Advanced Search

Author Topic: வான்முகிலின் கவிதை சுவடுகள்....  (Read 41325 times)

July 05, 2023, 09:30:42 pm
Reply #45

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
என்னவளே  நீயே என் காதலடி......


என்னவளே !!

என்னை உன் பார்வையில்
கொஞ்சம்  கடத்தி விட்டு போ......

நெஞ்சமெல்லாம் உன் நினைவை
தந்து விட்டு போ.....

ஒவ்வொரு கணமும்
உன் காதலால் நிறைத்து விட்டு போ.....

என் கனவினிலும்
தினம் உன் வருகையை
வைத்து விட்டு போ......

உன் பாசம் என்னும் கடிவாளத்தில்
என்னை கட்டிவிட்டு போ.....

உன் காதல் என்றும்
எனக்கு மட்டுமே என்று
கட்டளையிட்டு போ......

என்னவளே என்றும்
நான் உன்னவனடி என்று
உனக்கு உரைத்து
உளற செய்துவிட்டு போ....

July 14, 2023, 07:34:19 pm
Reply #46

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
என் தோழனே !!

பள்ளி பருவம் முடித்தோம்
கல்லூரி காலம் கடந்தோம்,
காலங்கள் கடக்க கடக்க
நாம் நட்பில் வாழ்ந்த காலமும், நேரமும்
Slam book-ல் மட்டுமே ரசிக்கிறோம்.

பார்த்த ஞாபகங்களும்,
பழகிய நாட்களும்,
விளையாடிய நேரங்களும்,
சண்டையிட்ட தருணங்களும்,
எமது எண்ணங்களில்
மட்டுமே வந்து போகிறது,

மீண்டும் கதைக்க காலமும் இல்லை,
மீண்டும் சந்திக்க நேரமும் இல்லை,
எங்கெங்கோ நம் வாழ்க்கை பயணம்....
முடிவில்லா கதையாய் பயணிக்கிறோம்....

காலங்கள் மாற மாற
நமது கைப்பேசியில் பத்து எண்களில்
நலம் விசாரிப்பில் முடிகிறது நம் நட்பு,

ஆனாலும் தோழனே,
உந்தன் நட்பில் கடந்து போன வாழ்க்கை
நினைவின் பொக்கிஷமாய்.....சந்தோஷமாய்.....
என் நினைவில் இன்றும் நான் உந்தன் தோழியாக....
நம் நட்பு வாழ்கிறது என் தோழனே.....

July 19, 2023, 11:28:31 am
Reply #47

RiJiA

தனிமை......

தனிமை என் இனிய நண்பனே,

சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......

இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,

இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......

ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....

கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....

பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...

யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......


GOOD ONE SISS👏👏👏💐💐

July 22, 2023, 03:26:47 pm
Reply #48

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
தனிமை......

தனிமை என் இனிய நண்பனே,

சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......

இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,

இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......

ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....

கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....

பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...

யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......


GOOD ONE SISS👏👏👏💐💐

Thank you sis

August 07, 2023, 02:20:30 pm
Reply #49

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
இது என்னோட 100வது பதிவு....


எனக்குள் உன் காதல்....

மனதிலே பூகம்பமா?
மங்கையின் மனம் பேரழிவிலா?

என்னவனே!!
என்னில் நுழைந்தாயே...
எனக்குள் கலந்தாயே....
எனது உயிரிலும்,
எனது உதிரத்திலும்,
எனக்குள் நீ ஊடுருவிகிறாயே....

உன் நினைவு எமக்கு சுகமா? இல்லை சுமையா?
இம்சை என்பதா? இல்லை இன்பம் என்பதா?
ரணமா ? இல்லை ரசிக்கின்றேனா?
புரியவில்லையே,
புதிராய் இந்த ஈர்ப்பு
என்னை கொன்று வதைக்கிறதே....

என்னவனே உன் நினைவுகள்,
எனக்குள் ஈட்டி போல் எய்துகிறதே.....
உன் பார்வை ஈர்ப்பிலே காதலை
உளி கொண்டு செதுக்குகிறதே...

என்னவனே,
எனக்குள் நுழைந்த காதல்
உனக்குள்ளும் வந்ததா?
உன் காதலை மொழிவாயா?
இல்லை மௌனத்திலே கடப்பாயா?
இல்லை என்னை காத்திருப்பிலும், ஏக்கத்திலும்,
என்னை தவிப்பில் விடுவாயா?
சொல் மனமே
உன் சொல் வரும் வரை
என் உயிர் ரணமே....

« Last Edit: August 07, 2023, 02:23:28 pm by Vaanmugil »

September 26, 2023, 09:18:35 pm
Reply #50

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
அழகான தருணம்.....

ஏதோ ! அறியா மென் சத்தம்
மிதமான குளிர் காற்று.......
எங்கிருந்தோ மெதுவாய்
மெல்லிசை கானம்.....
முகிலினங்கள்
அங்கும் இங்கும்
அலைந்தோடி ஆர்பரித்து செல்ல
சட்டென்று ஆலி சூழ்ந்து
புவியை தொட்டு முத்தமிடுகையில்
அவ்வழகை கண்ட நொடி
மெய் அனைத்தும் சிலிர்கின்றது
ஆலியில் சதிர் ஒன்றை எழுப்ப
மனம் உற்சாகத்தில் மிதக்கின்றது.....
« Last Edit: September 26, 2023, 09:23:05 pm by Vaanmugil »