Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-007  (Read 14987 times)

October 17, 2022, 10:11:59 pm
Read 14987 times

Administrator

கவிதையும் கானமும்-007
« on: October 17, 2022, 10:11:59 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

October 18, 2022, 12:53:05 am
Reply #1
Re: கவிதையும் கானமும்-007
« Reply #1 on: October 18, 2022, 12:53:05 am »
பண்டிகை என்றால்,,,
பள்ளிக்கூட விடுமுறை!!!!!,,,,
பண்டிகை சுவையானதோ அல்லாவோ .....
பள்ளி விடுமுறை என்பதே சுவையானது .....
காலை உறக்கம் நீளும்.....வீட்டு பாடம் மறக்கும் ...
எழுந்த உடன் நண்பன் நினைவு வழிந்தோடும்,,,,,,
வேறு என்ன ,,,,,
புத்தாடை கொண்டு பிடித்தவளை  காண ஒரு கூட்டம் ....
நண்பனே என நண்பனை தேடும் ஒரு கூட்டம்.......
கிடைத்த உணவை ஊன்று மகிழும் ஒரு கூட்டம் .........
இவையனைத்தும் வாழ்க்கையில் ஓர் கட்டம்,,,,,,
அன்று மாணவனாய்,,,,,
பின்னர் இளைஞனாய்  .....
இன்று ஓர் தந்தையாய்,,,,
பண்டிகை என்பது .....
ஊதியத்துடன் தேடும் ஊக்கத்தொகை ....
ஊர் செல்ல ஓர் பயண முன்பதிவு ......
செல்லும் முன் ,,,,
தாய் தந்தையின் தேகம் பற்றிய சிந்தனை,..
தாத்தா பாட்டி என என் பிள்ளைகள் கொஞ்சி மகிழ ....
என்னவள் அருகே,,,,,,
தாய் தந்தை இடையே,,,,,
பண்டிகையே,,,
நீயும் மறு ஒருமுறை வருவாயோ !!!!!!
« Last Edit: October 19, 2022, 07:22:29 am by SuNshiNe »

October 19, 2022, 03:41:16 am
Reply #2

Misty Sky

Re: கவிதையும் கானமும்-007
« Reply #2 on: October 19, 2022, 03:41:16 am »
இந்த தீபாவளி பண்டிகையில்
வெடியோடு சேர்ந்து துன்பங்களும் வெடித்து சிதற...
அளவோடு வெடி வெடித்து
அளவில்லாமல் அன்பை பகிர்ந்து
இனிப்புகள் போல் இல்லமும்
உள்ளமும் தித்தித்து இனிதே கொண்டாடி
மகிழுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
கந்தக பூமி தந்த பட்டாசு பரிசுகளை வெடித்து
மகிழ்ந்து இனிதே இன்புற்று கொண்டாடி
மகிழுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
இனிப்புகளோடும் இனிதாய், வெடிகளோடும் வேடிக்கையாய், உறவுகளோடும் ஒன்றாய்
கொண்டாடுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
குடும்பங்களோடு கோலாகலமாய்,
சொந்தங்களோடு மகிழ்ச்சயாய்,
பட்டாசுகளோடு வண்ணமயமாய்,
தீபங்களோடு ஒளிமயமாய் கொண்டாடுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
நல்லது நினைத்து, நல்லது செய்யும்
அனைத்து GTC நண்பர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!...
இப்படிக்கு
உங்கள் இயற்கை நேசகன் (NATURE LOVER)
« Last Edit: October 19, 2022, 03:48:01 am by NATURE LOVER »

October 19, 2022, 08:32:11 am
Reply #3

LOVELY GIRL

Re: கவிதையும் கானமும்-007
« Reply #3 on: October 19, 2022, 08:32:11 am »
குயிலின் குரல் அழகுதான்
என் கவிதை பாடும் உன் குரலும் அழகுதான்..
என் கவிதை பாடும் RiJiA வின் குரல் அழகுதான்!

குடும்பம்,
அன்பின் பிறப்பிடம்,
மகிழ்ச்சியின் இருப்பிடம்,
பாசத்தின் வளர்ப்பிடம்,
பக்குவத்தை காப்பிடம்!

எத்தனை துன்பம் இருந்தாலும் மறந்து போகிறோம்!

உள்ளங்கள் கூடி,
சொந்தங்கள் கூடி,
சொர்க்கத்தை நாடி,
திசையெங்கும் திருநாளாய்
கொண்டாடும் பெருநாள் தீப ஒளி தீபாவளி...
புதுவித ஆடைகளை உடுத்தி
பூரிக்கவைக்கும் தீபாவளி...
வெடிகள் வெடித்து
வெற்றிக்களிப்பில்
கொண்டாடும் தீபாவளி...

உறவுகளோடு உறவாடி
உல்லாசம் பொங்கும் தீபாவளி...

தீப ஒளி
தீபாவளி
இருளை அகற்றி
இன்பத்தை அள்ளித் தந்திடும்..

இந்த தீபாவளி திருநாள் முதல்

கசப்பான நினைவுகளை மறந்து,

இனிப்பான வாழ்கையை தொடங்குவோம்..

GTC குடும்பத்தினருக்கும் ஸ்ரீயின்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
« Last Edit: October 19, 2022, 08:35:20 am by LOVELY GIRL »

October 19, 2022, 01:03:44 pm
Reply #4

$udh@r

Re: கவிதையும் கானமும்-007
« Reply #4 on: October 19, 2022, 01:03:44 pm »
குடும்பமாய் இருந்து புத்தாடை அணிந்து கொண்டாடும் நாள் தீபாவளி.
இன்பத்தில் சிறந்த இன்பம் குடும்பம்
சந்தோஷத்தில் மிக சந்தோஷம் புன்னகை
பண்டிகியில் சிறந்த பண்டிகை தீபாவளி
ஒற்றுமையாக சந்தோஷமாக இனிப்பாய் பேசி, பகிர்ந்து ஒற்றுமையாக இருப்போம்.
தித்திக்கும் தீபாவளி..
தீபாவளி என்றால் தீப திருநாள், சின்ன குழந்தைகளுக்கு வெடித்து குலுங்கும் சந்தோஷ நாள்..
புதுப்படம் வருவதை குடும்பமாக குதூகலிப்போம்..
மனமெங்கும் மகிழ்ச்சி ஒலி
மத்தாப்பாய் சிரிக்கட்டும்....
பட்டாசுகளில் எரிவது பணம் என்றாலும்
அதனால் கொதிப்பது
தொழிலாளியின் வீட்டில்
உலை என சந்தோஷபடுங்கள்...
அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர

-------------இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்---------------
« Last Edit: October 20, 2022, 04:36:51 pm by $udh@r »

October 19, 2022, 06:21:28 pm
Reply #5

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: கவிதையும் கானமும்-007
« Reply #5 on: October 19, 2022, 06:21:28 pm »

தீப ஒளித் திருநாளாம் !
தமிழர்களின் மகிழ்ச்சி நாளாம் !!
துன்பம் விலகும் நாளாம்!!!
மகிழ்ச்சி பொங்கும் நாளாம் !!!!

இருளை விரட்டும் நாளாம் !
புது வெளிச்சம் பெருகும் நாளாம்!!
பூச்சட்டிகள் ஒளி உமிழும் நாளாம்!!!
வண்ண வண்ண அகல் விளக்குகள் ஒளிரும் நாளாம்!!!!

மத்தாப்பூ போல் புன்னகை வீசும் நாளாம் !
உறவினர்கள் மகிழ்ந்திருக்கும் நாளாம் !!
புது பட்டாடை அணிந்திருக்கும் நாளாம் !!!
வாழ்த்துக்களை பகிர்ந்து அகம் மகிழும் நாளாம் !!!!

தமிழரின் பாரம்பரிய விழா நாளாம் !
வாழ்வில் இருளை போக்கி புது நம்பிக்கை தரும் நாளாம் !!
இனிப்புகளை வழங்கி மகிழும் நாளாம் !!!
தித்திக்கும் தீபாவளி திருநாளாம் !!!
« Last Edit: October 20, 2022, 12:07:49 am by AslaN »

October 19, 2022, 08:03:15 pm
Reply #6

Sanjana

Re: கவிதையும் கானமும்-007
« Reply #6 on: October 19, 2022, 08:03:15 pm »

பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தான்
தீபாவளி பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும்
பண்டிகையின் களிப்பில் மகிழ்ந்து இருப்போம்
புது வெளிச்சத்தின் வருகைக்காக காத்து இருப்போம்.
நாங்கள் ஒரு தீபத்தை ஏற்றி வைப்போம்
எங்கள் கண்ணில் அதன் ஒளியை இணைத்திடுவோம்
அது எங்கள் வாழ்க்கையில் ஒளிரட்டும்...


இந்து மதத்தின் சிறப்பான பண்டிகை
இருள் நீங்கி ஒளி வீசும் தீபாவளி
இல்லந்தோறும் புது விளக்கேற்றும் தினம்
புத்தாடை அணிந்து பட்டாசு வெடிக்கும் பழக்கம்
கூட்டு குடும்பமாய் கொண்டாடும் வழக்கம்
உறவினர் நண்பர்களோடு மகிழ்ச்சி பகிரும் நாள்
இனிப்புகளை பகிர்ந்து மனம் களிக்கும் தினம்
நரகாசுரனை வதம் செய்து கொண்டாடும் விதமாய்
மகிழ்ச்சி நிறைந்த உணர்வோடு கொண்டாடி மகிழ்வோம் .

சூரிய உதயத்தில் நமக்குள் நிறைந்திருக்கும்
மாய இருள்தனைப் போக்க அறிவு தீயை தீட்டி
அகல் விளக்கினை ஏற்றி வெளிச்சத்தை மூட்டி
நமக்குள் மறைந்திருக்கும் சாதி மத பேதம் பொறமை அகற்ற
வாழ்க்கையின் இருள் நீங்கி ஒளி பிறக்க 
அனைவருக்கும் மகிழ்ச்சி ஒளி வீசும் திருநாள் தீபாவளி பண்டிகை.

எண்ணெய் தேய்த்து குளித்து மனம் மாற்றம் பெற்றிட
புத்தாடைகள் பளபளக்க அணிந்து
புத்துணர்வோடு வெளிவந்து பட்டாசு படபடக்க
உறவினர் வீட்டில் பலகாரம் இனிப்புகள் நாவெல்லாம் சுவைகொடுக்க
ஆதவன் மறைந்தும் மத்தாப்பூ கொண்டு இரவெல்லாம் பகலாக்க
 கறுப்பு வானத்தையும் பட்டாசு கொண்டு வர்ணம் பூச
ஒருவரை ஒருவர் புரிந்து அனைவரும் சமமாய் இணைந்து
உள்ளத்து மகிழ்ச்சியோடு அனைவரும் கொண்டாடுவோம்….
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
....


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக GTC அரட்டையில் உள்ள எனது நண்பர்களுக்கு அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உங்கள் நேரத்தை அனுபவிக்கவும்.
மற்றும் எனக்கு மிட்டாய்(SWEETS) அனுப்ப மறக்க வேண்டாம்.....



   


« Last Edit: October 19, 2022, 09:23:55 pm by Sanjana »

October 23, 2022, 01:34:10 pm
Reply #7

RavaNaN

Re: கவிதையும் கானமும்-007
« Reply #7 on: October 23, 2022, 01:34:10 pm »
இரவும் பகலாய் மின்னிட
பெரியோர்கள் புத்தாடை உடுத்திட
வாண்டுகளோ வண்ண ஆடை உடித்திட
விடலயார் வேட்டும் வெடிதிட
கைகளில் மின்னிடும் மத்தாப்பும்
வீதியில் கேட்டிடும் வேட்டுச்சத்தம்
வானிலே சிதறிடும் வாணவேடிக்கை
என ஊரே  விழாக்கோலம்பூண்டிருக்க
வானமோ வானவில்லாய்  வண்ணமிட

நானோ இங்கேயே
என் உழைப்பின் வெளிப்பாட்டில்
கொண்ட  ஆனந்தம் கண்டேன்
சிரிப்பையும் தொலைத்தேன்
சிதைந்தும் நின்றேன்
வேட்டிற்க்கு வண்ணம் பூசிட
எந்தை குருதியும் சிந்திட
கிருஷ்ணனும்( எந்தை)மாண்டான்
அன்று
கிருஷ்ணன் நரகாசுரனை வென்றதற்கு
இன்றோ பதவி உயர்வும் பெற்றேன்
பாடசாலையிலிருந்து பட்டாசு ஆலைக்கு

இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்
இப்படிக்கு பட்டாசுத்தொழிலாளியின் மகன்
                                   - இணையத்தமிழன்
« Last Edit: October 23, 2022, 01:40:35 pm by RavaNaN »