ஊனம் இல்லாமலே
பிச்சை எடுப்பவர்களுக்கும்,
மற்றவரை பார்த்து
பரிகாசம் பேசுவோர்க்கும்
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.
கொலை செய்து வாழ்பவர்களுக்கும்
கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும்
கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்
மதவெறிகொண்ட மதவாதிகளுக்கும்
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.
பல ஆயிரம் தலைமுறைகளாக
அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த
பண்பாட்டையும், கலாசாரத்தையும்
நாகரீகம் என்ற மோகத்தால்
ஒரே ஒரு நுற்றாண்டில்
மின்னலைவிட வேகமாக அழித்துவிட்டோமே
நமக்கெல்லாம் தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.
பேரும், புகழும் கிடைக்குமென்றால்
எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கிறார்கள்,
பணம் கிடைக்குமென்றால்
அந்த பேரையும், புகழையும்
விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.-பிறகு
எப்படி உருப்படும் இந்த உலகம்!