Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1]
Post info No. of Likes
கவிதையும் கானமும்-057 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-057


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

August 18, 2025, 06:05:54 pm
1
Re: கவிதையும் கானமும்-057
கவிதை என்றாலே என் சிந்தையில் வருவது என் அம்முவின் நினைவலைகள் தான் அதுவும் எங்கள் இருவருக்கும் பிடித்த மழை கவிகள் என்றால் சொல்லவா வேண்டும் என் சிந்தனையின் கிறுக்கல்களில் சில வரிகள் நமது கவிதையும் காணமும் நிகழ்ச்சிக்காக அன்பர்கள் அனைவரும் மழையின் சிந்தனையோடு நமது தொகுப்பாளர் Rijia வின் குரல் மழையோடு கொஞ்சம் நனைவோமா....!


மனதோடு மழைக்காலம்.....


வானமகளின் வைரச்சலங்கைகள்
அறுந்து விழுந்தனவோ
மண்ணெங்கும் மழைத்துளிகள்;
உன்னைப் பார்க்கையில்
உயிரனுக்கள் மீண்டூம்
பிறந்தனவோ என்
வானெங்கும் விடிவெள்ளிகள்!!

முதன்முதலாய் என் விழியீர்ப்பு விசைகளில் நீ விழுந்தபோது
கனவுகளின் தேவதை
சிறகுகள் நீங்கி
சேலையில் நிற்கிறதோ!
என வியந்ததாய்
‌ஞாபகம்.
உன்னால் அறியாத
வெட்ககங்கள் பூசிக்கொண்டு
பூமீக்குச் சென்றது என்முகம்.

அந்நிமிடம் தொட்டு அடியேனின்
கடமைகளும் கனவுகளும்
காலத்தோடு உன்னுள் அடங்கின.
செல்போனில் உன் குரல் சினுங்கிட
பொழுதுகள் விடியும்.
உன்னை தூங்க வைத்த பின்தான்
இரவுகள் அடையும்..
இப்படியாய் என் நொடிகள்
ஒவ்வொன்றும் உன்னிடம்
அடைபட்டுகொள்கிறது
ஆனந்தமாய்............

ஓர்நாள்
அடைமழை உதவியுடன்
ஒற்றைக் குடையின்கீழ்
உன் கைப்பிடித்து நடக்கையில்
பச்சை நிற சேலையின்
முந்தானை கொண்டு என்
தலை துடைத்தாய்
அவ்வப்போது.
ஆனந்தம்
உன்னோடு எனக்கும்...
குடைப்பிடித்தாலும் தொடாமல்
விடமாட்டேன் என
உன்னை நனைத்த
மழையை நினைத்து
உள்ளம் வெந்தாலும்
இயற்கையை வென்றவள்
என்னவள் என்ற
பெருமைகள் எனக்குண்டு.
ஏனெனில் உன் சினுங்கலில்
சிலிர்க்கவே சிந்திய
துளிகள் என்னவளின்
அடிமைகள்;

குடையை விட்டு விலகி உன்
நடையழகை பார்த்தபொழுது தான்
எனக்கு புரிந்தது.
ஆம்,
பார்ப்பதற்கு பசுமை.
ஈரமான நந்தவனமும்
மழை சாரலில் சிறிது நனைந்த சேலையோடு
என ரசிக்கையில்
பொய்க் கோபத்தில்
ஜென்மங்கள் தாண்டி
அழைத்துச் சென்றாய்..

மழையோடு ஒதுங்கி
நின்ற பேருந்தில்
ஓரமாய் இடம் பிடித்தோம்
நனைந்தே இருவரும்.
இப்போது பயணம்.
ஓட்டுனரின் கட்டளைக்குப்
படிந்து பேருந்து
பாய்கையில் உயிரோடு
எனக்கு மரணம்.
கண்ணயர்ந்து உன்
தோளில் சாய்கையில்
மீண்டும் ஜனனம்....

அது ஏனோ
விளங்கவில்லை
மழை வந்தால்
மனதுக்கு பிடித்தவள்
என உன்னை
அடையளம் காட்டி
ஏதேதோ
எழுதுகிறேன்.
எழுதிக்கொண்டே வருகையில்
கற்பணையின் எழுத்துகள்
குறைந்து போனது.
கண்தூக்கிப் பார்த்தால்
கணமழை காணாமல்
போயிருந்தது.
ம்ம்ம்ம்.........
இது தான்
மனதோடு மழைக்காலமோ.....?

August 19, 2025, 08:43:47 am
1
Re: கவிதையும் கானமும்-057 நீ குடை புடிச்சு
போற புள்ள முன்னால !
உன்னோட  இடை அழகு பாக்குறேனே பின்னால ! 

வெத்தல நெறத்துல சேல கட்டி !
வெள்ளந்தி மனசுல
உன் பேச்சு வெல்லக்கட்டி !

தனியா போற புள்ள நில்லேன்டி !
தவியா தவிக்கிறேன்டி
ஒரு வார்த்த சொல்லேன்டி !

திரும்பாம
போற புள்ள நில்லேன்டி !
ஏ திமிர குறைக்க ஒரு பார்வ பாரேன்டி !

அன்ன நடையழகு !
அம்சமான இடையழகு !
அழகா ஆடுதடி உன் கையோட குடையழகு !

மழ தண்ணி மண்ணுல சிந்த
மலர்க்கன்னி நீ என் கண்ணுல வந்த!

மேகம் கருக்குது புள்ள!
உன் மேல உள்ள மோகம் என்ன உருக்குது புள்ள !

ஆளில்லா ரோட்டுல அழகா பாடுற ஒரு பாட்டுல !
உன்ன அம்சமா வாழ வைப்பேன் ஏ வீட்டுல !

சிங்கார நடையழகி !
சில்லர சிரிப்பழகி !
சினுங்காம ஒரு வார்த்தை பேசேன்டி !
சீக்கிரமா உன்ன வளைக்க வாரேன்டி !

எட்டி எட்டி பாக்குறேன்டி நீ
எட்டாம போறது என்னடி சின்ன பொண்ணே !
உனக்கு எடுப்பான பட்டு சேல எடுத்து தாரேன்
வாயேன்டி !

கண்ணு மை அழகு !
கருப்பு கூந்தல் அழகு !
காஞ்சி பட்டழகு!
கருஞ்சிவப்பு பொட்டழகு !
என்ன கொஞ்சம் நீயும் தொட்டு பழகு !

தாலி வாங்கி வச்சிருக்கேன் தங்கத்துல !
தப்பு ஏதும் இல்ல
இந்த சிங்கத்துல !
தைரியமா வந்து நில்லு என் பக்கத்துல !

ஏ உசுரே நீதாண்டி
இனியும் என்ன உசுப்பேத்த வேண்டாடி !
வேகமா நீ போகாதே புள்ள !
ஏ மனசு சோகமாகுதே மெல்ல !

வெறுப்பு வேணாம்டி இந்த மாமன் மேல !
பொறுப்பா நடந்துப்பேன்டி
உனக்கு புருஷன் போல !

August 19, 2025, 12:50:56 pm
1