5
« on: July 08, 2023, 12:45:47 pm »
கலி யுகத்தில் கடவுள் தோன்றுவதில்லை என்பர், காவல் தெய்வமாய் நீங்கள் இருப்பதை அறியாதவர்....
தொல்காப்பியத்தின் நடுகல் தொடங்கி இன்றைய புதுக்கவிதை வரை உங்கள் வீரத்தை பறைசாற்றாத நூல் தமிழில் உண்டோ...
மதம் மொழி இனம் அனைத்தையும் கடந்து பாரதம் ஒன்றே மூச்சு தாய் திருநாட்டை காப்பதே கடமை என்று ஒன்றாய் சேர்ந்த சக்தி நீங்கள்...
கடும் குளிரிலும் அசாதாரண சூழ்நிலையிலும் உன் மன உறுதியினால் இயல்பாய் பொருந்திப் போனவன் நீ....
கைபேசி அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மட்டுமே கொண்டு வருடம் முழுக்க குடும்பத்தை மனதில் சுமப்பவன் நீ...
தீய சக்திகளிடம் இருந்தும் பேரிடரின் பொழுதும் உன் உயிரை துட்சமாய் மதித்து எங்கள் உயிரை காப்பவன் நீ....
உன்னை ஈன்றவளும் உனக்குள் கலந்தவளும் உன்னால் பிறந்தவளும் பெருமிதம் கொள்ளும் பேராண்மை நீ...
ஒரு நடிகனுக்கு கிடைக்கும் புகழை விட ஒரு ராணுவ வீரனுக்கு பேரும் புகழும் கிடைத்திடல் வேண்டும்...
ஒவ்வொரு ராணுவ வீரனின் குடும்பத்திற்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும்....
போரில் வீர மரணம் எய்தியவரின் குடும்பத்தை தாங்கிப் பிடிக்க கரங்கள் நீள வேண்டும்...
அவன் தலைமுறையே பசி இன்றி தன்மானத்துடன் நிறைவாய் வாழ வழி செய்ய வேண்டும்...
வீரக்கனவனை இழந்த கைம்பெண்ணை மணக்க மனங்கள் பெரிதாக வேண்டும்....
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் வீட்டிற்கு ஒரு ராணுவ வீரனை அனுப்பும் உறுதி வேண்டும்....
காவல் தெய்வமாய் நீ இருப்பதால் கவலை இன்றி நாங்கள் உறங்குகிறோம்... அதற்கு கைமாறாய் உன் குடும்பத்தையே காக்கும் பொறுப்பு எங்களுக்கும் உண்டு... நிம்மதியுடன் உறங்கு தோழா....
வந்தே மாதரம்....