Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-024 காதல் ஒரு அழகான உணர்வு...!
நாம் இருவரும் காதல் என்னும் அழகான உணர்வில்
சிக்கி இருக்கும் வேளையில் ,
ஆயிரம் கணக்கான சண்டைகள் வருவதுண்டு..!

நான் உன்னை வெறுத்து ஒதுங்கினாலும் ,
சிரித்து நெருங்கி வரும் உன் அன்பு உனது பலவீனம்,,!
 
உனக்கு ஒரு வலி என்றால்
முதலில் துடிப்பது என் விழி என்பது எனது பலவீனம்..!

என்னதான் நமக்குள் சண்டைகள் வந்தாலும்
உன் முகம் காணாமல் நானோ ,
என் முகம் காணாமல் நீயோ
ஒருநாளும் இருந்தது இல்லை..!

சண்டைகள் போடாமல்
சகித்து கொள்ளும் உறவை விட ,
சண்டைகள் போட்டாலும்
பிரியாமல் இருக்கும் உறவே பலமானது..

எங்கே அன்பு அதிகம்
இருக்கிறதோ..!
அங்கே சண்டைகள் அதிகம் வரும் ,
எங்கே சண்டை அதிகம் வருகிறதோ..
அங்கே சமாதானமும் அதிகம் இருக்கும்..!

இன்றும் என்றும் உன்னுடன் சண்டையிட்டு சமாதானம் ஆகும்
நான் உந்தன் பாரதி....!

May 23, 2023, 03:12:21 pm
1
கவிதையும் கானமும்-025 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-025


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

May 28, 2023, 10:12:52 pm
1
Re: lol Enna da ithu aal aaluku ennanamo solringa.. Neenga Vera chat ponathu illaya... Poitu inga vanthu parunga... This chat is more disciplined and well organised chat I've ever been.. Plz don't spoil our chats reputation.. So I get it that u don't like something here.. Then please leave... I've been to few chats and I have seen some worst admins and owners.. I felt more freedom here to express our feelings and opinions.. Some chats even if u raise a single question about some staff action the next second u will ve banned.. Here admins or owner No build ups.. Or being strict... They are like normal users to me... So please don't spread false information.. God bless you all.
June 15, 2023, 11:19:33 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... நினைக்காத நேரமில்லை.......

நினைக்காத நேரமில்லை,
உன் நினைவுகள்
எனக்குள் என்றும் பாரமில்லை,

பார்க்காத தூரமிருந்தும்
பழகிய நாட்கள் என்னுள்
மிதந்து தளும்புகிறது,

கதைக்காத நேரமெல்லாம்
என் கை பேசியும்
ஓய்வில் ரணமாய் எண்ணுகிறது,

உறங்காத நேரமெல்லாம்
கனவாக உன் வரவை
தினமும் ஏங்குகிறது,

அழுகின்ற நேரமெல்லாம்
உன் தோள் ஒன்றை,
ஆறுதலாய் தேடுகிறது

எப்போதும்
உன் பார்வை என்மீது
என்று நானறிவேன்,

ஆனால் நானோ,
என்றும்,
இந்த கிறுக்களில்
உன்னை தேடுவேன்.....
இப்படிக்கு உன்னை மறவாதவள்......

June 18, 2023, 12:02:09 am
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... என் தங்கை நிலா.....

என் செல்ல தேவதை இவள்,
என் சின்ன தேவதை இவள்,

பூமிக்கு கிடைத்த அதிசய நிலவு இவள்,

பூக்களை விட மென்மையான
மனம் கொண்டவள்,

புன்னகையில் மனம் கவரும்
பூஞ்சோலை இவள்,

அதட்டி பேச அறியாதவள்
அன்பால் அரவனைப்பவள்,

அழுகை ஆள வந்தால்,
நம்பிக்கை என்ற வாள் வீசி
வதம் செய்பவள்,

இன்பம் துன்பம் வந்த போதிலும்
எதிர்த்து போராடும்
வீரப் பெண் என்ற பெயரும் கொண்டவள்
சாதிக்க பிறந்தவள்,

இவள் போல அழகு எங்கும் இல்லை,
இவளே என் செல்ல பிள்ளை,
இவள் குழந்தை மனம் போல்
வேறு எதுவும்  தேவை இல்லை....
இவள் அன்புக்கு அடிமையாகாதவர் எவருமில்லை,

எனக்கு தங்கை இல்லை என்ற குறை தீர்த்தவள்,
இவளே என் அன்பு தங்கை நிலா செல்லம்......

I love u da NILA CHLMM.....

June 23, 2023, 10:54:57 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... அன்பே !!

அன்பே சுகமா?
உன் சுகத்தில்
உனக்குள் நானும் நலமா?

அன்பே !!
என் நினைவினில்
உன்னை திணிக்கிறேன்,
தித்திப்பில் தனியாய் சிரிக்கிறேன்,
என் சிரிப்பினில்
எனக்குள் நீயும்  என்று உணருகிறேன்,

அன்பே !!
கடந்து போக தவிக்கிறேன்,
கடக்க நினைத்த கணமே,
உன் நினைவுகள்  தகர்த்து கொண்டு
என்னை தடுக்குதே.....

அன்பே !!
ஏதேதோ சொல்ல தவிக்கிறேன்
குறுஞ்செய்தி ஒன்றை தட்டச்சு செய்கிறேன்
நினைவில் நீ சொல்லிய வார்த்தைகள்
வந்து போகவே அதை,
அப்படியே அழித்து விட்டு செல்கிறேன்,

அன்பே !!
இன்று ஏதோ உன் நினைவு,
என்னை உருக்குலைத்து கொண்டே இருந்தது,

அன்றைய நாள் ஞாபகம்,
ஆழமாய் என் நினைவுக்குள்
அழகாய் உணர செய்தது,
அத்தனையும் கனவாய் போனதா?
என்று எண்ணச் செய்தது,
அந்த கணம் I miss you,
என்ற உணரவை உணர செய்தது.....June 23, 2023, 11:31:23 pm
1
Re: கவிதையும் கானமும்-027 ராணுவ வீரனே !!

இம்மண்ணின் மைந்தனே !!
ரத்தம் சிந்தி யுத்தம் காணும் போர் வீரனே !!
தன்னம்பிக்கையும், சாதுர்த்தியமும்
நிறைந்தவனே !!
எந்நாட்டின் ராணுவ வீரனே !!

சொந்தம், பந்தம் யாவும்
என் நாடே என்று உரைப்பாரே.....
இன்பம், துன்பம் எதுவானாலும்
என் எல்லையே என்று இருப்பாரே....
மனதிலே வேதமாய்,
என்றும் ஜெய்ஹிந்த் என்றே ஒலிப்பாரே.....

தாய் நாட்டின் மகனாய்
தன்னை தத்துக்கொடுப்பாரே...
அன்பு, நேசம், பாசம், யாவும்
தனக்குள்ளே தகர்த்தெறிவாரே....

காடு, மேடு, பனி என்று பாராமல்
காத்திடும் வீரனே,
தாயகமே தன் வீடாய் என்னும் புதல்வனே,
மூவர்ணக்கொடியை நிலை நாட்ட
வந்த வெற்றி வீரனே....

இது என் நாடு இந்தியா,
என்று போராட
மனதினை வலிமையாக்கி,
பீரங்கி குண்டுகளிலும்,
துப்பாக்கி முனைகளிலும், 
எதிரிகளை வீழ்த்திடுவாரே...

தயக்கம் ஏதுமின்றி,
தன் உயிரை நாட்டிற்கு விதைப்பாரே....
இவரே நம் தாயகம் காக்கும் வீரத் தமிழரே....
நம் ராணுவ வீரனே !!

July 01, 2023, 11:27:46 am
1
Happy Birthday DHIYA
Global Tamil Chat (GTC) Wishes DHIYA  on Her Birthday (07-July)

Happy Birthday DHIYA 🎂🎉🍫🍬🥳


Wishing You Many More Years of Good Health and Prosperity😊

We Hope Your Day is Filled With Lots of Love and Laughter😊

May All of your Birthday Wishes Come True 😊

July 07, 2023, 12:03:36 am
1
Re: Happy Birthday DHIYA Wishing you a day filled with happiness and a year filled with joy. Happy birthday


July 07, 2023, 12:11:22 am
1
Re: Happy Birthday DHIYA
❣BE HAPPY  STAY HEALTHY❣


July 07, 2023, 12:23:01 am
1