60
« Last post by Sivarudran on October 16, 2024, 07:33:38 pm »
அனைவருக்கும் வணக்கம் !
சிரீய தலைப்பை அளித்து என் சிந்தைக்குள் சிறுத்தையை சீறிப்பாய செய்திருக்கிறீர்கள் .
இதுவே என்றும் என் உரையின் துவக்கம் !
ஐந்து வயதில் மேடையேறிய என் முயற்சி !
அந்த ஆசிரியை எனக்கு தந்த அயராத பயிற்சி !
அடுத்த அடுத்த வகுப்புகளிலும் அதிரும் பேச்சுக்கு அடையாளம் ஆனேன் நான் !
தமிழ்த்தாயின் மடியில் தஞ்சம் புகுந்தேன் நான் !
எத்தனை பெரிய கூட்டத்திலும் ஓங்கி ஒலிக்கும் உன் பேச்சுக்கு ஒலி வாங்கி எதற்கு என்று ஒய்யாரமாக பேச சொன்னவர்கள் பலர் !
பேச்சு மூச்சு இல்லாத வகுப்பறையில் பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுங்கள் என்றதுமே பேச்சே இல்லாமல் பேரானந்தமாய் கை உயர்த்திவிடுவேன் நான் !
பேச்சுப்போட்டிக்கென பக்கம் பக்கமாக ஆசிரியை எழுதிக்கொடுத்த தாளை கையிலேயே வைத்துக் கொண்டு சுற்றுவேன்
தனியாக நின்றுக் கொண்டு கத்துவேன் !
விளையாட்டாய்க் கூட இந்த முறை நீ வேண்டாம் என்று சொன்னாலும் நான்
விட்டதில்லை ஒரு போதும் விவேகானந்த கேந்திர பேச்சு போட்டிகளை !
பின்னோக்கி பார்க்க தேவையில்லை முன்னோக்கி செல்லுங்கள் என்பதுபோல்
முதலோ மூன்றாவதோ பரிசை தட்டிவிடுவேன் எப்படியும் !
என்னால் முடியும் என்றும் நான் நினைத்ததில்லை
என்னால் மட்டும் தான் முடியும் என்றும் நான் நினைத்ததில்லை !
தலைக்கணம் தான் கொஞ்சம்.
என்னை தவிடு பொடியாக்க சக போட்டியாளர்கள் வரும் வரை !
வெற்றியில் ஆடியதும் தோல்வியில் வாடியதும் வர வர வாடிக்கையாகி போனது எனக்கு !
பள்ளி சொல்லி தந்தப் பாடத்தால் பல மேடைகள் பழகிப்போனது எனக்கு !
புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லை
புத்தியில் சிறந்ததாய்
வழக்கம் இல்லை !
மெத்தனமாய் இருந்ததுமில்லை மெனக்கெடுதல் ஏதும் இல்லை !
வாய்க்கு வந்ததை பேசியதுமில்லை
வாய் சொல்லில் வீரனும் இல்லை !
ஆனால் என்
கடமையை செய்ய காற்றிலே கர்ஜித்துவிடுவேன் நான் எப்படியோ ?
உச்ச சாயலில் பேசியே ஓரிரு
உச்சரிப்புகளில் கோட்டைவிடுவேன்.
பலரின் கரகோஷங்களும் பரிகாசகங்களும் பட்டைத் தீட்டியது என்னை !
இன்று காலங்கள் செல்ல செல்ல என் கர்ஜனையே
கசந்துப்போனது எனக்கு !
என் சுவரமே பாரமானது எனக்கு !
ஊடக தாகம் ஊடுருவியே ஊரெல்லாம் சுற்றினேன் !
காசுக்கும் கடமைக்கும் ஏதோ ஒரு கடையில் டீ ஆத்துவதைவிட
என் கனவுகளை நினைவாக்க கடவுளை வேண்டியே காத்து நிற்கும் கற்பூரம் நானே !
காற்றில் கரைந்துவிடுவேனோ தெரியவில்லை ?
எப்படியோ வானொலியிலோ , தொலைக்காட்சியிலோநான் உங்கள்
சுட்டித்தோழன் சிவருத்ரன் என்றே புத்துயுயிர் பெற்ற குரலோடு நான் என்னை சுயஅறிமுகம் செய்து பேசும் நாட்களுக்காய் காத்துக் கிடக்கிறேன் !
என்னுடைய பேராசை தான் இது .
பாவம் நானும் மனிதன் தானே !