Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
அப்துல் காலம் பொன்மொழிகள் - Abdul Kalam Sayings in Tamil அப்துல் காலம் பொன்மொழிகள் - Abdul Kalam Sayings in Tamil


1.கனவு காணுங்கள் ஆனால்
கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது இல்லை
உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ
அதுவே கனவு.

2.நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

3.ஒரு முறை வந்தால் கனவு
இருமுறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியம்.

4.நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி
திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால்
அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.

5. வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம்
இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி.

6.நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
நீ நீயாக இரு.


7.கனவு காண்பவர்கள்
அனைவரும் தோற்பதில்லை,
கனவு மட்டுமே காண்பவர்கள்
தான் தோற்கிறார்கள்.

8.நம்பிக்கை நிறைந்த
ஒருவர் யார் முன்னேயும்,
எப்போதும் மண்டியிடுவதில்லை.


9.கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
அது உன்னை கொன்று விடும்,
கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடலாம்.

10.உன் கைரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே.
ஏனென்றால், கையே இல்லாதவனுக்குகூட
எதிர்காலம் உண்டு.

11.வாழ்க்கை என்பது...!
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.

12.ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்.
ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி
என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.

October 11, 2021, 12:58:10 am
1
காந்தி அடிகள் பொன்மொழிகள் (Gandhiji Sayings in Tamil) காந்தி அடிகள் பொன்மொழிகள் - Gandhiji Sayings in Tamil


1.உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.

2.தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது

3.நம்மை அறிமுகப்படுத்துபவை நம் வார்த்தைகளல்ல.... நமது வாழ்க்கையே.

4.வீரம் உடலின் ஆற்றல் அல்ல. உள்ளத்தின் பண்பு.

5.எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.

6.வலிமையும், வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை.

7.அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.

8.தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.

9.சுய கட்டுப்பாடுடையவனே சுதந்திரமான மனிதன்.

10.பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.

11.கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.

12.தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

13.தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.

14.பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.

15.மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.

16.கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.

17.மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.

18.உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.

19.சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.

20.செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

21.மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.

22.சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.

23.எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றே பெரிது.

24.நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.

25.தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.

26.பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.

27.கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.

28.ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

2.உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.

30.எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.

31.மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.

32.கோபமோ, குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.

33.பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.

October 11, 2021, 01:32:36 pm
1
விவேகானந்தர் பொன்மொழிகள் - Vivekanandhar Sayings in Tamil விவேகானந்தர்  பொன்மொழிகள் - Vivekanandhar Sayings in Tamil



1. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

2. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

3. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
4. எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

5. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

6. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

7. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

8. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

9. பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.


10. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

11. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

13. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


14. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

15. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
 
16. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

17. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

18. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


19. வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

20.இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

21. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

22 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

23. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

24. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

25. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.

October 21, 2021, 04:31:16 pm
1