இரவினில் ஆட்டம்
நிலவின் ஒளி மிஞ்சும்,
அறைகளில் அடைந்து வாழும் விலக்குகளை!
உயிரும் இரங்கி கெஞ்சும்,
இவைகளின் விடுதலை எண்ணி!
சுய ஓய்வை பற்றின கவலை இன்றி,
இவைகளின் உறக்கம் சார்ந்து கவலையா?
விரிந்த காதுகள்,
இசையருவியை அனுமதிக்கும் கதவுகள்
வீடெங்கும் உழாவும் சாந்தம்,
தனக்கென்று விளையாடும் பாடலின் ஆனந்தம்
பகல் முழுதும் மற்றவர் சார்ந்த ஆட்டம்!
குறுகிய நேரம் ஒன்று,
எனக்குரியதாய் அமைந்திருக்க,
உறக்கம் எனும் பாரத்தை நான் மறுக்க இயலாதா நிலவே?
🌙 🎶