Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-002  (Read 15906 times)

August 09, 2022, 12:16:41 pm
Read 15906 times

Administrator

கவிதையும் கானமும்-002
« on: August 09, 2022, 12:16:41 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

August 10, 2022, 08:34:06 am
Reply #1

Ishan

Re: கவிதையும் கானமும்-002
« Reply #1 on: August 10, 2022, 08:34:06 am »
காலம் பல பாடங்களை
நம் வாழ்க்கைக்கு தேவையென்று
கற்றுதருகிறது .
கற்றபாடங்கள் மறந்து விட்டால்
 மீண்டும் மீண்டும் நாம்
முழுமையாக புரிந்து கொள்ளும்வரை
காலம் நமக்கு கற்று தருகிறது...

அன்பு காட்டு ஆனால் அடிமை ஆகிவிடாதே
 இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து போகாதே
செல்வந்தனாய் இரு ஆனால்
ஆணவமாய் இராதே
ஏழையாய் இரு ஆனால்
கோழையாய் இராதே

தொண்டனாய் இரு ஆனால்
மூடனாய் இராதே.
நம்பிக்கையோடு வாருங்கள்
தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்
சாதனையாளராகலாம்
வெற்றிவாகை சூடலாம்

இதுதான் வாழுக்கையின் படிக்கட்டுக்கள்....
« Last Edit: August 10, 2022, 08:37:43 am by Ishan »

August 10, 2022, 11:46:44 am
Reply #2

Eagle 13

Re: கவிதையும் கானமும்-002
« Reply #2 on: August 10, 2022, 11:46:44 am »
தடை அதை நீ உடைக்க மறுத்தால்
 உனக்கு எப்படி கிடைக்கும் விடை!
 :கனவு கோட்டையை கட்டிமுடித்தாய்,
ஒருநாள் கனவு உன்னை கைகூடும் என நினைத்தாய்!
முயர்ச்சி என்னும் படி முதலில் கையில் எடுத்தாய் ,
பின் தடை என்னும் வாசலை கடந்தாய்  ,
நீ பொருமை யெனும் சாவியே உன் கையில் காலம் கொடுத்தாள்,.
அனுபவம் யெனும் ஞானம் உனக்கு கைகுடுக்கும் !
போராட்டங்களுக்கு பின் வெற்றி
உன்னை தேடி கொடுக்கும்!
« Last Edit: August 12, 2022, 07:49:45 pm by Eagle 13 »

August 11, 2022, 10:12:17 pm
Reply #3

Sanjana

Re: கவிதையும் கானமும்-002
« Reply #3 on: August 11, 2022, 10:12:17 pm »
உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை
பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்.
வெற்றி என்பது மிகவும் எளிதானதே
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்
செய்வதை விரும்பி செய்
செய்வதை நம்பிக்கையோடு செய்
வாழ்வில் கடினமான பாதைகள்
எப்போதும் மகிழ்ச்சியான இலக்கையே சென்றடையும்
நீ சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்
உன்னை ஒரு படி மேலே ஏற்றிடவே வருகின்றன!
மனம் தளராதே!
« Last Edit: August 18, 2022, 06:54:21 pm by Sanjana »

August 16, 2022, 04:42:14 pm
Reply #4

Mithra

Re: கவிதையும் கானமும்-002
« Reply #4 on: August 16, 2022, 04:42:14 pm »
நீ தனியாக போராட
பலம் இருந்தால் மட்டும் போதாது
 அதற்கான மன உறுதியும்
உன்னிடம் இருக்க வேண்டும்

 அப்படி இருந்தால் தான்
வெற்றி பெற முடியும்.
தடைகள் பல ஆயிரம்
உன் கண்முன்னே தோன்றினாலும்
வழிகள் என்ற ஒன்றை கண்டறிந்து

 அதை உன் ஏணிப்படியாகி
தடைகளை கடந்து
வெற்றி எனும் கனியை
உன் முயற்சிக்கு விருந்தாக்கு.

August 17, 2022, 11:28:37 am
Reply #5

Nandhini

Re: கவிதையும் கானமும்-002
« Reply #5 on: August 17, 2022, 11:28:37 am »
அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது.
உதவி என்பது எப்பொழுதும் அடுத்தவரிடம் உனக்கு கிடைத்து கொண்டே இருக்காது. கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது
உன்மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே.
 அதை மட்டும் என்றுமே இழந்து விடாதே.
முடிவெடுத்தால் முடியாதது ஒன்றுமில்லை
 துணிந்துவிட்டால் வெற்றி தூரத்தில் இல்லை.
மெதுவாக சென்றாலும் முன்னேறி செல்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.


August 17, 2022, 05:59:17 pm
Reply #6

ChockY

Re: கவிதையும் கானமும்-002
« Reply #6 on: August 17, 2022, 05:59:17 pm »
வாழ்க்கையின் துவக்கம் முதல் படி !
முதல் படி எடுத்து வைப்பது சிரமம்தான்
படிகளை பார்த்து பயந்தவன்
வென்றது இல்லை வெற்றி கனியை !


வெற்றிகள் எளிதில் அமைவது இல்லை
பல வலிகளுடனும் அவமானங்களும் நிறைத்தாததே
அவைகளை பொருட்படுத்தாமல் செல்பவனே  தன் இலக்கை அடைகிறான் !

 முடிந்தவரை முயற்சிப்போம் ... முன்னேறி செல்வோம் !...

August 19, 2022, 03:48:53 pm
Reply #7

AkshiTha

Re: கவிதையும் கானமும்-002
« Reply #7 on: August 19, 2022, 03:48:53 pm »
என்னை சுற்றி  அனைவரும் இங்கும் அங்கும்
வேகமாக ஓடவும்  நடக்கவும் இருக்க 
நான் மட்டும்  தரையில் அமர்ந்து
என் இலக்கை அண்ணாந்து
 வேடிக்கை பார்த்தேன் 

வாழ்க்கையின் வெற்றிப்படிகளில்
 ஏறும் முயற்சியில்
என் கால்களை ஊன்றி மெல்ல மெல்ல
நான் எழுந்து நிற்க
என்னால் நிற்க இயலாமல்
தரையில் விழுந்தேன்.

தயக்கம் என்னை தடுக்க 
தோல்விகள் என்னை சோர்வுற செய்ய
வாழ்க்கைவெறுமையாய் தோன்றியது

வாழ்வின்  தொடக்கம்
இவ்வளவு கடினமானதா?
என்று உள்ளம் குமுற.. 
விரக்தி அதிகமாக..
மனம் துவண்டது.

"தோல்விகள் இன்றி வரலாறு இல்லை
உன்னால் முடியும் முயன்று பார் "
என்ற என் தாயின் குரல்
என்னை உத்வேகம் ஊட்ட
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேன் .

வெற்றியின் முதல்படி என்றும் கடினமானதே
 என்பதை உணர்ந்தேன்
ஒவ்வொரு முறை நான் வீழும் பொழுதும்
என் தோல்விக்கான காரணத்தை அறிய  முயன்றேன்
அதை சரி செய்யும் யுக்தியை கையில் எடுத்தேன் 
என் இலக்கு விலகாமல்
முயற்சி செய்து கொண்டே இருந்தேன்

இன்று ஒவ்வொருமுறையும்
வெற்றியை முத்தமிடுகிறேன்.

அன்று முதல் இன்று வரை
நான் கடை பிடிக்கும் மந்திரம்
முயற்சி , தன்னம்பிக்கை,தெளிவான சிந்தனை !


தோல்வி என்றும் நிரந்தரம் இல்லை
முயற்சி இருப்பின் வெற்றிக்கு இல்லை எல்லை!