Advanced Search

Author Topic: நானும்..நீயே..!-ராஜேஷ் குமார்-சிறுகதை  (Read 12331 times)

January 04, 2024, 12:49:23 am
Read 12331 times

karthick sri

ராஜேஷ் குமார்

----தமிழில் crime நாவலின் மன்னர் என்று அழைக்கப்பட்டவர்.
அவரின் மிகவும் ஒரு கடுமையான ஒரு குற்ற கதையாக பட்டது.
 
 நான் படித்த அவரின் சில கதைகளில்.....,ஒரு சிறுகதை...

நீயே.... நீயே... நானும்....நீயே..!!

நான் குப்புசாமி, வயது 25- நான் சொல்வதை கேட்டு ஆச்சிரியம் அடையாதீர்கள், என் மேல் கடிக்க உட்காரும் கொசுவை கூட ஊதி விரட்டும் இறக்க குணம் உள்ளவன்.
ஆனால்
அன்று மாலை "சத்ய மூர்த்தியை" தீர்த்து கட்டியே தீரவேண்டும் என்று முடிவெடுத்து அவன் பின்னால் சென்றேன். என் மனமோ " சபாஷ் டா குப்பு" என்று பிலரியது...

இந்த சத்ய மூர்த்தி என்னுடன் நகமும் சதையும் போல் நெருக்கமாக இருப்பவன், கவிதைகள் எழுதுவான் புத்தகம் படிப்பான் தன்னை ஒரு அறிவு ஜீவியாக காடிக்கொல்பவன் ஆனால் அவனுடைய இன்னொரு பக்கம் அருவருப்பானது....

அது, பெண்கள் மீது அவன் கொண்ட மோகம்,
பெண்களை தவறாக பார்பது , இரகசியமாகநோட்டம் விடுவதை வாடிக்கையாக கொண்டான்..

நான் பல முறை சொல்லியும்
" இதோ பாரடா மூர்த்தி இது மாறி பண்றது நல்லா இல்ல, இப்டியே பண்ணிட்டு இருந்த, ஊர்காரவங்கலுக்கு தெரிஞ்சா நல்லா இருக்காது என்று பல முறை சொல்லியும் கேட்க வில்லை.

 ஒரு நாள் அவனின் பார்வை கரும்பு தோட்டத்தில் உள்ள குடிசையில் வசிக்கும் "மயிலா " வின் மீது பாய்தது.. நான் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்க வில்லை, கெஞ்சியும் பார்த்தேன் , புத்தி மதி சொல்லியும் கேட்கவில்லை அவன்...

அன்று முழு நிலவு நேரத்தில்,  தோட்டத்திகுள் பூனை போல நுழைந்து.., மயிலாவின் குடிசையை அடைந்தான் சத்ய மூர்த்தி...

"என்ன மயிலா சாப்ட எதாவது இருக்கா ரொம்ப பசிக்குது, சாம்பார் வசான தூக்குது , முள்ளங்கி யா இல்ல முட்டகொசா??""

மயிளா விறைத்து பார்த்தல்" இப்போ எதுக்கு இங்க வந்த"

"வெளிய ரொம்ப குளிரா இருக்கு அதான் ஒதுங்களான்னு வந்தேன்" என்று உள்ள நுழைந்தான் சத்யா.

மூர்த்தியின் என்னம் மகிலாவுக்கு புரிந்தது.
சட்டென்று அறுவாமனையை எடுத்து "பக்கத்துல வரதா" என்று கர்ஜிதால்..

மூர்தியோ "எங்கே வெட்டு பாக்கலாம்!" என்று கைகளை நீட்ட,   மயிலவோ அறுவாமனையை காற்றில் வீச  மூர்த்தியின் ஆள் காட்டி விரலை பதம் பார்த்து அது!!

மூர்த்தியோ " ஹையோ ஆ..ஆ" என்று அலறி. கோவத்தில் மயிலாவை அடிக்க அவள் கருங்கல் சுவரில் அடித்து, இரத்தம் சொட்ட சொட்ட இறந்தால்..

 அந்த கொலையை பார்த்தவன் நான் மட்டுமே..!.

போலீஸ் சந்தேகத்தில் அவனை விசாரித்தபோதும், நீதிபதி  முன்னாலும் அவன் கொலை செய்ய வில்லை என்றே வாதிட்டான்..
இறுதியில் சாட்சியங்கள் இல்லாததால் அவன் விடுதலை ஆனான்.

அவன் விடுதலை அன நாள் முதல் அவன் மிது குறி வைத்தேன், அவனை தீர்த்து கட்டவேண்டும் என்று முடிவு எடுத்து பின்னாலிலை கிராமம் முழுதும் பிந்தொடர்தேன். இன்று சமயம் அமையும் போல் இருக்கிறது.....!

சத்ய மூர்த்தி கிராமத்தின் கோடியில் உள்ள மலையின் மீது போவதை பார்த்து பின்தொடர்ந்தேன் ஒற்றையடி பாதையில் நடந்தவன் சட்டென்று பாறையின் உச்சியின் மீது ஏறி தூரத்தில் இருக்கும் கிராமத்தை பார்த்தான்.. " ஆஹா இது தான் சரியான நேரம் என்று எண்ணி அவனை தள்ளி விட்டேன், பாறையின் இடையிலும், முர் செடியிலும், கற்களிலும்  அடித்து விழுந்து இறந்தான் சத்ய மூர்த்தி...

மலையடி பாதையில் கிராமமக்கள் கூடி இருக்க, சத்ததுடன் போலீஸ் ஜீப் வந்தது ,

இன்ஸ்பெக்டர் இறங்கி பாடியின் அருகில் நின்று" செத்து கிடக்கிறது யாருனு
தெரியுமாயா? " என்று கூட்டத்தை பார்த்து கேட்டார்...

கும்பலுக்கு முன்னால்‌ நின்றிருந்த ஒருவன்‌ சொன்னான்‌.
|""சார்‌! மயிலா என்கிற விதவைப்‌ பெண்ணோட கொலை
கேஸில்‌ மாட்டி தண்டனை எதுவும்‌ கிடைக்காமே சமீபத்துல
 விடுதலையாகி வந்தான் சார்‌. வந்ததிலிருந்தே பித்துப்‌ பிடிச்சவன்‌
மாதிரி ஏதேதோ முனகிட்டு ஊரைச்சுத்திக்கிட்டு இருந்தான்‌ சார்‌."

' இவனோட உண்மையான பேரு குப்புசாமி சார்‌. ஆனா,
குப்புசாமி பேர்‌ பிடிக்காமே சத்திய மூர்த்தின்னு பேர்‌
வச்சுக்கிட்டு வேலைவெட்டி இல்லாமே ஊரைச்சுத்திக்கிட்டு
ருந்தான்‌. கொலைக்கேசில்‌ சிக்கி தண்டனை கிடைக்காமே
கிராமத்துக்கு வந்தாலும்‌, அவன்‌ சந்தோஷமாகவே இல்லை.
இரண்டு தடவை தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சான்‌.
கிராமத்து ஜனங்க காப்பாத்திட்டாங்க. இந்தத்‌ தடவை காப்பாத்த
முடியாமப்‌ போயிடுச்சு சார்‌...”......!


please - share ur comments on this story ! 👍




« Last Edit: January 04, 2024, 02:39:19 am by karthick sri »

January 30, 2024, 12:37:09 pm
Reply #1

RiJiA

Hi Karthick sir 💐Nice Story....1st Time  ராஜேஷ் குமார் ivar story na padichirken.... Next story ku waiting...