சிறுவயது மணல்வீட்டில் சேர்ந்து விளையாடிய நாளில்,
சின்ன இதயங்களில் விதையாய் காதல் விழுந்தது…
கைகோர்த்து நடந்த அந்த பள்ளிப் பாதையில்,
கனவுகள் கூட நம்மோடு நடந்தது.
குழந்தை சிரிப்பில் தொடங்கிய அந்த நட்பு,
காலம் செல்ல செல்ல காதலாய் மலர்ந்தது.
பொம்மை சண்டைகள், புன்னகை சமாதானங்கள்,
அத்தனையும் இன்று நினைவின் பொக்கிஷங்கள்.
அப்போது தெரியாத அந்த இனிய உணர்வு,
இன்று என் வாழ்வின் முழு அர்த்தம் ஆனது…
கடற்கரை மௌனத்தில் உன் கை கோர்த்த நொடியில்,
காதல் என்ற சொல் மெதுவாய் பிறந்தது…
மாலை வானம் நம்மைக் கண்டு சிவந்தது,
மனதின் ராகம் மெதுவாக இசைந்தது.
சின்ன சின்ன அடிகளால் பாதை வரைந்தோம்,
சிரிப்பின் சத்தத்தில் உலகம் மறந்தோம்.
காற்று வந்து நம் ரகசியம் கேட்டது,
அலைகள் வந்து இதயத்தைத் தழுவியது.
"உன் கை என் கையில் சேர்ந்த அந்த நேரம்,
உலகமே நின்றது அது நம் பேரின்பமானது!"
நிழல் போல நீ அருகில் நடந்தால்,
நெஞ்சம் முழுவதும் பூக்களாய் மலர்ந்தன.
பேசாமல் பேசும் உன் கண்களின் மொழியில்,
பிரியத் தரிசனப் பார்வையில் வழி கண்டேன் இன்று.
மழைத் துளி விழும் இசை கேட்டேன்,
அதிலும் கூட உன் பெயர் கேட்டேன்.…
இரவு வந்து நட்சத்திரம் தூவினாலும்,
என் விழியில் நீயே ஒளி தந்தாய்..
உன் அருகில் நின்ற ஒவ்வொரு நொடியும்,
என் ஆயுள் முழுதும் நிறையும் பொக்கிஷம்.
உன் நெஞ்சில் நான் சாய்ந்த அந்த நேரம்,
உலக சுமைகள் எல்லாம் கரைந்த நேரம்.
நேரம் எவ்வளவு தூரம் சென்றாலும்,
நேசம் மட்டும் தூரம் போகாது என்றும்.
உன் சிரிப்பு என் நாளின் விடியல்,
உன் அருகில் தான் என் வாழ்வின் விடியல்.
விதி எழுதும் வரிகள் மாறினாலும்,
நம் காதல் பாதை மாறாதே.
காலம் சென்றாலும் கை விட மாட்டேன்,
என் காதலின் இறுதிவரை
என் உயிரின் நிலைமாறா உறுதி நீயே. 💖