Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - queen

Pages: [1]
1
உலகில் ரசிக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும்!  நான் அதிகமாக நேசித்தது உன்னுடன் பேசும் போது எனக்கு கிடைக்கும் அந்த  நொடிகளை தான்....

துடிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்துக்கு தவிக்கவும் கற்று கொடுத்தது உன் நினைவுகள் தான்...
உன் நினைவுகள் இல்லாத என் விடியலும் இல்லை...

உனக்காக துடிக்கும் என் இதயமும்... உன்னுடன் பேச துடிக்கும் உதடுகளும்... உன்னை காண தவிக்கும் என்  கண்கள் ஆயிரம் கதை சொல்லும் என் காதலின் ஆழத்தை....

ஏனோ சில கோபம்... ஏனோ சில மௌனம்..
ஏனோ சில தயக்கம்..
நம் காதலில் கண்டேன்... ஆனாலும் அதையும் ரசிக்கிறேன்... ஏன் தெரியுமா கோபம் தீரும்போது மௌனம் உடையும் போது... கெஞ்சி பேசிட நானும் கொஞ்சி பேசிட நீயும்! அன்பு மழை பொழியே நம் காதலும்... கோபத்தின் பின்னால் ஒழிந்து கொண்டிருக்க... உன்னை எப்படி நான் வெறுத்து செல்வேன் அன்பே....

நீ அருகில் இல்லாத போது உன்னை தேடும் கண்கள்... நீ அருகில் வந்தவுடன் இமைக்க மறுக்கும் என் கண்கள்... அன்பு நிறைந்த கண்ணீரோடு வரும் காதல்  அது...  மோதலில் ஆரம்பித்து காதலில் முடியலாம் தவறில்லை...ஆனால் காதலில் ஆரம்பித்து மோதலில் முடியும் காதல் உயிர் உள்ளே சென்று உயிருடன் கொல்லம் சக்தி காதலுக்கு உள்ளது...

தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் காதல் அழகு தான்... ஆனால் ஒரு போதும் தவிக்க விட்டு சென்று விடாதே... அந்த நொடி என் இதயத்தை ரணமாக்கி விடும்....

ஆயுள் முழுதும் கைதியாக இருப்பேன் உன் இதயமோ சிறையாக இருந்தால்.... சண்டை போட்டு உன் மௌனத்தை கூட ரசிப்பேன்... கோபத்தை உடைக்கும் என் காதல் உன் மௌனத்தை விட பெரியது என் அன்பே....

காதலில்  வரும் மௌனத்தை கூட புரியாதவர் பிரிந்து செல்கின்றனர்... புரிந்தவர் அன்பை மேலும் கொடுத்து காதலை வலுப்படுத்துகின்றனர்... காதலில் வரும் கோபம் கூட காதல் அதிகம் இருப்பதால் தான் வருமே தவிற... விட்ட விலக இல்லை...
உண்மையான இதயம் அடிக்கடி குட்டி குட்டி சண்டை போட்டு காதலை ரசிக்க கற்று தரும்! அது நம் காதலில் உள்ளது அன்பே .. புரியும் காதல் என்றும் பிரிவை தேடாது... கோபத்தில் இருக்கும் அன்பை உணர்ந்தவருக்கு என்றும் காதல் வெற்றி தான்....

காதல் சண்டை போட தயாரா!.... கோபத்தில் அன்பை கொடுக்க தயாரா! அப்போ உங்கள் காதல் அந்த கோபத்தையே வென்று விடும்.... இனி உங்கள் அன்பானவர் உங்களிடம் முதலில் அன்பை எதிர்பார்க்காது சண்டை போட தான் காத்திருக்கும்... ஏன் தெரியுமா ... நீங்கள் தான் சண்டையின் பின்னால் அதிக அதிக காதலை கொடுக்க போகின்றீர்களே...😍

உன்னை நினைக்காத நாள் இல்லை!😍
உன்னை நேசிக்காத பொழுது இல்லை💕
உன்னை மறந்த நிமிடமில்லை
உன்னை மறக்கவும் நினைக்கவில்லை💞

2
காற்றோடு கீதம் பாடும்... கிளையோடு அசை போடும் மரத்தோடு  ஒரு காதல் மொழி பேச ஆசை....

பச்சை பசேல் என வயலுக்கு நடுவில் நடந்து செல்லுவது ஒரு சுகம்... நடந்து சென்றே பூக்களை வண்ண பட்டாம்பூச்சிகளை ரசிப்பது ஒரு சுகமே...
 நடந்து ஓய்ந்து மரத்தடியில் ஓய்வெடுத்து உன் தோலோடு தோல் சாய்ந்து  கதை பேசிட ஆசை.....

காற்றுக்கு வேலி இல்லை... கடலுக்கு ஓய்வு இல்லை...
மரங்கள் இன்றி வனங்கள் இல்லை...அந்த வனங்கள் இன்றி மழை நீரில்லை....இத்தனை எத்தனை இயற்கையோடு இணைந்த காதலில் மனிதனின் இதயத்தை கொள்ளையடிக்கும் இயற்கையே ஒரு அழகு தான்....

இயற்கை மரங்கள் அது... கிளைகளில் அசைவுகளில் தள்ளாடும் காற்றோடு குயில்களின் பாட்டு மரத்தடியில் நாம் காத்திருக்க இதயத்தை  தொட்டும் செல்லும் மெல்லிசை ராகங்கள் இயற்கைக்குள் ஒழிந்து கொண்டு பல்லாயிரம் கதை பேசுகின்றது ...

இயற்கை தாயின் பெருந்தன்மைக்கு அளவே இல்லை...
நம் மன அமைதிக்கு அவள் தான் உண்மையான அக்கறை காட்டுகிறால்...

தோழியாக அன்னையாக காதலியாக மாறும் அவள் ஒரு அருமருந்து

மண்ணுக்குள் இருந்த  என்னை மரமாக மாற்றிய மழைத்துளியே எங்கே சென்றாய்... நான் மடிந்தேன் என்று நினைத்தாயோ..
என்னை மரமாக மாற்றியே மனிதன் மாறிவிட்டான்.. நீ விண்ணில் இருந்து இறங்கி வா மண்ணை காப்பாற்ற...

இயற்கையின் வாரிசு நாம்... தேசத்தை நேசிக்க முதலில் மண்ணை காக்கும் மரங்களை நேசி...  இதை பற்றி கொஞ்சம் யோசி...
இயற்கையோடு சென்று கொஞ்சி பல கதைகளை பேசி....
உன் காதலை மரங்களை கட்டி தழுவி இதயத்தோடு இணைத்து பார்.... உனக்குள்ளே ஒரு காதல் ராகம் மரங்களோடு உருவாகும் ....

நீ தனிமை வாடினால்... சென்று விடு ஒருதடவை மரங்கள் தரும் அசைவுகளின்.... அவை வாய் பேசாவிட்டாலும் மனதோடு இணைந்து  பல உண்மை கதை சொல்லும் வல்லுமை மரங்களுக்கு உண்டு....

ஒரு நாள் மனித காதல் விட்டு பிரியலாம்... ஆனால் மனிதனுடன் நடமாடும் மரங்கள்  இந்த பூமியின் மீது வைத்த காதல் விட்டு பிரியாது...

உனக்குள்ளே துடிப்பது ஒரு இதயம்.... இந்த பூமியே துடிப்பது இயற்கையின் இதயம் மரங்களின் உயிரோட்டம் தான்... அவற்றை அழிக்க நினைத்தால் அழிவது நாம் தான்....
பல கை கொண்டு கட்டியணைக்க  காத்திருக்க்கின்றது விருட்சத்துடன்... உன் மூச்சு வழியாய் மெல்ல நுழைந்து... உன் மூச்சை ஒரு நாள் காற்று இல்லாமல் ஒரு நிமிடம் நிறுத்தினால் மானிடா அப்போது உணர்ந்து கொள்வாய் மரத்தின் காதல் என்னவென்று.... என்னை நீ நேசிக்க ஆரம்பித்ததால்... உனக்கான சுவாசத்தை பிரபஞ்சம் முழுவதும் தருவேன் இது தான் நான் கொண்ட காதல்...

காதலுடன் இணைத்து காதல் கதை பேசிட அழைக்கிறேன் நான்... நான் தான் உம்மை காத்திடும் மரங்கள் எனக்குள்ளே ஒரு இதயம் இந்த உலகத்துக்காக துடித்து கொண்டு தான் இருக்கின்றது......இதை நீ மறக்க நினைத்தாலும் நினைக்க மறக்காதே  என் மானிட ....

3
         ★வீரமனம் கொண்ட தைப்பொங்கல்★

பொங்கல் திருநாளாம் அது எங்கள் திருநாளாம்....
தங்க தமிழனின் தனிகரற்ற ஒரு நாளாம்...

இயற்கைக்கு நன்றி சொல்ல வந்த தமிழனின் பண்பாட்டை.. பாருக்கே எடுத்து சொல்லும் ஒரு நாளம் இன்று.....
அதில் நானும் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் உங்களுடன் இணைந்து....
 தமிழன் இயற்கைக்கு நன்றி சொல்ல நினைத்தான்...நான் அந்த தமிழனுக்கு நன்றி சொல்ல நினைக்கின்றேன்....

உயிர் வாழ உணவு தரும் உலவனுக்கும்....
உறுதுணை புரியும் கதிரவனுக்கு....
உழுது உழைக்கும் மாட்டிற்கும்... நன்றி சொல்ல வந்த நாளாம் திருநாளாம்....

பசுமாட்டை குளிப்பாட்டி...
கொஞ்சும் சலங்கை கட்டி....கொம்பில் வண்ணம் பூசி... உவகையுடன் உணவூட்டும் திருநாளாம்..

மஞ்சள் கொத்தோடும் மாமரத்து இழையோடும்
இஞ்சி தண்டோடு
எறும்பூறும் கரும்போடு வட்ட புது பானை வாயெல்லாம் பால்பொங்க வந்த திருநாளாம் இன்று....

பொங்கல் நாளிலே வீரத்தை நினைவூட்டும் வீரனை தேடி வந்ததே ஜல்லிக்கட்டு....

ஜல்லிக்கட்டு காளை அது துள்ளிக்கிட்டு ஓடுது.... தன்னை அடைக்கிட இங்கே எவரும் உண்டோ தேடி தேடி பார்க்குது....  வென்று விட வந்தோரை முட்டி முட்டி சாய்க்குது.... வீரமில்லா சோர்ந்தவனை கலத்தை விட்டு விரட்டுது... துணிச்சலோடு வந்தவனை நேர் நின்னு எதிர்க்குது... சுற்றிநின்னு பார்ப்பவர்களுக்கு புது உற்சாகமூட்டுது...

தோற்றாலும் கடைசியிலே வீரம் வெல்ல வைக்குது....
வென்ற காளை மனிதர்களை நினைவில் நின்று மிரட்டுது....
சரித்திரத்தில் தடம் பதித்து காலம் கடந்து நிற்குது....  ஜல்லிக்கட்டு காளை அது என்றும் போற்றத் தக்கது...

அன்பு பொங்க
ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க
இனிமை பொங்க
என்றும் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்...

Pages: [1]