படம்: வைதேகி காத்திருந்தாள்
வெளியான ஆண்டு : 1984
நடிகர்கள் : விஜயகாந்த், ரேவதி, ராதாரவி, கவுண்டமணி, செந்தில்
இயக்கம் : ஆர்.சுந்தர்ராஜன்
தயாரிப்பு : துாயவன்
இசையமைப்பாளர் இளையராஜா, 'ஆறு பாட்டு தரேன்; ஒரு கதை தயார் பண்ணிக்கோ...' என்று கூற, அதற்காக, ஆர்.சுந்தர்ராஜன் உருவாக்கிய கதை தான், வைதேகி காத்திருந்தாள். இளையராஜாவின் இசைக்காகவே ஓடிய படங்களில், இதுவும் ஒன்று எனக் கூறலாம்.
பாடல்கள்:
1.'அழகு மலராட,
2.இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே,
3.காத்திருந்து காத்திருந்து,
4.மேகம் கருக்கயிலே
5.ராசாவே உன்னை...'
ஆகிய, காலத்தால் அழியாத பாடல்களை, அவர் தந்தார்.
பல படங்களுக்கு வசனம் எழுதிய துாயவன், இப்படத்தை தயாரித்தார். காதலை இழந்த விஜயகாந்தும், கணவரை இழந்த ரேவதியும், ஊரில் இருக்கும் இளம் ஜோடியை, பல எதிர்ப்புகளை மீறி, எவ்வாறு சேர்த்து வைத்தனர் என்பது தான், படத்தின் கதைக்களம்.
அடிதடி இல்லாத, குணச்சித்திர வேடத்தில், விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார். அழுக்கு உடையும், பரட்டைத் தலையும், தாடியுமாக விஜயகாந்தைப் பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்தனர். இப்படத்தின் வெற்றி, அவரின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.
விதவைப் பெண்ணாக நடித்த ரேவதிக்கும், இது புதிய கதாபாத்திரம். கதாபாத்திரத்தின் சோகத்தை, ரசிகர்களுக்கு கடத்த வேண்டிய அசாதாரண பணியை, சிறப்பாக செய்திருந்தார். விஜயகாந்தின் முறைப்பெண்ணாக நடித்த, கன்னட நடிகை பிரமீளா ஜோஷுவா, 'வெள்ளிக்கிழமை ராமசாமி' என்ற ரவுடியாக, ராதாரவி ஆகியோர், தங்கள் நடிப்பாற்றலை திறமையாக வெளிப்படுத்தினர்.
முக்கியமாக, 'ஆல் இன் ஆல் அழகுராஜா' கவுண்டமணி, செந்திலின், 'பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா' உள்ளிட்ட, காமெடி காட்சிகள், திரையரங்கை வெடித்து சிரிக்க வைத்தன.'பாடல்கள், காமெடி, சென்டிமென்ட்' என்ற கலவையுடன், வைதேகி காத்திருந்தாள்!
நான் விரும்பிய பாடல்
மேகம் கருக்கயிலே
பாடியவர்கள் : இளைய ராஜா , உமா ரமணன்
இசை: இளையராஜா
இந்த பாடலை GTC நண்பர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்