Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-021  (Read 14118 times)

April 04, 2023, 07:29:33 pm
Read 14118 times

Administrator

கவிதையும் கானமும்-021
« on: April 04, 2023, 07:29:33 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-021


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: April 24, 2023, 08:03:37 pm by Administrator »

April 04, 2023, 09:29:06 pm
Reply #1

Ishan

Re: கவிதையும் கானமும்-021
« Reply #1 on: April 04, 2023, 09:29:06 pm »
பெண்மையின் அழகு வெட்கம்.......

அவன் முகம் காண
தயங்கி தலை குனியும்
பெண்ணின் வெட்கம் அழகு.....

பெண்ணே !
உன் வெட்க்க வெளிச்சத்தில் 
கண் கூசி நிற்கிறேன்
கொஞ்சம் கண் திறந்து பாராயோ?

பெண்ணே !
எதை கேட்டாலும்
உன் வெட்கத்தையே தருகிறாயே !
உன் வெட்கத்தை கேட்டால் எதை தருவாயோ?

பெண்ணே !
வெற்றிலைக்கு நாக்கு சிவக்க காரணம்
உன் காதல் என்றதும்,
வெட்கத்தில் நீ சிவக்கிறாயே.....

பெண்ணே !
உன் வெட்கம் கண்டபின்
தொலைந்தது என்  தூக்கம்,
அதை, தேடியே கழிகின்றது
என் வாழ்க்கையின் ஏக்கம்.....

பெண்ணே !
உனக்காக காத்திருக்கும்  ஒவ்வொரு நேரமும்
தவணை முறையில்  மட்டுமே எட்டி பார்க்கிறது
இந்த, புன்னகையோடு கலந்த வெட்கம்.......

பெண்ணே !
உன் வெட்கத்தை ரசிப்பதற்க்காகவே
உன்னையே சீண்டி பார்க்க
தூண்டுகிறதே என் கைகளும்......

பெண்ணே !
என் வீட்டு மலர் செடியில்
தினமும்தான் பூக்கின்றன பூக்கள்
ஆனாலும், நான் விரும்பி ரசிக்கின்ற பூ
உன் முகத்தில் மலரும் வெட்கமென்ற பூவைதான்.....

பெண்ணே !
எந்நேரமும் உன் ஞாபகமே என்னுள்,
நேரில் உன்னை கண்டதில்லை - காணும்போது
நான் உனக்குள் கரைந்து போக வேண்டுமே.....

பெண்ணே !
மரியாதை கொடுத்து பேசும் அழகியே,
மனம் கவர்ந்த வெட்க அழகி நீயே.....

April 04, 2023, 09:34:55 pm
Reply #2

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: கவிதையும் கானமும்-021
« Reply #2 on: April 04, 2023, 09:34:55 pm »
பெண்ணின் நாணம்.....

விந்தையிலும் விந்தையடி,
விசித்திரமான விந்தையடி,
விலை கொண்டு வாங்க இயலுமா?
பெண் நாணம் , விலை மதிப்பில்லா சொத்துமடி......

பெண்ணின் அடையாளம் வெட்கமடி,
பருவம் முதல் முதுமை வரை
தொடரும் இது ஒரு அற்புதமடி...

விரல் கொண்டு முகம் மறைத்தால்
அதில் வெட்கத்தின் அழகு
மெய்சிலிர்க்க தூண்டுதடி......

பெண்ணே, நீ கொள்ளும் நாணம்
விரும்பியவரின் கண்ணுக்கு விருப்பமடி....
விண் நிலவும் அதை கண்டு
பொறமை கொள்ளுதடி.......

காதல் தளிர்த்தால்,
அங்கையும் நிலவுதடி,
மன்னன் முகம் கண்ட நொடி,
மங்கையின் மனதில்,
சட்டென்று நாணம் ததும்பி பாய்கிறதடி.....

பெண்ணே உன் நாணத்தில்
நாணலும் சாய்கிறதடி,
அதை கண்டு,
அவன் என்கிற கர்வமும் தொலைகிறதடி...
« Last Edit: April 04, 2023, 10:38:48 pm by Vaanmugil »

April 05, 2023, 04:03:08 pm
Reply #3

Barbie Doll

Re: கவிதையும் கானமும்-021
« Reply #3 on: April 05, 2023, 04:03:08 pm »

பத்திரிக்கையில், பெயர் பொறித்த நாளோடு!
பரிதவிப்பு பற்றிக்கொண்டு, பாடாய் படுத்துதடா!
கல்யாண தேதி, பக்கத்திலே இல்லையடா!
புகலிடமாய் உன் மடி சேர, ஆவலும் கூடுதடா!

அலாதியான ஆவலுடன், மங்கையென்னை திருமதியாக்க, மன்னன் அவன் வருவானே!
ஒப்பான கனவினிலே, ஓயாமல் வந்தவனே, என்னுள்ளே ஓருயிராய் இணைவானே!

கண்கவர்ந்த கண்ணாளா!
மனம் நிறைந்த மணவாளா!
சிந்தையிலே நித்தம் வந்து!
நிஜமாகும் நாளும் வந்து!

அகத்தினுள்ளே கொண்டாடி!
முகத்தினிலே புன்முறுவல் பூத்து!
நாணத்திலே கன்னம் சிவந்து!
தனி உலகில் நானிருக்க!

கை, கால்கள் பதட்டத்துடன்,
தலை கவிழ்ந்து நான் நடக்க!
பொன்நகைகள் மினுமினுக்க!
பொலிவான ஒப்பனையும்,
கூந்தலில் சூடிய மல்லிகையும்,
கை நிறைந்த மருதாணியும்,
காஞ்சிப் பட்டில் களஞ்சியமாய்,
காண்போர் கண்ணுக்கு அழகு சிலையாய்,

மஞ்சளும், குங்குமமும் சூடிக்கொண்டு,
சுற்றத்தார்கள் சூழ்ந்து நிற்க!
சொல்லில் அடங்கா வார்த்தைகளும் உதடு தாண்டி வர மறுக்க!

நாதஸ்வர இசையுடனே,
அன்பை கொண்டாடும் நாளாக!
அடக்க ஒடுக்கமாய் நானிங்கே!
அவன் வருகைக்காக காத்திருக்க!

காட்சி பிழையா, இல்லை காதல் பிழையா இது ?

மொத்த அழகும், அவன் முகத்தினிலே குதூகலிக்க, கம்பீரமாய் வந்து நின்றான்!
வந்திறங்கிய கணமதிலே, கண்ணோடு கண் பார்த்து, வெட்கத்திலே தலை குனிய வைத்தான்!
நெருங்கி வந்து, ரகசியமாய்
கண்ணடித்தான்!

தோழிகளின் சிரிப்பொலியும்,
சொந்தங்களின் கேலி பேச்சும்,
திரையிட்டு மறைத்ததே, வார்த்தையதை!
ஆற்ற முடியா நாணத்துடன், கைகளும் முகத்தை மூடியதே..!
வெட்கத்தையும் படம் பிடித்து பரிசாக தருவானோ?

நகை புதிது,
உடை புதிது,
நாணம் புதிது,
எண்ணம் புதிது,
என்னவனை சேரும் நாளும் புதிது,

கரம் கோர்த்து, மாலை சூடி, கட்டிய மாங்கல்யத்துடன் அவன் வசமாகும் நாளிதுவே!
தந்தை, தாய் ஆசிர்வாத அட்சதை தூவி, நம்மை வாழ்த்தி வழியனுப்பும் நாளுமிதுவே !

என்னவன் கையில் தஞ்சமடைந்த என் கைகளும் நடுங்கியதே .. ?
சேர்ந்த நம் மணநாளை கொண்டாடவா ?
ஆனந்த கண்ணீரில் மிதக்கும், என் அன்னையவள் அன்பை, விட்டு பிரிய மனமின்றி, தந்தையின் தோள் சாயாவா?

புது உறவை ஏற்றுக் கொண்டு,
புகுந்த வீட்டில் பக்குவமாய் வாழ,
பாசத்துடன் ஆசிர்வதித்து,
பெருமித சிரிப்பொன்றை முகத்தில் காட்டி,
அன்புடன் அரவணைத்த,
பெற்றோரின் ஆசைகளும்,
நிறைவேறும் நாளும் வரும்.

வாழ்த்தொலிகள் விண்ணை முட்ட, இருமனம் இணைந்த நாளை,
கலப்படமில்லா கவிதையாக,
திகட்டாத இனிப்பாக,
தெள்ளுதமிழ் பாட்டாக,
கனிவான வாழ்வாக,
ஊர் மெச்ச, மங்காத தமிழாக, வாழ்வோம் நாமே!.


« Last Edit: April 05, 2023, 04:15:08 pm by Barbie Doll »

April 05, 2023, 10:18:30 pm
Reply #4

Dhiya

Re: கவிதையும் கானமும்-021
« Reply #4 on: April 05, 2023, 10:18:30 pm »
வெட்கம் பெண்மைக்கே உரிய அழகிய அணிகலன்...

மல்லிகைக் கூம்பாக இருக்கும் அவள் முகம், தண்ணவனை கண்டதும் அந்தி வானமாய் சிவக்கும்...

சூழ்ந்த சபையில் அவன் பெயரை பிறர் சொல்ல ரகசியமாய் சிவக்கம்....

ரம்பைகள் கோடி இருப்பினும் அவன் பார்வையின் தேடல் தன்னில் முடிவதில் கர்வத்தில் சிவக்கும்....

கோபியரின் கண்ணனாக அவன் பிறப்பினும், ராமனாக தன்னையே நாடும்போது பெருமிதத்தில் சிவக்கும்...

துயர் சூழ்ந்த பொழுதிலும் ஆறுதல் செய்யும் அவன் மின்னல் கீற்று புன்னகைக்கு நிறைவாய் சிவக்கும்...

நொடிப் பொழுதும் உன்னைப் பிரியேன் என்று அவன் கண்கள் செய்யும் சண்டித்தனத்திற்கு குறும்பாய் சிவக்கும்...

தன்னை வீழ்த்தும் மாயக்கண்ணனின் யுக்திகள் அறிந்தும் அவன் குறும்புகளுக்கு இரசிகையாகிச் சிவக்கும்..

ஊடலின் சமரசத்தில் கம்பீரமான அவன் குரல் தனக்காக குழையும்பொழுது மென்மையாய் சிவக்கும்...

கள்வனாக இருந்தவன் கணவனாக மாலையிடும்போது இவ்வுலகையே வென்று விட்ட மகிழ்ச்சியில் சிவக்கும்....

 

April 06, 2023, 05:11:36 pm
Reply #5

kathija

Re: கவிதையும் கானமும்-021
« Reply #5 on: April 06, 2023, 05:11:36 pm »
வெட்கம் :

பெண்மைக்கு உரித்தானது வெட்கம்..
பெண்ணின் அழகு  வெட்கம்...

வார்த்தை ஊமை ஆகும் அழகிய மொழி வெட்கம்...

தன்அவனை பார்த்து வந்து
தன்அவனை பார்த்து வந்து

  ஆயிரம் வார்த்தைகள் மனதுக்குள்
 ஒளிந்து கிடக்க 
 
 அவனை அரை நொடி கூட கண்நோடு கண் பார்க்கமுடியாமல் தவிக்கும் அந்த அழகிய நேரம்
 
 முகத்தை மூடி
 காதலை
 
 ஆம் காதலை
 
தன் உணர்வை வார்த்தையால்       உணர்த்த முடியாமல்

  என் அவனே பாரடா
  என் அவனே பாரடா
 
என்னை ஆளும் மன்னவனே நீ தான் என்று
தன் அழகிய

 பெண்மையால் சொல்லும் அந்த
 
  அழகிய தருணம்
 
தன் அவனை எண்ணி இருக்க
தன் அவனை எண்ணி இருக்க

தோழியர் கேலி செய்ய
காதல்ஓடு இனம் புரியாத
ஒரு புது இன்பத்தால் ஆட்கொள்ளும்

அழகிய தருணம்

முதல் முறையாக தன்னை
பெண்ணாக உணர வைக்கும்

அழகிய தருணம்

உலகமே கண் முன் நின்றால் கூட
உன்னால் புது உலகம் கண்டு தன்னை

 மறந்து
 
 நானா இது
 நானா இது
 
என்று கண்ணை மூடுகிறாள்
தன் புது மொழியால்......




April 08, 2023, 07:51:59 am
Reply #6

Sanjana

Re: கவிதையும் கானமும்-021
« Reply #6 on: April 08, 2023, 07:51:59 am »
நாணம்...

மணநாள் செய்தி கேட்டு
மனம் பூரித்த நொடி
மணமகன் வருகை பார்த்து
மனம் மலரும் நொடி
மணமகள் நாணம் கொண்டு
இருமனம் இணையும் நொடி….

அழகான பட்டுடுத்தி
ஆபரணம் பல பூட்டி
கூந்தலில் மலர் சூட்டி
பார்வையில் எதிர்பார்ப்பை காட்டி
முகத்தில் நாணம் சூட்டி
மனதில் நாணம் தீட்டும் நொடி….…

தோழிகள் கேலி செய்ய
உறவினர் வாழ்த்தி வணங்க
நாதஸ்வர இசை கேட்க
பெற்றோர் மனநிறைவோடு ஆசிர்வதிக்க
பெண்ணின் மனதில் புது உணர்ச்சி எட்டி பார்க்க
அவள் மனதில் நாணம் குடியேறும் நொடி …

மனதோடு பல கனவுகள்
உதட்டோடு சிறு புன்னகை
கன்னங்களில் ரோசா வர்ணம்
முகத்தில் ஒரு புது மலர்ச்சி
விழிகளிலே புதுவித நடனம்
இதுதான் பெண்ணின் நாணமோ?...

அவள் மனதின் பூரிப்புதான் நாணமோ?
இல்லை அவளின் ஏக்கம் தான்  நாணமோ?
அவளின் எதிர்பார்ப்புதான் நாணமோ?
இல்லை அவளின்  உணர்ச்சிதான் நாணமோ?
பெண்ணின் அடையாளம் தான் நாணமோ?
ஆம், என்றும் பெண்ணின் அடையாளமே நாணம்!!!!




குறிப்பு:
இப்படியான ஒரு தருணம் எல்லா பெண்ணுக்கும் வந்திருக்கும் இல்லை எதிர்காலத்தில் வரலாம்...நாம் எல்லோரும் அத்தருணத்தில் முதல் சூட்டி கொள்வது நாணம் எனும் வெட்கத்தையே...
« Last Edit: April 08, 2023, 07:58:38 am by Sanjana »

April 11, 2023, 11:28:06 pm
Reply #7

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: கவிதையும் கானமும்-021
« Reply #7 on: April 11, 2023, 11:28:06 pm »
சிவப்பு ரோஜா ரத்தத்தில் குளித்ததோ உன் உதடாக

கார்மேகம் உடல் மெலிந்ததோ உன் புருவமாக

அழகான கைகளில் அரங்கேறிய மருதாணியை ரசிப்பதா

முழுநிலா முகத்தில் மெருகேறிய வெட்கத்தை ரசிப்பதா

அழகு சாதனங்களுக்கே அழகு ஊட்டியவளாய் அவள் என் கண் முன்னே

உன் நெஞ்சோரம் தொட்ட கை வளையல்கள் முதல் நெற்றிச்சுட்டி வரை

மின்னிய அணிகலன் முன்னணியில்

பின்னிய என் இதயம்

என் நெஞ்சோரம் தொட்ட வார்த்தைகள்

"என் வரம் நீ போதுமே
அதற்கு வரதட்சணை எதற்கு
என் வரலட்சுமியே"

பின்னணியில் உன் சுற்றத்தார் மகிழ்ச்சியில் சூழ

முன்னணியில் உன் கால் கொலுசு என்னை நெகிழ்ச்சியில் ஆள

நகரா நொடிகள்
அசையா நிமிடங்கள்
ஆடா மணிகள்
சட்டென நிகழ!!

கண்களால் கைது செய்தாய்

ஒவ்வொரு கண நிமிடமும் உந்தன்  கண்களின் சிறைச்சாலையில் சிறைபடுவதையே விரும்பினேன்!! ஜாமின் இருந்தும்!!!

அவளை நெருங்கும் பொழுதெல்லாம் பதட்டம் கொள்கிறேன்

தூரம் நின்றால் துயரம் கொள்கிறேன்


மச்சான் இது என்னடா Feelings என்று நண்பனை கேட்க


 Eiffel  டவரில் இருந்து குதிப்பது மாதிரியான பீலிங்ஸ் மச்சான்

என்று நண்பன் கூற


Eiffel Tower la இருந்து குதிப்பதற்கான முடிவை தைரியமாக எடுத்தேன்!!
« Last Edit: April 11, 2023, 11:31:08 pm by Yash »