Advanced Search

Author Topic: காதலே  (Read 24754 times)

March 14, 2023, 11:36:11 am
Read 24754 times

Barbie Doll

காதலே
« on: March 14, 2023, 11:36:11 am »
கேள்விகள்

கரைதனில் நடந்து, கால் நனைத்து நடத்தலில், அகமகிழ்ந்து நினைவுகளின் அசைபோடுதலுடன் கழிகிறது அந்தி நேரம்!

அன்று மலர்ந்த, அழகிய பூவின் வாசம் நுகர்ந்து, நறுமணத்தினுடே மலர்ந்த அவன் முகம்!

கண்ணாடி பார்த்து, சிகையலங்காரம் செய்கையில், பிம்பமாக தோன்றி மறையும் அவன் முகம்!

வைத்தியமில்லா நோயொன்று, இதயம் திருடிச் செல்கையில், அமைதியுடன் நோக்கும் அவன் கண்கள்!

தலைப்பிட மறந்து, என்றோ ஒருநாள் எழுதப்பட்ட மடலில், பளிச்சிடும் அவன் பெயர்!

காரணமில்லா கேள்வியா? இது காதலுக்கான அறிகுறியா? யார் சொல்வார் இதற்கான பதிலை?

கேள்விகளுடனே கரைகிறது இந்த நொடி.
« Last Edit: March 15, 2023, 11:36:53 pm by Barbie Doll »

March 14, 2023, 11:37:16 am
Reply #1

Barbie Doll

Re: காதலே
« Reply #1 on: March 14, 2023, 11:37:16 am »
தொடர்கதை

மௌனங்கள் சிலரை அழகாக்கும்,
நேர்க்கொண்டு பார்க்கும், அவன் கத்தி விழிப் பார்வையில், கடந்து செல்ல மனமின்றி, மௌனமான வெட்கம் கொள்கிறேன்!

எங்கு நின்றாலும், அவன் பார்வை படும் உணர்வலைகள், நீங்காத வாசனை திரவியம் போல், மனதில் ஒட்டிக் கொள்கிறது!

புத்தகங்களில் வரும், காதல் வரிகள் படிக்கையில், எண்ணங்கள் அவன் நினைவை அசை போடுகிறது!

எங்கோ ஓர் பறவை, மீட்டும் இசை கேட்கையில், இசையின் வழி இதயம் பகிர அவன் வந்துவிட்டானோ, என ஆவல் கொள்கிறது!

மழை நேர இனிப்பான தேநீர் போல, கனவில் வந்து அவன் முத்தமிட்ட சத்தம், இதழ்களில் தேனாக இனிக்கிறது!

உன் மனதின் பிணைப்பின்றி, தொடரும் இக்கவிதையின், அடுத்த வரிகள் காத்திருப்புடன் பேனாவை மூடிக் கொண்டது!

March 14, 2023, 11:53:13 am
Reply #2

Barbie Doll

Re: காதலே
« Reply #2 on: March 14, 2023, 11:53:13 am »
போதைக் காதல்

இயற்கை கண்சிமிட்டும், இனம்புரியா வேளையில், காதோரம் வந்து முனு முனுக்கும், பறவைகளின் கீச்சொலியில், ஒளிந்து கிடக்கும் பசிக்கான அர்த்தங்கள்!

பசியிருந்தும், அவன் நினைவிலிருந்து மீள, சோம்பலுற்று இன்னும் கொஞ்சம் தூங்கி கொள்ள, திரும்பி கொள்கிறேன்!

நழுவாமல் தழுவும், அவன் கைகளிலிருந்து, தப்பிச் சென்று சிக்கிக் கொள்ளும், போதை காதல் அது!

என் தயவின்றி, உன்னால் என்ன செய்து விட முடியும்? என்ற மேலோங்கிய பார்வையில், தோற்று தான் போகின்றேன்!

நினைவான நினைவா அது? துரத்தி சென்று தோற்றாலும், தெவிட்டாது தினமேங்கும், நினைவுகளின் குவியலவன்!

உயிர் உருகும் மெய்யாக, எவருக்கும் ஒப்பற்ற, அவனின்றி கழிக்கும் வீணான விநாடிகள் கண்டு!

ஒப்பனையின்றி, முகம் அழகானது, மூழ்கடித்த அவன் நினைவுகளின் தாக்கத்தினால்.!

இந்த நொடி எழுந்து கொண்டேன், போதுமென்ற மனமின்றி, நாளும் கரைகிறதே, மறக்காத கணங்கள் தொடரட்டுமென்று!.

« Last Edit: March 14, 2023, 11:55:02 am by Barbie Doll »

March 15, 2023, 10:48:41 am
Reply #3

Barbie Doll

Re: காதலே
« Reply #3 on: March 15, 2023, 10:48:41 am »
சிறைப்பட்ட காதல்

கோபம், வெறுப்பு, இவற்றிற்கு அப்பாற்பட்டது, உன் மீதான அன்பு,
நித்திரையில் நித்தம் நினைக்கும் நிஜம் நீ!

நீ இருக்கும் மனத்தில், கவிதைகளும் பிறக்கும்,உன் கனிவான பார்வையில் காதலும் மலரும்.!

உள்ளதை பேசும், அன்பின் வலிமை அதிகம் தான், ஆனால் அன்பை வெளிப்படுத்த, வார்த்தைகள் வெறுமனே கிடைத்து விடுமா என்ன?

நலம் விசாரிப்போடு முடிந்து விடும், உன் பேச்சின் மௌனம் கலையாதா, என்ற ஏக்கங்களுடனே நகரும் நாட்கள்!

கற்றுக் கொள்ள உன்னில் ஆயிரம் இருக்க, கடந்து செல்ல முடியாமல், உன்னையே பின்தொடரும் கால்கள்!

உன் சேட்டைகள் ரசித்து, சலிப்படையா காதலுரும் நாழிகை, என்னையே ஏமாற்ற மனமின்றி, விலகிச் செல்லும் நொடிகள் !

பேசா மடந்தையா! என்றெண்ணும் அளவு, தூண்டிலில் சிக்குண்ட மீன் போல, உன்னிடம் சிறைப்பட்ட என்னை விடுவிப்பாயா?..

March 15, 2023, 03:13:27 pm
Reply #4

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: காதலே
« Reply #4 on: March 15, 2023, 03:13:27 pm »
சிறைப்பட்ட காதல்

கோபம், வெறுப்பு, இவற்றிற்கு அப்பாற்பட்டது, உன் மீதான அன்பு,
நித்திரையில் நித்தம் நினைக்கும் நிஜம் நீ!

நீ இருக்கும் மனத்தில், கவிதைகளும் பிறக்கும்,உன் கனிவான பார்வையில் காதலும் மலரும்.!

உள்ளதை பேசும், அன்பின் வலிமை அதிகம் தான், ஆனால் அன்பை வெளிப்படுத்த, வார்த்தைகள் வெறுமனே கிடைத்து விடுமா என்ன?

நலம் விசாரிப்போடு முடிந்து விடும், உன் பேச்சின் மௌனம் கலையாதா, என்ற ஏக்கங்களுடனே நகரும் நாட்கள்!

கற்றுக் கொள்ள உன்னில் ஆயிரம் இருக்க, கடந்து செல்ல முடியாமல், உன்னையே பின்தொடரும் கால்கள்!

உன் சேட்டைகள் ரசித்து, சலிப்படையா காதலுரும் நாழிகை, என்னையே ஏமாற்ற மனமின்றி, விலகிச் செல்லும் நொடிகள் !

பேசா மடந்தையா! என்றெண்ணும் அளவு, தூண்டிலில் சிக்குண்ட மீன் போல, உன்னிடம் சிறைப்பட்ட என்னை விடுவிப்பாயா?..

Barbie doll போன்றே அவங்க கவிதையும் அழகாக உள்ளது🤭💯
 
FAV lines
          பேசா மடந்தையா! என்றெண்ணும் அளவு, தூண்டிலில் சிக்குண்ட மீன் போல, உன்னிடம் சிறைப்பட்ட என்னை விடுவிப்பாயா?..

நேர்த்தியான வரிகள் ரசிக்கும் படியாக உள்ளது🤩, Keep Rocking BarBie Doll😊

March 15, 2023, 05:48:55 pm
Reply #5

Barbie Doll

Re: காதலே
« Reply #5 on: March 15, 2023, 05:48:55 pm »
Thank you Yash🦋

March 16, 2023, 02:15:35 am
Reply #6

Sanjana

Re: காதலே
« Reply #6 on: March 16, 2023, 02:15:35 am »
NICE SISI....KEEP ROCKING..

March 16, 2023, 09:35:32 am
Reply #7

Barbie Doll

Re: காதலே
« Reply #7 on: March 16, 2023, 09:35:32 am »
Sanjana sis Thank u so much 💕

March 22, 2023, 06:51:45 pm
Reply #8

Barbie Doll

Re: காதலே
« Reply #8 on: March 22, 2023, 06:51:45 pm »
போர்வீரன் காதல்

பாதையற்ற ஊருக்கு பயணம் போல, பார்த்த அவன் பார்வைக்கு, பதில் சொல்ல காத்திருந்தேன் காதலுடன்.!

போரிட்டு தோற்றுப் போன, போர் வீரன் மீதான அனுதாபம் அல்ல, இது.. அவன் வீரத்திற்கு மருந்திடும் அன்பின் காதல்.!

வாள் வீசி வாகை சூடி, என் வாழ்வின் வழித் தாங்கல் ஆனவன்.!

வானவில்லை வளைத்தெடுத்து வில்லாக்கும், உன் கரம் பற்றி வாழ்ந்து விட்டு சாதல் வேண்டும்.!

காகிதத்தில் ஆழமாக முத்தமிட்டு, காயம் தீர்க்கும் மருந்தாக தூதனுப்பி உன் துன்பம் நீக்குவேன்.!

அணுக்களும் இடம்பெயரும், அவன் அணைப்பினில் அனுதினமும் கண்ணுறங்க ..!

களவு போன கனவுகளை, தேடிச் சென்று அகப்பட்டு கொண்ட கள்வனாக ..!

காலியாக இருந்த மனதில், காதலறும்பும் கணங்களை கொடுத்தவனாக..!

அடுக்கடுக்காய் தினந்தோறும், கனவுகளை கொடுத்து அமைதியாக கடந்து செல்கிறான் ..!

அவன் கால்கள் நடக்கும், வழித்தடத்தில் பயணிக்கிறேன் என்றென்றும் காதலுடன் .!
« Last Edit: March 22, 2023, 06:54:27 pm by Barbie Doll »

March 24, 2023, 01:42:37 pm
Reply #9

Sanjana

Re: காதலே
« Reply #9 on: March 24, 2023, 01:42:37 pm »
போர்வீரன் காதல்

பாதையற்ற ஊருக்கு பயணம் போல, பார்த்த அவன் பார்வைக்கு, பதில் சொல்ல காத்திருந்தேன் காதலுடன்.!

போரிட்டு தோற்றுப் போன, போர் வீரன் மீதான அனுதாபம் அல்ல, இது.. அவன் வீரத்திற்கு மருந்திடும் அன்பின் காதல்.!

வாள் வீசி வாகை சூடி, என் வாழ்வின் வழித் தாங்கல் ஆனவன்.!

வானவில்லை வளைத்தெடுத்து வில்லாக்கும், உன் கரம் பற்றி வாழ்ந்து விட்டு சாதல் வேண்டும்.!

காகிதத்தில் ஆழமாக முத்தமிட்டு, காயம் தீர்க்கும் மருந்தாக தூதனுப்பி உன் துன்பம் நீக்குவேன்.!

அணுக்களும் இடம்பெயரும், அவன் அணைப்பினில் அனுதினமும் கண்ணுறங்க ..!

களவு போன கனவுகளை, தேடிச் சென்று அகப்பட்டு கொண்ட கள்வனாக ..!

காலியாக இருந்த மனதில், காதலறும்பும் கணங்களை கொடுத்தவனாக..!

அடுக்கடுக்காய் தினந்தோறும், கனவுகளை கொடுத்து அமைதியாக கடந்து செல்கிறான் ..!

அவன் கால்கள் நடக்கும், வழித்தடத்தில் பயணிக்கிறேன் என்றென்றும் காதலுடன் .!

Very nice one...superb

March 25, 2023, 08:29:17 am
Reply #10

Barbie Doll

Re: காதலே
« Reply #10 on: March 25, 2023, 08:29:17 am »
Sanjana sis Thnks 💕

April 15, 2023, 04:50:25 pm
Reply #11

Barbie Doll

Re: காதலே
« Reply #11 on: April 15, 2023, 04:50:25 pm »
இதுவும் கடந்து போகும்

கலைந்து போன கனவுலகில், பேச ஏதுமின்றி ,வார்த்தைகளற்று காத்துக் கிடக்கும் தருணம்!
பொலிவான முக அழகில், எட்டிப் பார்க்கும் முகப்பருவும், நினைவுறுத்தும் பிரிவின் கணம்!

பேசாமல், நினைக்காமல் இருந்தாலும், மறக்காத பைத்தியக்காரப் பிரியத்தின் சலனம்.!
உரிமை கொண்டாடி, உணர்ச்சி பொங்க பேசி, இதயம் தகர்க்காமல் தனக்குள்ளே பிதற்றிக் கொள்ளும் மனம்.!

நெடு நேரப் பயணத்தில், ஒற்றை நிழலாக தென்பட்டு, நெருங்கி வந்ததும் மறைந்து போன மாயம்.!
முகத்தில் அறைந்தது போல, சாத்தப்படும் கதவின் பின்னால் இருக்கும், வெறுக்கப்பட்ட பிரியம்!

ஊஞ்சலாடும் உறவுகளை, அறிந்து கொள்ளும் நிலைப்பாட்டை விட்டு, மௌனத்துடன் கடந்து செல்லும் நேரம்.!

April 16, 2023, 08:16:25 am
Reply #12

Barbie Doll

Re: காதலே
« Reply #12 on: April 16, 2023, 08:16:25 am »
மௌனம் அழகு

இந்த மௌனங்கள் பேசும் மொழி எத்தனை அழகு!

விடிந்த பொழுதில், முதல் முறையாக விரியும் மலரின், வாசனை நுகரும் மௌனம்!
இரைச்சலான மழை சத்தத்தின் நடுவே, இதமான தேநீர் ருசி, நாவை தொடும் மௌனம்!

பேருந்தை பிடிக்க மூச்சிரைக்க ஓடி, ஏறிக்கொண்டதும் இளைப்பாறும், அந்த நொடி மௌனம்!
 பிரிந்து போன பள்ளி காதலின், பல வருடம் கழித்த சந்திப்பின் போது, ஏற்படும் இனம்புரியா மௌனம் !
 
 விருப்பப் பாடலில் வரிகள் மறந்து, முனுமுனுப்புடன் நின்று விடும் மௌனம் !
 ஆர்ப்பரிக்கும் கடலில், நம் கால்களை தொடாமல் ,சோர்ந்து திரும்பி செல்லும் சிறு அலையின் மௌனம்!
 
 மங்கலான வெளிச்சத்தில், மெல்லமாக நடைபோடும் கால்களுக்கு, வழிகாட்டும் நிலவொளியின் மௌனம் !
 
 அதீத குழப்பமற்ற, ஆளைக் கொல்லும் வார்த்தையற்ற, அநாவசிய கோபமற்ற, அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே.!

April 16, 2023, 08:38:21 am
Reply #13

RiJiA

Re: காதலே
« Reply #13 on: April 16, 2023, 08:38:21 am »
மௌனம் அழகு

இந்த மௌனங்கள் பேசும் மொழி எத்தனை அழகு!

விடிந்த பொழுதில், முதல் முறையாக விரியும் மலரின், வாசனை நுகரும் மௌனம்!
இரைச்சலான மழை சத்தத்தின் நடுவே, இதமான தேநீர் ருசி, நாவை தொடும் மௌனம்!

பேருந்தை பிடிக்க மூச்சிரைக்க ஓடி, ஏறிக்கொண்டதும் இளைப்பாறும், அந்த நொடி மௌனம்!
 பிரிந்து போன பள்ளி காதலின், பல வருடம் கழித்த சந்திப்பின் போது, ஏற்படும் இனம்புரியா மௌனம் !
 
 விருப்பப் பாடலில் வரிகள் மறந்து, முனுமுனுப்புடன் நின்று விடும் மௌனம் !
 ஆர்ப்பரிக்கும் கடலில், நம் கால்களை தொடாமல் ,சோர்ந்து திரும்பி செல்லும் சிறு அலையின் மௌனம்!
 
 மங்கலான வெளிச்சத்தில், மெல்லமாக நடைபோடும் கால்களுக்கு, வழிகாட்டும் நிலவொளியின் மௌனம் !
 
 அதீத குழப்பமற்ற, ஆளைக் கொல்லும் வார்த்தையற்ற, அநாவசிய கோபமற்ற, அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே.!

"அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே"===BEAUTIFUL LINE SISS DOLL❣👏

April 16, 2023, 11:18:17 am
Reply #14

Sanjana

Re: காதலே
« Reply #14 on: April 16, 2023, 11:18:17 am »
மௌனம் அழகு

இந்த மௌனங்கள் பேசும் மொழி எத்தனை அழகு!

விடிந்த பொழுதில், முதல் முறையாக விரியும் மலரின், வாசனை நுகரும் மௌனம்!
இரைச்சலான மழை சத்தத்தின் நடுவே, இதமான தேநீர் ருசி, நாவை தொடும் மௌனம்!

பேருந்தை பிடிக்க மூச்சிரைக்க ஓடி, ஏறிக்கொண்டதும் இளைப்பாறும், அந்த நொடி மௌனம்!
 பிரிந்து போன பள்ளி காதலின், பல வருடம் கழித்த சந்திப்பின் போது, ஏற்படும் இனம்புரியா மௌனம் !
 
 விருப்பப் பாடலில் வரிகள் மறந்து, முனுமுனுப்புடன் நின்று விடும் மௌனம் !
 ஆர்ப்பரிக்கும் கடலில், நம் கால்களை தொடாமல் ,சோர்ந்து திரும்பி செல்லும் சிறு அலையின் மௌனம்!
 
 மங்கலான வெளிச்சத்தில், மெல்லமாக நடைபோடும் கால்களுக்கு, வழிகாட்டும் நிலவொளியின் மௌனம் !
 
 அதீத குழப்பமற்ற, ஆளைக் கொல்லும் வார்த்தையற்ற, அநாவசிய கோபமற்ற, அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே.!

VERY VERY NICE  BARBIE SIS...