ஒருத்தரு புதுசா கார் ஓட்ட கத்துக்கிட்டு, ஒரு காரும் புதுசா வாங்கிட்டாரு.
அந்த காரை எடுத்திக்கிட்டு, சேலத்துலேர்ந்து மெட்றாஸ் டிரைவ் பண்ணிட்டு வந்தாரு.
வந்தவுடனே பொஞ்சாதிக்கு போன் பண்ணி "மெட்றாஸ் ஏழு மணி நேரத்துலே வந்துட்டேன்.
சாயங்காலமே புறப்பட்டு திரும்பியும் சேலம் வந்துடறேன்" னாரு.
ஆனா, ஒரு வாரம் கழிச்சி சேலம் வந்தாரு.
அவரோட பொஞ்சாதி
"என்னய்யா, மெட்றாஸ் போறதுக்கு ஏழு மணி நேரம், திரும்பி வர்றதுக்கு ஏழு நாளா?"ன்னு கேட்க,
இவரு சொன்னாரு
"கார்ல முன்னால போறதுக்கு நாலு கியரு வச்சிருக்கான்.
ஆனா, ரிவர்ஸ்ல வர்றதுக்கு ஒரே ஒரு கியர்தானே. அதான் லேட்டாயிடிச்சு" !!!😃😀😄😆😅