பாவங்களை சம்பாதிக்கும்..!
கடலை நம்பியவனையும்
கழனியை நம்பியவனையும்
கண்ணீரில் குளிப்பாட்டும்
காட்டுமிராண்டி காற்று இது..!
அளவில்லா விடுமுறைகளை
அள்ளி அள்ளி தருவதால்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
தேவதையாக தெரியும் இது..!
வீட்டில் மரம் வளர்க்க
விரும்பாத உலகத்தில்
காட்டிலும் வளர விடாமல்
காவு வாங்கும் காட்டேறி இது..!
மடிந்து போன மனிதநேயம்
மறுமலர்ச்சி பெற்றிட
பறந்து பறந்து பந்தாடும்
இறைவனின் விளையாட்டு இது..!