Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-006  (Read 15140 times)

October 03, 2022, 09:38:52 am
Read 15140 times

Administrator

கவிதையும் கானமும்-006
« on: October 03, 2022, 09:38:52 am »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

October 04, 2022, 06:55:10 pm
Reply #1

LOVELY GIRL

Re: கவிதையும் கானமும்-006
« Reply #1 on: October 04, 2022, 06:55:10 pm »
உள்ளத்தை கட்டிப்போட தெரிந்தவன்,
யாருமே இங்கு பிறக்கவில்லை.
மனது ஒரு குரங்கை போன்றது.
அடக்க நினைத்தால் அலையும்.
கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...

பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து

நீ கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே

காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்! காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்!

உன் மீதான காதல் என்பது நீ இருக்கும் வரையல்ல, நான் இறக்கும் வரை தொடரும்!

ஆசைகளே இல்லாத அற்ப பிறவி என்னையும் பேராசைக்காரியாய் மாற்றிய அவன்!
வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை!

என்னோடு இரு அது போதும்! பிறகு யோசிப்போம், வாழ்க்கை முடிவிலியா, முடிவா என்பதை!

என்றும் உன் கரம் விடாத உந்தன் ஸ்ரீ
« Last Edit: October 05, 2022, 03:57:43 pm by LOVELY GIRL »

October 05, 2022, 08:50:48 pm
Reply #2

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: கவிதையும் கானமும்-006
« Reply #2 on: October 05, 2022, 08:50:48 pm »
வாழ்க்கைத் துணையாக காவியா தங்கையாக திவ்யா😊❤️

அழியா கண்மை விழியிலும்
அகல்விளக்கு ஒளியிலும் அழகாகிறாள் காவியா😊❤️

வா என்றால் வரமாட்டேன் என்றும்
வராதே என்றால் வருவேன் என்றும்
சத்தமிட்டு எதிர்மறை பேசும்போது அழகாகிறாள்  திவ்யா😊❤️

சாமி அறையில் நனைந்த கூந்தலுடன்
சமையலறையில் கலைந்த கூந்தலுடன்
அழகாகிறாள் காவியா😊❤️

கொட்டித் தீர்க்கும் மழை போல திட்டி தீர்க்கும் போதும்
சோலையும் பூக்கும் பூக்களை பிடித்து விளையாடும் போதும் அழகாகிறாள் திவ்யா😊❤️

காசநோய்க்கு மருந்து கண்ட உலகம்
காவியா மீது கொண்ட ஆசை நோய்க்கு என்ன செய்யும்😊❤️

சூரியனை சுற்றும் இப்பூமி போலத்தான்  என்னை சுற்றும் காவியாவின் காதலும்,

என்னைச் சுற்றி எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும்  என் மீதான இயல்பில் சற்றேகுறையாத   திவ்யாவின் காதலும்

திக்கி திணறுகிறது இந்த காதல் என்னும் போட்டி மழையில்😊❤️

உன்னுடனான உரையாடல் திகட்டிச் சலிப்பதற்கு முன் தீர்ந்து போன இரவை திட்டித் தீர்க்கிறது என் மனம்.😊❤️

திவ்யாவுடனான பல்லாங்குழி உப்பு மூட்டை  என ஊர்ந்து ஆடிய நினைவுகளை மீண்டும் கேட்கிறது என் மனம்😊❤️

காவியா என் தோளில் சாய்ந்த தருணம்  வானிலிருந்த நட்சத்திரங்களை காண கூட மனம் மறுத்தது😊❤️

திவ்யா என் கரங்களை பிடித்த தருணம் தொட்டில் தொடங்கிய இந்த உறவின் அர்த்தம்   கற்றையாய்             
மனம் சிரித்தது😊❤️

எப்படி விட முடியும் இந்த இரு உறவுகளை,

சிரத்தை கொடுத்தேன் கவிதாவிற்கு என்றும் துணையாய் தலை சாய்பதற்காக😊❤️

கரத்தை கொடுத்தேன் திவ்யாவிற்கு என்றும் அவளின் பாதுகாப்பிற்காக😊❤️

       ~அந்த புகைப்படத்தை பற்றிய என்னுடைய கிறுக்கல்கள்🧢

October 06, 2022, 07:38:00 am
Reply #3

AniTa

Re: கவிதையும் கானமும்-006
« Reply #3 on: October 06, 2022, 07:38:00 am »
வாழ்க்கையின் துணை தேடும் உறவில் கூட ஏற்படுகிறது துரோகம், அது ஏனோ!
கனவில் கூட நினைத்து பார்க்காத செயல், நாம் விரும்பும் உறவு செய்கிறதே, அது ஏனோ!
நொடி நிமிடம் உருகி உருகி நினைக்க நான் இருக்க , இன்னொரு உறவுக்கு நீ கை நீட்டுவது, ஏனோ!
தன் நலம் கருதாமல் உன்னை தஞ்சம் அடைந்த உயிர்க்கு, துரோகம் இழைக்க உன் மனம் முற்படுவது, ஏனோ!

இத்தனை நாள் காண்பித்த பாசம் யாவும் பற்றவில்லையா!
அதில் நிறைந்திருந்த கோடி மலரின் வாசம் நீ அறியவில்லையா!
அளவில்லாத என் காதல் உன் கண்களுக்கு தெரியவில்லையா!
அவையாவும் காணாதது போல் இருக்கிறாயே, அது தவறில்லையா!

மனம் நொந்து தேடினேன் பதிலை, விடைகள் வந்தது.
தவறவிட்டாய் என்றார்கள், ஆசை சலித்து விட்டது என்றார்கள்,
ஆண்களின் வர்கமே அப்படிதான் என்றார்கள், அந்த பெண்ணையுமா விட்டுவைக்க போகிறார்கள்!

மனதில் விழுந்த குறைகளை களைந்துவிட்டேன்.
ஆசை மரத்துக்கு மரம் தாவும் குரங்கு தானே!
மனம், ஆசையை அற்று விடு என்றது, பாசம் விட்டு
போ என்றது, மோகம் மறந்து போ என்றது....
காலம், இவையாவும் கடந்து போ என்றது!

காதலில் நேர்மை சோதிக்கப்பட்டது!
அதில் நானே வென்றிடப்பட்டது!
தனியே செல்கிறேன் என் வழி பார்த்து,
கவலையுடன் அல்ல, கர்வத்துடன்.

                                                               ~தனிமையின் நிழல்

October 06, 2022, 11:03:16 am
Reply #4

Mellisai

Re: கவிதையும் கானமும்-006
« Reply #4 on: October 06, 2022, 11:03:16 am »
யாருக்கு தெரியும்?


ஒரே பார்வையில், இது ஒரு முக்கோண காதல் என்று பலர் சொல்ல..
அப்படியும் இருக்கலாமோ என்று என் மனம் சிந்திக்க..
திடீர் என்று எனக்குள் பல கேள்வி குறிகள்.

அவன் தோளில் சாய்ந்திருக்கும் பெண் அவனுடைய விவாகரத்து பெற்ற சகோதரியா?
அவன் கையைப் பிடித்த பெண் அவனுடைய இதயம் உடைந்த தோழியா?

அல்லது
தோளில் சாய்ந்திருக்கும் தேவதை தன் வருங்கால மனைவியா?
அவன் கையைப் பிடித்துக் கொண்டு இருப்பது அவனுடைய சொந்த சகோதரியா?
யாருக்கு தெரியும்?

தோளில் சாய்ந்திருக்கும் மங்கை மனநலப் பிரச்சனைக்கு அவர் ஆறுதல் சொன்ன உயிர் தோழியா?
அல்லது
அவன் கையை பிடித்திருக்கும் பெண் அவனால் மறக்க முடியாத முன்னாள் காதலியா?

அல்லது
அவன் தோளில் சாய்ந்திருப்பவள் அவனுடைய மனைவியாகவும் இருக்கலாம்..
ஆனால் அவர் இறந்த காதலியின் நினைவுகளின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இருக்கலாம்...
யாருக்கு தெரியும்?

இது வெறும் படம்...
வா இதில் இருந்து எடுத்து கொள்வோம் நல்ல பாடம்..
யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்..
கவிதையே என்ன என்று தெரியாமல் ஒளறிகொண்டு இருக்கும் , நான் உங்கள் யாழிசை என்ற மெல்லிசை.. ❤️


Special thanks to Sanjana for checking my previous poem, and Arjun for correcting this poem.
Lovely thanks to RiJiA for hosting the lovable show.
Appreciate~

« Last Edit: October 06, 2022, 12:23:51 pm by Mellisai »

October 06, 2022, 01:21:25 pm
Reply #5

Sanjana

Re: கவிதையும் கானமும்-006
« Reply #5 on: October 06, 2022, 01:21:25 pm »

துரோகம்…

நேற்று நீங்கள் என் கைகளை பிடித்து விளையாடவில்லையா?
என்னை நான் உங்களிடம் ஒப்படைக்க வில்லையா?
நீங்கள் அனைத்து மக்கள் முன்
என்னை உங்கள் காதலி என்று அழைத்தீர்களே,
அனைத்தும்  பொய்யா? இல்லை மாயமா?

நேற்று மற்றவர்களிடம் இருந்து என்னை கடத்தி சென்றாய்,
இன்று என்னை தனியே விட்டு சென்றாய்,
இன்னொரு உறவுக்காக என்னை புறக்கணித்தாய்,
மனம் உடைந்தேன், ஆனால் உன்னை மறக்கவில்லை,
மறக்க முடியவில்லை, மறக்க மாட்டேன் என் உயிர் உள்ள வரை….

நீ நேற்று சத்தியம் செய்தாயே,
என்னை ஏமாற்றமாட்டேன் என்று சொன்னாயே,
- ஆண்களை நம்ப முடியவில்லை-
என்னை ஏமாற்றிய உனக்கு அந்த உறவை ஏமாற்ற எவ்வளவு காலம் ஆகும்,
என் மனமும் இதயமும் உடைந்தபோது நான் உணர்ந்த அந்த வலி,
அந்த உறவுக்கு வராமல் இருக்க உன்னை வேண்டுகிறேன்…

நீ என்னை எப்படி ஒதுக்கித் தள்ளுகிறாய் மற்றொரு பெண்ணுக்காக,
தவறானவன் காதலில் விழுந்தேனோ?
என்ற உணர்வை எனக்குள் வரவழைத்தாய்
ஒருவேளை நான் நல்ல காதலி இல்லையோ?
ஆனால் நான் உன்னை மிகவும் நேசித்தேன்!

இன்னும் நான் உன்னை நேசிக்கிறேன்,
வெறுக்க முடியவில்லை, நீ என்னுள் வாழுகிறாய்!
நீ என்னை ஏமாற்றினாலும்,
நான் உன்னை ஒருபோதும் வெறுக்கமாட்டேன்,
மனதால் பிரியவும் மாட்டேன்…

என் இதயமும் உடைந்து போகட்டும்,
சத்தியங்களைக் கொண்டு ஆணவத்தை ஏளனம் செய்யுங்கள்,
ஆனால் நான் பழிவாங்க  மாட்டேன்,
சாபம் விட மாட்டேன்,
நீ அவளுடன் சந்தோசமாக வாழ வாழ்த்து மட்டுமே சொல்லுவேன்.

நான் அன்புள்ள கடவுளாக இருப்பேனோ?
நான் அறியேன், ஆனால்
துரோகத்தின் சாயல் நீயாக தான் இருப்பாய்.
அறியாமல் செய்தால் தவறு,
நீ அறிந்தே செய்தது துரோகம்...

« Last Edit: October 07, 2022, 01:44:49 am by Sanjana »

October 10, 2022, 08:58:03 am
Reply #6

RajuRaju

Re: கவிதையும் கானமும்-006
« Reply #6 on: October 10, 2022, 08:58:03 am »
இதுவரை பார்த்ததில்லை அவளை போன்ற பெண்ணை.......
 எத்தனை பெண்களை பார்த்தாலும் ஈர்க்கவில்லை அவளது கண்களைபோன்று.......
எத்தனை பெண்களிடம் பழகினாலும் கிடைக்கவில்லை அவளது பாசம் போன்று.....
இனி எந்த பெண்னையும் நினைக்க தோன்றாது....
அவள் மீது கொண்ட காதலால்......
 அவளிடம் சென்று அனைத்து எண்ணங்களையும் கூறினேன்......
அவள் மீது கொண்ட காதலை......
அவள் முதலில் சிரித்து சென்றுவிட்டால்......
அவளுக்கு சம்மந்தம் என்றேன்......
ஆனால் காதல் அதிகரிக்க அதிகரிக்க கூறினால். அந்த எண்ணம் இல்லை என்று.......
நான் நினைத்தேன் நான் ஒரு நானொரு ஏழை என்பதால் என் காதலை ஏற்கவில்லையென்று....
ஆனால் அதற்குப்பின்தான் அனைத்தும் புரிந்தது... அவள் வேறொருவனை காதலித்தால் என்று.......
 எனக்கு அவ்வளவாக வருத்தம் இல்லை.....
ஏன் ஏனென்றால்.......
எனக்கு ஆசைப்பட்டது எதுவும் கிடைத்ததில்லை.....
ஆனால் நான் ஆசைப்பட்ட காதல் கிடைக்கவில்லை என்ற  சிறியவருத்த்தில் அவளிடமிருந்து விடைபெறுகிறேன்........
                              காதலனாக மாறிய நண்பன்........
                   உங்கள் இராஜூ இராஜூ......................

October 12, 2022, 08:44:51 pm
Reply #7

Ishan

Re: கவிதையும் கானமும்-006
« Reply #7 on: October 12, 2022, 08:44:51 pm »
காதல் என்பது ஒரு மனித உயிர் போல பலரிடம் காதல் வந்தாலும் ஒருவரிடம் மட்டுமே வாழ ஆசைப்படுகிறது.

கனவு என்பது தூக்கத்தில் இருந்து கண் திறக்கும் வரை தான் ஆனால் காதல் என்பது வாழ்வின் கண் மூடும் வரை

காதலியே மனைவியாக வந்து விட்டால் அவன் அதிர்ஷ்டம் பெற்றவன் ஆனால் மனைவி அவன் காதலாக மாறினால் அவன் வாழ்வில் இன்பம் பெற்றவன்

குளிரூட்டும் வெண்ணிலவும்
உனைக் காண ஓடி வரும்
சிலிர்ப்பூட்டும் தென்றலும்
உனைத் தொட்டு பெருமை கொள்ளும்
மிரண்டோடும் கடலலையும்
உன் பாதம் பட்டு மோட்சம் பெறும்
என்னுள்ளே காதல் மட்டும்...
உனைக் கண்டு தலை தூக்கும்

அன்பாய் நீ அழைத்து விட்டால்
எங்கோ தூரமாய் திரிந்த வசந்தம்
என்னுள்ளே குடிவர காண்கிறேன் ...
உருவான நாள் முதலே
எனக்குள்ளே கலந்திருக்கும்
என் உயிர் இன்று
முழு உறவாகி
நீயாக நிற்க கண்டேனடி
என் செல்லமான தோழி ..
உனது பவித்ரமான சிநேகத்தில்
நான் கொள்ளை அடித்த
உன் அன்பு என்றும்
என் உள்ளங்கை ரேகை போலே
என்றும் அழியாமல்
என் இதயத்தின் ஓரம் இருக்கும்..
உன் அன்பெனும் மழையில்
என் நெஞ்சில் பூத்த
இந்த நட்பெனும் உறவில்
என் எல்லாவற்றையும் காண்கிறேன் ..
சிறிதாய் நீ விலகி செல்கையில்
இதயம் கணமாக
உணர்கிறேன்.

October 13, 2022, 12:29:06 am
Reply #8
Re: கவிதையும் கானமும்-006
« Reply #8 on: October 13, 2022, 12:29:06 am »
இது முக்கோண காதல் அல்ல,,,,
காலம் கடந்த காதல்,,
அவன் சொன்ன போது
ஏற்று கொண்டிருக்க வேண்டும்,,
,நான் ஏற்று கொண்டாதிருக்கும்  போது ....
அவன் அவளை ஏற்று கொண்டு விட்டான்,,,,

நான் ஏற்று கொண்ட போது ...
அவன் என்னையும் அவளோடு
 இணைத்து கொள்ள முற்பட்டு விட்டான்   ,,
பிரிய மனமில்லை ,,தொடர்கிறேன் ,,,,

அவளிடம் சொல்ல முடியாமல்,,,
தோழியையும் மறக்க  முடியாமல்,,,,,,
மனம் எனும் காற்றில் முடிவில்லா
 என் காதல் எனும் கடற்பயணத்தை தொடர்கிறேன் ....

எனக்காகவே நீ என இருவர் இருக்க முடியாது,,,,,,,
ஆனால் அவன் இருக்க துணிந்து விட்டான்,,,,,
.அவள் பின்னால் கையையும் கொடுத்து விட்டான்,,,,
என் கரத்தினை கொடுக்க ஒன்று
 அவளுக்கு துரோகம் செய்ய வேண்டும்.....
அல்லது என் காதலை துறக்க  வேண்டும்,,,,,,
அவனா .அல்லது ...தோழியா ,,,?
என்னுள் நின்று உங்களுக்கே கேள்வி கேட்கிறேன்,,,,,,,

அவளின் காதலை ஏற்ற பின்  அவன்
என் காதலை மறு ஒருமுறை ஏற்கலாமா ?
ஏற்ற பின் ,,,என் காதலை நான் மறுக்கலாமா ?
நான் மறுக்கவில்லை ஏற்று கொண்டேன்,,,,,
அவளையும் அவனையும்,,,,,ஒன்றாக,,,இக்கணம்
 ,எனது பயணம் மறைந்தே செல்லும் ,,..
எங்களின் இரு கரங்களை போல !!!!...

.முடிவு ? வலதே எனை  கொண்டு..
இடையினில் அவன் தலை சாய்ந்து ,,,
அவன் காதலையும்,,,,என் நட்பையும்
ஒரு சேர கொண்டே என் தோழியே,,,,,
உன் நம்பிக்கையில் என் காதல் கரைந்து போகும்,,,,

காதலில் மட்டுமே நம்பிக்கையல்ல என் தோழியே!,,... நம் நட்பிலும் !!!!
சென்று  விடுவேன் நேரம் கொடு,,,,
அது வரை அவன் கரம் பற்றிட !!!!