மிக மென்மையான பெண்மை ,அதில் பூக்கின்ற தாய்மை .
கரு உருவாகும் முன்னே எதிர்பார்த்து ,இருப்பாள் கருவில் மலர்ந்த மலரை ஆசையுடன் வரவேற்பாள் .
பத்து மாதங்கள், அதில் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஆனந்த நாட்கள்.
தன்னிடமே இருக்கும் அந்த மலரை நினைத்து நினைத்து ரசிப்பாள்.
வயிற்றின் மாற்றங்களை கவனித்து, அதை தன் மன்னவனிடம் சொல்லி மகிழ்வாள்.
கர்ப்ப காலங்களில் அவள் சந்திக்கும் அத்தனை அசெளகரியங்களையும் சமாளித்துக்கொள்வாள்.
கருவில் இருக்கும் மலரின் மேல் உள்ள அக்கறையே அவளின் முதல் கவனம்.
கண் இமை போல் பாதுகாப்பாள், காவல் தெய்வம் போல்.
பிரசவ காலத்தில் வலியை தாங்கிக்கொள்வாள், வலிமை மிகுந்த காளி போல்.
உலகம் அறியும் தருணம், இந்த மென்மையான பெண்மையிலும் எவ்வளவு வலிமை என்று.
வலியை கடந்த அடுத்த நொடி, வேதனையின் முகம் மறைந்து, மலரும் ஆயிரம் இதழ்களாய் தான் பெற்ற சேயை கண்டு.
மீண்டும் ஒரு முறை பிறந்தாள் தாய்மையில் முழுமை அடைந்தாள் .