See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: கவிதையும் கானமும்-038
மொழி இல்லாத மௌனம்... அழகாய் ஒரு இனிய பொழுதில் அமைதியாய் ஓர் புதிய அறிமுகம்... ஆசை எதும் இல்லாமல் இசையால் தொடங்கிய உரையாடல்... உரையாடிய நேரங்களின் மிகைப்பு தடுக்க ஏதும் எண்ணம் நேராமல்... ரசிக்க நேர்ந்த பதிவுகள் ரசிகையாக மாற்றிய எண்ணங்கள்... ரசனை என்று உணராமல் உரிமையாக மாறிய நிகழ்வுகள்... பகிர்ந்த நேசங்களின் மிகுதி ஏனோ விலகியே நிற்கிறது... நேசம் அன்பாய் மாற அன்பின் பிடியில் இருந்தே ரசித்தது... அன்பே அனைத்துமாக வேண்டும் என்று எண்ணிய மனதிற்கு தெரியும் தெரிந்தும் உரைக்காது மறுக்கும்... ஏனோ விலகவும் இயலாமல் சேர்க்கவும் மனம் இல்லாமல்... விலகியே உரைக்க நினைக்கும் இவளின் மொழி இல்லாத மௌனம்... ஶ்ரீ February 06, 2024, 12:34:51 pm |
1 |