GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on September 05, 2022, 02:04:29 pm

Title: கவிதையும் கானமும்-004
Post by: Administrator on September 05, 2022, 02:04:29 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk004.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: AniTa on September 06, 2022, 12:31:45 am
மிக மென்மையான பெண்மை ,அதில் பூக்கின்ற தாய்மை .
கரு உருவாகும் முன்னே எதிர்பார்த்து ,இருப்பாள் கருவில் மலர்ந்த மலரை ஆசையுடன் வரவேற்பாள் .
பத்து மாதங்கள், அதில் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஆனந்த நாட்கள்.
தன்னிடமே இருக்கும் அந்த மலரை நினைத்து நினைத்து ரசிப்பாள்.
வயிற்றின் மாற்றங்களை கவனித்து, அதை தன் மன்னவனிடம் சொல்லி மகிழ்வாள்.
கர்ப்ப காலங்களில் அவள் சந்திக்கும் அத்தனை அசெளகரியங்களையும் சமாளித்துக்கொள்வாள்.
கருவில் இருக்கும் மலரின் மேல் உள்ள அக்கறையே அவளின் முதல் கவனம்.
கண் இமை போல் பாதுகாப்பாள், காவல் தெய்வம் போல்.
பிரசவ காலத்தில் வலியை தாங்கிக்கொள்வாள், வலிமை மிகுந்த காளி போல்.
உலகம் அறியும் தருணம், இந்த மென்மையான பெண்மையிலும் எவ்வளவு வலிமை என்று.
வலியை கடந்த அடுத்த நொடி, வேதனையின் முகம் மறைந்து, மலரும் ஆயிரம் இதழ்களாய் தான் பெற்ற சேயை கண்டு.
 மீண்டும் ஒரு முறை பிறந்தாள் தாய்மையில் முழுமை அடைந்தாள் .
Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: Sanjana on September 06, 2022, 02:05:30 pm
"அன்புள்ள அம்மா"

நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொல்ல எழுதுகிறேன்
நான் எப்பொழுதும் செய்யாத ஒன்று.
நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று
நான் ஒருபோதும் சொல்லவில்லை
இது நான் செய்ய வேண்டிய ஒன்று.

உங்களின் கருவறை நீர்  என் முதல் வீடு
என்னை உலகுக்கு வரவேற்க நீங்கள்
உங்களை வருத்தியது நான் அறிவேன்.
நான் உங்களின் மென்மையான அதிசயம்.
எனவே, மோசமானவற்றில் சிறந்ததைக் காண
நீங்கள் எனக்கு கண்களைக் கொடுத்தீர்கள்.
என் தாயை என் கண்களில் சுமக்கின்றேன்.

நீங்கள் உண்மையில் எனக்கு என்ன அர்த்தம்
எனவே நான் இப்போது சொல்கிறேன்,
நீங்கள் எனக்கு உலகம் என்று அர்த்தம்.
எனக்காக நீங்கள் செய்யும் அனைத்திற்கும்
நான் நன்றி சொல்ல வேண்டும்.

என் மீதான உங்கள் நிபந்தனையற்ற அன்பு
எனக்கு கிடைத்த வரம்.
நீங்கள் ஒருபோதும் என்னைப் புறக்கணித்ததில்லை
நீங்கள் ஒருபோதும் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.
எப்போது வேண்டுமானாலும் பேசுவதற்கு யாராவது தேவைப்படுவார்கள்
எனக்கு உதவ நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள்

எப்பொழுதும் எனக்கு ஒரு உதவி தேவை என்றால்
நீங்கள் எப்போதும் தோன்றுவீர்கள்.
இந்த உலகில் என்னால் எதுவும் செய்ய முடியாது
நீங்கள் செய்யும் அனைத்திற்கும் திருப்பிச் செலுத்துவதற்காக.

கடவுள் என்னை உங்களிடம் கொடுத்தபோது,
அதுதான் அவர் செய்யக்கூடிய சிறந்த விஷயம்,
எனவே இந்தக் கவிதை உங்களுக்கு சமர்ப்பணம்
ஏனென்றால் வேறு எப்படி சொல்வது என்று தெரியவில்லை
நன்றி.



இந்தக் கவிதையை என் தாய்க்கு மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கப் போராடும் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.
I dedicate this poem not only to my mother but to all mothers who struggle to care for their children.

கவிதையும் கானமும் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் நன்றி. நன்றி இஷான், ரிஜியா மற்றும் ஜிடிசி.
Thank you again for the opportunity to participate in KAVITAIYUM GANAMUM. Thank you GTC, ISHAN and RIJIA .

Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: LOVELY GIRL on September 06, 2022, 07:02:17 pm
அம்மா,
உன்னை நினைக்கையில் எழுத தெரியவில்லை, உன்னை ரசிக்க மட்டுமே தெரிந்தது!

இருந்தபோதிலும் உன்னை ரசித்துக் கொண்டே எழுதினேன் உனக்கொரு கவிதை..

நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா!

வாழ்க்கை எனும் மேடையில், நடிக்க தெரியாத ஒரு கதாபாத்திரம், அம்மா!

தோல் சாய்ந்து நீ என்னைத் தாலாட்டு பாடும்போது சொர்க்கத்தில் இருப்பது போல ஆனந்தம் கொண்டேன் அம்மா!

எத்தனை காலங்கள் எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும் உன் அன்பு மட்டும் என்றும் குறையுமா அம்மா!

அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் அம்மா! பாசம் என்ற சொல்லுக்கு பொருளும்   அம்மா..!

வார்த்தையில் அடங்கா காவியம்; வர்ணத்தில் நிறையா ஓவியம் "அம்மா!"

உன்னை அணைத்து பிடித்திருக்கும் உந்தன் ஸ்ரீ...💖

காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்...🙏
Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: Ishan on September 09, 2022, 02:32:54 pm
பத்து மாதம் சுமை ஒரு மணிநேரம் வலி அனைத்தும் மறந்தாள்..
குழந்தையின் முதல் அழுகை சத்தம் கேட்டதும் நீ வலி பொறுத்து என்னை நீ இந்த உலகிற்கு கொண்டு வந்தாய் அதனால் தான் எனக்கு வலிக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா என்று.

என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில் தான்
 இருந்தது என் தாயின் பாசம்.

ஆயிரம் உறவுகள் உன்னை
சூழ்ந்து நின்றாலும் உனக்கு
ஒரு துன்பம் வரும் போது
வாழ் நாள் முழுவதும்
உன்னை தாங்கிப் பிடிக்கும்
ஒரு உறவு உன் தாய் மட்டும் தான்.
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
ஓர் உன்னதமான தெய்வம் அம்மா.
Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: Mithra on September 09, 2022, 05:35:29 pm
என்னுடைய உலகம் நீ அம்மா ஏனென்றால் என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது நீ அம்மா!

இந்த உலகில் எனது முதல் தோழியாகவும் இருந்தது நீயே அம்மா!

நான் பேசவும், நடக்கவும், பழகவும், கற்கவும் செய்ய வைத்தது நீயே அம்மா!

என்னை நினைக்காமல் ஓர் நொடி நீயில்லை அனுதினமும் எனக்கு என்ன தேவை என்று மட்டுமே நினைப்பாய் அம்மா!

நான் சோர்வடையும் நேரம் எல்லாம் என் அருகில் இருந்து என்னை உற்சாகப்படுத்தியது நீயே அம்மா!

என் சந்தோஷத்திலும், என் துன்பத்திலும் என்னுயிர் தோழியாய்,ஆறுதலாய் இருப்பது நீ மட்டுமே அம்மா!

நான் அன்பு என்ற ஒன்றை கற்றது உன்னிடமே.. ஆயிரம் உறவுகள் வந்தாலும் அந்த உறவுகள் உனக்கு ஈடு இல்லை அம்மா!

இந்த உலகில் யார் என்னை காயப்படுத்தினாலும், என்னை காயப்படுத்தாத ஒரே ஜீவன் நீ மட்டுமே அம்மா!

என் முகப் பாவனை வைத்தே என்னை அறிந்து கொள்ளுவதும் நீயே அம்மா!

நீ என்னை திட்டினாலும், அடித்தாலும் அது என்றுமே என்னை காயப்படுத்தியதில்லை... அந்த வித்தையை எங்கு கற்று கொண்டாயோ அம்மா!

நான் கடவுளிடம் கேட்பதை, நான் கேட்காமல் கொடுப்பது நீயே அம்மா!

நீ ஊட்டிய சோற்றை விட வேறு எந்த அமிர்தமும் இல்லை இந்த உலகில்.... கடவுள் எனக்கு இந்த உலகத்தில் அளித்த முதல் பரிசு எனது அம்மா!

உன்னை பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடு ஆகாது அம்மா!

உன் அன்பை பற்றி எழுதிட கவிதைகள் தேவையில்லை... ஏனெனில் நீயே ஒரு கவிதைததான் அம்மா என்ற உன் அன்பு உலகில்!

உன்னை அணைத்து பிடிக்கும் போதெல்லாம் உணர்கிறேன் உலகம் என் கையில் என்று!

தாயை வணங்குவோம்!
தாய்மையை போற்றுவோம்!...
Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: Mellisai on September 09, 2022, 06:56:10 pm
அம்மா..
உன் மகளாய் பிறந்த இந்த ஜென்மம் ..
வர்ணிக்க முடியாத ஒரு அழகான பயணம்…
நான் உன்னை இத்தனை வருடங்கள் பிரிந்து இருந்தாலும்..
உன் நினைவும் உன் அன்பும்...
உன் கள்ளங்கபடம் இல்லாத பேச்சும்…
என் நினைவில் எப்போதும் மிதந்து கொண்டிருக்கும்…

சொல்ல முடியாத வலிகள்...
மறக்க முடியாத தருணங்கள்..
அது எல்லாம் மறந்து போகும்..
ஒரே நிமிடத்தில் கரைந்து போகும்..
உன் மடியில் நான் உறங்கிய அந்த நிமிடம்.

அம்மா... தோள் கொடுக்கும் தோழியும் நீயே..
என் கண்ணீரை உன் கண்ணீராய் சுமந்தவளும் நீயே...
ஓவ்வொரு நாளும் சோர்வாக இருக்கும் உன் சேயே ..
சிரிக்க வைத்து ரசிப்பதும் நீயே...

அம்மா...ஒவ்வொரு தடவையும் நான் உன்னை காய படுத்தினாலும்...
வேதனை கொடுத்தாலும்..
நீயாக வந்து என்னைத் தடவி கொண்டு அணைக்கும் போதெல்லாம்....
அந்த இறைவனிடம் கேட்பது ஒண்ணே ஒன்று....
பூக்காதா இந்த உயிர்... அவளின் கருவில் மறுமுறை என்று......

அம்மா...
உன் பாசம் போல் .. உன் நேசம் போல் ..
நான் இருப்பேன் என்று தெரியாது....
ஆனால் உன்னை போல் என் மகளையும் நான் அரவணைக்க .....
நீயே என் மகளாக வருவாய் என்று நான் பிராத்திக்கிறேன்......
அன்போடு உன்னை மட்டும் நெசிக்கும் உன் மகள்..
மெல்லிசை என்கின்ற மீறலினி...❤️
Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: RiJiA on September 09, 2022, 07:53:13 pm
உன்னைப்பற்றி வார்த்தைகளாய்
சொல்லிவிட்டால் அந்த வார்த்தை பெரிதாகிவிடும் உன்னைவிட!
வரிகளாய் சேர்த்துவிட்டால் அந்த வரிகள்
பெரிதாகிவிடும் உன்னை விட!
வார்த்தைகளையும் வரிகளையும் சேர்த்து
கவிதையாய் வடித்துவிட்டாள்
அந்த கவிதை பெரிதாகிவிடும்
உன்னை விட!
தாய்மொழி தமிழ் கூட தவித்து நிற்கிறது
உன்னைப்பற்றி எழுதும்போது!
என் தங்க நிற எழுதுகோல்
தடம்புரல்கிறது உன்னைபற்றி
எழுதும்போது!
வெள்ளைக்காகிதம் வெட்கத்தால் நிமிராமல் தலைகுனிகிறது உன்னைப்பற்றி எழுதும்போது!
யோசித்தால் எதுவும் தோன்றவில்லை பெரிதாக
உன்னைவிட அம்மா!!!

Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: RoJa on September 09, 2022, 08:00:00 pm
அம்மா என்றாலே பாசம் அல்லவா!
அம்மா இல்லாமலோ ஏதும் இல்லை!
எனக்கொரு துன்பம் என்றால் துடிப்பாள்!
தனக்காக ஏதும் நினைக்க மாட்டாள்!
எத்தனை பிறவிகள் இருந்தாலும் உன் மடி மேல் தவழ ஆசை!!
மீண்டும் உன் கருவறையில் வசிக்க ஆசை!
என்னை இவ்வுலகில் அறிமுகம் செய்தாய்!
எல்லாம்  அறிந்தவலை வளரத்தாய்!
எனக்காக பல துன்பங்கள் தாங்கினாய்!n
என்றும் இருப்பேன் உன் துணையாய் எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும் ஒரே நீதிமன்றம்
என் அன்புள்ள அம்மாவின் இதயம்
Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: Aadhi on September 09, 2022, 08:10:57 pm
அம்மா... என் அன்பு அம்மா
என் அன்பு தாயே
என் சிறு வயதில் உன் தாலாட்டு அன்பிற்குரியது
உன் அரவணைப்பு சொர்க்கத்தை காட்டும்
உனது மடியில் தூங்கும் சொர்க்கத்தை கொண்டு செல்லும்
எப்பொழுதும் நீடூழி வாழ வேண்டும் என் தாயே

By
Aadhi
Title: Re: கவிதையும் கானமும்-004
Post by: Nandhini on September 09, 2022, 09:28:12 pm
அம்மா என்ற வார்த்தைக்குள் ஆயிரம் உறவுகளை அடக்கி கொண்டாய்
உன் மடி சாய்ந்து உறங்கும் போது
என் கவலை எல்லாம் மறந்து போகும்
என் சோகமெலாம் சுகமாய் மாறும்

நிலா காட்டி சோறூட்டும் போதும் தெரியாது அம்மா
என்னையே சுற்றி வந்த நிலா நீ தான் என்று

அன்பை மட்டுமே எதிர் பார்க்கும் ஓர் உறவு

கருவில் சுமந்த உன்னை
மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்

மனதார வேண்டுகிறேன்
மீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க

என்ன தவம் செய்தேன் உனக்கு மகலாய் பிறக்க
என்ன வரம் பெற்றேன் நீ என் தாயாய் வந்திட

அடுத்த பிறவியிலும் இதே வரம் பெற்றிட வேண்டுகிறேன்