See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.. புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில் .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.. அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. உதாரணமாக ..... கடந்த வாரம் சங்கீத மேகம் 38இல் பங்கு பெற்ற CHAN, DONMAMA, Coffe Boy, Nature lover , Dharshini , Natchathira, Chuttigurl ஆகியோரை தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 39இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.. ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும். சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039 நிகழ்ச்சி : சங்கீத மேகம் ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:00 மணி நிகழ்ச்சி பற்றிய குறிப்பு : உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம். பங்கேற்கும் விதம் : சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் . பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும். வரைமுறைகள்: ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும். ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ---------------------------------------------------------------------- முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் ----------------------------------------------------------------------- August 27, 2023, 05:26:50 pm |
1 |
Mithraa Happy Birthday
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (28-08-2023) Wishes To Our Lovable MITHRAA And Wishes Her All The Very Best & Good Luck 🎁🎉🍫HAPPY BIRTHDAY 🍫🎉🎁 🧚🌻MITHRAA 🌻🧚 🎊💫🎁 Wishing You A Beautiful Day With Good Health And Happiness Forever🎊💫🎁
🍫🍬🍰Be Happy With Your Loved Ones May Your Dreams All Come True🍫🍬🍰 August 28, 2023, 12:05:07 am |
1 |
Happy Birthday KIlLivAlavAn
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (06-09-2023) Wishes To Our Lovable KIlLivAlavAn And Wishes Her All The Very Best & Good Luck 🎁🎉🍫HAPPY BIRTHDAY 🍫🎉🎁 🌻KIlLivAlavAn 🌻 🎊💫🎁 Wishing You A Beautiful Day With Good Health And Happiness Forever🎊💫🎁
🍫🍬🍰Be Happy With Your Loved Ones May Your Dreams All Come True🍫🍬🍰 September 06, 2023, 12:37:25 am |
1 |
Happy Vinayaka Chaturthi 2023
🎆🌻GLOBAL TAMIL CHAT Team Conveys Wishes To All GTC FRIENDS Happy Vinayaka Chaturthi. May The Grace Of Lord Ganesha Enlighten Your Lives And Bless You And Our Loved Ones. Happy Vinayaka Chaturthi🌻🎆 🙏🌻🎆18 -09-2023🎆🌻🙏 🌻🙏🎆விநாயகர் அருளால்
உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும். மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்.விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்🎆🙏🌻 September 17, 2023, 11:59:10 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-046
சொல்லாத காதல் வாழ்க்கை என்னும் பயணத்தில் தொடரும் ஒவ்வொரு உறவும் ஒருநாள் முடிவு பெறும் -- அதிலும் சில முடிவை சொல்லாத உறவு இறுதி வரை உடன் வரும்! அதுபோன்ற ஒரு சொல்லாத காதலை பற்றி எந்தன் பார்வையில்... பார்த்த நாள்முதலாய் பரவசமென்று எதையும் காணவில்லை பழகும் நாட்களில் தான் படிக்கத் தொடங்கினேன் உன் பார்வைகளை..... உன் பார்வை வரிகள் ஒவ்வொன்றும் என்மீது படும் வேளையில் ஒவ்வொறு முறையும் ஒருவித தாக்குதலுக்கு பலியானேன்.., எத்திசையில் நீ திரும்பி பார்த்தாலும் என்னை நோக்குவதை போல் என்னவென்று தெரியாமலே என்னை இழக்கத் தொடங்கினேன்.., சூரியனின் நேர்க்கோட்டில் சந்திக்கும் நிலவாக நீயும் நானும் தனி கிரகத்தில் தினம் தினம் நின்றோம்.., நிற்கும் நாட்களிலெல்லாம் இருவருக்கும் இடையே வார்த்தைகள் பரிமாரிக்கொள்ளவில்லை ஆனாலூம் கண்களின் வழியே பல மொழிகள் வழிந்தோடியது! திங்கள் முதல் வெள்ளி வரை நாட்கள் கழிவது தெரியாமல் உன்னிடத்தில் நான் முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருந்தேன் "வெள்ளி நிலவே" உன் விழிகள் என்னிடம் விடை பெற்றுச் செல்லும் விடுமுறை நாட்களையெல்லாம் வெறுத்து நின்று பார்த்தேன்... ஞாயிறு அது முடியும்போதும் தொடரும் திங்களோடும் உன் ஞாபகமோடும் திசைகள் எல்லாம் நான் சுற்றி திரிந்தேன் உன் வருகைக்காக.... தினம் தினம் உரிமைகள் உன்னிடம் அதிகரிக்க அதனை அறியாத என் உள்ளம் உனக்கென்று முழுவதுமாக என்னை மாற்றியது!! உள்ளம் முழுமையாக மாறும் வேளையில் தான் உயிரே உனக்கும் எனக்கும் ஊடல் தோன்ற வேண்டுமா பார்வை வரிகளை கண்டு பைத்தியமானவன் அதிலிருந்து மீண்டு வர வைத்தியம் தெரியாமல் வாயடைத்து நின்றேன்... "எதிர் பாராமல் வாழ்வில் சந்தித்தேன் எதிர் பாராமல் காதலித்தேன் எதிர் பாராமல் காதலித்தது என் தவறா ? -- இல்லை அதனை ஏற்க முடியாதது உன் தவறா" என உன்னிடம் உண்மைகளை கேட்க வந்தவன் ! உறைந்து போய் நின்றேன் உன் நிழலாக வேறொருவன் இருப்பதை கண்டு!! "உதடுகளை திறந்து உள்ளம் புரிந்து சொல்லும் காதலெல்லாம் சொர்கத்தில் சேரும்! சொல்லப்படாத எந்தன் காதல் எந்த பிரிவை சேரும்" எந்த பிரிவிலும் சேர்க்க முடியாத என் காதலும் சேரமுடியாமல் பிரியும் நேரம் வந்தது... அன்பின் ஆசைகள் பொங்கி வந்த நாளொன்றில் எனக்கான உரிமைகளும் உனக்கில்லை என்றாள்! முதல் முறை உதிரங்கள் கொதித்தது உயிரில் நீ கலந்த பின்பு உரிமையில் எல்லைகள் எனக்கு தெரியவில்லை... எதைவும் தெரியும் முன்பே பிறிந்திருக்க வேண்டிய நேரம் வந்தது..... தனிமையின் தீயில் தவிக்க நான் ஆளானேன்... நொடியிலும் நிமிடத்திலும் மாறி மாறி என் மனம் மரணம் அடைந்தது.... நாள்காட்டிகள் எல்லாம் நான் படும் வேதனையில் பயணம் செய்ய வந்தது... மீண்டும் சந்திக்கும் நாளை எண்ணி6 "மரணதீயில் மறைந்து கிடந்தவன்" மறுபிறவி எடுக்க ஜனனம் தோன்றியது! ஜன்னலின் ஓரம் அந்த நிலவினைக் காண ஜென்மங்களை கடந்து வருவேன்!! காதல் நோயால் சூழப்பட்டவன் உன் கண்கள் தீண்டும் ஒவ்வொரு தீண்டலிலும் விடுபட்டு வெளியே வந்தேன்.... கண்ணியத்தை காத்து வந்த காதலையும் காலத்தையும் நாம் புரிந்து கொண்டதால் -- இன்று பிரிந்து நிற்கிறோமா ?? இல்லை நாம் இருவரும் பிரிந்து நிற்பதால் நான் புரிந்துகொண்டேனா ?? என புரியாமல் புலம்புகிறேன்! பூவே இந்த புதிரான உலகில்!! தெற்கில் நீயும் வடக்கில் நானுமாக திசைகளில் காவலில் நின்றோம்... காவலாக காத்து கிடப்பதில் என்ன பயன் எதற்கும் தான் எனக்கு காரணங்கள் தெரியவில்லையே!!!!!! காதல் வந்த போது காதலென்று அதனை அறிந்துகொள்ள அறிகுறிகள் ஆயிரம் கிடைக்கின்றது! ஆனால் பிரிகின்ற போது ஏனோ கண்ணீர் வடிக்கின்றது!! நீயாக நிறைந்து கிடந்த உயிரெல்லாம் இன்று தீயாக எரிந்து கொண்டிருக்கின்றது! வட்டமிட்ட என் வாழ்வில் திட்டமிட்டவள் எங்கே என்று அது தேடித்தவிக்கின்றது!! இன்பங்களை துறந்து வாழும் இந்த வாழ்வில் இன்றும் ஒயவில்லை ஓவியமே உன் பிம்பம்... வண்ணமற்ற என் இளமையில் வரையாத உன் உருவம் என்னை கறையானாக அறித்துக்கொண்டிருக்கின்றது... பக்குவம் வந்தாலும் பகுத்தறிவு வந்தாலும் பித்தனாக அலைகின்றேன்... தேடலின் நோக்கம் தெரியாதவன் "தேவதையே உன்னைத் தேடி" தெருக்களின் விமர்சனங்களுக்கு விடையளிக்க வழியின்றி வாயடைத்து போனேன்.... பாதைகள் நீண்டு கிடந்தது பாதங்கள் நடக்க தொடங்கியது "உறங்க நேரமின்றி" நடந்து கொண்டிருந்தவன் வயதில் இருள் சூழுமென்று இதயம் நினைக்க மறந்துவிட்டது!! நினைக்க மறந்து நின்ற அந்த வேளையிலும் மறந்தும் உன்னை மீண்டும் மீண்டும் நினைத்தேன்..... உன் நினைவொன்று இருந்தால் போதுமே.... மலரின் மணமாக மணம் வீசுவேன் என்று எண்ணம் கொண்டு உன் நினைவொன்றில் "வார்த்தைகளாக வளம் வந்து சுமைகள் பல வென்று" சுற்றி இருந்தவர்களையெல்லாம் இருள் சூழாமல் என்னை பார்க்க வைத்தேன்.... இருளில் மூழ்கி கிடந்தவனுக்கு முழுவதுமாக ஒளியினை கொடுத்து அவ்வொளியால் உலகில் உதயமாகும் முன்னே உயிரே நீ ஒதுங்கி போன உண்மையை ஒருபோதும் உணர முடியாமல் தவித்தேன்!! உண்மையை உணர முடியாமல் போன பின்பு என் வாழ்வில் ஒளியேற்றுவது? யாறென்று இவ்வுலகம் கேட்டால் எப்படி நான் பதிலளிப்பேன்?? வருடங்கள் சந்திப்பில் உன் காதல் வேறொருவர் மீது இருக்கும் போது காலங்களுக்கு எப்படி நான் பதிலளிப்பேன் இருளில் கிடந்த என் வாழ்விற்கு வெளிச்சத்தை கொடுத்தவளே!!! இந்த சமுகம் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி நான் பதிலளிப்பேன்?? இதழை பிரிக்காமல் மறைத்துக்கொள்ளும் மலரின் தேன்துளிகள் ஒருபோதும் தேனிக்களுக்கு கிடைப்பதில்லை! அதுபோல சொல்லப்படாத காதலெல்லாம் சுகம் பெறாத சோகத்தையே சாரும்!! அதில் இன்று முதல் சொல்லப்படாத என் காதலும் சேரும்...!!!! என்றென்றும் உங்கள் August 21, 2024, 11:16:17 am |
1 |
Re: கவிதையும் கானமும்-048
சுனாமியில் எழும் பேரலைகளைவிட ஆபத்தானது, தனிமையில் எழும் பெண்ணின் நினைவலைகள்...! தனிமை என்னும் மெழுகின் வெப்பம் என்னை சுட்டெரிக்க..! நிலவொளியாய் உந்தன் நினைவலைகள் என்னை தழுவ சில வரிகள் என்னில் உனக்காக..! வானத்தின் தூரம் போலவே எனது உயிரின் புன்னகையை நான் பார்க்கிறேன்... மெதுவாக எழுந்து நடக்கத்துடிக்கும் அந்த பாதங்களை நான் முத்தமிட வேண்டும்.... எனது மனதின் வலிமையை உடைத்தெறிகிறது அந்த - ஊமையான நிழல் படம்... யாராலுமே நிரப்ப முடியாது என் இருளினை என் இன்னொரு உயிரின் புன்னகையைத்தவிர... அந்த அழகான நினைவுகளை கடத்திச்செல்லும் நிமிடங்களுக்கு ஈடாக இன்னொரு உலகம் செய்தாலும் போதாது எழுத நினைக்கிறேன்.... உன்னை வாசித்த படியே நீ என் அருகில் இல்லாத வலிகளைச்சொல்லி.... என்னைச்சுற்றிய கோடுகளை உன் நினைவுகள் நிரப்புகிறது.... உன்னைச்சேரும் நாட்களை எண்ணியே என் இளமை இறக்கிறது... யாராலுமே உணர முடியாத ரணங்களை என் உயிர் சுமந்து செல்கிறது..... இது ஒரு கொடூரமான மௌனப்பயணம் உன்னை அடையும் நாள் வரைக்கும்.... என் விழிகளில் விழுந்த நீ, ஏன் விலகிச்செல்ல மறுத்தாய் ஏன் விதையாய் முளைத்தாய் தினம் உனைத்தாங்க நினைக்கிறது மனசு அதே கணம் உன் அருகாமையை இழந்து தவிக்கிறது உசுரு.... என் மரணத்தை வென்றவன் நீ... என் இளமையை சுண்டி இழுத்தவன் நீ... என் விதியினிலே விதையாய் வீழ்ந்தவனும் நீ.... காற்றெல்லாம் தேடுகிறேன் என் காதோரம் உன் - குரலை காணவில்லை.. காதலனானாய், மனாளனானாய், என் குழந்தையும் நீயானாய் உன்னோடு நான் வாழாமலே.. தனிமை என் மீது சரிந்து விழுகிறது நான் சாய்ந்து கொள்வதெப்போது உன் மார்பின் மேலே...? October 01, 2024, 08:57:45 am |
1 |
Re: கவிதையும் கானமும்-048
தனிமை சிலர் மட்டுமே தாங்கிகொள்ளும் ஆயுதம் தனிமை தாக்கி கொள்ளும் ஆயுதமும் கூட தனிமையில் கடக்கும் நிமிடங்கள் சிலருக்கு சிறந்ததோர் அறிவினை கொடுக்கும் தனிமை சிலருக்கு நரகத்தினை காட்டும் தனிமையில் சாத்தானும் ஞானம் பெறுகின்றான் தனிமையில் புத்தனும் சாத்தான் ஆகின்றான்.! தனிமை விந்தையானது ஆண் பெண் இருவரை இணைப்பதுண்டு தனிமையால் இரு உறவுகள் பிறிவதும் உண்டு தனிமை படைப்புகளின் பிறப்பிடம் தனிமை அழிவின் ஆரம்பமும் கூட.., இளமையின் தனிமை காதலால் சிலரை மகிழ்விக்கும்., தனிமை காதல் பிரிவை தந்தது நிமிடங்களையும் கசந்திடச்செய்யும்., நான் கொண்ட தனிமையில் இக்கவியை படைத்தேன்.... தனிமையை நேசிக்க கற்றுகொண்டேன் நிழல் பிரிந்தாலும் நான் உன்னை பிரியேன் என என்னை அணைத்து கொண்டது தனிமை., எனக்கும் உன்னை பிரிய மனமில்லை பற்றி கொண்டேன் உன்னை என் இனிய தனிமையே.. தனிமை இருள் அல்ல தனிமையை நேசிக்க கற்றுகொண்டால் தனிமை இறைவன் தந்த அருள்ளென்பாய்.. தனிமையை கையாள கற்றுக்கொண்டால் நமனை கண்டாலும் போடா என்பாய்.., தனிமையில் நொருங்கி போகாதே தனிமையை உனதாக்கிகொள் படைத்தவனும் தனிமையில் தானே இருக்கின்றான் மானிடன் உனக்கு மட்டுமல்ல...கடவுள் கூட தனிமைவிரும்பியே.. Gtc தோழர் தோழிக்கு இக்கவியை சமர்பிக்கிறேன் நன்றிகள் பல..!!!!! உங்கள் நண்பன் Dan_Bilzerian 😍😍😍🥳🥳🥳🥳 October 01, 2024, 09:04:24 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-048
❣️❤️என்னுயிர் அன்பனே!❤️❣️ என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது... வருவாயோ அன்பனே !!! தனிமை ஒரு வரம் என இருந்தேன் இன்று என்நிலை அறியும் வரை தனிமை எனக்கான அரண் என்னிடம் என்னை உணர்த்தும் வரை தனிமையில் நான் உன்னை நினைக்கவும் இல்லை உணரவும் இல்லை உன்னை தேடவும் இல்லை என பொய் உரைத்தேன் ஆம் உன்னை தேடவும் இல்லை உணரவும் இல்லை... என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது.... வருவாயோ அன்பனே !!! அழகான நாட்கள் தந்த நினைவுகள் வெளிச்சமாய் என்னுடன் இருக்க அவ்வொளியில் தொலைத்த உன்னை தேடினேன்... என் இருள் போக்க வருவாயோ என்னுடன் தான் சேர்வாயோ .... என் தனிமை தீரும் காலம் எப்பொழுது .... வருவாயோ அன்பனே!!! தனிமை சோகமா வரமா சோகமே வரமாக ஆனதோ !!! என் நிலை மாறும் ... என் வாழ்வில் இனிமை கூடும் நாள் நீ வரும் நாளோ .... அந்த நாளும் என்று வருமோ என் தனிமை சாபம் தீர உன்னுடன் சேரும் காலம் எப்பொழுது... வருவாயோ அன்பனே !!! வழி துணையாய் நீ வேண்டும் நம் வாழ்வும் சீராகும் உன் விழியில் ஒளி கண்டேன் நம் வாழ்வின் வழி உணர்தேன் தனிமை துயர் துடைத்தாய் என் தந்தையுமாய் ஆனாய் நீ நீயே என் ஒளி என் தனிமை தீர்க்கும் வழி என் இருள் போக்க வருவாயோ என்னுடன் தான் சேர்வையோ என் தனிமை தீரும் காலம் எப்பொழுது .... வருவாயோ அன்பனே !!! அழகான அந்நாட்கள் மீண்டும் வாழ கிடைக்குமோ நான் தொலைத்த நீயும் எனை தழுவிய தனிமையும் நீ அறியும் காலம் எப்பொழுது ..... வருவாயோ அன்பனே!!! நீ எனை சேரும் காலம் எப்பொழுது.... வருவாயோ அன்பனே !!! என்றும் தனிமையில் ❣️தென்றல்❣️ October 05, 2024, 12:04:11 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-048
ஒலிகள் நிறைந்த உலகில் உன்னுடன் நான் செலவிடும் நேரம்.... சில்லென்று தென்றல் வீச... காய்ந்து உதிர்ந்த இலைகள் கூட நடனமாடுவது போல் தெரிகிறது....... விட்டுவிட்டு எரியும் மின்விளக்குக் கூட மின்மினிப்பூச்சி போல் தெரிகிறது.... புரியவில்லையா, தனிமையே உன்னால் நான் ரசனைமிக்கவள் ஆகிறேன்.... பலரும் அறிவதில்லை... பொய்யான உறவு தரும் வலிக்கு நீ துணையாய் வந்து வாழ்க்கையின் நிஜத்தை புரிய வைப்பது...... உன்னுடன் வாழ பழகி விட்டால் வாழ்க்கை இனிமையே..... சொர்க்கம் தான்.... நீயும் இசையும் என்னுடன் சேர்ந்தால்.... முடிவில்,என்னை நான் ரசிக்கவும்.. . ஏன்.. என் கற்பனையில் உன்னைப் பற்றி கவிதையை முயற்சித்து.. என் பேனாவிற்கு குரல் கொடுத்ததும் உன்னால்தான்.... தனிமையே உன் வழியில்தான் கேட்கிறேன் என் இதயத்தின் குரலை.... உன் வரவில்தான் அறிந்தேன், என் தனி மனவலிமையை.. என் காதலனாக நீ இருக்க ஆசை... காரணம், என் இறுதிக் கதிரவன் மறையும் வரை நீங்காத துணையாக நீ இருப்பாய்.... உன்னை இதுவரை ரசித்த எனக்கு, உன்னிடம் ஒரு வேண்டுகோள்.... உன்னிடம் விரும்புவது ஆறுதல் தான்... காயங்களின் வலி அல்ல.. என்றும், எனக்கு ஆறுதலைக் கொடு.... வெறுமையை கொடுத்து விடாதே.... இப்படிக்கு, தனிமையின் காதலி ஜாஸ்வி♥️ October 05, 2024, 07:46:18 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-048
வெளிச்ச கீற்றுகள் உள்ளடங்கும் வேளையில் தனிமையின் நாக்குகள் அடங்காத ஜூவாலையென உள்ளிருந்து எழுந்து விலக்க முடியா வலையென பின்னிக் கொள்கிறது. எல்லோரும் இருந்தும் யாருமற்ற நிலையில் பற்றற்று அமர்ந்திருக்கிறேன். தனிமை இன்னும் தீவிரமாய் அணைத்துக் கொள்கிறது. சில சொற்களின் சூடுகள், துண்டித்துக் கொண்ட சில அன்பின் எச்சங்கள், தட்டிவிடப்பட்ட வெறுப்புகள், அலைகழிக்கப்பட்ட உணர்வுகள் ஒன்றின் பின் ஒன்றென மன அடுக்குகளின் மேல் எழுந்து மீள முடியா நீர் சுழற்சியில் சிக்கிக் கொண்டவளை போல உள்ளிழுத்துக் கொண்டே இருந்தது. கடிகார முட்களை பின்னோக்கி திருப்பி விளையாடும் விளையாட்டென காலத்தை முதலிருந்து வாழ்ந்திட முடியாதா என பெரு ஏக்கம் காற்றை துழவுகிறது. இல்லை, என் காலத்தை இனி திருப்ப முடியாது கடக்க முடியாத தூரங்களை கடந்து வந்துவிட்டேன் இது ஒருவழி பாதை என நிதர்சனம் புரியும் முன் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்கின்றது. காலத்தின் மீது எந்தவொரு கோபமும் எனக்கில்லை. யார் மீதும் கோபமில்லை என நினைத்துக்கொண்டாலும் என் மீதே இருக்கும் கோபத்தை எங்ஙனம் மறைத்துக் கொள்வது? இந்த கணம் பற்றிக் கொள்ள ஒரு துடுப்பு போதும் தான் எல்லாருக்கும் கை கொடுக்கும் துடுப்பு கூட என்னை மட்டும் ஏன் தத்தளிக்க வைக்கிறது? துடுப்பின் மீதும் எனக்கு கோபமில்லை பற்றிக் கொள்ள எனக்கு தான் தெரிந்திருக்கவில்லை. இருளை விட கொடிய இத்தனிமையின் தீண்டலில் இந்த இரவில் எவ்வளவு பேர் உத்திரத்து காற்றாடியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருகிறார்கள்? கேட்பாரற்று அநாதரவாய் அலையும் நாய்க் குட்டியை போல் தத்தளிக்கும் மனதை எதை கொண்டு நான் ஆற்றுப்படுத்துவது? ஆதூரமாய் மெல்லிதான காற்றும், எங்கோ தூரமாய் ஒலிக்கும் மெல்லிய இசையும், சாளரங்களை தாண்டி வீசும் நிலவின் குளுமையும், மெழுகுவர்த்தியின் இச்சிறு வெளிச்ச கீற்றும் படர்ந்துவிடாதா அத்தனை பேருக்கும்? October 05, 2024, 08:52:28 pm |
1 |