Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1]
Post info No. of Likes
Happy 3rd Anniversary GTC 2025
Global Tamil Chat Team Conveys:

🎆🥳🎉Wishes You all  Happy 3rd GTC Anniversary 🎉🎆🥳


January 13, 2025, 11:56:58 pm
1
Re: Happy 3rd Anniversary GTC அன்புள்ள ஜி டி சியே !
அன்று நான் உன் மீது அடியெடுத்து வைக்கும் போதே  அரவணைத்தாய் என்னை !
உன் அரட்டைத்தளம் எனக்கு புதிதுதான் - இங்கே
சேட்டைத்தனம் எனக்கு
அரிது தான்.
விதவிதமாய் பல பெயர்களில் வித்தியாசமாய் பல பேர்கள் !
அனுதினம் வருபவரையும் அடிக்கடி வரவேற்பதும் !
விரட்டி விரட்டி அரட்டை விடுதும் !
விரைவாய் சென்று பெண்கள் பிரைவேட்டில் குறட்டை
விடுவதும் !
வந்த சில நாட்களில் வகையாய் பழகிக் கொண்டேன் நானும்.
நாட்கள் செல்லச் செல்ல நட்பு வட்டம் பெரிதானது !
நாளெல்லாம் நடுவில் அரட்டை இனிதானது !
நான் காலை கண் விழிப்பதும் இங்கேதான்
இரவு கடையடைப்பதும் இங்கேதான் !
இடையில் கண்விழித்தால் எட்டிப் பார்த்து மீண்டும் கடை திறப்பும் இங்கேதான் !
துக்கம் வந்தாலும் இங்கேதான்
தூக்கம் வரவில்லை என்றாலும் இங்கேதான் !
பெண்களோடு கடலை என்றாலும்
இங்கேதான்
பெண்களால் கவலை என்றாலும் இங்கேதான்  !
விளையாட்டில் விடை சொல்ல முந்தியடிப்பதும் இங்கேதான்
முடிந்த விளையாட்டின் விடைகளை பேசி தந்தியடிப்பதும் இங்கேதான் !
சங்கீத மேகத்திற்கு துண்டு போட முண்டியடிப்போம் !
கவிதையும் கானத்திற்க்கு கதையடிப்போம் !
ஜி டி சி யின் கானங்களுக்கு எப்போதுமே தலையசைப்போம் !
ஜிடிசியின் பாச முடிச்சிட்டு மூன்று வருடமாயாச்சு
அன்று போல் என்றும்
சக தோழாய் தோழிகளும் தோழர்களும் நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்வோம்
நம் அரட்டை நட்பை .
இப்போது bye bye .
 
Happy 3rd anniversary GTC

Sivarudran

January 14, 2025, 01:15:44 am
1