Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-034  (Read 12928 times)

December 11, 2023, 04:41:37 pm
Read 12928 times

Administrator

கவிதையும் கானமும்-034
« on: December 11, 2023, 04:41:37 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-034


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
[/color
« Last Edit: December 18, 2023, 10:07:27 pm by Administrator »

December 12, 2023, 06:30:18 am
Reply #1
Re: கவிதையும் கானமும்-034
« Reply #1 on: December 12, 2023, 06:30:18 am »

பாதங்களை நேசிக்கும் கரங்கள், கால்களை நான் நாடுகின்றேன். பயணம் பலம், நேசம் என்று நினைத்துவிடுகிறது. உன் கால்கள் பாதகளை தொடரும் வழியில், என் இதயம் கூட பாதிக்கும் நிலையில் இருக்கின்றது.  பாதங்களை நேசிக்கும் கரங்கள், என் உன் கால்களை கைக்கும் போது, நான் புதுமையான விழியை அனுபவிக்கின்றேன். காதல் பயணம் நீட்டும், பாதுங்களை காண்கின்றேன், அந்த கரங்கள் நீ எனக்கு உன் பயணத்தை அறிந்தான்.


கடினமான காலத்தில், அவன் பாதங்கள் உயிர் வாழ்க்கையை அறிந்து, பயணமாக பாதசாலியான பயணி ஆகின்றான். அவன் பாதங்கள் எனக்கு பார்க்கின்றன, அவை என் வாழ்க்கையின் முடிவுறைகள். எனக்கு புகழ் தந்து, என் பாதங்களைப் பார்க்கும் பாதசாலியின் மணியாதான் இருக்கிறேன்.

...தேடி வரும் பாதையில்
மரங்கள் எல்லாம்
மனிதாய் மாற
பார்வை தேடுது
பதுமை உன்னை
பெண்ணே ..
இப்ப புடிச்ச கிறுக்கு - இதுல
புதுசா ஏதோ இருக்கு ..!!

இதோ ..
படியில் ஓடி நீ மறைய
கோழை ஆனேன் - உன்
கொலுசின் குரலில் ..!!


ஏமாற்றம் பழகிய
என் நெஞ்சம்
ஒலிரும்
ஒவ்வொரு கொலுசொலியிலும்
உன் அன்ன நடை
தியானிக்கிறது

ஏமாற்றம் பழகிய
என் நெஞ்சம்
ஒலிரும்
ஒவ்வொரு கொலுசொலியிலும்
உன் அன்ன நடை
தியானிக்கிறது!

தினமும் உன்னோடு
உறவாட எதிர்பார்க்கும்
நான், ஸ்தம்பிக்கிறேன்
உன் கொலுசின் இசைப் பிரியனாய்!

இன்னும் கனாக் காண்கிறேன்
என்னையே உன்
கால் கொலுசாக மாற்றி...

வேண்டுகிறேன் என்றும்
உன் கால் கொலுசாக வேண்டி!

     இப்படிக்கு கிள்ளிவளவன்
« Last Edit: December 14, 2023, 10:28:58 am by Killivalavan »

December 12, 2023, 11:22:08 am
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-034
« Reply #2 on: December 12, 2023, 11:22:08 am »
கோழை ஆனேன் அம்மு..!

கொடுத்து வைத்த கொலுசுகள் மழை நீரில்
மட்டுமல்ல மஞ்சத்திலும்
என் அம்முவின் காலோடு கொஞ்சி விளையாடுவதால் ....!

பளிங்காய் போனது என் பார்வைக்கு
உன் பாதம் தொட்ட என் கை விரல்கள்..!

இல்லாத இன்பங்களுக்கு இடையில்
துன்பம் கூட துரத்தலாம் - உன்
நினைவை திரட்டி நிம்மதி பெறுகிறேன் ..!!

உறக்கத்தின் உலறலை உன் உதடு உரச
கன்னம் தொட்டு காணாமல் போகிறது கனவு ..!!

மோதி கொண்ட கண்ணில் மோகமில்லா காதல் சொன்ன முகவரியை எழுதி எழுதி
முத்திரைப் பதியாத கடிதம் என் கையோடு ..!!

தேடி வரும் பாதையில் மரங்கள் எல்லாம்
மனிதமாய் மாற என் பார்வை தேடுதடி
அழகு பதுமை உன்னை ..!!

அம்மு ..
இப்ப புடிச்ச கிறுக்கு - இதுல
புதுசா ஏதோ இருக்கு ..!!

இதோ ..
படியில் ஓடி நீ மறைய
கோழை ஆனேன் - உன்
கொலுசின் குரலில் ..!!

என்றும் உங்கள் நட்💐க்களுடன்

December 12, 2023, 11:42:36 am
Reply #3
Re: கவிதையும் கானமும்-034
« Reply #3 on: December 12, 2023, 11:42:36 am »
அத்தை மகளே !
அத்தை மகளே !
என் இதயம் திருடும் தத்தை மகளே !
நீ ஆடி அசைந்து நடக்கையிலே
என்  நாடி நரம்பு துடிக்குதடி !
உன் பாத சலங்கைகள் பாட்டு படிக்கையிலே
என் பாவி மனசு பாடாய்படுகிறதடி !
பட்டுச்சேலை நீ கட்டி
பாதச் சலங்கை நீ பூட்டி
தகதிமிதா தாளம் மெட்டு கட்டி
தத்தை நீ தனியே தரிகிடதோம் ஆடையிலே !
விந்தை என்னவோ தெரியலையடி !
உன் மாமன் எந்தன் மனசு வீதியிலே அலையுதடி !
பாடும் உந்தன் பாதச் சலங்கையால்
பாடாய்படும் பாவி மனதில் பல சபலங்கள்.
உன் பூவிதழ் பாதத்தில்
பூத்துக் குலுங்கும் சலங்கையின் ஜதியால்
மதிகெட்டு திரியுதடி இந்த மாமன் மனசு.
காதல் கீதம் பாடும்
கன்னி உந்தன் பாதம்
கயவர்கள் போட்ட -இந்த பல்லாங்குழி சாலையிலே
தடம் பதிக்கலாமோ !
பாவம் இந்த பைத்தியக்காரர்கள் போட்ட 
பல்லாங்குழி சாலைகள்
பதம் பார்த்து விடும்
உன் பாதத்தை !
ஆசை அத்தை மகளே !
அன்பாய் ஒரு கை நீட்டுகிறேன் !
அழகாய் உந்தன் பாதத்தை ஏந்துகிறேன் !
வா இப்படியே உன்னோடு வாழ்ந்து விட்டு
வாழ்நாளெல்லாம் கடத்துகிறேன் .

December 12, 2023, 09:11:58 pm
Reply #4

Boy 27

Re: கவிதையும் கானமும்-034
« Reply #4 on: December 12, 2023, 09:11:58 pm »
அழகுப் பெண்ணே.
உனக்கு மட்டும்
எப்படி வந்தது இத்தனை அழகு.

பூக்கள் பூக்களோடு மோதி
மொட்டுக்களுக்குள்
வாசனை ஊற்றும் அழகு.

தென்றல் தென்றலோடு மோதி
சோலைகளுக்குச்
சொடுக்கெடுக்கும் அழகு.

உன் கண்களைக் கண்டதும்
ஓர் மின்னல்க்காடு முளைத்தது
என் மௌனத்தின் மனப்படுகைகளில்.

உன் அழகை எழுத
எத்தனிக்கும் போதெல்லாம்
கனவுகள் வந்து
வார்த்தைகளைக் கலைத்துச் செல்கின்றன

தாமரை மலரும் தோற்குதடி...
உன் மலர் பாதம் நீரில் நனைகையில்...
மழலையின் சிரிப்பும்...
அருவியின் சலசலப்பும்...
கொஞ்சல் மொழியும்...
ஒன்றுபட இசைக்குதடி...உன் கால் சலங்கை...!
நான் பலசாலி அல்ல..
ஆனால் நானும் பலசாலியே... உன் மலர் பாதங்களை என்‌ கையால் தாங்குகையில்...
« Last Edit: December 17, 2023, 11:50:48 am by Coffee »

December 13, 2023, 07:29:08 pm
Reply #5

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-034
« Reply #5 on: December 13, 2023, 07:29:08 pm »
தாங்குவேன் உன்னை வாழ்நாளெல்லாம்


நீ மயில்போலச் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும்போது

உன்னை வியந்து பார்க்கிறேன் எனது இமைகள் மூடாமல்

பெண்ணே உனது காலில் கட்ட அந்தச் சலங்கை

எத்துனை  ஜென்மம்  தவம் செய்ததோ

மயில் தொகை வெறித்து ஆடுவது அழகு

அதைவிட உனது நடனம் பேரழகு

குயிலின் சந்தம் இனிமையானது

அதைவிட உனது சலங்கையின் ஒலி மிக இனிமையானது

ஜல் ஜல் ஜல் எனும் உனது சலங்கையின் ஓசை

கைபேசியின் ரீங்காரத்தை போல எனது இதயத்தில் ஒளித்து கொண்டே இருக்கிறது

நீ தக்க திமிதா  என்று ஆடும்போது உனது  கண்களின் அசைவில்

மயங்கிப் பூக்களும் ஆடுகின்றன பெண்ணே

உனது  கண்ணசைவில் மயங்கியது

பூக்களை மட்டும் அல்ல நானும்தான்

இயற்கை கூட உனது நடனத்தைப் பார்த்து

மழை பூக்கள் தூவுகின்றது


பெண்ணே  அதில் நீ நனைந்து  ஒரு துளி உனது பாதத்தில் கண்டது சொர்கம்

அந்தச் சொரக்த்தை தாங்க வருகின்றது எனது கைகள்

இன்று மட்டும் அல்ல வாழ்நாளெல்லாம் !!!



நீல வானம்
« Last Edit: December 14, 2023, 10:11:12 am by Passing Clouds »

December 16, 2023, 12:22:28 am
Reply #6

Coffee

Re: கவிதையும் கானமும்-034
« Reply #6 on: December 16, 2023, 12:22:28 am »
கலை மீது தீரா  காதல் கொண்ட
கலைவாணி  உன் மேல்
தீரா மையல் கொண்டது என் மனது   

அதிகாலையில் நடனம் பயில  நீ செல்லும் வழியை...
உன் கூந்தலில் இருக்கும் மல்லிகைப்பூ மணம்
காற்றிலே எனக்கு காட்டிக்கொடுக்க..   
அதை பின்தொடர்ந்தே சென்று 
நீ நடனமாடும்  அழகை கண்டு ரசித்தேன் ..

இசையையும் தாளத்தையும்
அதன் வல்லின மெல்லினங்களையும்
உள்வாங்கி உயிர்த்தெழும் உன் பாதங்களின் நடனம் 
என்னை மெய்மறக்க செய்தது.

விழி அசைவும் , உடலசைவும்
நளினமும் என்னை வசியம் செய்ய
கிறங்கி நின்ற அந்த மீள இயலாத தருணத்தை
இன்றும் நினைத்து மகிழ்கிறேன்.

என் மனம் உன்மேல் காதல் கொண்ட
கதையை உனக்கு சொல்ல..
நீயோ உன்  நாட்டிய அரங்கேற்றமே
இப்போதைய குறிக்கோளென
என் காதலை தள்ளி வைக்க...

காத்திருப்பதில் தனி சுகம்
என மனதை தேற்றி கொண்டு
இன்றோடு  ஓராண்டு  ஒரு யுகமாய்
கடந்து போனது.

உன் நினைவிலே உருண்டோடிய
காலங்கள் யாவிலும்  உன்னோடு 
வாழும் எதிர்காலத்தை எண்ணி
எனை நானே உற்சாகமாக்கிக்கொண்டேன் 

உன் பாதம் நோகா பயணத்திற்கு 
உன் துணையாக நீ கற்ற கலையும்
நானும்  இருக்க 
தயக்கம் ஏதும் இன்றி முன்னேறி வா

கசப்பான உன் கடந்தகாலங்களை
மறக்க செய்து வசந்தங்கள் வீசும் எதிர்காலத்தை
 அமைத்துக்கொடுப்பது என் பாக்கியமென
உனை ஏந்த உன் வழியில் காத்திருக்கிறேன்..
« Last Edit: December 16, 2023, 11:04:16 am by Coffee »