Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Eagle 13

Pages: 1 [2] 3 4 5
21
Afghanistan
280-300
M.Nabi

South Africa
300-320
A.Markam

22
அது ஒரு அடைமழைக்காலம்  வீதிகள் தோறும்  மழைவெள்ளம் உலா போகும்!
பருவமழை தொடங்கியது, மக்கள் கூட்டம் வீதியிலே அடங்கியது!
எங்கள் பள்ளி பருவத்தில்,
தொடர்மழை வந்தால் பள்ளி விடுமுறை!
விடுமுறை விட்டநாள்
வெயில் காய்வதே அன்றைக்கு நடைமுறை!

மழையில் விளையாடி தாயிடம்
திட்டுவாங்குவோம் பல முறை!
மழைநீர் செல்லும்,
கால்வாயில் காகித கப்பல் விடுவதும்!

வீட்டுக்குள் தாயம் விளையாடுவதும்,
அன்றைக்கு எங்கள் செயல்முறை.
அந்நேரத்தில்,
எங்களுக்கு சிற்றுண்டி வறுத்த நிலக்கடலையும்
புளியங்கொட்டையும்!
காலங்கடத்துவது கிழிந்த
காலண்டர் அட்டையும்,
தாயக்கட்டையும்!

வீதிகளில் நீர் வழிந்தால் அது நீர்நிலைகளை
அடையும்!
நீர் நிலைகள் நிரம்பி வழிந்தால் கரைகளில்
 மீன்கள் மடியும்!
விளைநிலங்களில் நண்டு, நத்தைகள் மேயும்!

அதை பிடிக்க குடைகளுடன் எங்கள்
கைகள் பாயும்!
மழையில் நனைந்தால் உடல்
காய்ச்சல் படும்!
இரவுகளில் தவளைகள் கூச்சலிடும்!
இந்த பூமிக்கு மழை ஒரு வரம்!
அது இல்லை என்றால், பூமியில் எந்த உயிரும்
 வாழ முடியுமா?
இந்த கணம்?!.


24
மூவர்ண கொடியுடன் முப்படையும்

எதிரிகூட்டம் அதனிடம்
அடிபணியும்!

இந்திய இராணுவம் அது நாட்டின் ஆணவம்!
எல்லைகளை எதிரிகள் சூழ்ந்தால்
போர் புரியும்!
போருக்குபின் உயிர் இருக்குமா? என்று யாருக்கு தெரியும்!
வேலையுள்ள நாட்களில்,

தினமும் வீடுவாசல் இல்லை!
சொந்தம் பந்தம் முகம் காண்பது வெகுநாட்களாகும் தொல்லை!
 வங்களாதேசம் எனும்,

 ஒரு தேசத்தை உருவாக்கியது!
 ஒரு சமூகத்திற்கு ஒரு நாட்டையே பரிசாக்கியது!
 பின் பலபேர்,
கார்கிலில்   தான் வாழ்க்கை தியாகம் செய்தனர்!
நாட்டின் அமைதியை உறுதி செய்தனர்!

போரின்போது,

பங்கு பெறுகிறார்கள்!

போரில்லாத போது!

இயற்கை சீற்றங்களுக்கு எதிராண போராட்டங்களில் தோள் கொடுக்கின்றனர்.!

விண்ணிலும் மண்ணிலும்

நீரிலும், நாட்டிற்காக நின்று போர்புரிகின்றனர்!
மேலும்

பச்சோந்தி போல்,

மலைபோல் மாறியும்

செடியோடு செடியாக மாறியும் ஊடுருவி போர்புரிகின்றனர் !

அகிம்சையால் விடுதலை பெற்ற நாட்டிற்கு ! போரட்டாமாக இவர்கள் போராடி அமைதியை கொடுக்கிறார்கள்!
நாட்டிற்காக தினம் நாடோடி

 ஆனார்கள்! .
 உலகிலுள்ள அத்தனை மனிதர்கள்

திருந்தும்வரை! இவர்களை போல்,
ஒவ்வொரு நாட்டிலும் தன் நாட்டை காக்க இராணுவ வீரர்கள் வீட்டை விட்டு

ஓடோடி போவார்கள்!.



25
 Hi Sm team!.
This time my song request is oru murai irru murai from Kalavani movie, Singers :Haris Ragavendra and Srimadhumitha
Lyrics :Na. Muthukumar
Music Director :S. S. Kumaran

26

கல்லறையும்  காவியமாகும்!

 காலம் உள்ளவரை காலமெல்லாம்,
இந்த உலகம் உன்னை ஓவியம் தீட்டும்!
 கல்லறை காதலின் சாட்சியாம்,
சுற்றுலா பயணிகள் தினம் காணும்
 காட்சியாம்!.
இது உலக அதிசயங்களில்

ஒன்று!

அது இந்தியாவிற்கு

நன்று!

மாமன்னன் மனைவி மீது

கொண்ட காதலால் கட்டிய கட்டிடம்!

உலக வரலாற்றில்

இதற்கில்லை

வெற்றிடம்!

உன்னை கொண்டாட காரணம்

காதலா! கட்டிடகலையா?

காலமா?

தெரியவில்லை. எங்களுக்கு!

இன்றும், என்றும்,

விருந்தாகிறாய்

,எங்கள் கண்களுக்கு!
இம்பூமியில்
 காதல் உள்ளவரை உன் புகழ்வாழும்,
மாறாமல், என்றென்னும்!.

27
Hi, Sm team this time my song selection is
Song Name :Adikadi mudi kalaivathai avagaridhal from ponmaalai pozhudhu movie,
Singer :Hariharan and Sathyan
Lyrics :Karthick Netha
Music Director :C.Sathya.
Thank you

28
[quote author=Eagle 13 link=topic=7597.msg40021#msg40021 date=1685451562
My place june 1  01/06/2023

Pages: 1 [2] 3 4 5