இது என்னோட வானவில்🌈
எதாவது வரைந்து கொடு
நான் கலரடிக்கிறேன்",
என்றாள் ஒரு மழலை..
மெனக்கெட்டு ஒன்று முதல் ஏழு வரை
விரல்விட்டு எண்ணிப்பார்த்து
வரைந்து கொடுக்க
சிறிது நேரத்தில் அந்த மழலை
வண்ணம் தீட்டிய வானவில்
காகிதத்தில் மினுமினுத்தது
ஒரே சிகப்பு நிறத்தில்..
"வானவில்லுக்கு ஏழு வண்ணம் தெரியுமில்ல?",
என்று நான் கேட்க,
"இது என்னோட வானவில்
இப்படித்தான் இருக்கும்",
என்று புன்னகையுடன் பதிலளித்தால்
அந்த மழலை....