ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் சருமம் வறட்சியின்றி போதுமான நீரேற்றத்தைப் பெறுகிறது. இதனால் முகப்பருக்கள் உண்டாவதையும் தடுக்கலாம்.
ஆரோக்கியத்திற்காக தண்ணீர் குடிக்கச் சொல்வது அழகைப் பராமரிக்கவும் பயன்படும் என்பது தெரியுமா? அவை எந்த மாதிரியான அழகுப் பயன்களை அளிக்கிறது என தெரியுமா..?
முகப்பருக்கள் , சுருக்கங்கள் இல்லா அழகு : ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் சருமம் வறட்சியின்றி போதுமான நீரேற்றத்தைப் பெறுகிறது. இதனால் முகப்பருக்கள் உண்டாவதையும் தடுக்கலாம். முகப்பருக்கள் இருந்தாலும் அகற்றலாம்.
அதோடு சுருக்கங்கள் விழாமல் இளமையான சரும அழகைப் பெறலாம். இதனால் இளமையிலேயே முதிர்ந்த தோற்றம் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். தொடர்ந்து தண்ணீர் அருந்துவதைப் பின்பற்றினால் பளபளப்பான பொலிவான முக அழகு கிடைக்கும்.
தலை முடி பொலிவு : தலையிலும் வறட்சி காரணமாகவே பொடுகுத் தொல்லை ஏற்படுகிறது. இதனால் கூந்தலும் சேதாரமடைகிறது. இதற்குக் காரணமும் போதுமான நீரின்மையே. இதை சரி செய்ய பெரிய அளவில் மெனக்கெடாமல் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தலே நல்லது. தலைமுடியும் மென்மையான பொலிவுடன் காட்சியளிக்கும்.