Advanced Search

Author Topic: Non - Veg Recipes  (Read 34874 times)

June 15, 2018, 10:25:35 pm
Read 34874 times

Naveen

Non - Veg Recipes
« on: June 15, 2018, 10:25:35 pm »


ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை -அரை பழம்

செய்முறை

1. அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.

3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.

4. வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.

6. அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.

7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.

8. மட்டன்அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

9. தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

10. பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும்.

11. சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

குறிப்பு

1. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி, (பிரட் ஹல்வா, தக்காளி ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, கேரட் ஹல்வா) ஏதேனும் ஒரு ஸ்வீட், எண்ணெய் கத்திரிக்காயுடன் சாப்பிடலாம்.

2. பிரியாணியை வடித்து தட்டியும் செய்யலாம், குக்கரிலும் செய்யலாம். லேயராக தம் போட்டும் செய்யலாம்.

« Last Edit: June 16, 2018, 12:40:12 am by Naveen »

March 07, 2019, 04:07:04 am
Reply #1

MDU

Chettinad Pepper Chicken
« Reply #1 on: March 07, 2019, 04:07:04 am »


Recipe for Pepper Chicken Chettinad

Preparation Time : 10 minutes
Cooking Time : 20 minutes
Serves : 4

Ingredients

Chicken - 1 lbs (app. 1/2 kg)
Onion - 2 (chopped)
Tomatoes - 2 (diced)
Green chilli - 1 (slit)
Ginger Garlic paste -1tbsp
Whole Garam Masala - (Cloves, Cardamom - 2 pieces each, Cinnamon, Bay Leaf - 1 piece each)
Red chilli powder - 2 tsp
Coriander powder - 1 tbsp
Cumin powder - 1 tsp
Turmeric powder - 1/4 tsp
Crushed black peppercorns - 1.5 tbsp (preferably freshly crushed)
Lemon Juice - 1/2 of a lemon
Mustard seeds - 1 tsp
Fennel seeds - 1 tsp
Curry leaves - 2 strands
Salt - 2 tsp
Coriander leaves - to garnish
Oil - 2 tbsp
Method

Marinate the chicken with the lemon juice, salt and turmeric powder.
Heat oil in a deep vessel. Add the mustard seeds and fennel seeds for tempering. After it splutters add whole garam masala.
Add chopped onions and green chilies. Saute until golden brown.
Add the ginger-garlic paste and curry leaves. Saute everything for 5 mins.
Add tomatoes and saute it until it becomes pulpy.
Add red chilli powder, coriander powder, cumin powder and about 1/4 cup of water. Saute everything for 10 mins in medium heat. When oil comes out it is the correct consistency.
Now add chicken pieces and toss well. Cover and cook for about 10-15 minutes. I prefer this as a dry dish so I do not add any water. If you want gravy, add about 1 cup of water.
After the chicken is cooked, add the crushed pepper powder and check for seasoning. Mix well and switch off.
To garnish add chopped coriander leaves and some more fresh curry leaves.


March 21, 2019, 12:57:05 am
Reply #2

ரதி

சுவையான சிக்கன் பிரியாணி
« Reply #2 on: March 21, 2019, 12:57:05 am »
தேவையான பொருட்கள்:
 1. கோழி இறைச்சி - 500 கிராம் (எழும்புகள் நீக்கப்பட்டது) 2. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 3. தயிர் - 1 கப் 4. கரம் மசாலா - 1 தேக்கரண்டி 5. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 6. உப்பு - தேவையான அளவு 7. இஞ்சி விழுது - 1 டீஸ்பூன் 8. பூண்டு விழுது - 1 ½ தேக்கரண்டி 9. நெய் - 3 தேக்கரண்டி 10. வறுத்த வெங்காயம் - 1 கப் 11. பாசுமதி அரிசி - 2 கப் (நீரில் ஊறவைத்தது) 12. மசாலா - தேவைக்கேற்ப 13. உலர் பழங்கள் - 1 கப் (நறுக்கியது) 14. குங்குமப்பூ தண்ணீர் - 2 டீஸ்பூன் 15. ரோஸ் - 1 டீஸ்பூன் 16. கீவ்ரா வாட்டர் - 1 டீஸ்பூன்


செயல்முறை: 1. ஒரு பெரிய கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதனுடன் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி மற்றும் பூண்டு விழுது, உப்பு மற்றும் கரம் மசாலா தூள் போன்றவற்றைச் சேர்க்கவும். 2. அனைத்து மசாலாப் பொருட்களையும் நன்கு கலந்து அதில் சிக்கன் துண்டுகளை சுமார் 2 மணி நேரம்ஊற விட வேண்டும். 3. ஒரு ஆழமான அடிப்பாகமுடைய கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானவுடன், அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக கிளறவும். 4. அதனுடன் பொறித்த வெங்காயம் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்து, சிக்கன் துண்டுகள் அரை வேக்காடு வேகும் வரை வேக விடவும். சிக்கன் துண்டுகள் வெந்த பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும். 5. ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது, கொதிக்கும் தண்ணீரில் மசாலா பொருட்களைச் சேர்க்க வேண்டும். 6. கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து அதை முக்கால் திட்டம் வரை வேக விடவும். 7. இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தின் அடியில் கோழி துண்டுகளை வைத்து ஒரு அடுக்கை உருவாக்கவும். அதன் மீது வேக வைத்த அரிசியை பரப்பி மற்றொரு அடுக்கை உருவாக்கவும். 8. அதன் மீது குங்குமப்பூ தண்ணீர், ரோஸ் வாட்டர், கீவ்ரா வாட்டர், உலர் பழங்கள், வறுத்த வெங்காயம், மற்றும் துண்டாக்கப்பட்ட கொத்தமல்லியை சேர்ர்க வேண்டும். அதன் பின்னர் அதை ஒரு அலுமினிய தாள் கொண்டு மூடவும். 9. உங்களுக்கு பாரம்பரியமான பிரியாணி வேண்டும் எனில் பாத்திரத்தை அதனுடைய உண்மையான மூடி வைத்து மூடி, அதன் பின்னர் இடைவெளியை மாவை வைத்து அடைத்து விடுங்கள். 10. இப்போது, மிகவும் குறைந்த தீயில் பிரியாணியை சுமார் 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும். 11. பிரியாணி மணம் உங்களின் மூக்கை துளைக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய கோழி பிரியாணி பறிமாற தயாராக உள்ளது. நீங்கள் வார இறுதியில் குடும்பத்துடன் ஒரு பார்ட்டி கொண்டாடுவதாக இருந்தால் இந்த சிக்கன் பிரியாணியை தயார் செய்து உங்களின் விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துங்கள். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! அத்துடன் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த அற்புதமான மற்றும் எளிமையான சிக்கன் பிரியாணி செய்முறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்


March 21, 2019, 01:00:36 am
Reply #3

ரதி

இறால் பெப்பர் ப்ரை
« Reply #3 on: March 21, 2019, 01:00:36 am »
தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1-2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது குடைமிளகாய் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு... இறால் - 20 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை போட்டு 1 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, இறாலையும் போட்டு பிரட்டி விட வேண்டும். பின் அதில் கரம் மசாலா சேர்த்து 4-5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், இறால் பெப்பர் ப்ரை ரெடி!!!

March 21, 2019, 04:50:44 am
Reply #4

EWA


March 22, 2019, 04:46:55 am
Reply #5

MDU


March 25, 2019, 09:56:44 pm
Reply #6

AnJaLi

Hyderabadi Mutton Biryani
« Reply #6 on: March 25, 2019, 09:56:44 pm »



Ingredients

For the rice
2 cups Long Grain Biryani Basmati Rice
10 g Potli Masala Check Notes
1 tbsp Ghee
1 tsp Shahi Zeera
2 tsp Salt

For the Mutton
750 g Mutton Cut into small pieces
3 tbsp Raw Papaya Paste
2 tsp Ginger paste
2 tsp Garlic Paste
1/2 tsp Garam Masala Powder
2 tsp Red Chilli Powder
1 tsp Turmeric Powder
2 tsp Salt
2 tbsp Ghee
4 tsp Green Chilli Crushed
2 tbsp Lemon Juice
200 g Curd
2 tbsp
Mint Chopped
2 tbsp Coriander Chopped
1/4 cup Golden Fried Onion

For assembling the biryani
1/2 cup Milk
1 pinch Saffron Soaked in 1 tbsp water
1/2 cup Golden Fried Onion
2 tbsp Ghee
1 tbsp Coriander Chopped
1 tbsp Mint Chopped



Instructions

For the rice
Wash the rice and soak in water for 40-45 minutes.
Heat water in a large pot.
Add potli masala, ghee, salt and shahi zeera in the pot and bring the water to a boil.
Drain the rice and add it in the boiling water.

For the Mutton
Mix mutton with raw papaya paste, ginger paste, garlic paste, garam masala powder, red chilli powder, turmeric powder, salt, ghee, green chilli and lemon juice and marinate for 10-12 hours.
Add curd, mint, coriander and golden fried onion in the marinated mutton and mix well.

Assembling the biryani
Transfer the mutton along with the marinade in a heavy bottom pan.
Once the rice gets 30% cooked, take out half of the rice and top it over the mutton.
Once the remaining rice is cooked to 70 %, take it out and top it over the 30% cooked rice.
Sprinkle 1/2 cup milk, saffron soaked in water, coriander, mint, golden brown onion and ghee on top.
Cover the pan tightly with a lid.
Place the pan on a very slow heat for 40-45 minutes.
Remove the lid and mix the biryani gently.
Serve hot.


Recipe Notes
To make potli masala, tie 2 g green cardamom, 2 g cloves, 2 g bay leaves, 2 g cinnamon and 2 g star anise in a small cloth piece.


March 26, 2019, 11:25:40 am
Reply #7

AnJaLi

Kerala Chicken Roast
« Reply #7 on: March 26, 2019, 11:25:40 am »



Ingredients Of Kerala Chicken Roast
1 Kg chicken

For the marination:
1/4 tsp turmeric powder
1/4 tsp chilli powder
1/4 tsp coriander powder
1 tsp vinegar/lemon juice
5 Garlic cloves
3-5 Green chillies
to taste salt

For roasting:
3 medium onions
1 large tomato (remove skin & make puree), blanched
2 Green chillies (slit)
3 sprigs curry leaves
1/4 tsp garam masala powder
1/4 tsp pepper powder
1 Lemon (juiced)
Oil


How to Make Kerala Chicken Roast
1.Clean and cut the chicken into medium sized pieces.
2.Make a paste of all the ingredients under marination.
3.Marinate the chicken pieces with this paste and keep aside for an hour.
4.Cut onions into very thin slices and fry in hot oil. Drain them and keep aside.
5.Fry the chicken pieces in the same oil until almost done. Keep the pan covered so that the chicken does not get browned, but is cooked inside. Drain them and keep aside.
6.Heat 2 tbsp of oil in another pan (You can use the same oil in which we fried the chicken pieces. This will enhance the flavor). Add slit green chilies and curry leaves. Saute for 1 minute.
7.Add the tomato paste to this and saute for 1 minute.
8.Now add the prepared chicken & roast until it is dry.
9.Make sure that all the chicken pieces are well coated with the tomato paste.
10.Sprinkle garam masala & pepper powder and mix well.
11.Add lemon juice and mix well. Check for salt. Add a little if needed.
12.Now add the fried onions and mix well.
13.Tasty Kerala Chicken roast is ready

March 28, 2019, 08:33:30 pm
Reply #8

AnJaLi

மு‌ட்டை பரோ‌ட்டா
« Reply #8 on: March 28, 2019, 08:33:30 pm »
மு‌ட்டை பரோ‌ட்டா


தேவையானவை

    * மைதா – 2 க‌ப்
    * மு‌ட்டை – 1
    * பே‌க்‌கி‌ங் பவுட‌ர் – அரை தே‌க்கர‌ண்டி
    * ச‌ர்‌க்கரை – 1 தே‌க்கர‌ண்டி
    * உ‌ப்பு – தேவையான அளவு
    * எ‌ண்ணெ‌ய் – 2 தே‌க்கர‌ண்டி


செ‌ய்யு‌ம் முறை

    * ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் மைதா மாவுட‌ன் உ‌ப்பு, பே‌க்‌கி‌ங் பவுட‌ர், ச‌ர்‌க்கரை‌ப் போ‌ட்டு ந‌ன்கு கல‌க்கவு‌ம்.
    * ‌பிறகு மா‌வி‌ற்கு நடு‌வி‌ல் ஒரு கு‌ழியை ஏ‌ற்படு‌த்‌தி, அ‌தி‌ல் மு‌ட்டையை உடை‌த்து ஊ‌ற்றவு‌ம். ‌
    * மாவை‌க் கைகளா‌ல் ந‌ன்கு ‌பிசை‌ந்து ‌கிளறவு‌ம். தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌மாவை ‌மிருதுவாக ‌பிசை‌ந்து வை‌க்கவு‌ம்.
    * ‌பிசை‌ந்த மா‌வி‌ன் ‌மீது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி 2 ம‌ணி நேர‌ம் ஊற ‌விடவு‌ம்.
    * ஊ‌றிய மா‌வினை ‌சி‌றிய உரு‌ண்டைகளாக உரு‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். உரு‌ண்டைகளை ம‌ெ‌ல்‌லிய ச‌ப்பா‌த்‌திகளாக இ‌ட்டு அத‌‌ன் ‌மீது நெ‌ய்யை தடவை ச‌ப்பா‌த்‌தியை உரு‌ட்டி ‌மீ‌ண்டு‌ம் உருளையா‌க்‌கி அதனை பரோ‌ட்டாவாக ‌திர‌ட்டவு‌ம்.
    * தோசை‌க் க‌ல்‌லி‌‌ல் பரோ‌ட்டாவை‌ப் போ‌ட்டு இர‌ண்டு ப‌க்கமு‌ம் ‌சிவ‌க்குமாறு எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி எடு‌க்கவு‌ம்.
    * இ‌த‌ன் சுவை புதுமையாக இரு‌க்கு‌ம். செ‌ய்து சுவை‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.



March 28, 2019, 08:57:05 pm
Reply #9

AnJaLi

போர்ச்சுகீசிய சிக்கன்
« Reply #9 on: March 28, 2019, 08:57:05 pm »
போர்ச்சுகீசிய சிக்கன்


போர்ச்சுகீசியர்களின் உணவில் காரத்துக்கு மிளகையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோல உணவில் தக்காளிக்கு முக்கியத்துவம் அதிகம். போர்ச்சுகீசிய சிக்கன் செய்யும் முறையை கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் கேசவகுமார்.

தேவையானவை:

    * எலும்புடன் கூடிய சிக்கன் – கால்கிலோ
    * பெங்களூரு தக்காளி – கால் கிலோ
    * வெங்காயம் – 50 கிராம்
    * பூண்டு – 20 கிராம்
    * காளான் – 60 கிராம்
    * ஆலிவ்
    * எண்ணெய் – 2 டீஸ்பூன்
    * கறுப்பு
    * மிளகுப்பொடி – 10 கிராம்
    * உப்பு – தேவையான அளவு


செய்முறை :

    * தக்காளியை லேசாக கீறி சுடுநீரில் ஐந்து நிமிடங்கள் அமிழ்த்த வேண்டும். தோல் மற்றும் விதையை நீக்கி விட்டு, தக்காளியை பொடியாக நறுக்கினால் “சாஸ்’ போல கிடைக்கும்.
    * வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், காளானை சேர்த்து வதக்க வேண்டும்.
    * அதன்பின், சிக்கனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
    * சிக்கன் வதக்கும் போதே பாதி வெந்து விடும், அதன்பின் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடைசியாக மிளகு, உப்பு சேர்த்து இறக்க வேண்டும்.
    * கடைசியாக மல்லிதழை தூவி அலங்கரிக்க வேண்டும்.
    * துருக்கி அரிசி கடையில் கிடைக்கும்.
    * துருக்கி அரிசி சாதத்துக்கு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சமையல் நேரம் : 20 நிமிடங்கள்.



April 04, 2019, 03:59:04 am
Reply #10

MDU

Re: போர்ச்சுகீசிய சிக்கன்
« Reply #10 on: April 04, 2019, 03:59:04 am »

April 04, 2019, 03:09:36 pm
Reply #11

AnJaLi

Re: போர்ச்சுகீசிய சிக்கன்
« Reply #11 on: April 04, 2019, 03:09:36 pm »

August 07, 2019, 01:42:58 pm
Reply #12

AnJaLi

Non - Veg Recipes
« Reply #12 on: August 07, 2019, 01:42:58 pm »
நண்டு - ஒரு கிலோ
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
தனியா பவுடர் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 2
மிளகாய் வற்றல் - 3
உப்பு - தேவையான அளவு
 

முதலில் நண்டை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து பிறகு வெந்தயத்தை போட்டு சிவக்க விடவும்.
சிவந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
கொதித்ததும் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மறுபடியும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அதில் கரைத்த புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் சுத்தம் செய்த நண்டு சேர்த்து உப்பு போட்டு தீயை மிதமாக வைத்து 20 நிமிடம் மூடிப் போட்டு வேக வைக்கவும்.
கலவை கெட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

August 07, 2019, 01:44:08 pm
Reply #13

AnJaLi

ஸ்டஃப்டு நண்டு
« Reply #13 on: August 07, 2019, 01:44:08 pm »
நண்டு - ஒரு கிலோ
வெங்காயம் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கெட்டியான தேங்காய் பால் - அரை கப்
பிரெட் தூள் - 100 கிராம்
 

நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும்.
பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.
நண்டின் மேல் ஓட்டை எடுத்து சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் காய வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத் துண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு அதில் தேங்காய் பால், நண்டின் சதைப் பகுதி ஆகியவைகளைப் போட்டு கிளறி(சுருள வதக்கக் கூடாது) எடுத்து வைக்கவும்.
காய வைத்த நண்டு ஓட்டில் சதைப் பகுதியை வைத்து திணிக்கவும். அதன் மேல் பிரெட் தூளைத் தூவி பேக் செய்யவும்.


August 15, 2019, 02:28:22 am
Reply #14

MDU

Re: ஸ்டஃப்டு நண்டு
« Reply #14 on: August 15, 2019, 02:28:22 am »