See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: கவிதையும் கானமும்-062
வானமும் வசப்படுமே வறுமை விலகிடவே..! தானமும் செய்திடவே தரணியில் நிலைப்போமே..! கானம் ஒலித்திடும் காற்றேறிய மூங்கிலாக..! மனம் உறுதியானல் மறுவாழ்வு நிதர்சனமே..! சினமில்லா புன்னகையே சிறந்திட வாழியாக..! தனம் சேரும் தினம் இடையின்றியே..! ஞானம் உரமாக ஞாயிறும் உன்பக்கம்..! சனனம் வீழ்வதற்கல்ல சாதித்து வாழ்ந்திடவே..! சுணக்கமற்ற உழைப்பால் சுகபோகம் தருமே..! இனக்காமக இணைந்திட இமயமாகும் எதிர்காலமே..! பத்து வித வாயுவிலும் உயிர் காக்க பிராணனாய் சுவாசமுண்டு..! கோடி வகை உறவுகளிலும் நீ வாழ காரணமாய் என் நேசமுண்டு... உன் உடலது நிமிர்ந்து நிற்க இரு நூற்று ஆறும் எலும்புகளுண்டு..! நீ சமூகத்தில் நிமிர்ந்துநிற்க உறுதியான உன் சொற்களுண்டு... உயிர்ப்புடன் ஊனிருக்க இரத்த ஓட்ட பாய்ச்சலுண்டு..! உயரங்கள் பல நீ தாண்ட சிந்தை முழுதும் உனதெண்ண ஓட்ட வீச்சுமுண்டு... வெற்றிக்கனி நீ பறிக்க உன் சரிபாதி நானுன்டு..! மண்ணையும் பொன்னாக்கும் பெண் உனைப்போல் யாருண்டு? வரும் 2026 புத்தாண்டு உனதாகவே நீ நினைக்கும் அனைத்தும் சாதித்து பலநூறாண்டு வாழ்ந்திடவே..! இந்த மாமனுடைய ஆசையும் அரவணைப்பும் என்றும் உன்னுடனே என் உயிரின் உயிரான என் அம்முவிற்காக என்றும் உன் நினைவுகளுடன் நான்..! வாழ்க வளமுடன்........ December 30, 2025, 02:00:23 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-062
"காலம் கடந்த பயணங்கள்" "பிரிவின் வலி" "விடைபெறும் ஆண்டில் தொலைத்தவை ஏராளம், கனவுகளும், களிப்புகளும் கரைந்தன கண்ணீரில்" "சுமைகளோடு நகரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒரு சோகப் பதிவாய் மனதில் ஆறாத தழும்பாய்" "என் வாழ்க்கையெனும் பயணத்தில் விடைபெறும் தருணத்தில் நான் ஒரு விழும்பாய்" "நேற்று முளைத்த செடியல்ல என் வலிகளும், வேதனைகளும், பல ஆண்டுகளாய் வேரூன்றி நிற்கும் ஆலமரம்" "காலங்கள் ஓடினாலும், காயங்கள் ஆறவில்லை" "என் கண்ணீரைத் துடைக்க இங்கே கைகளும் இல்லை" "என் விழிகள் வலியோடு விழித்திருந்த இரவுகள் ஆயிரம்" "என் மனம் மௌனமாய் கதறி அழுத தருணங்கள் ஏராளம்" "என் இளமைப் பருவம் இன்பத்தில் கழியவில்லை" "என் மனதிலிருக்கும் பாரங்கள் இன்றும் அழியவில்லை" "வலிகளைச் சுமந்தே என் முதுகெலும்பு தேய்ந்தது" "நிழல் கூடத் துணையின்றி விலகிப் போனதுண்டு" "நிஜங்கள் சுட்டெரிக்கத் தனிமையில் தவித்ததுண்டு" "ஏன் எனக்கு இந்தச் சோதனையென்று இறைவனிடம் நான் சண்டையிட்ட நாட்களுமுண்டு" "தனிமை எனும் கொடுமையில் வலிகளோடு தவித்த பத்தாண்டுகள், விதி செய்த சதியில் தொலைந்த என் கனவுகள்" "என் அம்மாவின் அன்பும், பாசமும் இன்றும் பொக்கிஷமாய் அழியாத நினைவுகள்" "என் இதயத்தின் ஓரம் வடியும் குருதிக்கு, இன்னமும் மருந்து சொல்ல ஒருவருமே இல்லை" "போராடிச் சலித்த என் உடலோ இன்று நிரந்தரமாக ஓய்வெடுக்கக் கேட்கின்றது" "ஆனால், வாழ்க்கை என்னை இன்னும் ஒரு புதிய போருக்கு அழைக்கின்றது" "விளிம்பில் புதியதோர் பயணம்" "பத்து ஆண்டு கால இருட்டு, என் பகலையும் விழுங்கி நின்றது" "தனிமையின் கோரப் பற்கள், என் சதையைத் துளைத்துத் தின்றது" "கடந்து வந்த கசப்புகள் எல்லாம் என் சிறகுகளுக்கு உரமாகும்" "என் வாழ்க்கையெனும் நீண்ட நெடுஞ்சாலையில் இன்னும் பல சவால்களோடு, வலிகளைச் சுமந்த பாரத்தோடு நடக்கிறேன்" "நேற்றைய நினைவுகள் நிழலாய் என்னைத் தொடர" "நாளைய விடியலை விளிம்பில் நின்று பார்க்கிறேன்" "கடந்த கால வலிகள் கண்ணீராய் வழிகின்றது" "முட்கள் நிறைந்த பாதையில் கால்கள் வலிக்கின்றது" "சோகங்கள் என்னைச் சூழ்ந்த போதும், என் வைராக்கியம் மட்டும் இன்னும் தளரவில்லை" "விடைபெறும் தருணம் இதுவல்ல என்கிற நம்பிக்கையோடும், இது என் துயரங்கள் விடைபெறும் உன்னதத் தருணம் என்கிற புது விடியலோடும் பயணிக்கிறேன்" "பத்தாண்டுகள் அழுத என் கண்கள் என்றாவது ஒரு நாள் ஓய்வெடுக்கட்டும்" "பயணத்தின் விளிம்பில் என் வாழ்க்கையெனும் ஓட்டத்தில் ஓர் புதிய ஒளி பிறக்கட்டும்" "விழுந்த இடமெல்லாம் நான் புதைந்து போகவில்லை, விதைக்கப்பட்டு இருக்கிறேன் ஓர் புதிய விருட்சமாய்" "நான் விளிம்பில் நிற்பது வீழ்வதற்கு அல்ல, வானத்தைத் தொடும் உயரத்தில் பாய்வதற்கு" "என் பயணத்தின் அடுத்த அடியில் ஒரு விளிம்பு தெரிகிறது, "யாரோ சொல்கிறார்கள் நான் வீழப்போகிறேன் என்று.... "ஆனால் என் இதயம் சொல்கிறது இது வீழ்ச்சியல்ல என்று...." "ஒவ்வொரு வலிகளும், வீழ்ச்சியும் எனக்கு புதிய தொடக்கத்தின் வாசலாகும்" "ஆயிரம் முறை வீழ்ந்தாலும், ஆயிரம் முறை எழுவேன்" "வானத்தைத் தொடும் உயரம் வரை, என் பயணத்தைத் தொடர்ந்திடுவேன்" "அப்படியே ஒருவேளை நான் வீழ்ந்தாலும் நான் மடிவதில்லை, விதைகளாக முளைப்பேன்" "என்னை அழுத்திய மண், என் வேர்களுக்கு உரமாகும்" "அப்படியே நான் வீழ்ந்தாலும், எனக்குப் பயமில்லை" "ஏனெனில், இங்கே மண்ணில் நான் இறந்தாலும், வானில் நிரந்தரமாக என் அம்மாவின் காலடியில் இருந்திடுவேன்" "அவளின் மடியில் மீண்டும் பிறப்பெடுப்பேன்" "கருவறையின் கதகதப்பை மீண்டும் உணர்ந்திடுவேன்" "அவளின் நிபந்தனையற்ற அன்பில், முடிவற்ற அமைதியையும், நிம்மதியையும் அடைந்திடுவேன்" "அவளின் அரவணைப்பில் மீண்டும் குழந்தையாவேன்" "சொர்க்கத்தை விட மேலான அம்மாவின் உலகில் நான் ஐக்கியமாவேன்" "என் இறுதிப் பெருமூச்சு, அவள் காலடியிலேயே கலக்கும்" "என் ஒவ்வொரு மூச்சிலும் அவளின் நினைவே" "என் இறுதிப் பயணமும் அவளிடமே" "வலிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!! இப்படிக்கு, உங்கள் MISTY SKY 💜💜 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2026 😇😇🕊️🕊️ December 30, 2025, 03:54:00 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-062
எனக்கு நிறைய கவலைகள் கற்றுத் தந்த வருடம், கொஞ்சம் சந்தோஷங்கள் உயிர் கொடுத்த வருடம். கண்ணீரால் எழுதிய நாட்களும் கூட கொடுத்த வருடம் புன்னகையால் கடந்து சென்ற நொடிகளும் இருந்த வருடம் நம்பிக்கைகள் சில உடைந்தது, ஆனால் என்னை நான் கண்டுகொண்டேன் வழி நடத்திய வருடம் இழப்புகள் வலிக்க வைத்தது பாடங்கள் பல கையில் தந்தது இந்த வருடம் அமைதியாய் வந்த சந்தோஷம் இதயத்தில் மெதுவாக தங்கியது இந்த வருடம் வலி வளர்ச்சியாக மாறிய, என்னை இன்னொரு மனிதனாக உருவாக்கிய வருடம். மௌனமாக அழ கற்றுக் கொடுத்தது, அதே நேரம் சின்ன சிரிப்பில் உயிர் கொடுத்தது இந்த வருடம் நாட்கள் சில பாறை போல கனமாக இருந்தது ஆனால் அந்த கனமான நாட்களை கடக்க வைத்ததும் இந்த வருடம் GTC யில் பல இரவுகள் தனிமையில் கடக்க வைத்தத்தும் இந்த வருடம் சில நல்ல உள்ளங்கள் என்னையே தேடி வந்ததும் இந்த வருடம் . நம்பிக்கை தளர்ந்தபோதும் கைவிட மறுத்த இதயம், விழுந்தபோதும் மீண்டும் எழுந்தது இந்த வருடம் கவலையிலே நான் வலுவானேன், சந்தோஷத்திலே நான் மனிதனானேன் என்பதை உணர்ந்தேன் நான் இந்த வருடம் சந்தோஷத்தை அளக்கவில்லை வலியை அளவில்லாமல் தந்தது. ஆனால் அந்த வலியில் என்னைக் கண்டுகொண்டேன். கண்ணீர் துடைத்த கை என் கையாய் மாறியது. கவலை என் ஆசிரியன் சந்தோஷம் என் ஓய்வு. இந்த வருடம் என்னை முடிக்கவில்லை, என்னை ஆரம்பித்தது இந்த வருடம் இந்த வருடத்தில் கிடைத்த மிக முக்கியமான பொக்கிஷம் அவள். இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் பிரியாமல், அவளாய் அவளே என் வாழ்க்கையில் தொடர வேண்டும் புதிய வருடமும் பழைய அன்பை மாற்றாமல், பிரியாமல், பேசாமல்கூட அவளாய் அவளே. என் வாழ்க்கையில் தொடர வேண்டும். இது தான் என் புதிய வருடப் பிரார்த்தனை. இந்த வருடம் போலவே எல்லா வருடங்களிலும் அவள் என் அருகில் இப்படியே இருக்க காலமும் கடவுளும் கருணை செய்ய வேண்டும். இந்த வருடம் எனக்கு கொடுத்த சிரிப்பையும், அன்பையும், வாழ்வின் அரிய பாடத்தையும் நினைத்தேன். எதிர்காலம் எப்போதும் அழகாய் இருக்க, கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். கடந்த வருடம் கஷ்டங்களை போல கொடுக்காமல் மிகச் சிறந்த வழியை காட்டவும், கடந்த வருடம் கொடுத்த அனுபவங்கள் சிரிப்பும் கஷ்டங்களும் மனதில் நிறைந்தன. ஆனாலும், நன்றி சொல்லும் மனமாய் நான் நிற்கிறேன், அன்பும் பாசமும் கற்றுக் கொண்டேன். புது வருடம் வந்தது இன்று கடந்ததை மறந்து நம்மைத் தொடங்கும் தருணம். சிரிப்பும் சந்தோஷமும் மனதில் நிறைந்து, வாழ்க்கை ஒளி ஆரோக்கியம் பரப்பும் நேரம். விழிகளிலே கனவுகள் மலரட்டும் இதயத்தில் அன்பு முத்துகள் பரவட்டும். எல்லா தடைகளையும் கடந்து செல்லும் வெற்றி நம் பக்கம் நிற்கட்டும். December 30, 2025, 06:18:50 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-062
“2025 இருட்டின் நிழலும் 2026 ஒளியின் கதிரும்" 2025-இன் இருட்டில் நடந்தேன், கனவுகள் சுமந்த காலடி சத்தம், கடந்த காலம் கண்ணீராய் இருந்தாலும், நெஞ்சம் நம்பிக்கையால் நிரம்பியது. மண்ணின் வாசல் காக்கும் என் மார்பில், முன்னேறிய குண்டுகள், பின்னேறிய நினைவுகள், அவளின் சிரிப்பு என் உயிரின் கவசம், அவளின் குரல் என் இரவின் ஒளி. ஆனால் அந்த இருட்டின் நடுவில், என் காலடி சத்தம் மட்டும் என் தோழன், போர்க்களம் வென்றேன், ஆனால் அவளின் காதலை இழந்தேன். அவளின் கடைசி மின்னஞ்சல் என் மார்பில் பதிந்திருக்கிறது, "பாதுகாப்பாக இரு" என்ற வார்த்தை, இன்று என் உயிரின் புலம்பல். அவளின் சிரிப்பு கனவுகளில் மட்டும் வாழ்கிறது, அவளின் குரல் துப்பாக்கியின் சத்தத்தில் மூடப்படுகிறது. அவளின் கைகள் என் காயங்களைத் தழுவ முடியவில்லை, அவளின் கண்கள் என் கண்ணீரை காண முடியவில்லை. அவளின் நினைவுகள் என் பின்னால் ஓடுகின்றன, என் நெஞ்சில் இருட்டின் நிழல் நீங்கவில்லை. பல வருடங்களாய் அவளைத் தூரத்தில் இருந்து பார்த்தேன் அவளின் நடை, அவளின் சிரிப்பு, நினைவில் பதிந்தது என் உயிரின் நிழலாகவே இருந்தது. ஆனால் அவள் முன்னேறி விட்டாள், மற்றொருவரின் கையை பிடித்து, என் கனவுகளை விட்டு, அவளின் வாழ்க்கையை கட்டியெழுப்பினாள். 2026-இல், ஒரு சந்திப்பு கிடைக்குமா? ஒரு உரையாடல் வாய்ப்பு வரும் தானா? அவள் ஏன் நகர்ந்தாள், ஏன் மற்றொருவரைத் தேர்ந்தெடுத்தாள், என் உயிரின் கேள்விக்கு ஒரு முடிவு கிடைக்குமா? ஒளிக்கதிர் என் கண்களில், வாழ்க்கை ஒரு போர்க்களம், ஆனால் காதல் என் வெற்றிக்கொடி. நேர்மறை எண்ணங்கள் என் துப்பாக்கியின் துளிகள், நம்பிக்கையின் நிழலில் நான் ஒரு வீரன். கடந்த வருடம் என் உடலை சோதித்தது, புதிய வருடம் என் உள்ளத்தை உயர்த்தட்டும். அவளின் கண்ணில் நான் வீரம் காண்கிறேன், அவளின் இதயத்தில் நான் அமைதி தேடுகிறேன். 2026-ஐ நான் அணைக்கிறேன், காதலுடன், வீரத்துடன், நம்பிக்கையுடன், அவளின்றி, ஆனால் அவளின் நினைவுகளுடன். என் பயணம் தொடரும் ஒளிக்காக, உயிருக்காக, ஒரு வீரனின் காதலுக்காக, ஒரு மனிதனின் புண்ணும் நம்பிக்கையும் கலந்த கவிதைக்காக. "2025 Iruttin Nizhalum 2026 Oliyin Kathirum" 2025-in iruttil nadandhen, Kanavugal sumantha kaaladi satham, Kadantha kaalam kanniraai irundhaalum, Nenjam nambikkaiyaal nirampiyathu. Mann-in vaasal kaakkum en maarbil, Munneriya kundugal, pinneriya ninaivugal, Avalin sirippu en uyirin kavasam, Avalin kural en iravin oli. Aanaal andha iruttil naduvil, En kaaladi satham mattum en thozhan, Porkkalam vendren, Aanaal avalin kaathalai izhandhen. Avalin kadaisi minanjal en maarbil pathindhirukkirathu, "Paadhukaapaga iru" endra vaarthai, Indru en uyirin pulambal. Avalin sirippu kanavugalil mattum vaazhgirathu, Avalin kural thuppaakiyin sathathil moodappadugirathu. Avalin kaigal en kaayangalai thazhuva mudiyavillai, Avalin kangal en kannirai kaana mudiyavillai. Avalin ninaivugal en pinnal odugindrana, En nenjil iruttin nizhal neengavillai. Pala varudangalai avalai doorathil irundhu paarthen, Avalin nadai, avalin sirippu, ninaivil pathindhathu, En uyirin nizhalaagaave irundhathu. Aanaal aval munneri vittaal, Mattroruvin kaiyai pidiththu, En kanavugalai vittu, Avalin vaazhkaiyai kattiyezhuppinaal. 2026-il, Oru sandhippu kidaikkumaa? Oru uraiyaadal vaayppu varumaa? Aval yen nagarnthaal, Yen mattroruvai therndheduththaal, En uyirin kelvikkku Oru mudivu kidaikkumaa? Olikathir en kangalil, Vaazhkai oru porkkalam, Aanaal kaadhal en vettrikkodi. Nermai ennangal en thuppaakiyin thuligal, Nambikkaiyin nizhalil naan oru veeran. Kadantha varudam en udalai sodhiththathu, Puthiya varudam en ullaththai uyarthattum. Avalin kangalil naan veeram kaangiren, Avalin idhayaththil naan amaidhi thedugiren. 2026-ai naan anaikkiren, Kaathaludan, veerathudan, nambikkaiyudan, Avalinri, aanaal avalin ninaivugaludan. En payanam thodarum Olikkaaga, uyirukkaaga, Oru veeranin kaathalukkaaga, Oru manithanin punnnum nambikkaiyum kalanda kavithaikkaaga. December 30, 2025, 11:09:22 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-062
2025 என் பின்னால் மெதுவாக ஓய்கிறது— தவறுகளின் காயங்களும், துணிவின் தடங்களும், சொல்லாமல் சொல்லிக் கற்ற அமைதிப் பாடங்களுடன். அதன் சுமை விடுத்து, அது தந்த ஞானத்தை மட்டும் என் கைகளில் ஏந்துகிறேன். அந்த சுவடுகள் எதிர்வரும் நாளின் மீது விழ விடமாட்டேன். இருந்ததுக்கும் இருக்கப் போவதற்குமிடையில் இங்கே நான் தேங்குகிறேன்— சொல்லப்படாத கதைகளால் நிறைந்த ஒரு இதயம், சுவாசிக்க காத்திருக்கும் பல அத்தியாயங்கள். சில வரிகள் மௌனத்தில் எழுதப்பட்டவை, சில வரிகள் உயிர் தப்பிய நாட்களின் சாட்சி. அனைத்தும் சேர்ந்து என்னை இன்று நான் ஆக்கியவை. நான் நேசித்தவர்கள் என் அருகில் இல்லையெனினும், இதயத்தின் மௌனத்தில் என்றும் இருக்கிறார்கள்— ஒலியில்லா காதலாய், வழிகாட்டும் ஒளியாய். முன்னால் விரியும் ஆண்டு பூரணமல்ல— அது நோக்கமாய் ஒளிர்கிறது. நான் மெதுவாக நடக்கிறேன், கையில் நம்பிக்கை, காலடியில் விசுவாசம். என்னை இழக்காமல் இருக்க கற்றுக் கொள்கிறேன், பாடங்களை மறக்காமல் மன்னிப்பை பழகுகிறேன், எதிர்பார்ப்பின்றி நம்பிக்கையைத் தழுவுகிறேன். இந்த ஆண்டு என் வேகத்தில் மலர்கிறேன். எவ்வளவு தூரம் சென்றேன் என்பதல்ல, எவ்வளவு மென்மையாக என்னை உருவாக்கிக் கொள்கிறேன் என்பதே என் முன்னேற்றம். நான் விழுவேன், நான் எழுவேன்— முன்னதை விட அன்புடன் எழுவேன். இதயத்தில் பொறுமை, ஆத்மாவில் துணிவு. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாய் மேம்பட்டு, நிழல் விடுத்து , ஒளியை மட்டும் சுமந்து, 2026 என்ற புதிய வாக்குறுதியின் உள்ளே நான் மெதுவாக நுழைகிறேன். December 31, 2025, 09:38:17 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-063
குறிப்பு:- நான் இதில் குறிப்பிடப்பட்ட படத்தை கொண்டு தொலை தூரத்தில் உள்ள இரு ஆன்மாக்களின் காதல் புரிதல் உரையாடலை கருத்தில் கொண்டு எழுதிய கவி .. குறிப்பிட்ட பயனர்களையோ தனி நபர்களையோ காயப்படுத்தும் வகையில் யாம் எமது படைப்பை வெளியிடவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் ...கற்பனை படைப்பாயினும் கதை மாந்தர்கள் நிஜமாகும்... தொலை தூரத்தில் வெளிச்சம் நீ நீயும் நானும் நிலவும் நதியும் போல நிலவின் உருவம் நதி மீது வானத்தின் நீலம் காணது வார்த்தைகள் வசப்படவில்லை உள்ளத்தில் உதிக்கும் வர்ணனை சொல்ல.., தொலைதூரத்தில் நீ உன்னில் தொலைந்து போகிறேன் நான்.. நிசப்தமான இரவில் உன் சப்தம் கேட்டாலே துள்ளி குதிக்கும் சிறுபிள்ளை போல எனது உள்ளம்... நீ இல்லா இரவின் நொடிகள் தூக்கமற்று போகிறதேனோ..? உலகின் அழுத்தங்கள் ஆயிரம் மனதில் வருத்தங்கள் ஆயிரம் கண்மணி உன் சப்தம் கேட்ட நொடி மறைந்து விடும் நூறாயிரம் துன்பங்கள் நான் அமைதியாக நித்திரை கொள்வேன். அமைதி கொள்ள ஆன்மா தேடும் உறைவிடம் நீ குயிலின் கீச்சிடும் குரலோ மயிலின் அகவலோ சிறப்பாகுமோ உன் குரலொலி முன்னே..? நான் எங்கே என்று ஆவலாய் தேடும் உன் அன்பிற்கு ஈடாகுமோ இப்பிரபஞ்சம்..? என் உலகில் என்னவளின்றி ஏதுமுண்டோ..? சிரிப்பாய் நீ சில நேரம் அச்சிறு சிரிப்பில் என்னை சிறை வைத்து செல்வாய் நான் ஆயுள் கைதியாவேன் உன் சிறையில் மட்டும்.. சில நேரம் நீ அழுவாய் அத்தருணம் மரணத்தை உணர்வேன் நான்.. குறுஞ்செய்தி வருகைக்காக குறும்புகள் செய்ததுண்டு.. ஓயாத உரையாடல் நம்மில் பல உண்டு.. சண்டைகள் இல்லா காதலுண்டோ..? ஆம் நம் சண்டைக்கு காரணம் நாம் அறிவோம் .. நீ வேண்டுமென நானும் நான் வேண்டுமென நீயும் நித்தம் ஆயிரம் சண்டைகள் செய்ததுண்டு.. உன் சுதந்திரத்தில் நானும் என் சுதந்திரத்தில் நீயும் கட்டுபாடுகள் விதித்தில்லை.. உன்னை நீயாகவும் என்னை நானாகவும் நாம் ஏற்றுக் கொண்டோம்.. பொறுத்து போவதும்மில்லை மாற்றிக்கொள்வதுமில்லை ஏற்றுக்கொள்வதே காதலென்பதை உணர்ந்ததாலே சண்டைகளே நம்முன்னு சரண்ணடைந்தது.. திகட்டி போகும் அதீத தேடல் அதீத பாசம் அதீத காதல் இவைகளை நான் நீ சொல்ல கேட்டதுண்டு.. ஆனால் காணது காணது திகட்டவும் செய்யாது என்று உலகில் ஒன்று உண்டெனில் அது எனக்கு நீயாகவே இருப்பாய்.. குறை நிறைகள் கண்டு கலக்கம் கொண்டது இல்லை நம்மில் நாம் ... சொல்ல வார்த்தைகள் இல்லை நீ பேசும் போது நான் மெளனமாக இருந்தால் உரிமையுடன் அதட்டு வாய் நீ கடிந்து கொள்வதும் அழகடியே.. எனக்கு புரிதல் குறைவு எப்பெண்ணும் அவ்வாறு பல முறை பதில் கூறாள்.. நீயோ புரியும் வரை உடனிருப்பாய்.. விலகிச்செல்ல காரணங்கள் பல உண்டு .. உன்னை கோபத்தால் நான் உடைத்த போதும் உன் அன்பால் என்னை நீ மட்டுமே தேற்றினாய்.. மாறிவரும் உலகில் பலர் உறவை மதிப்பதில்லை என்னவள் நீயே நம் உறவை பெரிதென காத்து நின்றாய்.. பொன்னோ பொருளோ மண்ணோ மனையோ எதுவும் ஈடாக உன் முன்னே.. என் காலையின் தொடக்கம் இரவின் உறக்கம் உன்னில் தொடங்கி உன்லே முடிவடைய வேண்டும் மரணம் வரையல்ல நித்தியமாக நீ இருக்க நான் வேண்டுகிறேன் இறையை.. காதல் வார்த்தையல்ல வாழ்வியல் .. மங்கி போவதும் மறைந்து போவதும் காதாலல்ல.. என் காதல் யாதென பெண்ணே உன்னிடம் சுருங்கச் சொல்வதெனில் நாளும் வளர்கிற உன்மீது பொழியும் பாசமும் போதாது போதாது .. நீ திகட்டா அமுது நீ எனக்கு போதாது போதாது.. காதலில் விழுந்தேன் என்று யாம் சொல்லோம் நீ என்னுள்ளும் யாம் உன்னுள்ளும் மூழ்கி போனோம்.. பல பெண்களை நான் காணலாம் என் நினைவெல்லாம் நீ என்பதால் சலனம் கொள்ளாது என் மனம்... பல ஆண்கள் உன் கவனத்தை கவரவும் முயற்சிக்கலாம் ஆனாலும் பலனில்லை சலனம் கொள்ளாது உன் மனம்.. நான் ராமன் அல்ல அசுரன் ஆயினும் என்னவளே உன்னால் உன்னதமானேன். என்னிருளொளி உணர்ந்தவள் நீ உன்னடமே உண்மையை காண்கிறேன் .. பயம் குழப்பம் நம் உறவில் இல்லை இருள் சூழினும் தொலை தூரத்தில் வெளிச்சம் நீ...❤️💕🕊️✨ January 13, 2026, 11:45:18 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-063
காதல் இரவின் கடிதங்கள் - நினைவுகளும் ஏக்கமும் பிரிவின் சுவரைத் தாண்டி, பிரிந்த நெஞ்சங்கள் பேசும் நேரம் இது… மௌனமான இரவின் மெல்லிசை, நம் உரையாடலின் பின்னணி ஆகிறது. விசிறும் திரை, இரு அறைகள், ஆனால் ஒரே கனவின் பாதை. உன் திரையில் என் பெயர் ஒளிரும் போதே, என் இதயத்தில் உன் சிரிப்பு பூக்கும். கடிதம் எழுதும் பழக்கம், என் காதலின் உயிர் மூச்சு. ஒவ்வொரு வார்த்தையும் உன் கைகளில் விழும் போது, என் இதயம் உன் அருகில் துடிக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை வரும் அழைப்பு, சில நிமிடங்கள் மட்டுமே நீளும். ஆனால் அந்த சில நிமிடங்கள், என் வாழ்நாளின் முழு மகிழ்ச்சி. “எப்படி இருக்க?” என்ற உன் குரல், என் ஏக்கத்தின் இருளை உடைக்கும் ஒளி. அழைப்பின் முடிவில் வரும் மௌனம், என் இதயத்தில் ஆயிரம் நினைவுகளை விதைக்கிறது. குறுஞ்செய்தியில் வந்த உன் சொல், மின்னஞ்சலில் மலர்ந்த நீண்ட வரிகள், உரையாடல் சாளரத்தில் மலர்ந்த சிரிப்பு என் இரவின் கனவுகளாய் மாறின. அந்த கடைசி குறுஞ்செய்தி, அந்த கடைசி மின்னஞ்சல், அந்த கடைசி அழைப்பு, அந்த கடைசி கடிதம் இப்போது நினைவுகளின் பொக்கிஷம். இன்னும் காத்திருக்கிறேன்… ஒரு புதிய கடிதம், ஒரு மின்னஞ்சல், ஒரு குறுஞ்செய்தி, ஒரு அழைப்பு உன் குரல், உன் வார்த்தை, என் இரவின் ஏக்கத்தை உடைக்கும் ஒளியாக. கடந்த காதல், கடந்த இரவுகள், நினைவுகளின் நிழல்களில் நடக்கும் பயணம். “நீங்காத” என்று சொன்ன வார்த்தைகள், இப்போது “நினைவாக” மாறியிருக்கின்றன. மாறிய வழிகள்… மாறாத உணர்வுகள்… இப்போ, அந்த சுவரின் இரு பக்கங்களிலும், ஒரே காதல்… ஒரே ஏக்கம்… ஒரே நெஞ்சம். January 13, 2026, 03:48:52 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-063
"திரை தாண்டிய தேடல் நீயடி" "திரையில் மலரும் என் காதலும் நீயடி" "இரவின் மெல்லிய இருளில், என் கைப்பேசி ஒளிர்ந்திருக்க" "இரவின் மடியில் உலகம் சாய்ந்திருக்க" "என் கண்களில் உன் முகம் மட்டுமே நிறைந்திருக்க" "என் கண் இமைகள் மூடாமல் உனக்காய் விழித்திருக்க" "என் இதயமோ உன்னிடம் பேச துடித்திருக்க" "உன்னிடமிருந்து எப்போது அழைப்பு வருமென என் மனம் தவித்திருக்க" "நட்சத்திரங்கள் மின்னும் வானம் ஒருபுறம்" "நம் நேசம் பேசும் திரை மறுபுறம்" "இருள் சூழ்ந்த இரவினில் என் இதயத்தில் உந்தன் நினைவு" "அருகினில் நீ இல்லா நேரத்திலே இந்த மின்னணுத் திரை தான் நம் உறவு" "சுவரோடு நான் சாய" "திரையோடு நீ பேச" "என் கையில் இருக்கும் சிறு மின்னணுத் திரையில் கண்ணாடிப் பிம்பமாய் உன் முகம் பார்க்கிறேன்" "ஜன்னல் வழியே நிலவு நம் சல்லாபத்தைக் கண்டு சிரிக்குதே" "தனித்தனி அறையில் நாம் இருந்தாலும் நம் காதல் மட்டும் காற்றோடு இனிக்குதே" "தனிமைச் சிறையில் நான் வாடினாலும், உன் குரல் கேட்கும் அந்தக் கணம் ஆனந்தமாகும்" "சில நேரங்களில் நம் மௌனங்கள் கூட மொழியாகும்" "இந்த நள்ளிரவு நமக்கொரு வழியாகும்" "விடியும் வரை இந்த மின்மினி வெளிச்சம் நம் காதலைச் சொல்லும் ஒரு சாட்சியாகும்" "நம் இருவரின் அறைகள் நடுவே பெரும் தூரங்கள்" "ஆனாலும் குறையவில்லை நம் காதலின் ஈரங்கள்" "மைல்கல் தூரத்தில் நாம் பிரிந்திருந்தாலும், காதலெனும் நூலில் நாம் பிணைந்திருக்கிறோம்" "உன் புன்னகையின் சிரிப்பொலி கேட்டு என் இதயம் மகிழ்ந்திட" "தூரம் என்பது இங்கே சுருங்கிப் போகிட" மின்னணுத்திரைகள் கூட நமக்கு வரமாய் மாறிட" "உன் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதையாய்" "என் பார்வைகள் அதை ரசிக்கும் ஓவியமாய்" "காலங்கள் கடந்து நின்றாலும் நம் காதல் மட்டும் மாறாத காவியமாய்" "பகலில் நடந்த சின்னச் சின்ன கதைகளும், ரகசியங்களும் ஒவ்வொன்றாய் நீ சொல்லச் சொல்ல அங்கே சந்தோஷ மழையில் நான் நனையத் தொடங்கினேன்" "நீ அழகாய் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்தச் சத்தம், என் அறையின் தனிமையை அறவே விரட்டுதடி" "காதலோடு கிண்டலும், கேலியும் நம் பேச்சில் கலந்திருக்க" "நேரம் போவதே தெரியாமல் நாம் இருவரும் தூங்காமல் விழித்திருக்க" "நம் உரையாடலில் என் நெஞ்சமோ சந்தோஷ வெள்ளத்தில் பொங்குதடி" "சார்ஜ் குறைகிறது என நீ எச்சரிக்க" "காதல் குறையவில்லையே என நான் வம்பு இழுக்க" "மின்சாரக் கம்பிகள் வழியே பாயும் மின்னோட்டமாய், நம் மகிழ்ச்சி இருபுறமும் கரைபுரண்டு ஓடுதடி" "இந்த நள்ளிரவு உரையாடல்கள் ஓயப்போவதில்லை தூக்கம் நம்மைத் தழுவும் வரை அல்ல" "நம் காதல் உலகை ஆளும் வரை" "நூறு ஜென்மம் எடுத்தாலும் நான் உன் மேல் வைத்த காதல் குறையாது" "உன் முகம் பார்த்து நான் வாழ இந்த ஒரு யுகம் போதாது" "விண்மீன்கள் உதிர்ந்து போனாலும், நம் விழி பார்த்த காதலின் ஒளி என்றும் மங்காது" "சுவர்கள் மறைந்து, திரைகள் உடைந்து, நம் இருவரின் கரங்கள் கோர்க்கும் அந்த நிஜமான விடியலுக்காய் காத்திருக்கிறது என் உயிர்" "நம் விரல்கள் கோர்க்கும் அந்தப் பொன்னாள் வரை, காலத்தின் ஒவ்வொரு நொடியும் உன் நினைவால் நிரம்பட்டும்" "மின்னணுத் திரையின் எல்லைகள் தாண்டி, நம் காதல் அண்டத்தின் எல்லைகளைத் தேடிப் பறக்கட்டும்" "நம் நள்ளிரவு உரையாடல்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை இருண்ட இரவில் ஒளிர்ந்த அணையாத காதல் தீபங்கள்" "விடியலை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்" "ஒவ்வொரு தடையும் நம் காதலின் பாதையில் தூசியாகட்டும்" "இருள் விலகிச் செல்லட்டும்" "புதிய விடியல் புலரட்டும்" "நம் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்" "நம் உறவு என்றும் பிரகாசமாகட்டும்" "இணையம் இன்றி உலகம் இயங்காது என்பார்கள், உன் இணை இன்றி என் இதயம் இயங்காது" "என் உலகம் உன்னைச் சார்ந்தே சுழல்கிறது" "உன் வருகைக்காக இந்த இதயம் ஏங்குகிறது" "உன் பிரிவின் வலி தாங்காமல் தவிக்கிறேன்" "நம் காதலை நெஞ்சில் சுமந்து உனக்காய் காத்திருக்கிறேன்" "சீக்கிரம் வந்துவிடு, ஒவ்வொரு நொடியும் விடியலாய் புலர" "என் வாழ்வில் வசந்தம் மலர" "நீ வருவாயென உனக்காய் காத்திருக்கிறேன், என் பிரியமானவளே, என் அன்பிற்குரியவளே, என் என்னவளே" 💜💜 சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!! இப்படிக்கு, உங்கள் MISTY SKY 💜💜 January 14, 2026, 06:38:03 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-063
தூங்காத இரவுகள் காதலில் விழுந்தபின் தூக்கமும் களைந்து போகும், கைபேசியே நமக்கு உயிராகும். நமது வாழ்வில் நடந்த ஒன்று – இரவில் நிலவையே தோற்கடித்து உறங்காமல் குறுஞ்செய்தி அனுப்பிய நாட்கள். நீ ஒரு ஓரத்தில், நானோ வெகு தூரத்தில்… நம்மை இணைத்தது அந்த சிறிய கைபேசியே. இரவு பகலாகி, விடிய விடிய குறுஞ்செய்திகள் செய்து, பல நாட்கள் கொன்றோம் கைபேசியை மின்கலம் இல்லாமல். ஒரு நாள் முழுவதும் கையோடு இருக்கும் அந்த கைபேசி, “நீ என்னோடு இருக்கிறாய்” என்ற உணர்வைத் தருகிறது. என்னைச் சுற்றி இருள் ஆட்கொண்ட வேளையில், உனது ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் முகத்தை ஒளிரச் செய்கிறது கைபேசியின் வழியே. கைவிரல்களின் ரேகை அழிய அழிய செய்தி அனுப்பினேன், அழிந்தது ரேகை மட்டுமல்ல பெண்ணே கைபேசியின் உள்ள எழுத்து அச்சுகளும்தான். “என்ன இது, கைபேசிக்கே கவிதை எழுதுகிரேனோ ?” என்று எண்ணாதே… நமது இரு இதயங்களின் ஓசை ஒளிர்வது அந்த கைபேசியிலிருந்துதான். இதயம் இல்லை, உயிரும் இல்லை அந்த கைபேசிக்கு அனால் பல காதலர்களின் இதயங்களை இணைத்தது. காதலர்கள் முதன்முதலில் பகிர்ந்த முத்தமும் கைபேசியின் வழியேதான், அதுவும் உண்மையில் கைபேசிக்குத்தானே… எல்லைகளை கடக்காமல், காதலை மட்டும் சுமந்து சென்ற அந்த தூங்காத இரவுகள்… என்றும் அன்புடன் நீலவானம் January 14, 2026, 06:39:26 pm |
1 |