See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: கவிதையும் கானமும்-058
கால் முளைத்த மலர்களெல்லாம் தோட்டங்களில் நடமாடுகின்றன ...! மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி ! என் மகளுக்காக..... உன்னை கையில் ஏந்தி கொஞ்சுகையில் என் நினைவலைகளில் சில சிதறல்கள் இதோ.. எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ நீ எனக்கு மகளாக பிறந்தாய்... ஒரு கோடி வண்ணத்து பூச்சியின் வண்ணங்களை அழகு முகத்தில் கொண்டாய்.... உந்தன் இலவம் பஞ்சு பாதம் உதைக்க எந்தன் கர்வம் போகும், முகத்தில் அம்மாவின் அழகை கொண்டாயே அம்மா.... எந்தன் அம்மா கனவில் காணாத புதையல் தந்தானே பிரம்மா அந்த பிரம்மா..... எல்லை காணாத பறவையின் சிறகில் ஏறிப்பறப்பாயே வாழ்விலே வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன வானம் கூட எல்லை இல்லையே பூமித்தாயே நிலவைபோலே உன்னை சுற்றி.. என் வாழ்கையே நிலத்தில் நீ வாழ உரங்கள் போலாவேன் செடியே மல்லி செடியே நீ பூக்கும் நேரத்தில் மஞ்சள் நீராட்டி மகிழ்வேன் நானும் மகிழ்வேன்.... பூக்கள் நீ சூடி பாக்கள் நான் பாடி உந்தன் திருமணம் நடக்குமே இறைவனே உந்தன் திருமணம் கண்டு வியந்துபோகும் படி செய்வேனே உன்னை பிரியும் அந்த நேரம் நெஞ்சில் இடியுடன் மழையுந்தான்.. என் உயிரினில் ஊடுருவிக் கண் சிமிட்டும் கடவுளவள்... என் ஆனந்த ஆணணுக்களின் ஆர்ப்பரிப்பவள் எந்தன் ஜீவனின் ஜீவன் ஈன்றெடுத்த ஜனனமவள்.... என் அன்னையின் அன்பை நீக்கமற புகட்டியவள்.... அவள் - விரல்பட்ட விடம் இனித்து குரல்கேட்ட விடம் கனிந்து இதழ்பட்ட விடம் கரைந்து என் இதய நரம்புகளை யாழென மீட்டுபவள்.... காமத்தில் கலவாத என் கண்ணின் முத்தம் - என் கண்மணியின் முத்தம்... செல்ல மகள் உதிர்க்கும் தருணம் சில்லிட்டுத் தெறிக்கும் உன் அன்னையின் இரத்தம்... பொன்மகளவள் புன்னகையின் வெளிச்சப் பூவை இரவல் வாங்கிட இளமதியோடு இன்னபிற கோள்களும் தவம் கிடக்கும் தத்ரூபம்... எந்தன் வாழ்வியக் கண்ணீரின் காயங்கள் ஆற்றிடும் அதிசயம் அவள் மார்புதைக்கும் பாத ஸ்பரிசத்தினால்... அவள் வரும்வரை நேரம் போகவில்லை வந்தபின் நேரம் போதவில்லை - அவள் இன்னிசை மழலை மொழி கேட்டு களித்திட... தென்பாண்டித் தெம்மாங்கும் யாசகம் கோரும் - மழலையவள் உச்சரிக்கும் பைந்தமிழின் சங்கீதத்தில்........ எடுத்துக்காட்டு உவமையணி ஏங்கி நிற்கும் எழில் பதுமையவளின் சேட்டைகளை எடுத்தாள்வதற்கு... ஆக, தமிழன்றி வேறெந்த மொழியும் இலக்கணம் சமைக்க வில்லை.. ஆம் இந்த தமிழின் கவி வரிகளும் கூடவே... தாரகையவள் உலவும் அழகியலில் .... இங்ஙனம் வாழ்க்கையின் வழியில் வந்தவள் வாழ்க்கையாகி போகிறாள் - அந்திமத்தின் நிறைவேறாத ஆசைகளின் முற்பகுதியில் வாழ்ந்துவிட்டு பிற்பகுதியில் விட்டு பிரிந்து செல்லும் என் மகளுக்காக........ September 02, 2025, 06:29:16 am |
1 |