1
Own Poems - சொந்த கவிதைகள் / இரயில் விபத்து
« on: June 04, 2023, 03:25:39 pm »""சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன..
சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன...""
எத்தனை மென்மையான வரிகள்..
விபத்தில் கண்டெடுக்கப்பட்ட கவிதையே..
உன் கரங்கள் ஏங்கி கவிதையும் கண்ணீர் வடிப்பது காதில் விழவில்லையோ..
ஓசையடங்கி போன 275 உயிர்களின் கடைசி பயணமா இது..
அங்கீகாரம் தேடி..
காதலை தேடி..
கடமையை தேடி..
கனவுகள் தேடி..
பயணித்த மனங்களின் ஏக்கம்.. நிறைவேறா கானல் நீராக போனதேனோ...
இதயத்தின் ஒரு பக்கம் ஊசிக்களால் துளைத்தெடுத்தது போன்ற ஆழமான வலியாக உணர்கின்றேன்.. கவிதை வரிகளும் கவிஞனும் மாண்டு கிடக்கும் மண்ணை கண்டு...