See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: கவிதையும் கானமும்-064
பூவே… நிஜமது நீயானால், உன் காலடி வேறாவோம், மறைந்திடும் நாள் வந்தால், அச்சுறுத்தல் இன்றி விலகிடுவோம் வண்ணம் தீட்டும் ஆள் அதை பாராதே, மொட்டின் மடல் தேடிட கூடாதே, இழந்து நாட்கள் கூடி போனாலும், நிஜமது நீங்கிட தாங்காதே சிந்திய கண்ணீர் விலைமதிப்பற்றது, வெருட்சி நீக்கும் நிஜமும் நீ… சண்டைகள் எவ்விதம் இருப்பினும் நிகழ்ந்திருக்கும், தனிய செய்து புதுமையயூட்டும் வாசனை நீ… முள்ளற்ற பயணத்தில் அடர்த்தியற்ற பந்தம், என்னும் வாசகத்தின் உருப்படிவம் நீ… சிவந்த கண்மாணிக்கம் நீ, சிவக்கும் கன்னங்கள் நாணுகிர்வதை பார்! உன்னை வலுவாக பார்க்க ஏதேனும் செய்வோம், வாடி சாயாமல் காக்க, வாழ்ந்தாலே போதும்… நிஜமது பூவானால்… 🌹 February 05, 2026, 10:18:38 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-064
Un kanavum un ninaivum naanaga mattume irukka vendum endru enninen... En ninaivaiyum kanavaiyum neeye kalaithaai..... Ethanaiyo uravugal vanthu sendra pothilum un uravai mattume nilaiyanathu endru nambinen... Athanaiyum poi endru santhega thiraiyai en meethu porthinaai.... Aduthavarudan pesinaale kaadhal endra muthirai kuthunaai.... Netru oruvan indru oruvan endru un mana kanakkil ennikaikal koodi konde ponathu..... Pala aandu kaalam poruthu pona enakku vaalkaiye un seyalkalaal veruthu ponathu... . Yaarudaiya anbaiyum uthaaseena paduthi Verukka theriyathathaal indru un munnal en bimbam thappanathu..... Thappe seiyamal un munnal thavaraga ithuvarai therintha naan ini thapagave irunthu vittu pogiren.... Kavithaiye elutha theriyatha ennaiyum Muthal murai Sila varikal kirukka seitha en munnal mamanukku nandrigal pala kodi.... Intha GTC il en manam thalarum bothellam enakku uruthunaiyaga Iruntha athanai ullangalukkum nandri.. Expecialy MISTY SKY, MDU , Shahidm, Abdullah, Love me And Thendral Sister. Mansi.. GTC in anaithu kadhal jodikalukkum kadhalar thina vaalthukkal...... February 07, 2026, 07:05:11 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-065
எல்லாருக்கும் "அ" என்பது அம்மா ஆனா எனக்கு மட்டும் அண்ணா.... ஏனென்றால் மூச்சுக்கு மூண்ணுறு முறை நான் உச்சரித்தது அண்ணா அண்ணா அண்ணா மட்டுமே..... வீடுல நீயும் நானும் எப்பவுமே tom & jerry தான்... ஆனால் ஒரு பொழுது கூட நா இல்லாம நீயும் நீ இல்லாம நானும் சாப்பிட்டதில்ல.... தகப்பன் முகத்தை நான் கண்டதில்லை நீ தலை வாரி கொண்டதை நான் ஒருநாளும் பார்த்ததில்லை... நீ தலை வாரி கொண்டதை நான் ஒருநாளும் பார்த்ததில்லை... எனக்கு முன்னாடியே நீ பிறந்துட்ட.. உன் கைய பிடிச்சே நான் வளர்ந்துட்டேன்... எனக்கொன்னுனா நீ துடிச்சி போவ... எனக்காக நீ எப்பவும் படிஞ்சும் போவ... எனக்காக எல்லாமே பாத்து பாத்து வாங்குவ... என் உறக்கத்துக்கு பிறகுதான் நீயே கண் மூடி தூங்குவ... என் உறக்கத்துக்கு பிறகுதான் நீயே கண் மூடி தூங்குவ.. நான் எங்க போனாலும் சரி எங்க இருந்தாலும் சரி எப்பவுமே சந்தோஷமா இருப்பேன்..ஏன் தெரியுமா? என் அண்ணா என் கூட இருக்கான்னு ஒரு நிம்மதி.... வலிக்காமல் அடிப்பது எப்படின்னு உனக்கும்... வலிச்சாலும் வலிக்காத மாதிரி நடிப்பது எப்படின்னு எனக்கும்.... அன்னை கருவறையில் நாம் கற்றுக் கொண்ட வித்தைகளில் இதுவும் ஒன்று.... உன்னை பற்றி இன்னும் சொல்ல ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ள.... எப்பவுமே விட்டு கொடுக்காம இப்படியே இருப்போம் ஒண்ணுகுள்ள.... உன் மடியில் சாய்ந்து பலமுறை நான் அழுதிருக்கேன்...காரணம் நீயும் எனக்கு இன்னொரு தாய் தான்.... நீயும் எனக்கு இன்னொரு தாய் தான்.... March 04, 2026, 03:06:10 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-065
கற்பனையின் தங்கை, என் வாழ்வின் கவிதை: காலை சூரியன் உதிக்கும் போது என் கையில் பிடித்துக் கொண்டு ஓடும் ஒரு சிறிய கையை நான் கற்பனை செய்கிறேன். அது என் தங்கையின் கை என் வாழ்வின் இனிய கனவு. அவள் சிரிப்பில் சூரிய ஒளி, அவள் குரலில் பறவையின் இசை. என் மனம் சோர்ந்தால், அவள் சொன்ன ஒரு சொல் என் உயிரை மீண்டும் எழுப்பும். நான் விழுந்தால், அவள் என் கையை பிடித்து எழுப்புவாள். நான் வென்றால், அவள் என் வெற்றியை தன் வெற்றியாகக் கொண்டாடுவாள். அந்த உறவு தான் என் வாழ்வின் அழகிய கவிதை. நினைவுகளில் மட்டும் வாழும் இந்தத் தங்கை உருவம், என் கனவுகளில் தினமும் வந்து என் அருகில் நிற்கிறது. அவள் இல்லாத வெறுமையை என் கற்பனை நிரப்புகிறது. கடற்கரையில் நடந்தால், அவள் என் அருகில் ஓடுவாள். மழை பெய்தால், அவள் என் தோளில் சாய்ந்து சிரிப்பாள். அந்தச் சிரிப்பு தான் என் வாழ்வின் இனிய இசை. அண்ணன் தங்கை உறவு ஒரு புனிதமான பந்தம். இரத்தத்தில் இல்லாவிட்டாலும், உணர்வில் அது உயிராய் நிற்கிறது. என் வாழ்வில் இல்லாத அந்தத் தங்கை, என் கவிதைகளில் என்றும் வாழ்கிறாள். அவள் என் கனவின் தோழி, என் நினைவின் நிழல், என் வாழ்வின் இனிய பக்கம். அண்ணனின் அன்பை உணர்த்த என் உள்ளம் உருவாக்கிய அந்தத் தங்கை என் கவிதையின் நிலையான உயிர். Dedicated to all my sisters by ShahidM March 04, 2026, 09:01:44 pm |
1 |