Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - NiLa

Pages: [1]
1
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் டயாபெட்டீஸ் நோய் வருகிறது. இந்த டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க வில்வ இலை உதவுகிறது. இந்த இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்தாலே போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

தயாரிக்கும் முறை


முதலில் 7 வில்வ இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி அந்த தேநீரை தினமும் 3 முறை பருக வேண்டும்.



பக்க விளைவுகள்

இந்த வில்வ இலையால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பக்க விளைவுகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கருவுற்ற பெண்கள் இந்த வில்வ இலைகளை சாப்பிடக் கூடாது.


இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் நீங்கள் ஏற்கனவே மருந்து எடுத்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்துவது நல்லது.





2
முகப்பரு

நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவி, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.

சரும வறட்சி

சரும வறட்சி பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

மென்மையான உதடுகள்

மென்மையான உதடுகள் நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும். உங்கள் உதடுகள் ஒரே பயன்பாட்டில் பிங்க் நிறத்தில் காட்சியளிக்க வேண்டுமானால், சில துண்டுகள் பீட்ரூட்டை வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். பின் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயில் 1 சிட்டிகை பீட்ரூட் பவுடர் சேர்த்து கலந்து, உதட்டின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் ஒருமுறை செய்து வாருங்கள்.

மேக்கப் ரிமூவர்

மேக்கப் ரிமூவர் கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.

குதிகால் வெடிப்பு


குதிகால் வெடிப்பு நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.

சரும கருமையைத் தடுக்க...


சரும கருமையைத் தடுக்க... கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

வறண்ட தலைமுடி

வறண்ட தலைமுடி உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

கருவளையம் நீங்க...

 கருவளையம் நீங்க... உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.


3
கற்றாழை ஜெல் நமது கூந்தலுக்கு எந்தெந்த வகைகளில் பயன்படுகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
கூந்தல் வளர்ச்சி

கற்றாழை ஜெல்லில் புரோட்டியோலைடிக் என்சைம் உள்ளது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பட்டு போன்ற கூந்தல்

கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை உடனடியாக பட்டு போன்று மென்மையாக மாற்றி விடும். எனவே உங்கள் கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும். இனி எந்த ஹேர் ஸ்டைலையும் நீங்கள் போட்டு அசத்தலாம்.
கூந்தல் அடர்த்தி

இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.

அழற்சி

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சி போன்றவற்றைப் போக்குகிறது.
பூஞ்சை எதிர்ப்பு பொருள்

கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.
போஷாக்கு

கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஈரப்பதம்

கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதம் மற்றும் நீர்சத்தை கொடுக்கிறது.
வளரும் இடங்கள்


கற்றாழை பேக்

தேவையான பொருட்கள்

    தேங்காய் எண்ணெய்
    கற்றாழை ஜெல்
    பயன்படுத்தும் முறை

இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தல் அசைந்தாடும்.
பயன்கள்

கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். எனவே இனி பிளவுபட்ட முடியை நீங்கள் வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல போனால் கற்றாழை ஒரு ஹேர் சூப்பர் ஹீரோ என்று சொல்லலாம். என்னங்க இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க. இனி நீங்களும் ராபுன்ஷல் கூந்தலழகி ஆகலாம்

4
நட்புக்கு நன்றி

Athigama pesuvathillai
Endralum,
Alavu kadantha
Anbai kaattum sila Natpugal
Azhaganavai...!!!

Nandri...!!!
Natpukku vendam endralum
Nalla manathukkaga...!!!

Pages: [1]