Advanced Search

Author Topic: அம்மா கவிதைகள்  (Read 54762 times)

August 18, 2025, 02:43:08 am
Reply #15

MDU

Re: அம்மா கவிதைகள்
« Reply #15 on: August 18, 2025, 02:43:08 am »
🌹 அம்மா கவிதை 🌹

உலகம் முழுதும் தேடியாலும்
உனக்குச் சமம் யாரும் இல்லை,
உன் அன்பின் நிழலில் தான்
என் வாழ்க்கை மலர்கிறது அம்மா.

கண்ணில் தெரியும் கண்ணீரைத் துடைத்தவள் நீ,
கனவில் வரும் ஆசைகளைக் கண்டவள் நீ,
உன் சிரிப்பில் என் சுகம் இருக்க,
உன் மடியில் என் சோர்வு தணிகிறது அம்மா.

வானம் தந்தது வெளிச்சமெனில்,
நீ தந்தது உயிரின் ஒளி.
கடல் தந்தது அலைகளெனில்,
நீ தந்தது முடிவில்லா அன்பு.

என் மூச்சின் ஒவ்வொரு துளியிலும்
உன் பெயரே துடிக்கிறது,
என் உயிரின் முதல் தேவதை –
என்றும் என்றும் அம்மா தான். ❤️

MDU