Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 2 [3] 4 5 ... 7
Post info No. of Likes
Program Feedback - பின்னூட்டங்கள் (FM LIVE) " GTC பண்பலை நேரடி நிகழ்ச்சி" - இது  ஒளிபரப்பாகும்  நேரம்  அரட்டையில் அறிவிக்கப்படும். அத்தருணம் நமது GTC நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்

"FM LIVE PROGRAM" - The on air time  will be announced in the chat. At that moment our GTC friends can participate and capture the moments.


இங்கே பின்னூட்டங்கள் /  கருத்துக்கள் பதிவிடும் பொழுது   நிகழ்ச்சியின் தலைப்பு  அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள்.  எந்த  நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

While posting feedback/comments here, Please include the topic  or broadcast date.  It's helpful to know which  show you're posting your comments about.

January 17, 2023, 03:37:24 pm
1
Re: கவிதையும் கானமும்-014
நண்பனின்  நினைவில்....

நட்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா?
நீங்கள் அவர்களை இழக்கும்போது மட்டுமே
அதன் வலி உங்களுக்குத் தெரியும்
உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால்,
அவரை உயிராக, பிரியா உறவாக வைத்திருங்கள்
ஏனென்றால் நண்பர்கள் இல்லாமல் நீங்கள் ஏழை.

நண்பனே ...
அமர்ந்து பேசிய புல்வெளியும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உன்னோடு பழகிய காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடா
அழகிய காலமும் நீதான் கொடுத்தாய்
அழியாத ரணமும் நீதான் கொடுத்தாய்
நெருப்பாலும் முடியாதடா
உன் நினைவுகளை அழிப்பதற்கு...

நீ பேசி போன வார்த்தைகள் எல்லாம் காதில் கேட்கும்
காயங்கள் ரணமாய் கொள்ளும்
விடைகளே கேள்வியாய் ஆகிறதே
காலங்கள் ஒடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
மண்ணை விட்டு போனாலும் என்னை விட்டு போகவில்லை
உடல் மட்டும் தான் விடைப்பெற்றது
உயிர் என்றும் என்னோடுதான்...

தென்றல் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தாய்
சுவாசிக்கு முன்பே விட்டுப் பிரிந்தாய்
கல்லாறையில் கூட ஐன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடா
நண்பா நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே
பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்...



I DEDICATE THIS TO MY DEAREST CHILDHOOD FRIEND VIKRAM...MISS YOU A LOT DA VIKI...

KG இல் பங்கேற்பதற்கான இந்த வாய்ப்பிற்கு நன்றி. KG டீம் தனது பணியை மிகவும் சிறப்பாக  செய்கிறது...தொடருங்கள் 

January 18, 2023, 11:50:41 pm
1
Re: கவிதையும் கானமும்-015
அனைத்து நரகமும் வலையில் தளர்வானது,
என் நட்பு வட்டம் பெரியது,
மற்றும் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வேகமாக வளர்ந்து வருகிறது,
நான் பிரபலம் என்ற ஒரு உணர்வு,
என் நண்பர்களுக்கு என்னை தெரியாது,
நட்பை எதிர்மறையாக பார்க்க நான் இணைக்கப்பட்டிருக்கிறேன்,
அது நன்றாக இருக்கிறது…

நான் சிறிய விஷயங்களைப் பற்றி கிசுகிசுக்கிறேன்,
சொற்பொழிவு செய்திகளை பரப்புகிறேன்,
என் வலைப்பதிவை அழித்து விட்டால்,
யாரும் கவலைப்படவில்லை,
எனக்கும் கவலையில்லை,
ஏனெனில் இறுதியில் பார்த்தால் எதுவும் உண்மை இல்லை.

பின்தொடர்பவர்கள், கருத்துகள், விருப்பங்கள்
இதற்கெல்லாம் யார் உண்மையில் பணம் செலுத்துகிறார்கள்?
Twitter, Snapchat, Instagram, Facebook, Youtube
நான் உண்மையில் எல்லாவற்றையும் பின்தொடர்ந்து ஓட வேண்டுமா?

தெரியாத முகங்கள், போலி புன்னகை
மற்றும் ஆண்கள் மூச்சிரைப்பதைப் பாருங்கள்.
இங்கே விளம்பரம், அங்கே தயாரிக்கப் பட்ட பொருட்கள்
இது எல்லாம் உண்மையில் அற்புதமானதா?

MIAMI, NEW YORK, BERLIN, PARIS, BARCELONA
தவறான கண் இமைகள், குளிர்ச்சியான போஸ்கள், அழகு ஊட்டும் மேக்கப்
நம்மையெல்லாம் பொறாமைப் பட்டு பார்க்க  விரும்புகிறார்கள்,
எதையோ சாதித்த உணர்வு அவர்களுக்கு...

இங்கே விடுமுறை, அங்கே செல்ஃபி,
நீங்கள் உண்மையில் இன்னும் இந்த இடத்தில் தான் இருக்கிறீர்களா?
பின்தொடர்பவர்கள், நண்பர்கள், சந்தாதாரர்கள்
இவர்களில் யார் உங்களுடன் பயணிக்கிறார்கள்?
அதை வடிகட்டி, பெரிய சாதனை செய்த உணர்வு
இறுதியில் பார்த்தால் எதுவும் உண்மை இல்லை.
எதுவும் உண்மை இல்லை !!!

January 24, 2023, 02:09:01 pm
1
காதலர் தினம் காதலர் தினம் தோன்றிய வரலாறு....


ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தான்.

முதல் காதல் மடல்:இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான். அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.

இதே நேரத்தில் தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

February 08, 2023, 03:41:13 pm
1
Re: கவிதையும் கானமும்-017 விரல்களில் அபிநயம்
விழிகளில் நவரசம்
உன்னிடம் உள்ளதடா
விடிகிற வரையிலும்
மடியில் உறங்கிட
என் மனம் தவிக்குதடா...

என் இதய கதவைதிறந்து
கனவை தீர்மானிப்பவனே
உன் புன் சிரிப்பில்
என் வாழ்க்கையை அலங்கரிப்பவனே
இறுக்கமான ஒரு அணைப்பு
நீ கொடுத்த காயமும் மறந்து போகும்டா ...

சுவாச காற்றைப் போல காதலை
ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கணும்டா
தூக்கம் தொலைந்து எடை குறைந்து
நான் என்னவோ ஆகிறேன்
என் உயிரின் அணுவினில்
காதலை விதைத்தவனே...

எனக்காக நீ இருக்கிறாய் என்று
மரணம் வரை உனக்காகவே
தொடரும் என் வாழ்வின் பயணம்
உன்னிடம் கேட்பதெல்லாம்
என் ஆயுளின் இறுதிவரையிலும்
எனக்கு மட்டுமே அன்பை
தந்து விட்டுப் போ...

என் கரம் பிடித்து
என்னை அணைத்து
உன் காதலை உணரவைத்தாய்
வாழ்வின் எல்லை வரை
உன்கரம் பற்றி
உனக்கு உறுதுணையாய்
நான் வருவேன் உன் துணையாய்...


February 14, 2023, 08:22:32 am
1
Re: கவிதையும் கானமும்-018
தன் குஞ்சுகளுக்காக இரை தேடி
விடியலில் புறப்பட்ட பட்சி
சிறகு விரித்து பறந்து சென்று
கண்பார்வையை தரையில் பதித்து
கண்டு பிடித்த உணவினை
அலகினால் கொத்தி எடுத்த இரையினை
கொண்டு செல்ல முன்
இரக்கமற்ற கயவர்களின் தடத்தினுள் அகப்பட்டு
கூண்டினில் சிக்கியதே
மனிதம் இல்லாத மனிதனின் கண்களில் தென்பட்டு சிறைபட்டதே…

பறவைகள் வாழிடங்களை சூரையாடினோம்
நிர் நிலைகளை வற்றவிட்டோம்
இயற்கை வளங்களை அழித்தோம்
வானையும் மண்ணையும் அளந்த பறவைகளை
இரும்புக் கூண்டுகளில் அடைத்தோம்
அழகான சிறகுகளை விரிப்பதை மறக்கடித்தோம்
இனிய தேவ கானத்தை இசைக்காமல்
சாவு கானத்தை தினம் இசைக்க வைத்தோம்
தனிமையில் வாடிய பறவையின் வதனம் தினம் பார்த்தோம்...

மனிதநேயம் உள்ள கையினால் விடுபட்டு
கூண்டு பறவையின் சிறகு
காற்றை கிழித்துக் கொண்டு
இருப்பிடத்தை நோக்கி சுதந்திரமாக பறந்ததே
இதுவே உண்மையான மாற்றம்
பிற உயிரினத்தின் மனதை வெல்வதற்கு
சிறைபிடிக்கவோ தேவை இல்லை
அவற்றை சுதந்திரமாக வாழ விட்டாலே போதும்….

சிறகடித்து பறந்த அந்த பட்சி
சுதந்திரமாக பறக்கும் காட்சி பார்த்தோம்
அகதியாக இருக்கும் எம் உறவுகளின் நிலைமையை உணர்ந்தோம்
இப் பறவைகளின் சிறை கதவுகளின் விடுதலையும்
எம் இனத்தின் விடுதலையும் ஒன்றே 
நாமும் சுதந்திர பறவையாக பறக்க தவிக்கிறோம்
விடியலுக்காக காத்திருக்கின்றோம்...

February 21, 2023, 04:50:17 pm
1
Re: கவிதையும் கானமும்-019 நட்பின் நேரம்

மென்மையான இரவு நேரம்
காடுகள் ஓய்வெடுக்கும் நேரம்
பனியில் நிலா உலா வரும் நேரம்
தேவதைகள் பனி புல்லில் ஓய்வெடுக்கும் நேரம்
தேவதைகள்  மிகவும் அற்புதமாக நடனமாடும் நேரம்…

குட்டி தேவதை தனிமையில் அமர்ந்திருக்கும் நேரம்
மின் மினி அவ்வழியே வருகை தரும் நேரம்
மின் மினி வெளிச்சம் தரும் நேரம்
தேவதை முகம் பிரகாசிக்கும் நேரம்
இருட்டாக இருந்த தேவதை  மனம் ஒளி பெறும் நேரம்
இருவரும் இணையும் அழகான நேரம்…

இருவரின் சுக துக்கங்களை பரிமாறும் நேரம்
இருவரும் அன்பை பரிமாறும் நேரம்
இருவரின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் நேரம்
இருவரும் நட்பு கொண்டாடும்  நேரம்
நிரந்தரமா என தெரியாத நட்பு உறவாடும் நேரம்…

அதிகாலையில் கதிரவன் ஒளிவீசும் நேரம்
இருவரும் மனமின்றி விடைபெறும்  நேரம்
இது நட்பின் மௌன நேரம்
காலத்துக்கு அழியாத நட்புடன் பறந்து செல்லும் நேரம்
இருவரின்  நட்பு சிறந்ததென போற்றும் நேரம்
நட்புக்கு இலக்கணமாக அமையும் நேரம்
நட்பு என்றுமே நிலைக்கும் என உணர்த்தும் நேரம்…

என்றும் நட்புடன் உங்கள் சஞ்சனா












March 10, 2023, 02:17:51 am
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020 CONGRATS TO GTC FM AND GTC.. SANGEETHA MEGAM REACHED ITS 20.TH PROGRAM.🎶🎤🎵💐💐💐
சங்கீத மேகம் குழுவினருக்கு வாழ்த்துகள்
(RJ RIYANNA QUEEN, DJ MR KING, DJ ARJUN, RJ MIST, RJ SARAYU, RJ GUN, RJ MELLISAI, RJ LOVELY and RJ VAANMUGIL--- COFFEE BOY ,DJ ISHAN and ANITA)💐💐💐
.

 வணக்கம்  சங்கீத மேகம் குழு( GUN,LOVELY)….

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம். அது மட்டுமின்றி மீண்டும் முதலாவது இடம் என்னால் பிடிக்க முடிந்தது மிகவும் சந்தோசம்.கடந்த வாரம் இடம்பெற்ற சங்கீத மேகம் நிகழச்சியில் நான் மீண்டும் முதலாவது
இடம் பிடித்தால் யாரோ பிரியாணி வாங்கி தருவாங்க  என்று சொன்னாங்க...

நமக்கு சோறு தான் முக்கியம்..So பாயை போட்டு தூங்கி Place போட்டேன்.. 😁😁😁😁🤣🤣🤣

எனக்கு பிடித்த பாடல்: மெதுவா தந்தி அடிச்சானே
திரைப்பாடம் :தாலாட்டு(1993)
பாடியவர்கள்:மனோ, மின்மினி
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: புலமைப்பித்தன்
நடிகர்கள் : Arvind Swamy, Sukanya und Sivaranjini


எனக்கு பிடித்த வரிகள்:

கிட்ட கிட்டவா தேனை சொட்டவா
அள்ளிக் கட்டவா மேளம் கொட்டவா
சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்...

கன்னிப் பொண்ணிது ரொம்பச் சின்னது
நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்...

போதும் நாளைக்கு
நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ
வாங்கிக்கோ தாரேன்
ஆண்: ரோசா பூவுக்கு மாராப்பென்ன
கண்ணே உன்னோட வீராப்பென்ன...


இந்த வாரம் ஒரு வித்தியாசமான பாடல் கேட்கலாம் என்று நினைத்து நான் கிளுகிளுப்பு பாடல் ஒன்றை கேட்கின்றேன்🤣🤣. இந்தப் பாடல் எனக்கு  பிடித்த gilugilupu 😍😁பாடல்களில் ஒன்றாகும்.
இந்த பாடலில்  காதலர்கள் உறவாடும் அழகை குறிப்பிடும் வரிகள் அருமை. அந்த வரிகள் ஆணுக்கும்  பெண்ணுக்கும் உள்ள ஆசாபாசங்களை வெளிப்படுத்து முகமாக அமைந்திருக்கிறது ....
நான் இந்த பாடலை என் அன்புக்கு உரியவனுக்காகவும், GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் மற்றும் GTC FM கும்  தெரிவித்துக் கொள்கின்றேன்.💐💐💐
எனது சிறப்பு நன்றியை COFFEE BOY அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.💐💐💐

அன்புடன்
(பசியுடன்)பிரியாணிக்காக காத்திருக்கும்
சஞ்சனா(Sanju)😘.

March 12, 2023, 08:17:06 pm
1
Re: NILA HERE HI NILLA MA,

VERY CUTE INTRO. WELCOME TO OUR GLOBAL TAMIL CHAT.


March 20, 2023, 02:22:34 pm
1
Re: கவிதையும் கானமும்-020 CONGRATS TO GTC FM AND GTC.. KAVITHAIYUM GAANAMUM REACHED ITS 20.TH PROGRAM.🎶🎤🎵💐💐💐
CONGRATS TO ALL POETS OF KG 💐💐💐
கவிதையும் கானமும் குழுவினருக்கு வாழ்த்துகள்
( RJ RIJIA, RJ MIST, COFFEE BOY, OMICRON,DISCOVERY, ISHAN)💐💐💐💐💐💐💐💐💐



இலையுதிர் காலம் தனது சாயலை காட்டியது
வானம் அதன் சாம்பல் நிறத்தை சூட்டியது
கார்மேகம் அலை அலையாக வந்து செல்கிறது
காற்று புதிய தெளிவுடன் வீசுகின்றது
நாள் முழுவதும் தொடர்ந்து மழை பொழிகின்றது
பூமியில் இருந்து புனிதமான வாசனை வெளிப்படுகிறது….

லேசான நடுக்கத்தை நான் உணர்கிறேன்
என் இடது கையை யன்னல் வழியாக வெளியே அசைக்கின்றேன்
என் தோலில் இனிமையான ஒலி கேட்கிறேன்
ஒவ்வொரு துளியும் என் கையில் இசை மீட்டுகின்றது
ஒரு கணம் எனக்கு அமைதி வழங்கப்படுகின்றது
அது நொடிகள் தான் ஆனால் அது மணிநேரமாக உணர்கிறேன்….

இனிமையான இப்பயணம் ஆரம்பிக்கும் தருணம் இது
மனதில் எதோ பல நினைவுகள் ஊசலாடும் தருணம் இது
காலத்தால் அழியாத காதலின் நினைவுகள் மனதை வதைக்கும் தருணம் இது
இருவரும் அன்று மழையில் சந்தித்தது நினைவுக்கு வரும் தருணம் இது
மனதில் பல்லாயிரம் கேள்விகள் எழும் தருணம் இது
விடை தேடி மனம் எங்கோ தொலைகின்ற தருணம் இது….

கண்களில் நீர் சொட்டியது
அது என் மறுகையை உரசியது
ஒரு கையில் மழைத்துளி இசைபாடியது
மறுகையில் கண்ணீர்த்துளி வலி கூட்டியது
காதலின் வலி மனதுக்கு புரிந்தது
எப்போது இந்த பயணம் முடியுமென மனம் ஏங்கியது….

"சின்ன சின்ன மழை துளிகள்" என்ற பாடல் வரிகள் மனதில் ஒலிக்க
அமைதியான ரயில் பயணம் தொடர
மீண்டும் நான் மழையை ரசிக்க
மழையின் நன்மையை உணர
என் மனதோ சற்று லேசாக
உணர்ந்தேன் என் வாழ்க்கையின் அர்த்தத்தை....


வாழ்க்கை எனும் ரயில் பயணத்தை தொடர்ந்தபடியே
சஞ்சனா(Sanju)😘.


March 21, 2023, 04:09:59 am
1