Advanced Search

Author Topic: Sanjana கதைகள்  (Read 1372 times)

September 11, 2022, 10:41:16 am
Read 1372 times

Sanjana

Sanjana கதைகள்
« on: September 11, 2022, 10:41:16 am »
டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க.

மாலை 5 மணி :
கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.

மாலை 7 மணி :
ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்

இரவு 10 மணி :
நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு.!!!

இரவு 12 மணி :
தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்ககாலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல..!!

September 11, 2022, 10:42:24 am
Reply #1

Sanjana

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள் நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்? அதை கேட்க

கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான் உன் கல்லறையின் ஈரம் காயும் வரை! என்று

மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள் மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!

என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.

அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான் நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.! என்று கேட்கையில்

என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா! என கூறி சத்தமாக அழுகிறான்.

September 11, 2022, 10:50:36 am
Reply #2

Sanjana

எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது.. வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த 🐀எலியை ஷூட்🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டான்.. 🐀எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கியுடன்🔫 வந்துவிட்டான், எலியை🐀 ஷூட் செய்ய.. எலி🐀 அங்கே இங்கேயென்று போக்குக் காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள்🐁🐀🐀🐁 ஒன்று கூடிவிட்டன.. அந்த நூற்றுக்கணக்கான 🐁🐁🐁🐁🐀🐀🐀 எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த🐁 எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out.. வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்.

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான். ஆமா! அந்த எலி🐀 மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்.. இப்படித்தான்.. பலபேர் திடீர்ப் பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள்.

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.

September 12, 2022, 11:39:09 am
Reply #3

Sanjana

இரண்டே வார்த்தையால் கணவனை பைத்தியமாக்கி அனுப்பிய பாசக்கார மனைவி..!

மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது?

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு.

கணவன்: சரி வெட்டிக்காதே.

மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன்.
கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு?

கணவன்: சரி, வெட்டிக்காதே.இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் வெட்டிக்கோ, வெட்டிக்காதே அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம்.

September 19, 2022, 07:24:21 pm
Reply #4

SuNshiNe

இந்த கதையை கேட்டு சிரிக்குறத அழுவுவத என்று கூட தெரிய வில்லை

ஒரு குட்டி நிகழ்வை  நன்றாக பதிவு செய்திருக்கிறீர்

அருமை !! சஞ்சனா ✨✨
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 26, 2022, 11:07:24 am
Reply #5

Isai Monster

Ha ha... paavam antha purushan ;D

October 10, 2022, 08:50:49 pm
Reply #6

RajuRaju

Haaaaa pavam avar ஒரு முடி வெட்ட கேட்டு, பைத்தியம் ஆக்கிவிட்டார் மனைவி

December 18, 2022, 05:37:08 pm
Reply #7

Sanjana

Re: Sanjana கதைகள்
« Reply #7 on: December 18, 2022, 05:37:08 pm »
 ;D

December 18, 2022, 05:37:44 pm
Reply #8

Sanjana

Re: Sanjana கதைகள்
« Reply #8 on: December 18, 2022, 05:37:44 pm »
 8)

February 05, 2023, 01:09:20 pm
Reply #9

Ruban

Re: Sanjana கதைகள்
« Reply #9 on: February 05, 2023, 01:09:20 pm »
நீ போகும் இடமெல்லாம் என் அன்பு உன்னை தேடி வரும்... என்றும் கூட சொல்லலாம்...
மனைவியை சனியனாக நினைக்கும் கணவன் சபிக்கப்பட்டவன்.
மனைவியை அதிஷ்டமாக நினைக்கும் கணவன் ஆசீர்வாதிக்கப்பட்டவன்.