Advanced Search

Author Topic: இல்லத்தரசி dedicate to my mom  (Read 1306 times)

October 04, 2026, 10:26:00 pm
Read 1306 times
இல்லத்தரசி dedicate to my mom
« on: October 04, 2026, 10:26:00 pm »
தலைப்பு : இல்லத்தரசி

சேவல் கூவும் முன்னரே அலாரம் ஓசை,
அலாரம் ஓசைக்கு முன்னரே அடுப்படியில் சமைக்கும் ஓசை,
இரவிலே இன்றைய குழந்தைகள் புத்தகப்பையைப் புரட்டுபவள்;
இருட்டில் கண்விழித்து இருப்பதைக் கொண்டு சமைப்பவள்.

எண்ணமெல்லாம் மனம் நிறைந்த மணவாளன் பணிக்கும்,
குணம் நிறைந்த குழந்தைகள் பள்ளிக்கும்,
சிற்றுண்டி இன்றி சிறகடிக்கக் கூடாது என்பது மட்டுமே,
அது நடந்தது நடுத்தரக் குடும்பம் தான் பணத்தில்;
ஆனால் இல்லறத்தில் இன்பத்திற்கும் குறைவில்லை.

கடவுளின் கருணையால் கல்வியில் மிளிரும் குழந்தைகள்,
கடனின்றிக் களிப்புடன் வாழும் குடும்பம்,
எதிலும் சிக்கனம் — அன்னை விதித்த கட்டுப்பாடு,
அதில் தந்தைக்கும் இல்லை முரண்பாடு.

நவராத்திரியின் இறுதி நாள் அன்று,
முற்றத்தில் நல்லதொரு கோலமிட்டு,
கைத்தவறிக் கொட்டியது கோலமாவு.
அன்னையும் தந்தையும் அதைக் கண்டு நகைக்க,
சீண்டிய தந்தையைச் சினத்துடன் புதல்வி நோக்கினாள்;
அதுவே அவரின் இறுதி செல்லச் சீண்டல் என்று அறியாமல்.

பணிக்குச் செல்லும் பாதையில் விபத்தாம்,
சிகிச்சையின் போதே அவருக்கு இறப்பாம் —
அனைத்தும் இரண்டு மணி நேரத்தில்.

குடும்பத்தில் யாருக்கும் மனநிறைவில்லாத நினைவாய்,
அக்காலத்தின் இறுதி நினைவாய்,
அவர்களின் கண்களின் துளிநீர் ஆயினும்,
அன்னையானவள் தம் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவில்லை விடுப்பு;
பிள்ளைகளின் கல்விக்கும் போடவில்லை தடுப்பு.

அவள் அல்லவா இல்லத்தரசி —
தாம் ஈன்றெடுத்த பிள்ளைகளின்
உள்ளத்தரசி!


4th October... marakka mudiyatha naal
« Last Edit: October 04, 2026, 11:14:05 pm by YaazhVeena »