8
« on: May 23, 2023, 01:04:43 pm »
எங்கும் சத்தங்களாகவே வியாபித்திருக்கும் இப்பூங்காவிலே
இங்கு இரு இதயங்களோ சத்தம் இல்லாமல் விசுப்பலகையிலே!!
இன்னும் கொஞ்சம் காதலிப்போம்
வலியும் ஒரு வகை காதல் தானே
கடல் கடந்த மணித்துளிகள் போல
நிமிடங்கள் கடந்தும், அவளுக்கு கோபம் இன்னும் கரையவில்லை
சின்ன சின்ன மழை தூரலில்
கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளிடம்
மிஞ்சி நின்றது இந்த ஆனந்தமான மணித்துளிகள்
சிந்தித்தேன், என் இதயம் ஒரு மாயக் கண்ணாடியோ
உன் பிம்பத்தை மட்டும் பிரதிபலிக்கிறதே
என்னவளே என் கண் பாவையை பார்
அதில் உள்ள ஐரிஸ் வண்ணங்களை மட்டும் ஈர்ப்பவை அல்ல
உன் உள்ளத்தில் உள்ளதையும் எதிரொலிக்கும் வண்ணமயமாய்
யார் முதலில் பேச வேண்டும் என்ற கோரிக்கை தானே உனக்கு
விண்ணப்பிக்கிறேன்,என் தீர்ந்து போகாத மனநிலையை தீர்க்கமாய்
உன் மௌனம் என்னை பலவீனப்படுத்தவில்லை மாறாக பக்குவப்படுத்தியது
இந்த நிமிடம்..,,,!!!!
கற்பனை செய்தேன் எனது பிருந்தாவனத்தின் ராஜகுமாரி நீதான் என்று
சிற்பனை கேட்டேன் இவள் சிலையை எனக்கு வடித்து தருவாயா என்று
இதுவரை பிரிக்கப்படாத பிரம்மனின் கவிதை புத்தகத்தில் இருந்து தவறி வந்த கவிதையா நீ
உன் சிக்கல் அற்ற நான்கடி கூந்தலில் நான் சிக்கி போனதை எவரிடம் சொல்வேன்!!
உன் ஹைக்கூ இதழ்களால் இந்த புதுக்கவிஞன் படும் பாடு எவர் அறிவார்??
காதலெனும் பாதரசம் பூசிதான் காத்திருக்கிறேன்
காலம் மாற்றம் அடைந்தாலும் காதல் கண்ணாடி பிம்பம் தான்
6 மணி அளவிலும் கூட தீபம் ஏற்றியாய் இங்கு அமர போகிறாய்
எப்படியும் இந்த பூங்காவை விட்டு கிளம்பி தான் ஆக வேண்டும்
அந்த மன தைரியத்தில் உன் மௌனத்தோடு நானும் பயணம் செய்கிறேன்
உன் மௌனமே எனது வசந்த காலம்! 🤭