Advanced Search

Author Topic: அவற்றிற்கென்று எதுவுமில்லை....  (Read 16296 times)

March 29, 2019, 08:40:25 pm
Read 16296 times

ரதி

நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
நறும் பூவின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலதிற்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்திற்கில்லை
பல்லாறும்** கனி முழுதும் மரதிற்கில்லை
பண் நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்குழைக்க காணுகின்றேன்
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்... வேண்டும்..
நம் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்.. வேண்டும்...

March 30, 2019, 04:22:20 am
Reply #1

MDU

« Last Edit: March 30, 2019, 04:24:13 am by MDU »