Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-039
"அம்மா மாதிரி"

ஆண்களை உணர்ச்சிவசப்படும் தருணங்களில் கவனித்ததுண்டா ?

நன்றாய் அக்கறைப்படும் ஆசிரியையில்;
நல்வழி காட்டும் நண்பியில்;
சோர்ந்து விழ சேர்ந்து நின்று "பாத்துக்கலாம்" என தோள் தரும் காதலியில்;
"என்கிட்ட ஏன் சொல்லல" என உரிமையோடு கோபிக்கும் தமக்கையில்;
பிறப்பிடம் விட்டு பிழைப்பிற்கு வந்த இடங்களில்
"சாப்பிட்டியா" என கேட்கும் ஒவ்வோர் குரலிலும்;
"இளைச்சு போய்ட்ட" ன்னு சமைத்து தரும் அக்காமார்களின் தூய அன்பிலும்;
அப்படியே அம்மாவின் சாயல்,
அந்நேர ஆண் மனத்தில் அசரீரியாய் கேட்கிறது.
"இவர்கள் அப்படியே அம்மா மாதிரி"
ஆம், அம்மாவை தான் காண்கிறேன் அத்தனை பேரிலும்.

அந்த "அம்மா மாதிரி" அன்பைத்தேடி தான் வாழ்க்கை முழுதும் ஓடுகிறேன்.
அன்பு காணும் இடமெல்லாம் அவளை அங்கு பொருத்தி அழகு பார்க்க
"அம்மா மாதிரி" எனும் சொற்றொடரின் செறிவு காலத்தோடு அதிகரித்தே செல்கிறது.
அம்மா அனைத்தும் ஆகி விடுகிறாள் - கடவுள் போல

ஆண்பிள்ளைகளின் முதல் காதலி அவள்.
போர்க்களம் தான் வாழ்க்கை என்ற போதும்,
கேடயமும் ஆயுதமும் தான் தேவையென்ற போதும்,
கேடயமாய் தான் நின்று
ஆயுதத்தை கையில் தந்து
படித்துக்கொள் என்றவள் அவள்.
இரும்பு கேடயமல்ல;
இரத்தமும் சதையுமாய், உரிமையும் உணர்வுமாய்
அவள் அன்பெனும் கேடயம்.

தகப்பன் அன்பு கிடைக்காத போதும்
தகப்பனும் தாயுமாய் நின்று காத்தவள்.
போர்க்கள வாழ்வில் எனை நானே பார்த்துக்கொள்ளும் போதே
இத்தனை வலிகளை கடக்கிறேன்;
அவள் எமக்காய் தனியே எத்தனை வலிகளை கடந்திருப்பாள் - அத்தனையோடும்
அவற்றை புறம் வைத்து அன்பை மட்டுமே எமக்கு கடத்தியிருக்கிறாள்.
கைம்மாறாய் எனக்கு ஒன்றே உண்டு ...
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.

(திருக்குறள்) "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"

அத்தனை பேரிலும் நான் அம்மாவை கண்ட போதிலும்
அம்மாவை அறிந்தவர்கள் என்னில் தேடுவதும் அதுவே தான் - அம்மாவின் நற்குணங்கள்
அவர்கள் மனதில் இருந்து
"அப்படியே இவன் அம்மா மாதிரி" எனும் வாழ்த்திற்காகவே ஓடலாம்,
அது தான் வாழ்க்கை.

அனைத்து பெண்களிலும் அம்மாவை தேடியவன் - தேடலோடு
அம்மாவிற்கான என் அன்பையும் மதிப்பையும்
அம்மாவெனவே அனைத்து பெண்களிடமும் கொடுக்க நினைக்கிறேன்;
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.
நிச்சயம் பெற்றுவிடுவேன் என் கிரீடத்தை
"அப்படியே இவன் அம்மா மாதிரி"

சி. வி. ஆர்.

March 06, 2024, 12:23:17 pm
1
Re: கவிதையும் கானமும்-039 அம்பை  தாங்கும் அன்னை


தனது உயிரை கொண்டு பிள்ளைகளை காப்பது அன்னையின் அன்புமட்டுமே .....

இந்த உலகத்தில் வாழ்வதற்கு இன்றியமையாதது பணம்

பாசத்தை பணம்கொடுத்து வாங்கும் உலகில் நாம் வாழ்த்து கொண்டிருக்கிறோம்

சுயநலத்தின் பிடியில் பூமிக்கு அடியில் செல்வோம் என்று தெரிந்தும்  மற்றவரிடம் நடந்து கொள்கிறோம்...

விலைமதிக்க முடியாத கரந்த பாலினை  போல சற்றும் சுயநலம் கிடையாதா அன்பு
தாயின் அன்பு மட்டுமே இந்த உலகத்தில் ....

இதை அன்னையோடு இருந்து உணராதவர் பலர்  அன்னையை இழந்து உணர்ந்தவர்கள் சிலர்...

சராசரி அன்னையின் ஆதங்கம் பிள்ளையின் எதிர்கால வாழ்கை அவனது அல்லது அவளது
பெயருக்கு பின் படிப்பின் அடையாளம் ...

எத்தனை இன்னல்கள் இந்த உலகில் ஒருவனுக்கு  கல்வி கற்க

எத்துணை இன்னல்கள் இருந்தாலும் அத்தனை அம்புகளையும் தனக்குள் வாங்கி
பிள்ளைகளை கரைசேர்ப்பது அன்னை மட்டுமே ....

பணத்தினால் வரும் அம்பு தனது சொந்தத்தினால் வரும் அம்பு  ஆசிரியரினால் வரும் அம்பு கணவர்முலமாகவரும் அம்பு  அனைத்தையும் தங்கினால் குழந்தைக்காக....

படிப்பின் அருமை தெரியாதவர் பலர் , வேலைசெய்யும் இடத்தில் கூட
படித்தவரின் நிலை ஒருபடி உயர்ந்ததும் , படிக்காதவர் வேலை  தெரிந்தும் கீழே உள்ளார் தொழிலாளியாக...

அன்னையின் கனவு மகனோ மகளோ நல்ல நிலைக்கு வரவென்றும் என்று
அதற்காக எதையும் தங்குவாள்  அன்னை

கர்ப்பத்தின் வழியை தாங்கியவளுக்கு, ஒரு பிறவியில் இரண்டாம் ஜென்மம் எடுப்பவளுக்கு ,
இந்த வலியெல்லாம் தூசிக்கு சமம் ...

மனிதனை படைத்த கடவுள் ஓய்வு பெறவே அன்னையர்களை படைத்துவிடான் போல
கடவுளின் வேளை அன்னையிடம்... படைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு பிள்ளை பிறப்பது ...

படத்தை குழந்தையினை பேணி காத்து .. பராமரித்து ..பாலூட்டி ...சீராட்டி ...தனது எல்லையற்ற அன்பினை
கொடுத்து ... படிக்க வைத்து நேரம் தவறாமல் சமைத்து புடித்த உணவு கொடுத்து... திருமணம் ஆகும் வரை
அணைத்து அம்புககளையும் சுமப்பவள் அன்னை...

எத்தனை பாசம் காட்டினாலும் வளந்த பிறகு காதல் எனும் இன்பத்தால் அன்னையை விட்டு சென்று
அவளது முதுகில் குத்துகிறார் ...

வேலைகிடைத்ததும் ஆணவம்  கொண்டு அன்னையை மதிக்காமல் அவளது முதுகில் குத்துகிறார்

திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் சென்று பாலூட்டிய அன்னையை முதுகில் குத்துகிறார்

வயதான தாயை பார்க்கமுடியாமல் அவருக்கு உபசரிக்க நேரம் தராமுடியாமல்  முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு  அன்னையின் இதயத்தில் குத்துகிறார்



நாம் எத்துனை கஷ்டம் வேதனை இன்னல்கள் அன்னைக்கு கொடுத்தாலும்
நம்மை பார்க்கும் பொது கேட்கும் ஒரே வார்த்தை சாப்டியா  பா !!! என்றுதான்


தன்னை பெற்ற அன்னைக்கே இந்த நிலையென்றால் மற்றவருக்கு கேள்விக்குறிதான் ??


வாழும் தெய்வத்தை காப்போம் மற்றும் மனிதநேயத்தை வளர்ப்போம் நமக்காக அம்பை சுமத்தவளை
வாழ்நாளெல்லாம் சுமப்போம் அதுவும் ஒரு சுகம் தன தோழா




என்றும் உணர்ச்சிமிக்க (சென்சிடிவ் )

நீலவானம்
[/size]


March 08, 2024, 03:23:07 pm
1
Re: கவிதையும் கானமும்-039 அன்னையின் அன்பில் அரவணைக்கப்பட்ட
அனைவருமே அன்பானவர்கள்..
அறிவானவர்கள்.. அழகானவர்கள்.!நேசிக்கும் உறவுகள் யாவும்
நம் அம்மா ஆக முடியாது.

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தாலும் நாம் ரசிப்பது
நிலவை தான்..
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே.

எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
எல்லா அம்மாக்களுக்கும்
நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.!

துன்பங்கள் வரும் தருணம்
தாயின் மடி சொர்க்கம்.
 இன்று என்னை இவுலகுக்கு அறிமுகம் செய்த அன்பு அம்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள். தாயை வணங்குவோம்
தாய்மையை போற்றுவோம்


March 09, 2024, 02:41:33 pm
1
Re: கவிதையும் கானமும்-039

என்னுள் நீயே...


இயல்பான ஓர் இனிய உறவில்
  மென்மையாக நேசம் நிறைந்த புன்னகையோடு....

தன்னுள் விவரிக்க முடியாத அளவு
  வலி நிறைந்த வழிகளில்
பயணித்த களிப்பு துளி அளவு இல்லாமல்...

தனக்காய் என்று, எண்ணம் கொள்ளாமல்
சலிக்காது தன் உயிரான அன்பின் வாசம்
பொழுதும் சேய் மீது விழ...

ஆசையாய் சேயின் அழகை ரசித்தே
அனைத்து  இன்னல்களையும்
சிறிய சிரிப்போடு கடந்து...

தன்னை தாக்கியவை ஏதும்
 தன்னோடு உறவாடும் சேய்க்கு சேராது
அனைத்து துன்பங்கள் தன்னோடு சேர்த்து
இன்பம் இனிதாக தன் சேய்யோடு பகிர்ந்து...

இணையற்ற அன்பை பொழிந்த அவள்
ஏனோ என்னுடன் இருக்க மட்டும் மறந்துவிட்டால்

நினைவில் கூட எனக்கு
 இன்றும் ஆழகாய் காண்பிக்க
ஆழமாய் தன் உறவின் பதிவை
 சற்றும் மறுக்கவோ மறக்கவோ இயலாது
அனைத்தும் அன்பாய் என்னுள் நீயே..

மீண்டும் கிடைக்குமோ 🥺









March 10, 2024, 12:35:01 pm
1
கவிதையும் கானமும்-048 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-048


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

September 30, 2024, 03:32:35 pm
1
Re: கவிதையும் கானமும்-048 சுனாமியில் எழும் பேரலைகளைவிட ஆபத்தானது,
தனிமையில் எழும் பெண்ணின் நினைவலைகள்...!

தனிமை என்னும் மெழுகின் வெப்பம்
என்னை சுட்டெரிக்க..!
நிலவொளியாய் உந்தன் நினைவலைகள்
என்னை தழுவ சில வரிகள் என்னில்
உனக்காக..!

வானத்தின் தூரம் போலவே
எனது உயிரின் புன்னகையை
நான் பார்க்கிறேன்...

மெதுவாக எழுந்து நடக்கத்துடிக்கும்
அந்த பாதங்களை நான்
முத்தமிட வேண்டும்....

எனது மனதின் வலிமையை
உடைத்தெறிகிறது அந்த -
ஊமையான நிழல் படம்...

யாராலுமே நிரப்ப முடியாது
என் இருளினை
என் இன்னொரு
உயிரின் புன்னகையைத்தவிர...

அந்த அழகான நினைவுகளை
கடத்திச்செல்லும்
நிமிடங்களுக்கு ஈடாக
இன்னொரு உலகம் செய்தாலும் போதாது

எழுத நினைக்கிறேன்....
உன்னை வாசித்த படியே
நீ என் அருகில் இல்லாத
வலிகளைச்சொல்லி....

என்னைச்சுற்றிய கோடுகளை
உன் நினைவுகள் நிரப்புகிறது....

உன்னைச்சேரும் நாட்களை எண்ணியே
என் இளமை இறக்கிறது...

யாராலுமே உணர முடியாத
ரணங்களை என் உயிர்
சுமந்து செல்கிறது.....

இது ஒரு கொடூரமான
மௌனப்பயணம்
உன்னை அடையும் நாள் வரைக்கும்....

என் விழிகளில்
விழுந்த நீ,
ஏன் விலகிச்செல்ல மறுத்தாய் ???
ஏன் விதையாய் முளைத்தாய் ???

தினம் உனைத்தாங்க நினைக்கிறது மனசு
அதே கணம் உன் அருகாமையை
இழந்து தவிக்கிறது உசுரு....

என் மரணத்தை வென்றவன் நீ...
என் இளமையை சுண்டி இழுத்தவன் நீ...
என் விதியினிலே விதையாய் வீழ்ந்தவனும் நீ....

காற்றெல்லாம் தேடுகிறேன்
என் காதோரம் உன் -
குரலை காணவில்லை..

காதலனானாய்,
மனாளனானாய்,
என் குழந்தையும் நீயானாய்
உன்னோடு நான் வாழாமலே..

தனிமை என் மீது சரிந்து விழுகிறது
நான் சாய்ந்து கொள்வதெப்போது
உன் மார்பின் மேலே...?

October 01, 2024, 08:57:45 am
1
Re: கவிதையும் கானமும்-048 தனிமை

சிலர் மட்டுமே தாங்கிகொள்ளும் ஆயுதம்

தனிமை தாக்கி கொள்ளும் ஆயுதமும் கூட

தனிமையில் கடக்கும் நிமிடங்கள்

சிலருக்கு  சிறந்ததோர்  அறிவினை கொடுக்கும்

தனிமை சிலருக்கு  நரகத்தினை காட்டும்

தனிமையில்  சாத்தானும் ஞானம் பெறுகின்றான்

தனிமையில்  புத்தனும் சாத்தான் ஆகின்றான்.!

தனிமை விந்தையானது 

ஆண் பெண் இருவரை இணைப்பதுண்டு 

 தனிமையால்  இரு உறவுகள் பிறிவதும் உண்டு

தனிமை படைப்புகளின் பிறப்பிடம்

தனிமை அழிவின் ஆரம்பமும் கூட..,


இளமையின் தனிமை காதலால் சிலரை மகிழ்விக்கும்.,

தனிமை காதல் பிரிவை தந்தது நிமிடங்களையும்
கசந்திடச்செய்யும்.,

நான் கொண்ட தனிமையில் இக்கவியை படைத்தேன்....

தனிமையை நேசிக்க கற்றுகொண்டேன்

நிழல் பிரிந்தாலும் நான் உன்னை பிரியேன் என

என்னை அணைத்து கொண்டது தனிமை.,

எனக்கும் உன்னை பிரிய மனமில்லை பற்றி

கொண்டேன் உன்னை  என் இனிய தனிமையே..

தனிமை இருள் அல்ல

தனிமையை நேசிக்க கற்றுகொண்டால்


தனிமை இறைவன் தந்த அருள்ளென்பாய்..

தனிமையை கையாள கற்றுக்கொண்டால்

நமனை கண்டாலும் போடா என்பாய்..,

தனிமையில் நொருங்கி போகாதே

தனிமையை உனதாக்கிகொள்

படைத்தவனும் தனிமையில் தானே இருக்கின்றான்


மானிடன் உனக்கு மட்டுமல்ல...கடவுள் கூட

தனிமைவிரும்பியே..




Gtc தோழர் தோழிக்கு இக்கவியை சமர்பிக்கிறேன்


நன்றிகள் பல..!!!!!



உங்கள் நண்பன்


Dan_Bilzerian 😍😍😍🥳🥳🥳🥳















October 01, 2024, 09:04:24 pm
1
Re: கவிதையும் கானமும்-048 ❣️❤️என்னுயிர் அன்பனே!❤️❣️

என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது...
வருவாயோ அன்பனே !!!

தனிமை ஒரு வரம் என இருந்தேன்
இன்று என்நிலை அறியும் வரை
தனிமை எனக்கான அரண்
என்னிடம் என்னை உணர்த்தும் வரை
தனிமையில் நான் உன்னை
நினைக்கவும் இல்லை உணரவும் இல்லை
 உன்னை தேடவும் இல்லை
என பொய் உரைத்தேன்
ஆம் உன்னை தேடவும் இல்லை
உணரவும் இல்லை...
என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது....
வருவாயோ அன்பனே !!!

அழகான நாட்கள் தந்த நினைவுகள்
வெளிச்சமாய் என்னுடன் இருக்க அவ்வொளியில்
தொலைத்த உன்னை தேடினேன்...
என் இருள் போக்க வருவாயோ
என்னுடன் தான் சேர்வாயோ ....
என் தனிமை தீரும் காலம் எப்பொழுது ....
வருவாயோ அன்பனே!!!

தனிமை சோகமா வரமா ???
சோகமே வரமாக ஆனதோ !!!
 என் நிலை மாறும் ...
என் வாழ்வில் இனிமை கூடும் நாள் நீ வரும் நாளோ ....
அந்த நாளும் என்று வருமோ
என் தனிமை சாபம் தீர
உன்னுடன் சேரும் காலம் எப்பொழுது...
வருவாயோ அன்பனே !!!

வழி துணையாய் நீ வேண்டும்
நம் வாழ்வும் சீராகும்
உன் விழியில் ஒளி கண்டேன்
நம் வாழ்வின்  வழி உணர்தேன்
தனிமை துயர் துடைத்தாய்
என் தந்தையுமாய்  ஆனாய் நீ
நீயே என் ஒளி என் தனிமை தீர்க்கும் வழி
என் இருள் போக்க வருவாயோ
 என்னுடன் தான் சேர்வையோ
 என் தனிமை தீரும் காலம் எப்பொழுது ....
வருவாயோ அன்பனே !!!

அழகான அந்நாட்கள் மீண்டும் வாழ கிடைக்குமோ
நான் தொலைத்த நீயும்
 எனை தழுவிய தனிமையும்
நீ அறியும் காலம் எப்பொழுது .....
வருவாயோ அன்பனே!!!

நீ எனை சேரும் காலம் எப்பொழுது....
வருவாயோ அன்பனே !!!
என்றும் தனிமையில்
❣️தென்றல்❣️

October 05, 2024, 12:04:11 pm
1
Re: கவிதையும் கானமும்-048 ஒலிகள் நிறைந்த உலகில் உன்னுடன் நான் செலவிடும் நேரம்....
சில்லென்று தென்றல் வீச... காய்ந்து உதிர்ந்த இலைகள் கூட நடனமாடுவது போல் தெரிகிறது.......
விட்டுவிட்டு எரியும் மின்விளக்குக் கூட மின்மினிப்பூச்சி போல் தெரிகிறது....
புரியவில்லையா, தனிமையே உன்னால் நான் ரசனைமிக்கவள் ஆகிறேன்....
பலரும் அறிவதில்லை... பொய்யான உறவு தரும் வலிக்கு நீ துணையாய் வந்து வாழ்க்கையின் நிஜத்தை புரிய வைப்பது......
உன்னுடன் வாழ பழகி விட்டால் வாழ்க்கை இனிமையே.....
சொர்க்கம் தான்.... நீயும் இசையும் என்னுடன் சேர்ந்தால்....
முடிவில்,என்னை நான் ரசிக்கவும்.. .
ஏன்.. என் கற்பனையில் உன்னைப் பற்றி கவிதையை முயற்சித்து.. என் பேனாவிற்கு குரல் கொடுத்ததும் உன்னால்தான்....
தனிமையே உன் வழியில்தான் கேட்கிறேன் என் இதயத்தின் குரலை....
உன் வரவில்தான் அறிந்தேன், என் தனி மனவலிமையை..
என் காதலனாக நீ இருக்க ஆசை... காரணம், என் இறுதிக் கதிரவன் மறையும் வரை நீங்காத துணையாக நீ இருப்பாய்....
உன்னை இதுவரை ரசித்த எனக்கு, உன்னிடம் ஒரு வேண்டுகோள்....
உன்னிடம் விரும்புவது ஆறுதல் தான்...
காயங்களின் வலி அல்ல.. என்றும்,
எனக்கு ஆறுதலைக் கொடு....
வெறுமையை கொடுத்து விடாதே....
                                                         இப்படிக்கு, 
                                     தனிமையின் காதலி ஜாஸ்வி♥️

October 05, 2024, 07:46:18 pm
1
Re: கவிதையும் கானமும்-048 தனிமை...!!!

தனிமை  நீயே  ஏற்று  கொண்டால் உன் வாழ்கையில்  அது  புது விதமான  ஒளி...
அதுவே  உனக்கு  பிறர்  கொடுத்தால் உன்  வாழ்கையில்  தாங்கவே  முடியாத ஒரு விதமான  வலி....!!!

ஏன் இப்படி  தனியா  குறுகி  உட்கார்ந்து  இருக்கிற?
உனக்கு  என்னத்தான்  பிரச்சனை?
எதுக்கு  இந்த  சோகம்?

இப்படி  ஆறுதலா  நாலு  வார்த்த  பேச  ஒருத்தரும்  இல்ல...
அது  நெனச்சு  வருத்ததுல  இந்த  புள்ள...

அந்த  மெழுகுவர்த்தியை பார்...
இருட்டில்  இருக்கும் உனக்கு
தன்னையே  உருக்கி  கொண்டு  ஒளியை கொடுக்க  வில்லையா?

உலகிற்கே  வெளிச்சம்  கொடுக்கும்  நிலா இன்று  உன்னை  காண  உன் வீட்டு ஜன்னலில்  எட்டி  பார்ப்பது உனக்கு தான்  தெரியவில்லையா....

சோர்ந்து போகும்  நேரம் நீ  சாய்ந்து கொள்ள மடியாக உன்  வீட்டு சுவரும் உன்  தோழி  தானே? 
அது இன்னுமா  உனக்கு புரியவில்லை?

இல்லாதவர்களை நினைத்து நீயோ தனிமையில்...
உன்னையே வருத்தி  கொள்ளாதே இந்த  இளமையில்....

தனிமையும்  ஒரு சுகமான காலம்தான்...!!!!
அதில் நீயும்  கற்றுக் கொள்ளவாய் புதிய பாடம்தான்...!!!!

தனிமை எனும்  என்னை  தனித்து  விடாதே...
தங்கம் போல தாங்குவேன் என்னவளே...
தலை சாய்த்து தூங்க வா என் மடி  மேலே....

இந்த நொடியில்...
இந்த  நொடியில் தனிமை  எனும்  போதையை அனுபவித்துக்கொள்....
மீண்டும்  ஒரு  பிறப்பு  தனிமைக்கு கிடைத்தால்  உன்  அதிர்ஷ்டம்  என்று  தெரிந்துக்கொள்...

இப்படிக்கு  உன்னை  நேசிக்கும் உன்னை மட்டுமே  நேசிக்கும் நான்தான்   தனிமை...!!!!

October 06, 2024, 10:29:52 am
1