Advanced Search

Author Topic: காந்தி அடிகள் பொன்மொழிகள் (Gandhiji Sayings in Tamil)  (Read 18979 times)

October 11, 2021, 01:32:36 pm
Read 18979 times

NavaRasa

காந்தி அடிகள் பொன்மொழிகள் - Gandhiji Sayings in Tamil


1.உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.

2.தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது

3.நம்மை அறிமுகப்படுத்துபவை நம் வார்த்தைகளல்ல.... நமது வாழ்க்கையே.

4.வீரம் உடலின் ஆற்றல் அல்ல. உள்ளத்தின் பண்பு.

5.எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.

6.வலிமையும், வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை.

7.அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.

8.தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.

9.சுய கட்டுப்பாடுடையவனே சுதந்திரமான மனிதன்.

10.பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.

11.கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.

12.தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

13.தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.

14.பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.

15.மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.

16.கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.

17.மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.

18.உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.

19.சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.

20.செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

21.மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.

22.சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.

23.எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றே பெரிது.

24.நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.

25.தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.

26.பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.

27.கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.

28.ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

2.உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.

30.எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.

31.மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.

32.கோபமோ, குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.

33.பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.
« Last Edit: October 11, 2021, 01:34:11 pm by NavaRasa »

October 12, 2021, 11:19:30 am
Reply #1

vicky

good bro keep going

December 02, 2021, 07:18:32 pm
Reply #2

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 15

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
துணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை
[/size]

September 11, 2022, 11:25:45 am
Reply #3

Sanjana

True...
« Last Edit: September 15, 2022, 02:48:31 pm by Sanjana »

September 15, 2022, 02:46:14 pm
Reply #4

Sanjana

VAAIMAI....
« Last Edit: September 15, 2022, 02:49:10 pm by Sanjana »

September 15, 2022, 02:49:40 pm
Reply #5

Sanjana

FRIENDSHIP...

December 18, 2022, 04:37:01 pm
Reply #6

Sanjana

“An ounce of patience is worth more than a tonne of preaching.”

January 18, 2023, 10:33:27 pm
Reply #7

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

February 04, 2023, 06:53:38 am
Reply #8

Barbie Doll

Yes

April 29, 2023, 07:07:44 pm
Reply #9

Sanjana


June 13, 2023, 11:34:44 am
Reply #10

RiJiA