See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: கவிதையும் கானமும்-063
குறிப்பு:- நான் இதில் குறிப்பிடப்பட்ட படத்தை கொண்டு தொலை தூரத்தில் உள்ள இரு ஆன்மாக்களின் காதல் புரிதல் உரையாடலை கருத்தில் கொண்டு எழுதிய கவி .. குறிப்பிட்ட பயனர்களையோ தனி நபர்களையோ காயப்படுத்தும் வகையில் யாம் எமது படைப்பை வெளியிடவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் ...கற்பனை படைப்பாயினும் கதை மாந்தர்கள் நிஜமாகும்... தொலை தூரத்தில் வெளிச்சம் நீ நீயும் நானும் நிலவும் நதியும் போல நிலவின் உருவம் நதி மீது வானத்தின் நீலம் காணது வார்த்தைகள் வசப்படவில்லை உள்ளத்தில் உதிக்கும் வர்ணனை சொல்ல.., தொலைதூரத்தில் நீ உன்னில் தொலைந்து போகிறேன் நான்.. நிசப்தமான இரவில் உன் சப்தம் கேட்டாலே துள்ளி குதிக்கும் சிறுபிள்ளை போல எனது உள்ளம்... நீ இல்லா இரவின் நொடிகள் தூக்கமற்று போகிறதேனோ..? உலகின் அழுத்தங்கள் ஆயிரம் மனதில் வருத்தங்கள் ஆயிரம் கண்மணி உன் சப்தம் கேட்ட நொடி மறைந்து விடும் நூறாயிரம் துன்பங்கள் நான் அமைதியாக நித்திரை கொள்வேன். அமைதி கொள்ள ஆன்மா தேடும் உறைவிடம் நீ குயிலின் கீச்சிடும் குரலோ மயிலின் அகவலோ சிறப்பாகுமோ உன் குரலொலி முன்னே..? நான் எங்கே என்று ஆவலாய் தேடும் உன் அன்பிற்கு ஈடாகுமோ இப்பிரபஞ்சம்..? என் உலகில் என்னவளின்றி ஏதுமுண்டோ..? சிரிப்பாய் நீ சில நேரம் அச்சிறு சிரிப்பில் என்னை சிறை வைத்து செல்வாய் நான் ஆயுள் கைதியாவேன் உன் சிறையில் மட்டும்.. சில நேரம் நீ அழுவாய் அத்தருணம் மரணத்தை உணர்வேன் நான்.. குறுஞ்செய்தி வருகைக்காக குறும்புகள் செய்ததுண்டு.. ஓயாத உரையாடல் நம்மில் பல உண்டு.. சண்டைகள் இல்லா காதலுண்டோ..? ஆம் நம் சண்டைக்கு காரணம் நாம் அறிவோம் .. நீ வேண்டுமென நானும் நான் வேண்டுமென நீயும் நித்தம் ஆயிரம் சண்டைகள் செய்ததுண்டு.. உன் சுதந்திரத்தில் நானும் என் சுதந்திரத்தில் நீயும் கட்டுபாடுகள் விதித்தில்லை.. உன்னை நீயாகவும் என்னை நானாகவும் நாம் ஏற்றுக் கொண்டோம்.. பொறுத்து போவதும்மில்லை மாற்றிக்கொள்வதுமில்லை ஏற்றுக்கொள்வதே காதலென்பதை உணர்ந்ததாலே சண்டைகளே நம்முன்னு சரண்ணடைந்தது.. திகட்டி போகும் அதீத தேடல் அதீத பாசம் அதீத காதல் இவைகளை நான் நீ சொல்ல கேட்டதுண்டு.. ஆனால் காணது காணது திகட்டவும் செய்யாது என்று உலகில் ஒன்று உண்டெனில் அது எனக்கு நீயாகவே இருப்பாய்.. குறை நிறைகள் கண்டு கலக்கம் கொண்டது இல்லை நம்மில் நாம் ... சொல்ல வார்த்தைகள் இல்லை நீ பேசும் போது நான் மெளனமாக இருந்தால் உரிமையுடன் அதட்டு வாய் நீ கடிந்து கொள்வதும் அழகடியே.. எனக்கு புரிதல் குறைவு எப்பெண்ணும் அவ்வாறு பல முறை பதில் கூறாள்.. நீயோ புரியும் வரை உடனிருப்பாய்.. விலகிச்செல்ல காரணங்கள் பல உண்டு .. உன்னை கோபத்தால் நான் உடைத்த போதும் உன் அன்பால் என்னை நீ மட்டுமே தேற்றினாய்.. மாறிவரும் உலகில் பலர் உறவை மதிப்பதில்லை என்னவள் நீயே நம் உறவை பெரிதென காத்து நின்றாய்.. பொன்னோ பொருளோ மண்ணோ மனையோ எதுவும் ஈடாக உன் முன்னே.. என் காலையின் தொடக்கம் இரவின் உறக்கம் உன்னில் தொடங்கி உன்லே முடிவடைய வேண்டும் மரணம் வரையல்ல நித்தியமாக நீ இருக்க நான் வேண்டுகிறேன் இறையை.. காதல் வார்த்தையல்ல வாழ்வியல் .. மங்கி போவதும் மறைந்து போவதும் காதாலல்ல.. என் காதல் யாதென பெண்ணே உன்னிடம் சுருங்கச் சொல்வதெனில் நாளும் வளர்கிற உன்மீது பொழியும் பாசமும் போதாது போதாது .. நீ திகட்டா அமுது நீ எனக்கு போதாது போதாது.. காதலில் விழுந்தேன் என்று யாம் சொல்லோம் நீ என்னுள்ளும் யாம் உன்னுள்ளும் மூழ்கி போனோம்.. பல பெண்களை நான் காணலாம் என் நினைவெல்லாம் நீ என்பதால் சலனம் கொள்ளாது என் மனம்... பல ஆண்கள் உன் கவனத்தை கவரவும் முயற்சிக்கலாம் ஆனாலும் பலனில்லை சலனம் கொள்ளாது உன் மனம்.. நான் ராமன் அல்ல அசுரன் ஆயினும் என்னவளே உன்னால் உன்னதமானேன். என்னிருளொளி உணர்ந்தவள் நீ உன்னடமே உண்மையை காண்கிறேன் .. பயம் குழப்பம் நம் உறவில் இல்லை இருள் சூழினும் தொலை தூரத்தில் வெளிச்சம் நீ...❤️💕🕊️✨ January 13, 2026, 11:45:18 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-063
"திரை தாண்டிய தேடல் நீயடி" "திரையில் மலரும் என் காதலும் நீயடி" "இரவின் மெல்லிய இருளில், என் கைப்பேசி ஒளிர்ந்திருக்க" "இரவின் மடியில் உலகம் சாய்ந்திருக்க" "என் கண்களில் உன் முகம் மட்டுமே நிறைந்திருக்க" "என் கண் இமைகள் மூடாமல் உனக்காய் விழித்திருக்க" "என் இதயமோ உன்னிடம் பேச துடித்திருக்க" "உன்னிடமிருந்து எப்போது அழைப்பு வருமென என் மனம் தவித்திருக்க" "நட்சத்திரங்கள் மின்னும் வானம் ஒருபுறம்" "நம் நேசம் பேசும் திரை மறுபுறம்" "இருள் சூழ்ந்த இரவினில் என் இதயத்தில் உந்தன் நினைவு" "அருகினில் நீ இல்லா நேரத்திலே இந்த மின்னணுத் திரை தான் நம் உறவு" "சுவரோடு நான் சாய" "திரையோடு நீ பேச" "என் கையில் இருக்கும் சிறு மின்னணுத் திரையில் கண்ணாடிப் பிம்பமாய் உன் முகம் பார்க்கிறேன்" "ஜன்னல் வழியே நிலவு நம் சல்லாபத்தைக் கண்டு சிரிக்குதே" "தனித்தனி அறையில் நாம் இருந்தாலும் நம் காதல் மட்டும் காற்றோடு இனிக்குதே" "தனிமைச் சிறையில் நான் வாடினாலும், உன் குரல் கேட்கும் அந்தக் கணம் ஆனந்தமாகும்" "சில நேரங்களில் நம் மௌனங்கள் கூட மொழியாகும்" "இந்த நள்ளிரவு நமக்கொரு வழியாகும்" "விடியும் வரை இந்த மின்மினி வெளிச்சம் நம் காதலைச் சொல்லும் ஒரு சாட்சியாகும்" "நம் இருவரின் அறைகள் நடுவே பெரும் தூரங்கள்" "ஆனாலும் குறையவில்லை நம் காதலின் ஈரங்கள்" "மைல்கல் தூரத்தில் நாம் பிரிந்திருந்தாலும், காதலெனும் நூலில் நாம் பிணைந்திருக்கிறோம்" "உன் புன்னகையின் சிரிப்பொலி கேட்டு என் இதயம் மகிழ்ந்திட" "தூரம் என்பது இங்கே சுருங்கிப் போகிட" மின்னணுத்திரைகள் கூட நமக்கு வரமாய் மாறிட" "உன் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதையாய்" "என் பார்வைகள் அதை ரசிக்கும் ஓவியமாய்" "காலங்கள் கடந்து நின்றாலும் நம் காதல் மட்டும் மாறாத காவியமாய்" "பகலில் நடந்த சின்னச் சின்ன கதைகளும், ரகசியங்களும் ஒவ்வொன்றாய் நீ சொல்லச் சொல்ல அங்கே சந்தோஷ மழையில் நான் நனையத் தொடங்கினேன்" "நீ அழகாய் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்தச் சத்தம், என் அறையின் தனிமையை அறவே விரட்டுதடி" "காதலோடு கிண்டலும், கேலியும் நம் பேச்சில் கலந்திருக்க" "நேரம் போவதே தெரியாமல் நாம் இருவரும் தூங்காமல் விழித்திருக்க" "நம் உரையாடலில் என் நெஞ்சமோ சந்தோஷ வெள்ளத்தில் பொங்குதடி" "சார்ஜ் குறைகிறது என நீ எச்சரிக்க" "காதல் குறையவில்லையே என நான் வம்பு இழுக்க" "மின்சாரக் கம்பிகள் வழியே பாயும் மின்னோட்டமாய், நம் மகிழ்ச்சி இருபுறமும் கரைபுரண்டு ஓடுதடி" "இந்த நள்ளிரவு உரையாடல்கள் ஓயப்போவதில்லை தூக்கம் நம்மைத் தழுவும் வரை அல்ல" "நம் காதல் உலகை ஆளும் வரை" "நூறு ஜென்மம் எடுத்தாலும் நான் உன் மேல் வைத்த காதல் குறையாது" "உன் முகம் பார்த்து நான் வாழ இந்த ஒரு யுகம் போதாது" "விண்மீன்கள் உதிர்ந்து போனாலும், நம் விழி பார்த்த காதலின் ஒளி என்றும் மங்காது" "சுவர்கள் மறைந்து, திரைகள் உடைந்து, நம் இருவரின் கரங்கள் கோர்க்கும் அந்த நிஜமான விடியலுக்காய் காத்திருக்கிறது என் உயிர்" "நம் விரல்கள் கோர்க்கும் அந்தப் பொன்னாள் வரை, காலத்தின் ஒவ்வொரு நொடியும் உன் நினைவால் நிரம்பட்டும்" "மின்னணுத் திரையின் எல்லைகள் தாண்டி, நம் காதல் அண்டத்தின் எல்லைகளைத் தேடிப் பறக்கட்டும்" "நம் நள்ளிரவு உரையாடல்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை இருண்ட இரவில் ஒளிர்ந்த அணையாத காதல் தீபங்கள்" "விடியலை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்" "ஒவ்வொரு தடையும் நம் காதலின் பாதையில் தூசியாகட்டும்" "இருள் விலகிச் செல்லட்டும்" "புதிய விடியல் புலரட்டும்" "நம் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்" "நம் உறவு என்றும் பிரகாசமாகட்டும்" "இணையம் இன்றி உலகம் இயங்காது என்பார்கள், உன் இணை இன்றி என் இதயம் இயங்காது" "என் உலகம் உன்னைச் சார்ந்தே சுழல்கிறது" "உன் வருகைக்காக இந்த இதயம் ஏங்குகிறது" "உன் பிரிவின் வலி தாங்காமல் தவிக்கிறேன்" "நம் காதலை நெஞ்சில் சுமந்து உனக்காய் காத்திருக்கிறேன்" "சீக்கிரம் வந்துவிடு, ஒவ்வொரு நொடியும் விடியலாய் புலர" "என் வாழ்வில் வசந்தம் மலர" "நீ வருவாயென உனக்காய் காத்திருக்கிறேன், என் பிரியமானவளே, என் அன்பிற்குரியவளே, என் என்னவளே" 💜💜 சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!! இப்படிக்கு, உங்கள் MISTY SKY 💜💜 January 14, 2026, 06:38:03 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-063
தூங்காத இரவுகள் காதலில் விழுந்தபின் தூக்கமும் களைந்து போகும், கைபேசியே நமக்கு உயிராகும். நமது வாழ்வில் நடந்த ஒன்று – இரவில் நிலவையே தோற்கடித்து உறங்காமல் குறுஞ்செய்தி அனுப்பிய நாட்கள். நீ ஒரு ஓரத்தில், நானோ வெகு தூரத்தில்… நம்மை இணைத்தது அந்த சிறிய கைபேசியே. இரவு பகலாகி, விடிய விடிய குறுஞ்செய்திகள் செய்து, பல நாட்கள் கொன்றோம் கைபேசியை மின்கலம் இல்லாமல். ஒரு நாள் முழுவதும் கையோடு இருக்கும் அந்த கைபேசி, “நீ என்னோடு இருக்கிறாய்” என்ற உணர்வைத் தருகிறது. என்னைச் சுற்றி இருள் ஆட்கொண்ட வேளையில், உனது ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் முகத்தை ஒளிரச் செய்கிறது கைபேசியின் வழியே. கைவிரல்களின் ரேகை அழிய அழிய செய்தி அனுப்பினேன், அழிந்தது ரேகை மட்டுமல்ல பெண்ணே கைபேசியின் உள்ள எழுத்து அச்சுகளும்தான். “என்ன இது, கைபேசிக்கே கவிதை எழுதுகிரேனோ ?” என்று எண்ணாதே… நமது இரு இதயங்களின் ஓசை ஒளிர்வது அந்த கைபேசியிலிருந்துதான். இதயம் இல்லை, உயிரும் இல்லை அந்த கைபேசிக்கு அனால் பல காதலர்களின் இதயங்களை இணைத்தது. காதலர்கள் முதன்முதலில் பகிர்ந்த முத்தமும் கைபேசியின் வழியேதான், அதுவும் உண்மையில் கைபேசிக்குத்தானே… எல்லைகளை கடக்காமல், காதலை மட்டும் சுமந்து சென்ற அந்த தூங்காத இரவுகள்… என்றும் அன்புடன் நீலவானம் January 14, 2026, 06:39:26 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-063
தொலைவில் நீ, தொலைந்து போனேன் நான்! தாக்கும் தூரத்தை நீடிக்கும் பள்ளத்தாக்கதை சிறியதாக்குகிறேன் உரசும் கல் கிடங்கு நிரம்பி, கொடுமுடியில் நிமிர்ந்து நிற்கும் மலை தொந்தரவு செய்தே, உந்துமுயர்ச்சி எய்தேன் கற்கள் துள்ளி எழவே, சரிந்து உருளவே ஒன்றோடு ஒன்று மோத, கூச்சலின் இரைச்சல் ஓத, மோதலின் எல்லை மீறியபடி, உறியடித்த உடைப்பில் பொங்கும் கனல் எரிச்சல் மீழாமல் சுடர செய்கிறது… மல்கும் கண்ணீர் முறையிட முயன்றும், சுடரின் தழல் ஓய்வதாக இல்லை… உன் எல்லையை நெருங்கவே இத்தகைய போராட்டம், சுடராக தோன்றி ஒலி படலமாய் விரிகிறது உருவாக்கியவன் நான் அல்லவோ… கலைக்க முயல்கிறேன் எதிர்பக்கத்தை தொலைத்துவிட்டேன்… போராட்டம் இயலாமல் சோர்வில் தவிக்கிறேன்… சட்டென்று…!! அனல் கூட்டும் ஒலி பட்டறை புகுந்த மணல் போன்ற மென்மை என்னை வருடுகிறது! சுடரின் எரிச்சல் மறைகிறது, ஒரு குரலின் ஓசை மலர்கிறது… “அன்பே…நான் தொலைவில் இருக்கிறேன்…ஆம்! ஆனால் உன்னை தொலைக்கவில்லை. நம் இடையில் தழுவும் நினைவுகளின் ஆழம் உன்னை சூழ்கிறது…தொலைந்தது போல உணர்கிறாய்… கவலை வேண்டாம், அன்பே! 🤗 நம் இடையே அளவிடும் வரை தூரம்…ஆனால் அளவிட முடியாத நெருக்கத்தில் உலாவும் நினைவுகள்! 😊…என்றும் தொடரும்! January 19, 2026, 11:15:26 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-063
உன் அன்பின் பிரகாசத்தை உணர்ந்தேன் நீ எனக்காக சேகரித்து தந்த உன் msg யில். கலங்கித்தான் போகின்றது கண்களும் உன்னை காணமலிருந்து காணும்போது. கொண்டு சென்றுவிடு உன் நினைவுகளை என்னை கொன்று திண்கிறது உன் மொபைல் ரிங்டோன் ஒலியில். நானிருக்கின்றேனென்று சொல்லாமல் சொல்லும் உன் அரவணைப்பில் உடைந்த மனமும் நிறைந்தது வானவில்லிலும் காணாத அழகிய நிறம் உன்னில் கண்டேன். மொழியில் பேசிடு விழியில் பேசி வீழ்த்தாதே உனக்கான காத்திருப்பில் உணர்ந்தேன் உன்னில் நான் தொலைந்திருப்பதை தொலைபேசியில் உன் புகைபடம் இருபதால் என்னோடு நீயில்லையென்ற எண்ணமே எனக்கெழுந்ததில்லை. விட்டுவிட்டு துடிக்கும் இதயமும் விடாமல் துடிக்கின்றது உன் msg யில் மறக்க முடியாத பிம்பம் நீ தவிர்க்க முடியாத நினைவும் நீ. நீயின்றி என் வாழ்க்கை முடியப்போவது இல்லை நீயின்றி வாழ்வு வந்தால் நான் இருக்கப்போவதில்லை. மெல்ல மெல்ல சாய்கின்றது மனம் உன்பக்கம் உன் விழிகளென்னை வீழ்த்த… msg அனுப தாமதித்து தவிக்கவிடாதே தாங்காது இதயம். எனக்காக நீயிருக்கின்றாய் என்ற உணர்வே வாழ்க்கையை அழகாக்கி கொண்டிருக்கின்றது ஒவ்வொரு நொடியும். விண்ணில் உலாவரும் நிலவாய் என்னுள் உலாவருகின்றாய் நீ…! என்னுள் உலாவும் உனக்காக என்றுரும் நான் உன்னுள் நிலவாய்! January 19, 2026, 12:45:16 pm |
1 |
|
கவிதையும் கானமும்-066
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும். இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும். 2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது. 4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கவிதையும் கானமும்-066 இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம். மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள். April 07, 2026, 06:26:13 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-066
நீ கொடுத்த காப்பியின் மனத்தையும் அதில் வரும் ஆவியில் என் இதயமும் ஆவியாய் போகிறதே மாமா என்று நீ அழைத்த நொடியினில் என்னை மறந்து உன் அழகை ரசித்த அந்த நொடியில் என் நெஞ்சில் தோன்றிய சில வரிகள் மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான் நீ மாமா மாமா வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன் இதுவரை இன்பத்தையே அறியாதவன் நான் நீ மாமா மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன் மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு மாமா மாமா வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம் மாமா மாமா வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா மாமா மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் நான் வாழ!!! எப்போது நீ அழகு ![]() நிம்மதி நான் தேடி உன்மடி சாயும்போது என் தலை நீ கோதி ஆறுதல் சொல்கையில் அடி பெண்ணே நீ அழகு... ஆயிரம் முறை முயன்று சில முறை நான் தோற்று தேம்பி அழும் நிலை கொண்டு உன் தோள் நான் சாய ஆறுதல் சொல்லும் போது அடி பெண்ணே நீ அழகு... அன்பாய் உன் குறு நகையும் அம்மாவின் நினைவு சொல்லும் உன் அன்படி ஆயிரம் வேண்டும் எப்போதும் நீ வேண்டும்... என்று நீ உணர்ந்து எனக்காக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையும் நீயும் எப்போதும் அடி பெண்ணே எந்நாளும் எனக்கழகு... April 08, 2026, 07:15:11 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-066
மௌனத்தில் நனைந்த நினைவுகள் எழுத்து பிறக்காத விரல்களில், மெதுவாய் தொட்ட ஒரு தொடுதல்— அந்த நொடியே என் வாழ்வின் முதல் நினைவாய் நின்றது… அந்த தொடுதல் போயினாலும், அதன் வெப்பம் மட்டும் இன்னும் உள்ளத்தில் கரைகிறது… பேசாத சொற்கள் கூட, ஒரு சிரிப்பின் ஒளியில் உயிர் பெற்ற நாட்கள்… அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும், என்னுள் ஒரு உலகம் கட்டியது… தொலைவில் நின்ற ஒவ்வொரு தருணமும், அந்த உலகத்தை மெதுவாக உடைத்தது… புரியாத பாடங்கள் கூட, ஒரு குரலில் தெளிந்தது… இன்று அந்த குரல் மட்டும் இல்லை… விழுந்த தருணங்களில், எழுப்பிய கரம் நினைவில் இருந்தாலும், அந்த கரம் இனி இல்லை என்பதே வலி… பேருந்து பயணங்களில், நெருக்கமாக இருந்த அமைதி— பேசாமல் கூட பல உணர்வுகள் சொன்னது… பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த பார்வைகள், இன்று நினைவாக மட்டுமே மீண்டும் வருகிறது… தொடர்வண்டி பயணங்களில், கூட்டத்தின் நடுவிலும் ஒரே உருவம் தான் தெரிந்தது… இன்று அதே கூட்டத்தில் நின்றாலும், கண்கள் தேடும் உருவம் இல்லை… அருகில் இருந்த நேரம் நின்றது, இன்று நேரம் மட்டும் ஓடுகிறது… நிலையம் தோறும் பிரிந்த தருணங்கள், இன்று முடிவில்லா வெறுமை… சொல்லப்படாத காதல், மௌனத்தில் மறைந்தாலும்— இதயம் அதை மறக்கவில்லை… நினைவுகள் மட்டும் மீதமாய், மெதுவாய் கண்ணீராக மாறுகிறது… காதல் என்றால்— பிரிந்த பின்பும் உள்ளத்தில் உயிரோடு இருப்பதே… ✨ April 08, 2026, 09:29:07 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-066
நீ என்னை பார்ப்பாயா ஒளிந்து கண்டேனே... மறைந்து நடந்தேனே... கரைந்து சென்றேனே... என்னை பார்ப்பாயா ? தயங்கி கிடந்தேனே... மயங்கி விழுந்தேனே... இயங்கி மீண்டேனே... என்னை பார்ப்பாயா ? நீ செய்த குறும்பையுமே... என் மனசு விரும்பியதாமே... என்னிடம் திரும்பவில்லையே... என்னை பார்ப்பாயா ? உன்னோடு பேசும் எந்த நாள்... என்னோட வாழ்வோ அந்த நாள்... சந்தோசம் பொங்கும் இன்ப நாள்... என்னை பார்ப்பாயா ? கனவினில் வாழும் வாழ்க்கையை... நிஜத்தினில் வாழ பார்க்கிறேன்... ஒருமுறை வாய்ப்பு கொடுப்பாயா... நீ என்னை பார்ப்பாயா ?[/b][/left] - முகேஷ் ராஜா After Long time i have wriitten This poetry.... Thank you Wings Nanbii Enna Again Kavitha elutha vachathukku...❤️ Thank you to GTC giving me this chance...❤️ This Kavithai dedicated to all Cute One side lovers...❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹 April 08, 2026, 11:25:25 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-066
மெய் மறந்தேன் பெண்ணே மெய் சிலிர்த்தேன் பெண்ணே உன் அழகினில் மெல்லிசை போல என் உள்ளம் உருகிட உன் பார்வை என்னைத் தொடும் நொடியிலே உலகமே நின்றது காதல் என்னும் மொழியிலே மலரின் வாசம் கூட உன்னிடம் தோற்குமடி நிலவின் ஒளி கூட உன் முகத்தில் மறைந்ததடி உன் சிரிப்பில் விழுந்தது பழுதானது என் இதயம் என் உயிர் முழுவதும் உன் காதல் உதயம் உன் கை பிடித்த அந்த சிறு நேரம் என் வாழ்நாளில் காணாத இனிய பேரானந்தம் உன் அருகில் நின்ற ஒவ்வொரு நொடியும் உன் அழகை கண்டு புதிய பிறவியாகும் என் மனம் உன் பெயரை சொல்லும் என் உதடுகள் என் உள்ளத்தில் பதிந்த காதல் எழுத்துகள் உன் நினைவுகள் வந்து தழுவும் போதெல்லாம் என் உள்ளம் பூவாய் மலர்ந்து நான் ஒளிர்கின்றேன் கனவிலும் நீயே, விழித்தாலும் நீயே என் கண்களின் உள்ளே பதிந்த தேவதையே உன்னை நேசிப்பது வார்த்தை அல்ல பெண்ணே அது உயிரோடு கலந்த உணர்ச்சி வெளிப்பாடு உன்னை சுவாசித்து நான் வாழ்கிறேன் உன்னோடு இருக்கவே நான் பிறந்தேன் உன்னை காதலித்ததாலே நான் என்னை கண்டேன் என் இதயத்தின் அர்த்தம் நீயே ஆனாய் இதயத்தில் ஏன் இவ்வளவு பாரம்? நீ என்னுள் வந்து குடியேறியதாலோ… இனிமையான வலியாய் நீ இருந்தாலும் அதை விட நான் மகிழ்வது இந்த உலகத்தில் என்ன ? நான் என்றால் நீயே, நீ என்றால் நானே இரு உயிர்கள் ஒன்றாய் இணைந்ததே மெய் மறந்தேன் பெண்ணே உன் அழகினில் என் உயிரே நீயாகி விட்டதடி பெண்ணே மெய் மறந்தேன் பெண்ணே… காணாத அழகை கண்டாற்போல் என் வாழ்வு மாறியது உன்னை கண்ட நொடியிலே என் உலகம் பிறந்தது என்றும் அன்புடன் நீலவானம் April 09, 2026, 04:46:30 pm |
1 |